அழியாச்சுடர்கள்

கல்லறைகள் கருத்தரிக்கும் (காணொளி): “துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்”

மீண்டும் தாயக மண் மீட்கப்படும். அதே துயிலும் இல்லங்கள் மீண்டும் நிறுவப்படும். அவை மத வேறுபாடற்ற, சாதி வேறுபாடற்ற, கோயில்களாகும். மறைந்த போராளிகளின் உயிர்கள் அந்தக் கோயில் தெய்வங்களாகும்.

  • இரட்டைவாய்க்கால், ,விசுவமடு, ,முள்ளியவளை, கிளிநொச்சி, வன்னிவிளாங்குளம், ஆலம்குளம், ஈரப்பெரியகுளம், முளங்காவில், ஆட்காட்டிவெளி, பண்டிவிருச்சான், அளம்பில், உடுத்துறை, கோப்பாய், சாட்டி, கொடிகாமம், ஈச்சம்குளம், எள்ளாம் குளம், புதுவையாறு, மணலாறு, புடிமுகாம், தரவை, தாண்டியடி, சுண்டலடி, வாகரை, ஆலங்குளம், திருமலை, மாவடி முன்மாதிதி, கஞ்சிகுடிச்சாறு, பெரியகுளம், தியாகவனம், கோட்டைமாவடி

என்கின்ற எங்கள் மாவீரர்களின் கோவில்கள் நிச்சயம் கருத்தரிக்கும்,

மயானங்கள் புதைகுழிகள் துயிலும் இல்லங்கள்

  • இறந்த உடல்களை அடக்கம் செய்யும் இடங்கள் என்ற வகையில் மயானங்கள் – புதைகுழிகள் – துயிலும் இல்லங்கள் மூன்றுக்கும் ஒரே அர்த்தமே. ஆனால் ஒவ்வொன்றும் தனித்துவம் உடையவை. அவைகளின் தாற்பரியங்களும் வேறுபட்டவை.

மயானங்கள் – புதைகுழிகள் – துயிலும் இல்லங்கள் மூன்றும் வெவ்வேறுதான். ஏனெனில், உண்மையில் துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்.

மயானங்கள்

இயற்கையாகவோ அன்றி இயல்பான சூழலில் அனர்த்தமாகவோ இறந்தவரை அடக்கம் செய்யும் இடம் அல்லது ஈமக்கிரியைகள் செய்யும் இடமே மயானம். தீயிட்ட உடலின் சாம்பலைக் கடலில் கரைத்து இயற்கையுடன் இணைப்பது, அடக்கம் செய்த இடத்தில் சமாதியோ அல்லது சிலுவையோ அமைத்து திவசங்களின் போது அந்த இடத்தைக் கோயிலாகக் காண்பது, இஸ்லாமிய மதத்தவர் போல ஒன்றுமே நிறுவாமல் இயற்கையுடன் இணைப்பது – பள்ளிவாசலில் சிலைகள் படங்கள் எதுவும் இல்லை – அனைத்துமே இயற்கையுடன் – இறைவனுடன் – உடலைச் சங்கமமாக்கும் சம்பிரதாயம், மரபு.

தமிழினத்தில் பல மதங்கள் இருந்தாலும் அவை யாவும் இச் சமயத் தத்துவத்தில் ஒத்துப் போகின்றன.

புதைகுழிகள்

போர் விதிகளை வரையறை செய்துள்ள சாசனமான, ‘ஜெனீவா ஒப்பந்தம்”, இரண்டாம் உலகப் போரின் பின்னர் அனைத்துலக நாடுகளாலும் ஏற்றுக் கைச்சாத்திடப்பட்டது. இதில் மருத்துவ மனைகள், கல்விக் கூடங்கள், அகதி முகாம்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவை தாக்கப் படக்கூடாதவையாகவும், பொதுமக்கள், உதவி நிறுவனங்கள், நோயாளிகள் போன்ற பலர் தாக்கப் படக்கூடாதவர்களாகவும் வகைப்படுத்தி விதிகளாக ஆக்கப்பட்டுள்ளன. போர்க் கைதிகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது கூட விதியாக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகள் அனைத்தினது மீறல்களையும் கடந்த 50 ஆண்டுகளாகத் தம்மை ஆளும் அரசினாலும் மற்றவர்களாலும் சந்தித்த, இன்னும் சந்தித்துக் கொண்டிருக்கின்ற ஒரே இனம் என்ற வரலாற்றுச் சாதனைக்கு இலங்கைத் தமிழினம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும். இந்த விதிகள் அனைத்தினது மீறல்களையும் செய்தவர்கள் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்து – பூசி மெழுகி – உடல் அடக்கம் செய்யும் இடம் தான் புதைகுழிகள். துரையப்பா விளையாட்டரங்கு, செம்மணி, கைதடி இன்னும் எத்தனையோ? ஏன்றோ ஒருநாள் இவை அனைத்தும் தோண்டப்படும். அன்று உண்மை அம்பலமாகும் மயானத்துக்குப் போனவர்கள் நாலு பேருக்கு நன்றி சொன்னால் போதும். ஆனால் புதைகுழிக்குள் போனவர்கள் படைப் பிரிவினர்களுக்கும் அவர்களுக்கு அதிகாரம் இட்டவர்களுக்கும் பதில் சொல்லும் வரை போகவே மாட்டார்கள். உடல் தானே புதைக்கப்பட்டது. உயிரில்லையே.

துயிலும் இல்லங்கள்

  • போர்கள் நடந்து முடிவில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நினைவுத் தூபிகள் போரிட்ட நாடுகளின் நகரங்களில் முக்கிய இடங்களில் நிறுவப்படும். அவற்றில் போரில் உயிர் நீத்தவர்களின் பட்டியல் செதுக்கப் பட்டிருக்கும். ஆனால் போர் நடந்து முடியும் முன்னரே போரில் மரணித்த மீட்கப் பட்ட வீரர்களின் உடல்களைப் புதைத்தும், உடல்கள் மீட்கப்படாத மரணித்த வீரர்களை நினைத்தும் வேறு வேறு கிராமங்களில் தேர்ந்தெடுத்த இடங்களில் தூபிகளை அமைத்து – எம் வீரர்கள் மரணிக்கவில்லை. அவர்கள் இந்த இல்லங்களில் துயில்கிறார்கள். அவர்களின் உடல்கள் இங்கே விதைக்கப்பட்டிருக்கின்றன – என்ற ஒரு புதிய சித்தாந்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கினர். இந்தச் சித்தாந்தத்தை விளக்கிட ‘விரித்திட விரித்திடப் பொருள் பலவாய் வெளிவந்தன வந்தன வந்தனவே” என்று பாரதியின் ‘தம்பி கழற்றிடக் கழற்றிட துணி புதிதாய் வளர்ந்தன வளர்ந்தனவே” பாஞ்சாலி சபத வரிகளிடம் அடி எடுக்கலாம் எனத் தோன்றுகிறது.

உடல்கள் விதைகள் என்றால் விதைத்த சில நாட்களில் அவை முளைத்துவிடும். அதாவது ஒரு போராளி மரணத்தைத் தழுவும் போது பல போராளிகளல்லாதோர் மனங்களில் அந்த விதை வேர் விடுகிறது. போராளிகள் முளைப்பார்கள். ஓரணு உயிரினம் பலவாக Multiple Fission of cells என்ற வகையில் பெருகுவது போல. இது மேலே சொன்ன சித்தாந்தத்தின் ஒரு விரிவு.

அருச்சுனன் அபிமன்யுவுக்குச் சுபத்திரையின் கர்ப்பத்தில் இருக்கும் போதே வியூகங்களை உடைத்துச் செல்வதைக் கற்பித்தது போல, எத்தனையோ தமிழ்த் தாய்மாரின் கர்ப்பத்திலேயே ஒரு போராளி மரணத்தைத் தழுவும் போது, அவன் வித்துடல் துயிலும் இல்லங்களில் தகுந்த மரியாதையுடன் விதைக்கப் படும்போது, பல போராளிகள் வேர் விடுவார்கள். இது மேலே கூறிய சித்தாந்தத்தின் வேறொரு விரிவு.

எம் இன விடுதலைக்கு இந்த இளம் வயதில் போராளிகள் வாழ்வை அனுபவிக்காது உயிரைக் கொடுத்தார்களே! நாம் என்ன செய்தோம்? ஏன்ற வினாவை துயிலும் இல்லங்களுக்குச் செல்பவர்களின் உயிர்களில் கரைத்துவிடுகிறது. வேர் விடுகிறது. போராளிகள் மரணிக்கவில்லை. என்றால்தானே மறைந்த போராளிகளின் உயிர்கள் அங்கு செல்பவர்களின் உயிர்களுடன் உறவாட முடியும். இது மேலே கூறிய சித்தாந்தத்தின் பிறிதொரு முடிவு.

  • மாவீரர் துயிலும் இல்லங்கள் இலங்கை இராணுவத்தினரால் சிதைக்கப்படுகின்றன. என்ற செய்தி ஒரு புறம் கோயில்கள் இடிக்கப்படுகின்றன என்ற வேதனை மறுபுறம். இச்செய்கையின் விளைவு செய்தவர்களுக்குத் தெரியாமல் இருக்கிறதே என்ற அவர்களின் அறியாமையைப் பார்த்த பரிதாபம். மறைந்த போராளிகளின் விதைகளில் முளைத்த மரங்கள் வெட்ட வெட்டத் துளிர்ப்பவை. அந்த மரங்கள் வேரோடு சாய்த்தாலும் நிலத்திலிருந்து முழுமையாகப் பிடுங்கப்படாத தும்பு வேர்களிலிருந்தும் முளைப்பவை.

‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழமொழி” ஆனால், போராளிகளோ இருந்தால் ஆயிரம் பொன். இறந்தாலோ பல்லாயிரம் பொன். நினைவுகள் சிதைக்கப்பட்டால் கோடி பொன் என்பது புதுமொழி. இல்லை இல்லை. மேலே கூறிய சித்தாந்தத்தின் இன்னுமொரு விரிவு.

  • ஒரு கோயில் கட்டுவதன் தாக்கத்தை விட அதை இடிப்பதன் தாக்கம் பல மடங்கு கூடியது. தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதிக்கு கண்ணகி சிலை உடைக்கப்பட்டதன் தாக்கத்தைப் போன்றது. இதற்கு உதாரணமாக குழந்தையின் கையில் கரடிப் பொம்மை (Teddy Bear) என்று வேறொருவர் கூறியதைக் கலைஞரால் மெல்லவும் முடியவில்லை. விழுங்கவும் முடியவில்லை. எப்படி அது சமிக்கும். இதே நிலையில் தான் ஈழத் தமிழ் நெஞ்சங்கள் மாவீரர் துயிலும் இல்லங்கள் இலங்கை இராணுவத்தினரால் சிதைக்கப்படுகின்றன. என்ற செய்தியைக் கேட்டுக் கொதிக்கின்றன.

மீண்டும் அந்த மண் மீட்கப்படும். அதே துயிலும் இல்லங்கள் மீண்டும் நிறுவப்படும். அவை மத வேறுபாடற்ற, சாதி வேறுபாடற்ற, கோயில்களாகும். மறைந்த போராளிகளின் உயிர்கள் அந்தக் கோயில் தெய்வங்களாகும்.

மயானங்கள் – புதைகுழிகள் – துயிலும் இல்லங்கள் மூன்றும் வெவ்வேறானவை. ஏனெனில் துயிலும் இல்லங்கள் – ஈழத் தமிழரின் கோயில்கள்.

நவம்பர் 27: உரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் உன்னதமான நாள்

நவம்பர் 24, 2009 பதிந்தவர் எல்லாளன் | ஈழம், போராட்ட வரலாறு, மாவீரர்கள் | | No Comments Yet

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் ! சுதந்திர தமிழீழம் மலரட்டும் !! தியாகி திலீபன் சொல்ல வந்தது….???

தியாகசீலன் திலீபனின் நினைவுநாளை அனுஷ்டிக்கும் இத்தருணத்தில், இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்பு … அன்று நல்லூர் முன்றலில் அந்த தியாகி கூறியவை வெறும் வார்த்தைகள் அல்ல அருள்வாக்குகள் என்பதை தற்பொழுது நாம் உணர்கின்றோம்.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என அன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு இன்று ஈழத்தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது. “இனவிடுதலைப் போராட்டம்” என்பது அது எவ்வகையில் அமைந்தாலும் அந்த இன மக்களின் பூரண ஆதரவு இல்லாமல் மேற்கொள்ள முடியாது.
ஒட்டுமொத்த மக்களும் விடுதலையென்ற ஒரே இலட்சியத்திற்காக தமது பங்களிப்பினைச் செய்ய முன்வர வேண்டும். அவ்வாறு முன்வரும்போதுதான் விடுதலைக்கான மக்கள் புரட்சியும் அதன்மூலமான விடுதலையும் சாத்தியப்படும். ஈழ விடுதலைப் போராட்டமானது தியாகங்களின் சிகரங்களைத் தொட்ட சந்தர்ப்பங்களில், தியாகச்செம்மல் திலீபனின் தியாகம் மிக முக்கியமானதாகும்.
தமிழர்களின் விடுதலைப் போராட்டம் பல சந்தர்ப்பங்களில் ஆயுத ரீதியிலான வன்முறை வழியைத் தவிர்த்து அகிம்சை வழியை கடைப்பிடிக்க முனைந்த போதெல்லாம், எதிர்மறையான விளைவுகளையும் ஏமாற்றங்களையுமே பரிசாகப் பெற முடிந்தது. அகிம்சைக்கே அடையாளமென கருதப்படும் காந்திஜி அவர்களின் தேசமான இந்தியாவே தமிழர்களின் அகிம்சைப் போராட்டத்தினை காலடியில் போட்டு மிதித்தது.
ஒரு துளி நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருந்த திலீபனின் உடல்… வாடி வதங்கி, மெலிந்து சுருண்டு, நிலைகுலைந்து நினைவிழந்துபோய் அந்த உன்னத ஆன்மா அவன் உடலைவிட்டு பிரிந்த போதும்… மெளனமாய் இருந்து ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கே துரோகம் செய்ததன் மூலம் “காந்தியம்” என்ற திரைக்குப் பின்னாலிருந்த தனது உண்மையான கோரமுகத்தினை வெளிக்காட்டியது காந்திதேசம்.
அன்று வெளிக்காட்டத் தொடங்கிய காந்திதேசத்தின் துரோக நாடகம் இன்றுவரை தொடர்கதையாகத் தொடர்கின்றது. ஈழத்தின் மேல் இந்தியாவிற்கு அப்படி என்னதான் கோபம்??? காரணம் கேட்டால், இராஜீவ்காந்தி படுகொலை… இந்தியத் தேசியம்… பிராந்திய நலன்… என காரணமில்லாத காரணங்களை அடுக்குவார்கள் இந்த காந்தியவாதிகள். இந்த போலிக் காந்தியவாதிகளுக்குத்தான் புரியுமா எம் வலிகளும் வேதனைகளும்??? இவர்களுக்குத் தெரியுமா நம் இழப்புக்களும் அவலங்களும்???
தமிழீழம் என்ற கோரிக்கையையும் அதற்கான தமிழர்களின் நியாயமான போராட்டங்கள் தொடர்வதையும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு எப்போதுமே ஆதரிக்கப்போவதில்லை என்ற கசப்பான உண்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். இது உண்மையென்பதைத்தான் அண்மையில் புலம்பெயர் தமிழர்கள் தொடர்பாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் விடுத்த அறிக்கையும் தெளிவுபடுத்துகின்றது.
அதனைப் புரிந்து கொள்ளாமல், தொடர்ந்தும் இந்தியா மனம்மாறும் என நம்பியிருப்போமானால், அன்று திலீபனை நாம் இழந்ததைப்போல் எதிர்காலத்தில் எம் இலட்சியங்களையும், நம் தாய் மண்ணையும் இழந்து நிரந்தரமான அகதிகளாகவே வாழ வேண்டிய இழிநிலைக்கு ஆளாவோம். இந்தியாவின் ஆதரவு தமிழர்களிற்கு கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் தற்போதைக்கு இல்லையென்பது உறுதியாகிவிட்ட நிலையில், தமிழர்கள் தமக்கு ஆதரவளிக்கக் கூடிய பிறநாடுகளின் ஆதரவினைத் திரட்டவேண்டியது அவசியமாகிறது.
இந்தவகையில், இவ்வளவு காலமாக தமிழர் விடயத்தில் பாராமுகமாக இருந்துவந்த அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தமிழர்களுக்கு சார்பாக ஆதரவளிக்கக்கூடியதாக மாறிவரும் சர்வதேச நிலைமாற்றங்கள் ஈழத் தமிழர்களுக்கு சாதகமாக அமையக்கூடும். இதனைச் சாதகமாக கையாளுவதன்மூலம், தமிழர்கள் தமது தாயக விடுதலைக்கான போராட்டப் படிமுறைகளை வெற்றியை நோக்கி முன்னகர்த்தக்கூடிய சாத்தியம் வலுப்பெறும்.
சிங்கள அரசோடு கூட்டுச்சேர்ந்து நிற்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட ஒருசில நாடுகளைத் தவிர பெரும்பாலான சர்வதேச நாடுகளின் நடவடிக்கைகள் இலங்கையரசிற்கு எதிராக மாறிவருவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு சாதகமான புறச்சூழ்நிலை உருவாகுவதற்கு, புலம்பெயர் தமிழர்கள் கடந்த காலங்களில் நடத்திய போராட்டங்களும், மக்களின் அவலங்கள் சர்வதேசத்தின்முன் வெளிக்கொணரப்பட்டமையுமே பெரிதும் உதவின.
அத்துடன் சிங்கள அரசின் எதேச்சைத்தனமான அதிகாரப்போக்கும், வல்லரசுத் தோரணையிலான அறிக்கைகளும் கூட சர்வதேச நாடுகளுக்கு இலங்கையரசின் மீது சினத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது. புலம்பெயர் தேசத்தில் தமிழர்களால் தொடரப்பட்ட போராட்டங்கள் சர்வதேச மட்டத்தில் பல விடயங்களை சாதித்திருக்கின்றன என்பது தற்பொழுது மெல்ல மெல்ல சாதகமாக மாறிவரும் சர்வதேச நிலைப்பாடுகளிலிருந்து தெரிகின்றது.
ஈழத்தமிழர் விடயத்தில் உலகில் செல்வாக்கு மிக்க நாடுகளான அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் தற்பொழுது கடைப்பிடித்துவரும் அணுகுமுறைகள் சிங்கள அரசிற்கு பெரும் அச்சத்தினைக் கொடுத்திருக்கின்றது. ஆனாலும் இந்தியாவும் சீனாவும் தனக்கு பக்கத்துணையாக இருக்கின்றது என்ற அசட்டுத் தைரியத்தில் சிங்களம் நிம்மதியடைகின்றது என்பதுவே உண்மை. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பனிப்போர் என்றைக்கு உச்சநிலையை அடைகின்றதோ; அன்றைக்கு இலங்கை இவற்றின் பூரண ஆதரவினை இழக்கும் சாத்தியக்கூறுகள் உருவாகும்.
இவைதான் தனது பக்கபலம் என்று நினைத்து திமிருடன் ஏனைய உலகநாடுகளை பகைத்துக்கொள்ளும் சிங்களம் இவற்றின் ஆதரவையும் இழந்து அநாதையாய் அந்தரிக்கப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை. ஈழவிடுதலைப் போராட்டமானது தமிழ்மக்களின் கைகளிலேயே கையளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதை பிரதானமாக கொண்டு நடத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர் தமிழ் மக்களையே சார்ந்திருக்கின்றது.
மூன்று தசாப்த காலமாக புலிகள் தமது ஆயுதரீதியிலான போராட்டத்தினை முன்னெடுத்த நிலையில், அவர்கள் இராணுவ வெற்றிகளைவிட தமிழர்கள் மத்தியில் விடுதலை தொடர்பாக புரட்சிகரமான எழுச்சியையே மிகவும் எதிர்பார்த்தார்கள். ஆனால், எங்களின் விடுதலைக்காக போராடியவர்கள் எங்களிடம் எதிர்பார்த்த ஆகக்குறைந்த எதிர்பார்ப்பைக்கூட நிறைவேற்றாதவர்களாக நாங்கள் இருந்தோம்.
அன்று திலீபன் மக்களிடம் வேண்டிக்கொண்டதும் அதைத்தான். “மக்கள் புரட்சி” என்ற நிலையை அன்றே நாம் அடைந்திருப்போமானால், இன்று நாம் விடுதலை பெற்று பல வருடங்கள் ஆகியிருந்திருக்கும். அப்படியில்லாவிட்டாலும்… ஆகக்குறைந்தது, தமிழினத்தின் அழிவையாவது தடுத்திருந்திருக்கலாம். நடந்தவை நடந்து முடிந்ததாகவே இருக்கட்டும். இனிமேல் நடக்கப்போவதைப் பற்றி சிந்திப்போம். எமது விடுதலையென்பது எம்மிலேயே தங்கியுள்ளது. இவ்வளவுகாலமாய் அதை புலிகள் பெற்றுத்தருவார்கள் என்று சொல்லிச்சொல்லியே அனைத்துப் பொறுப்பையுமே அவர்களின் தலையில் சுமத்திவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.
பணத்தினை அள்ளி அள்ளி கொடுத்த நாங்கள் அவர்கள் எதிர்பார்த்த பக்கபலத்தினைக் கொடுக்கத் தவறிவிட்டோம். புலிகளை சர்வதேசம் தடை செய்தபோது, அதற்கும் எமக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்ற வகையில் அமைதியாக விலகியிருந்தோம். புலிகளையும் தமிழ்மக்களையும் சர்வதேசம் வேறுபடுத்திப் பார்த்ததற்கும் அவர்களது போராட்டத்தினை பயங்கரவாதம் என முத்திரை குத்தியதற்கும் நாமே வழியமைத்தோம். அன்று நாங்கள் இழைத்த இந்தத் தவறுதான், இன்றைய அத்தனை அவலங்களுக்கும் காரணம்.
எங்கெல்லாம் மக்கள் புரட்சி ஏற்படவேண்டிய தேவை இருந்ததோ, அப்போதெல்லாம் நாம் அமைதியாக இருந்ததன் விளைவை வன்னி அவலங்களாய் அனுபவித்தோம். இனிவரும் காலங்களிலும் இப்படியான தவறுகளை இழைக்கப் போகின்றோமா??? நாங்கள் இதுவரை காலமும் இழைத்த தவறுகள் தான் எம்மை இந்த நிலைக்குக் கொண்டுவந்திருக்கின்றது என்ற உண்மையை உணர்ந்தவர்களாய் இனிவரும் காலங்களில்… நம் விடுதலைக்காய் நாமே போராடுவோம்.
மக்கள் புரட்சி என்பது ஒரு இலட்சியத்துக்காக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து ஒவ்வொருவரும் தம்மாலான பங்களிப்பினை தவறாது செய்வது என்பதேயாகும். “எமக்கு விடுதலை வேண்டும், அதை அடையும் வரை நாம் ஓயப்போவதில்லை” என்ற புரட்சிகரமான எண்ணத்தினை நாம் ஒவ்வொருவரும் நம் மனதில் விதைத்துக்கொள்ள வேண்டும்.
அதுவே மக்கள் புரட்சிக்கான அடிப்படை அடித்தளம். “மக்கள் புரட்சி வெடிக்கட்டும்” என்ற தியாகசீலனின் வேண்டுதலை சிரமேற்கொண்டு நம் தேசத்தின் விடுதலைக்காக நாம் போராடுவோம். நமது புரட்சிதான் நாளை நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத்தரும்.
- பருத்தியன்

செப்டம்பர் 22, 2009 பதிந்தவர் எல்லாளன் | ஈழம், தியாக தீபம் திலீபன், போராட்ட வரலாறு | | No Comments Yet

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஏழாம் நாள்(21-09-1987)

thileepan_smaஇன்று காலையில் எழுந்ததும் முதல் வேலையாக யோகியை என் கண்கள் தேடின…… நேற்றைய பேச்சுவார்த்ததையின் முடிவு என்னவாக இருக்கும்….? இந்தக் கேள்விதான் இதயத்தின் பெரும் பாகத்தை அரித்துக் கொண்டிருந்தது.காலை 10 மணிவரை எவ்வளவோ முயன்றும் அவர்கள் இருவரும் என் கண்களில் படவேயில்லை. ஆனால், திடீரென்று “இந்தியா ருடே” (India Tiday) பத்திரிகை நிருபரும் இந்திய துரதஷனின் (இந்தியத் தொலைக்காட்சி ஸ்தாகனம்) வீடியோப் படப்பிடிப்பாளரும், யோகியுடன் வந்து திலீபனைப் படம்பிடிக்கத் தொடங்கினர்.

“இந்தியா ருடே” நிருவர் என்னிடம் திலீபனின் உடல் நிலையைப்பற்றித் துருவித் துருவித் கேட்டுத் தெரிந்துகொண்டார். என்னால் முடிந்தவரை முதல் நாள் உண்ணாவிரத்திலிருந்து இன்றுவரை அவரின் உடலின் நிகழ்ந்த மாற்றங்கள் அனைத்தையும் விரிவாக எடுத்துக் கூறினேன்.

அவர்கள் சென்ற பின் யோகியை அழைத்து, என் மனதுக்குள் குடைந்துகொண்டிருந்த அந்தக் கேள்வியைக் கேட்டேவிட்டேன். அதற்கு யோகி கூறிய பதில் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது.

‘இந்திய அமைதி காக்கும் படையின் மூத்த தளபதி ஒருவரும் பிரிகேடியர் ராகவன், எயர் கொமாண்டர்ஜெயக்ககுமார், கடற்படைத் தளபதி அபயசுந்தர் ஆகியோரும் வந்து பேசியதாகவும், உதவித்தூதுவர் வரவில்லை என்றும், திலீபனின் பிரச்சினையில் அவர்கள் ஓரு தீர்க்கமான முடிவை இதுவரை எடுக்கவில்லை” என்றும் யோகி கூறினார்.

அந்தப் பதிலைக் கேட்டால் அதை ஜீரணிக்க என் மனத்துக்கு வெகுநேரம் பிடித்தது. அந்தப் பேச்சுவார்த்தை பற்றிய முழு விபரத்தைம் யோகியும் யோகி திலீபனிடம் விளக்கிக் கூறி, என்ன செய்யலாம்…..? என்று கேட்டார்.

பேசச் சத்தியற்று, நடக்கச் சத்தியற்று துவண்டு கிடந்த அந்தக் கொடி, தன் விழிகளைத் திறந்து பார்த்துவிட்டு வழக்கம் போன்றுதன் புன்னகையை உதிர்த்தது.

“எந்த முடிவும்…. நல்ல முடிவாக இருக்க வேணும். ஜந்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அவர்கள் எழுத்தில் தர வேணும்…. இல்லையெண்டால்…. நான் உண்ணாவிரதத்தைக் கடைசி வரைக்கும் … கைவிடமாட்டன்.”

ஓவ்வொரு வார்தையாக கரகரத்த குரலில் வெளிவந்தது திலீபனின் பதில்.

படபடவென்று நடுங்கிய நடுங்கிய குரலில் மெதுவாகத் திடமாகத் திலீபன் கூறிமுடித்த போது யோகி மேடையில் இருக்கவில்லை.

யாழ்ப்பாணக் குடாநாடு விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுக்குள் 1985 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் வந்த பின்னர் அரசியல்ப் பிரிவுப் பொறுப்பாளராக திலீபன் இருந்து மிகச் சிக்கலான பிரச்சனைகளையெல்லாம் பொதுமக்கள் மத்தியில் தீர்த்து வைத்திருக்கின்றார்.

1986 ஆம் ஆண்டு அச்சுவேலியில் ஏற்பட்ட ஒருசிறு பூசல் காரணமாக மினிபஸ்களின் சொந்தக்காரர்கள் ஒருவாரகாலமாக பஸ்களை ஓடவிடாமல் வழிமறிப்புப் போராட்டம் நடத்தியதால் மக்கள் மிகுந்ந துன்பப்பட்டனர்.

திலீபன் தனக்கேயுரிய புன்முறுவலுடன் அவர்களை அணுகி மிகவும் எளிமையாக அவர்களுடன் பேசி இரண்டு மணித்தியாலத்தில் பஸ்களை ஓடச் செய்தனர்.யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களுக்கு இடையே நடைபெறும் பூசல்கள் கடல் எல்லையிலே ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்படும் சில சிக்கலான பிரச்சினைகள்

பல்கலைக்கழகத்தில் ஏற்படும் சிக்களான பிரச்சினைகள், கடை முதலாளிகள் – தொழிலாளர்களின் பிரச்சினைகள், மூட்டை தூக்குவோர், வண்டி ஓட்டுவோர் – ரச்சிக்கரர்கள், மாநகரசபை ஊழியர்கள், ஆசிரியர்கள், எழுதுவினைஞர்கள், டாக்ரர்கள், தாதிமார், வைத்தியசாலை சிற்றூழியர்கள், வழக்கறிஞர்கள், லொறிச் சொந்தக்காரர்கள் இப்படிப் பலரகமானவர்களின் பிரச்சினைகளையெல்லாம் உடனுக்குடன் பேசிச் சமரசமாகத் தீர்த்து வைத்தவர் திலீபன்.

யாழ்ப்பாணக் கரையோரக் கிராமமான நாவாந்துறையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பலமான இனக்கலவரம் ஏற்பட்டது. கத்தகள், பொல்லுகள் கைக்குண்டுகள், துப்பாக்கிகள் எல்லாம் தாராளமாகப் பாவிக்கப்பட்டன. ஒரே நாளில் பலர் இருபக்கத்திலும் மாண்டனர். பலர் படுகாயமுற்றனர்.

திலீபன் தன்னந்தனியாக இரு சமூகத்தவர்களையும் இரவிரவாகச் சென்று சந்தித்தார். முடிவு? அடுத்த நாள் பெருமழை பெய்து ஓய்ந்தது போல் கலவரம் நின்றுவிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தமிழீழ மக்கள் மத்தியில் மாபெரும் செல்வாக்கு இருப்பதற்குக் காரணம் இவர்கள் சிங்கள இராணுவத்தின் அட்டூலியங்களிலிருந்து தம் உயிரையே அர்ப்பணித்து மக்களைக் காப்பாற்றுவது மட்டுமல்ல எந்தச் சிக்கலான சமூகப் பொருளாதாரப் பிரச்சினையானாலும் புலிகளின் அரசியல்ப் பிரிவுத் தலைவர் திலீபனால் அவை நிச்சியமாகத் தீர்க்கப்படும். என்ற உயர்ந்த நம்பிக்கையாலும் ஏற்பட்ட செல்வாக்குத்தான். அது.

மற்றவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இரவு பகலாக உறங்காது வேளா வேளைக்கு உணவின்றி அயராது உழைப்பதில் திலீபனுக்கு நிகர் திலீபன் தான். ஆவர் சுயமாக எப்போதாவது மினுக்கிய மடிப்புக் கலையாத ஆடைகள் அணிந்ததையும் நான் பார்த்ததில்லை.

அவரிடம் இருப்பதெல்லாம் ஒரேயொரு நீளக்காற்சட்டை (ட்ரவுசர்) ஒரேயொரு சேர்ட் தான். அரசியல் விசயமாக ஊரெல்லாம் சுற்றி பல பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டு காய்ந்த வயிற்றுடன் இரவு 12.00, 1.00 மணிக்கு தலைமை அலுவலகத்திற்கு வருவார். ஆந்த நள்ளிரவில் அழுக்கேறிய தன் உடைகளைக் களைந்து தோய்த்து காயப் போட்டுவிட்டே படுக்கச் செல்வார். பின்னர் அந்த இயந்திரம் அதிகாலையிலேயே தன் இயக்கத்தை மீண்டும் ஆரம்பித்து விடும்.

இப்படிப்பட்ட திலீபன் இன்று வாடி, வதங்கி தமிழினத்துக்காக தன்னையே அழித்துக் கொண்டிருக்கின்றாரே? ஏத்தனையே பேரின் பிரசிசினைகளைத் தீர்த்து வைத்த இவரின் பிரச்சினையை, தமிழினத்தின் பிரச்சினையை யார் தீர்க்கப் போகின்றார்கள்.

சீலமுறு தமிழன் சிறப்பினை இழப்பதோ?

சிங்கள இனத்தவர் நம்மை மிதிப்பதோ?

கோலமுறு திரு நாடினிக் கொள்ளையர்….

வுpரித்த வலையினில் வீழ்ந்து அழிவதோ?

காலனெனும் கொடும் கயவனின் கையினால்..

கண்ணை இழந்து நாம் கவலையில் நலிவதோ?

நீலமணிக்கடல் நித்தமும் அழுவதோ..?

நாடு பெறும்வரை நம்மினம் தூங்குமோ…?

“ஈழமுரசு” பத்திரிகையில் வெளிவந்த இந்தக் கவிதையை ஒருநாள் திலீபன் வாசித்துவிட்டு என் தோள்களைத் தட்டிப் பாராட்டியதை இன்று எண்ணிப்பார்க்கின்றேன்.

வாரா வாரம் பத்திர்கைகளில் வெளிவந்து கொண்டிருக்கும் எனது கவிதைகளை ஒரு தொகுப்பாக்கி வெளிவிட வேண்டும். என்ற திலீபனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சென்ற வாரம் தான் அவைகளை ஒன்று சேர்த்து பிரதிகள் எடுத்து ஒருபிரதியை ராஜனிடமும் மறு பிரதியை யோகியிடமும் கொடுத்திருந்தேன்.

தலைவர் பிரபாகரன் “முன்னுரை” எழுதவேண்டும் என்ற என் விருப்பத்தை திலீபனிடம் வெளியிட்ட போது அவரும் அதற்குச் சம்மதித்தார். உண்ணாவிரதம் முடிந்த பின் முதல் வேலையாகத் தலைவரிடம் சகல கவிதைகளையும் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

தலைவர் பிரபா ஒர் “இலக்கிய ரசிகன்” என்பது பலருக்குத் தெரியாது.

அந்த நெஞ்சுக் கூட்டிற்குள் நிறைந்து கிடக்கும் இராணுவத்திட்டங்களும், அரசியல்ப் புரட்சிக் கருத்துக்களும் – இலக்கியக் குவியல்களும் – மலை போன்ற தமிழுணர்வும்…. அப்பப்பா! ஏராளம் ஏராளம்.! அப்படிப்பட்ட ஒரு தலைவனின் வழிவந்த திலீபனின் ஏழாம் நாள் தியாகப் பயணம் தொடர்கின்றது.

செப்டம்பர் 21, 2009 பதிந்தவர் எல்லாளன் | ஈழம், தியாக தீபம் திலீபன், போராட்ட வரலாறு | | No Comments Yet

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஆறாம் நாள்(20-09-1987)

thileepan_smaஅதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப் போத்தலைக் கொடுத்தேன்.

ஆனால் சலம் போகவில்லை. வயிற்றை வலிப்பதாகவும் சலம் போவதற்குக் கஷ்டமாக இருப்பதாகவும் கூறினார். சுகிச்சையின் மூலம் கொஞ்சமாவது சிறுநீர் கழிக்க முடியும். ஆனால் அதைப்பற்றி பேசினாலே எரிந்து விழுவார் என்பதற்காக ஒன்றும் பேசாமல் இருந்தேன்.

நூலைந்த நாட்களாகப் படுக்கையிலே கிடப்பதாலும் நீர் அருந்தாமல் இருப்பதாலும் அவரது சலப்பை பாதிக்கப்பட்டிருக்கலாம்….. இதை அவரிடம் எப்படிக் கூறுவது? தூன் மறைவிடம் சென்று சிறுநீர் இகழிக்கப் போவதாகக் கூறினார். ஆவரின் விருப்பத்துடன், அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து இறக்கி மேடையின் பின்பக்கம் கொண்டு சென்றோம் பதினைந்து நிமிடங்களாக வயிற்றைப் பொத்திக் கொண்டு மிகுந்த கஷ்டப்பட்டார்;.

அதன்பின் ஆச்சரியப்படுமளவிற்கு சுமார் அரை லீற்றர் அளவு சலம் போனது. ஏனக்கு அது மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. ஐந்து நாட்களாக எதுவும் குடிக்காமல் இருக்கும் ஒருவரால் இது எப்படிச் சாத்தியமாக முடியும்? அன்று வைத்திய நிபுணர் சிவகுமார் அவர்களிடம் இதுபற்றி மறக்காமல் கேட்டேன். ஆவர் எந்தப் பதிலுமே கூறாமல் மௌனமாக சிரிப்பை உதிர்த்துவிட்டுச் சென்றார்.

அன்று மத்தியானம் எமது இதயத்துக்கு மகிழ்ச்சியைத்தரும் ஒர் இனிய செய்தி எனது செவிகளில் விழுந்தபோது இனந்தெரியாத நிம்மதி என்னிடம் குடிவந்தது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரகத்திலிருந்து ஓர் முக்கிய நபர் இன்று வரப்போகிறாராம். ஆவர் நமது அரசியல் பிரிவினருடன் திலீபனைப் பற்றிப் பேசப் போகிறாராம்…..

என் பிரார்த்தனை வீண்போகாது திலீபனின் உயிர் காப்பாற்றப்படப்போகின்றது…… இந்தியத் தூதுவரகத்திலிருந்து யாராவது வருவதானால் நிச்சயமாக பிரதமர் ராஐPவ் காந்தியின் ஆலோசனைப்படிதான் வருவார்கள்….. அப்படி வருபவர்கள் உணர்ச்சி பொங்கும் தாய்க்குலத்தின் கண்ணீரைக் கண்டாவது இரங்கமாட்டார்களா?

திலீபனை எண்ணித் துடிதுடித்துக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளின் மனங்களிற்கு அந்த ஆறுதல் செய்தி நிச்சயம் சாந்தியளிக்கத்தான் செய்யும்.

திலீபா ! நீ ஆரம்பித்து வைத்த அகிம்சைப் போர் எங்களது ஆயுதங்களுக்கு மதிப்பில்லாமல் செய்யப்போகிறது. போலும்? உன் அகிம்சைப் போரினால் அப்படி ஒரு நிலை எமக்கு வருமானால் அதை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.

ஏமக்கு மட்டும் ஆயுதங்களை தூக்கி கண்டபடி சுட்டுத்தள்ள வேண்டும் என்று ஆசையா என்ன? முப்பது வருடங்களாக எமது மூத்த அரசியல் தலைவர்கள் தந்தை “செல்வா” தலைமையில் முயன்று முடியாத நிலையில்…… எமது தமிழ்ச் சமுதாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றத்தானே வேறு வழியின்றி ஆயுதம் ஏந்தினோம்.

நாம் அகிம்சைக்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால் நம் எதிரி அகிம்சையைப் பற்றி ஒன்றுமே தெரியாதவன்…. அவனுக்கு அது புரியாதது. அவனுக்கு தெரிந்ததெல்லாம் கத்தியும், துப்பாக்கியும்தான்….

ஒருவன் கத்தியையும், துப்பாக்கியையும் தன் பலமாக எண்ணும்போது அவனெதிரில் நிற்பவனால் என்ன செய்ய முடியும். நீண்ட கசப்பான அனுபவங்கள் தான் எமது கரங்களில் துப்பாக்கிகளைத் தந்தன. 1948இல் இலங்கை சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்படும் நாளில் இருந்து, சிங்கள இனவாதிகளால் தமிழர்கள் காலத்துக்குக் காலம் அழிக்கப்பட்டு வருகின்ற கொடுமை எப்பொழுது முடியும்? தங்கத் தமிழர்கள் வாழ்வில் பொங்கும் மகிழ்வும் – பூரிப்பும் எப்பொழுது மலரும்?

அண்ணல் காந்தி அகிம்சைப் போரிலே வெற்றி கண்டார் என்றால் அதற்கு அவர் கையாண்ட அகிம்சைப் போராட்டங்கள் மட்டும் காரணமல்ல. காந்தியின் போராட்டத் தளம் இந்திய மண்ணிலே இருந்தது… காந்தியின் போராட்டத் தளத்திலே மனிதநேயம் மிக்க ஆங்கிலேயர்கள் இருந்தார்கள்… ஆகவே அகிம்சையைப் புரிந்து கொள்வதற்கு அந்த வெள்ளைக்காரர்களால் முடிந்தது.

ஆனால் நமது மண்ணில் அப்படியா?

எத்தனை சந்தர்ப்பங்களில் நமது தலைவர்கள் குண்டாந்தடிகளால் தாக்கப்பட்டிருப்பார்கள்? எத்தனை இனக்கலவரங்களில் நமது இனத்தவர்களின் தலைகள் வெட்டப்பட்டு தாhப் பீப்பாக்களுக்குள் போடப்பட்டிருக்கும்? எத்தனை பெண்கள் தம் உயிரினும் மேலான கற்பை இழந்திருப்பர்?

அப்போதெல்லாம் நாம் ஆயுதங்களையா தூக்கினோம்?

அகிம்சை ! அகிம்சை ! அகிம்சை !

இந்த வார்த்தைகள் தான் எங்கள் தாரக மந்திரமாக இருந்தது. இந்தக் தாரக மந்திரத்தைத் தூக்கி எறிந்து விட்டு எமது கைகளிலே ஆயுதங்களைத் தந்தவர்கள் யார்? நாமாகப் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்டகளாகத்தான் தந்தார்கள்….. மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் தான் தந்தன….. தலைவர் பிரபாகரனின் பின்னே ஆயிரமாயிரம் வேங்கைகள் அணிதிரண்டு நிற்பதற்குக் காரணம் யதார்? சிங்களப் பேரினவாதம்தான் !

இன்று காலையிலிருந்து நல்லூர்க் கந்தசாமி கோவிலில் திலீபன் பெயரில் நூற்றுக் கணக்கான அர்ச்சனைகள் செய்யப்பட்டு அவை பொதுமக்கள் மூலம் மேடைக்கு வந்தவண்ணமிருந்தன. பிற்பகல் மூன்று மணியிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வெளியிலிருந்து சனங்கள் பஸ்களில் வந்து குவியத் தொடங்கினர். எங்கே பார்த்தாலும் மக்கள் அலைகள் தான் !

தளபதி கிட்டு அண்ணாவின் தாய், திலீபனை வாரி அணைத்து உச்சி முகர்ந்து அழுத காட்சி என் நெஞ்சை தொட்டது. துரோகிகளினால் வீசப்பட்ட வெடிகுண்டினால் தன் மகன் ஒரு காலை இழந்த போது அந்தத் தாய் கூறிய வார்த்தைகள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

“ஒரு கால் போனால் என்ன? இன்னும் ஒரு கால் இருக்கு…. இரண்டு கையிருக்கு…. அவன் கடைசி சரையும் போராடுவான்…”

போர் முனையில் தன் மகனின் மார்பில் வேல் பாய்ந்திருப்பதைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்ட வீரத் தமிழ்த்தாயின் கதையை இது எனக்கு நினைவூட்டியது.

உதவி இந்தியத் தூதுவர் திரு.கென் அவர்கள் விமான மூலம் பலாலிக்கு வந்து விட்டாராம்…. அவருடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக திரு அன்ரன் பாலசிங்கமும், மாத்தயாவும் போயிருக்கின்றனர்…. ஏன்ற செய்தியை ‘சிறி’ வந்து சொன்னபோது மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தேன். திலீபனுக்கும் அதைத் தெரிவித்தேன்.

காலையில் சிறுநீர் கழித்ததால் திலீபன் சற்றுத் தெம்பாக இருந்தார். பேச்சுவார்த்தை முடிந்து அதில் சாதகமாக முடிவு கிடைக்குமானால்…… உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டு திலீபனை யாழ். பேரியாஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டும்… அங்கே அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்குவேண்டிய சிகிச்சைகளை உடனடியாக அளிக்கத் தொடங்கினால்… இரண்டு மூன்று நாள்களில் திலீபன் வழக்கம்போல் எழும்பி நடக்கத் தொடங்கிவிடுவார்.

இப்படி எனக்குள்ளேயே கணக்குப் போட்டுக்கொண்டேன்.

இயக்க உறுப்பினர்கள் திலீபனுடன் பேசிக்கொண்டிருந்தனர். அவரை சந்திக்க வந்த மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், தம்மைக் கட்டுப்படுத்த முடியாமால் விம்மி விம்மி அழுத என் நெஞ்சைத் தொட்டது.

தளபதி சூசை, பிரபா, ரகு அப்பா, தளபதி புலேந்திரன், தளபதி ஜொனி போன்றோர் கண்கலங்கி திலீபனின் தலையை வருடி…. பேசி விட்டுச் சென்றனர்.

அவர்கள் போனதும் திலீபன் என்னை அழைத்தார்.

“ கிட்டண்ணையைப் பார்க்க வேணும்போல இருக்கு….” என்று மெதுவாகக் கூறும்போது அவர் முகத்திலே ‘ஏக்கம் படர்திருந்தது. ஓரு கணம் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

கிட்டண்ணா, குட்டிசிறி ஜயர்…. இவர்கள் எல்லாரும் இந்தியாவில் இருக்கபின்றனர்.

திலீபனுக்கு என்ன பதில் சொல்லதென்று தெரியாமால் தவித்தேன்….. கிட்டு அண்ணர் இந்தியாவில் தெரியும்… ஆனால் இந்த நிலையில், அவர் கிட்டு அண்ணாவைக் காண விரும்பியது நியாயம்தான்.

இரவு வெகுநேரம்வரை போச்சுவார்த்தையின் முடிவு வரும் வருமென்று பார்த்துக்கொண்டிருந்தோம்… ஆனால், அது வரவேயில்லை

இன்று மாலை சிறிலங்கா நவ சமமாசக் கட்சித் தலைவர் திரு. வாசுதேவ நாணயக்கார, மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வந்து திலீபனைப் பார்த்துவிட்டுச் சென்றனர்.

இரவு வெகுநேரம் வரை எனக்குத் தூக்கமே வரவில்லை.. ஆனால், திலீபன் தன்னை மறந்து நன்றாக உறங்கினார்.

அவரின் இரத்த அழுத்தம் 85 . 60

நாடித்துடிப்பு- 120

சுவாசம் -22

பயணம் தொடரும்……..

மீனகம்

செப்டம்பர் 20, 2009 பதிந்தவர் எல்லாளன் | ஈழம், தியாக தீபம் திலீபன், போராட்ட வரலாறு | | No Comments Yet

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஐந்தாம் நாள்(19-09-1987)

thileepan_with leader1987ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 19ம் திகதி இது திலீபனுடன் ஜந்தாம் நாள். வழக்கம்போல் காலையில் சகல பத்திரிகைகளையும் வாசிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்யமுடியவில்லை. யாழ்ப்பாணகுடா நாடு முழுவதும் இருந்து தனியார் பஸ் வண்டிகளில் மக்கள் வெள்ளம் போல் வந்து நிறையதொடங்கிவிட்டனர்.

இன்னும் திலீபன் போர்வைக்குள்ளேயே புதைந்து கிடக்கிறான். அவனால் எழும்ப முடியவில்லை. உடல் பயங்கரமாக வியர்த்து கொட்டியது. மின்விசிறி அவர் பக்கத்தில் வேகமாக சுழன்று கொண்டிருந்தது. ஒரு மனித இயந்திரம் தன் முழுச்சக்தியையும் பிரயோகித்து இயங்கி்க் கொண்டிருக்கிறது. அன்றைய பத்திரிகைகளில் முக்கிய செய்திகளாக வழக்கம்போல் திலீபனைபற்றிய செய்திகளே இடம்பெற்றிருந்தன. திலீபன் சோர்ந்து வருகிறார். மெழுவர்த்தியைப்போல அவர் சிறிது சிறிதாக உருகிக்கொண்டிருக்கிறார். அவரது சிறுநீரகம் பாதிப்படையத் தொடங்கிவிட்டது. இருதயம் பலமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து அவர் நீராகாரம் எடுக்காவிட்டால் நிலமை மேலும் மோசமாகி எந்த வேளையிலும் எதுவும் நடக்கலாம்.

பத்திரிகைகளைப் படிக்கும்போது என் கைகளுடன் உள்ளமும் சேர்ந்து நடுங்கியது. திலீபன் என்ற ஒரு இனிய காவியத்தின் கடைசி அத்தியாயத்திற்கு வந்து விட்டதுபோல் பிரமை எனக்கு ஏற்பட்டது. அதற்கிடையில் ஓர் செய்தி காற்றோடு காற்றாக கலந்து வந்து என் செவியில் விழுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவைச்சேர்ந்த திலகர் அவர்கள் இந்தியாவுக்குச் சென்றிருக்கிறார் என்பதுதான் அது. புலிகளின் சார்பாக திம்பு பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டவர்களில் திலகரும் ஒருவர். அப்படியானால் பிரதமர் ராஜுவ்காந்தியிடமிருந்து ஏதாவது அழைப்பு வந்திருக்குமா என்ற நப்பாசை என் மனதில். விசாரித்தபோது எந்த விதமான அழைப்பும் வரவில்லை வழமைபோல சாதாரண விசயங்களை கவனிப்பதற்காகத்தான் திலகர் போய் இருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் ஏன் கேட்டோம் என்றிருந்தது.

திலகரின் இந்தியப்பயணம் பற்றி கேட்டு அறியாமல் விட்டிருந்தால் ஓரளவு மன நிம்மதியாவது கிடைத்திருக்கும். ஆனால் விதியே உன் கரங்கள் இத்தனை கொடியதா ? பம்பரம்போல் கள்ளமில்லாத வெள்ளையுள்ளத்துடன் கலகலவென்று சிரித்துக்கொண்டு எம்மையே சுற்றி வரும் திலீபனை சித்திரவதை பள்ளத்தில் தள்ளுவதுதான் உன் கோர முடிவா ? அப்படி அவர் என்ன குற்றம் செய்து விட்டார். தமிழினத்திற்காக தனது தந்தை சகோதரங்களை பிரிந்து வந்தாரே அது குற்றமா? தமிழினத்திற்காக தன் வைத்திய படிப்பையே உதறி எறிந்தாரே அது குற்றமா? தமிழினத்திற்காக இரவும் பகலும் மாடாக உழைத்தாரே அது குற்றமா? தமிழினத்திற்காக தனது வயிற்றிலுள்ள குடலின் 14 அங்கலத்தை வெட்டி எறிந்தாரே அது குற்றமா? தமிழினத்திற்காக இன்று தன்னையே சிறிது சிறிதாக அழித்துக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறாரே அது குற்றமா? எது குற்றம்?

வானத்தைப்பார்த்து வாய்விட்டு கத்த வேண்டும் போல் இருக்கிறது. கதறித்தான் என்ன பயன் ஏற்படப்போகிறது. இலட்சக்கணக்கான மக்கள் கடந்த ஜந்து நாட்களாக கண்ணீர் சிந்திக்கொண்டு இருக்கிறார்களே. யாருக்காக? திலீபனுக்காக,தமிழினத்திற்காக அப்படி இருக்க அந்த கண்ணீரை ஏக்கத்தை இன்னும் யாருமே புரிந்து கொள்ளவில்லையே. ஏன்? உலகில் மனித தர்மமே செத்துவிட்டதா? காந்தி இறந்ததற்காக கண்ணீர் வடிக்கும் உலகம் காந்தியத்தின் காலடியில் சிறிது சிறிதாக எரிந்து கொண்டிருக்கும் திலீபன் என்னும் மெழுகுவர்த்தியைக் காணவில்லையா? அல்லது கண்டும் காணாது போய்விட்டதா? எத்தனையோ முறை திலீபன் சாவின் விளிம்பில் இருந்து தப்பியிருக்கிறார்.

83ம் ஆண்டு அவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் நவாலிப்பிரதேச பொறுப்பாளராக இருந்தபோது ஓர் நாள் நவாலி கத்தோலிக்க தேவாலயத்தின் அருகே நின்று பொது மக்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று இரண்டு ஜுப் வண்டிகள் அவரருகே முன்னும் பின்னுமாக வந்து நின்றன. சிறிலங்கா இராணுவத்தினர் கண்சிமிட்டும் நேரத்தில் சுற்றி வளைத்துவிட்டதை உணர்நத திலீபன் எதுவித பதற்றமும் அடையாமல் நிதானமாக நின்றார். அவரின் மதி நுட்பம் மிகவும் தீவிரமாக வேலைசெய்யத்தொடங்கியது. யாரோ ஒரு தமிழ்த்துரோகியால் வழங்கப்பட்ட தகவலை வைத்துக்கொண்டு திலீபனை அடையாளம் கண்டு கொண்ட இராணுவத்தினர் ஜுப் வண்டியில் ஏறுமாறு உத்தரவிட்டனர். அவரது கையிலே ஆயதம் அடங்கிய சிறிய சூட்கேஸ் ஒன்று இருந்தது. அவரருகே இரு இராணுவத்தினர் சேர்ந்து வந்தனர்.

ஜுப் வண்டியில் ஏறும்போது எதிர்பாராத விதமாக பக்கத்தில் வந்து கொண்டிருந்தவர்கள் மீது பாய்ந்து சூட்கேஸினால் மின்னல் வேகத்தில் தாக்கிவிட்டு பக்கத்திலிருந்த பனந்தோப்பை நோக்கி ஓடத் தொடங்கினார் திலீபன். எதிர்பாராத தாக்குதலினால் நிலைகுலைந்து விட்ட இராணுவத்தினர் என்ன செய்வது என்று திகைத்து நின்றனர். மறுகணம் அவர்களின் கைகளிலிருந்த துப்பாக்கிகள் பயங்கரமாக திலீபனை நோக்கி உறுமத்தொடங்கின.

அவரது கை ஒன்றை துளைத்துக்கொண்டு சென்றது துப்பாக்கிகுண்டு. இரத்தம் சிந்த மனதை திடமாக்கிக்கொண்டு வெகுநேரமாக ஓடிக்கொண்டிருந்தார் திலீபன். இராணுவததினரால் அவரை பிடிக்கமுடியவில்லை. இந்த ஏமாற்றத்தினால் பல பொதுமக்களை அவர்கள் அன்று கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளிவிட்டுச்சென்றனர். யாழ் பெரியாஸ்பத்திரியில் 1986ம் ஆண்டின் இறுதியில் வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற இராணுவத்தினருடனான மோதலின்போது திலீபன் தன் துப்பாக்கியால் பலரை சுட்டுத்தள்ளினார்.

ஆனால் எதிரிகளின் ஓர் குண்டு அவர் குடலை சிதைத்துவிட்டிருந்தது. யாழ் பெரியாஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டபோது அவர் குடலின் 14 அங்குலத்துண்டை சத்திரசிகிச்சை நிபுணர்கள் அகற்றிவிட்டனர். சுமார் மூன்று மாதங்களாக வைத்தியசாலையிலேயே வாழ்ந்தபின்தான் அவர் பூரண குணமடைந்தார். இப்படி எத்தனையோ துன்பங்களை தமிழினத்திற்காக அனுபவித்தவர்தான் திலீபன். ஆயுதப்போராட்டத்தினால் மாத்திரமன்றி அகிம்சையாலும் தன்னால் சாதனை புரிய முடியும் என திலீபனுக்கு அசையாத ந்ம்பிக்கை இருந்தது.

அதனால் இந்தப்போராட்டத்தில் அவர் தானாகவே முன்வந்த எத்தனையோ பேர் தடுத்தும் கேளாமல் குதித்தார். இன்று மாலை இந்திய சமாதானப்படையினரின் யாழ் கோட்டை இராணுவ முகாம் பொறுப்பாளர் கேணல் தரார் அவர்கள் திலீபனை பார்க்க வந்தார். அவர் சனங்களிடையே நடந்து வரும்போது பலதாய்மார்கள் அவர் மீது கல்களை வீச தயாராகிக்கொண்டிருந்தனர். அவர்களை தடுத்து அவருக்கு தகுந்த பாதுகாப்புக்கொடுத்து மேடைக்கு அருகே அழைத்துச்சென்றனர் விடுதலைப்புலிகள். திலீபனின் உடல் மோசமாகி வருவதால் பொதுமக்களும்,இயக்க உறுப்பினர்களும் மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதை யோகியும் வேறு சிலரும் எடுத்துக் கூறினர்.

தான் சென்று தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறிவிட்டுச் சென்றார்.அவர் மூலமாவது திலீபனின் உயிர் காப்பாற்றப்படாதா என்று எங்களில் சிலர் நிம்மதியாக இருந்தோம். களைப்புடன் திலீபன் உறங்கிவிட்டார்.

மீனகம்

செப்டம்பர் 20, 2009 பதிந்தவர் எல்லாளன் | ஈழம், தியாக தீபம் திலீபன், போராட்ட வரலாறு | | No Comments Yet