அழியாச்சுடர்கள்

பிரபாகரனின் உளவியல் தொடர்பான சிங்கள ஆய்வு நூல் !

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உளவியல் தொடர்பான ஆய்வு நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நூலை உளவியல் மருத்துவரான ருவான் எம். ஜயதுங்க வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ප්‍රභාකරන් සාධකය පිළිබඳ මනෝ විද්‍යාත්මක විශ්ලේෂණයක්‌ එළි දකී

වෛද්‍ය රුවන් එම්. ජයතුංග විසින් ලියනලද ප්‍රභාකරන් සාධකය පිළිබඳ මනෝ විද්‍යාත්මක විශ්ලේෂණයක්‌ නම් කෘතිය ගොඩගේ ප්‍රකාශකයන් විසින් එළිදක්‌වා තිබේ.

මෙම කෘතියෙන් වේළුපිල්ලේ ප්‍රභාකරන් තුළ තිබූ නායකත්ව සාධක මෙන්ම ඔහු තුළ තිබූ සමාජ විරෝධී පෞරුෂ ලක්‍ෂණද පෙන්වා දෙනු ලබයි. මෙම පොත පිළිබඳ අදහස්‌ දක්‌වන විශේෂඥ මනෝ වෛද්‍ය සරත් පඩුවාවල පෙන්වා දෙන්නේ ප්‍රභාකරන් සාධකයේ සැඟවුණු මනෝ විද්‍යාත්මක පාර්ශ්වයන් කතුවරයා විසින් හෙළි කරන බවයි.

Prabha’s creation of a psychological analysis

Dr. Ruwan M. Wijewardena A psychological analysis of Prabhakaran’s factor written by Jayathunge has been unveiled by God’s publishers.

The book also points out the leadership factors of Veluppil Prabhakaran as well as the anti-social characteristics of him. Commenting on the book, consultant Psychiatrist Sarath Panduwawala points out that the author reveals the hidden psychological aspects of Prabhakaran.

பிரபாகரனுக்குள் மறைந்திருந்த உளவியல் ரீதியான பண்புகள் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இருந்த தலைமைத்துவ பண்பு மட்டுமல்லாது அவருக்குள் இருந்த சமூக விரோத பண்புகள் தொடர்பாகவும் இந்த நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல நூல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன் அவற்றில் ஒரு சில இவற்றின் உள்ளடக்கம் பற்றி எமக்குத்   தெரியாது  இருப்பினும் இணைத்திருக்கின்றோம்  உங்களிடமே விட்டிருக்கின்றோம்

Prabhakaran-Story-his-struggle-Eelam-ebook tamil

 

Prabhakaran Story ebook tamil

ஜூலை 2, 2018 Posted by | ஈழமறவர், ஈழம், பிரபாகரன் | , , | பிரபாகரனின் உளவியல் தொடர்பான சிங்கள ஆய்வு நூல் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தமிழீழ விடுதலைப் போராட்டமும் தேசியத் தலைவரும் மின்னூல்கள்

Pdf  தமிழீழ விடுதலைப் போராட்டமும் தமிழீழத் தேசியத் தலைவரும்

**

http://anyflip.com/xaxc/tqms/

http://online.anyflip.com/xaxc/tqms/

————–viduthalaiperoli-history of prabakaran

pdf–விடுதலைப்பேரொளி

http://anyflip.com/xaxc/ryqq

http://online.anyflip.com/xaxc/ryqq/

—————————

Pdf prabhakaran-a-leader-for-all-season-book

தமிழில்

http://online.anyflip.com/xaxc/eift/

PDF : எனது இலட்சியப் பாதை

http://anyflip.com/xaxc/awad

http://online.anyflip.com/xaxc/awad/

————-

pdf –பிரபாகரன் பற்றி பொட்டு

http://online.anyflip.com/xaxc/flnq/

http://www.eelamview.com/2011/11/17/a-histroy-ofprabhakaranism/

ஜூன் 29, 2018 Posted by | ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், பிரபாகரன், வீரவரலாறு | , , , , , | தமிழீழ விடுதலைப் போராட்டமும் தேசியத் தலைவரும் மின்னூல்கள் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தேசியத் தலைவரின் வீரச்சாவும் ! தேவைப்படுவோரின் தேவைகளும் !

புலிகளின் மூத்த உறுப்பினர் காக்கா அண்ண பத்திரிகை ஒன்றில் “சத்திய சோதனை” எனும் ஆக்கத்தில் எழுதிய விடயம் ஒன்று தற்போது நினைவுக்கு வந்தது.

காங்கேசன்துறை வசந்தகான நாடக சபாவினரால் ஆயிரத்துக்கு மேற்பட்ட தடவைகள் மேடையேற்றப்பட்ட நாடகம் அரிச்சந்திர மயான காண்டம். நடிக மணி வி.வி.வைரமுத்து அரிச்சந்திரனாக நடித்தார்.

‘சோகசோபித சொர்ணக்குயில்’ இரத்தினம், செல்வரத்தினம், தைரியநாதன் முதலானோர் பல்வேறு காலகட்டங்களில் சந்திரமதியாக நடித்தனர். இந்த இசை நாடகத்தைப் பின்னர் பிரபல எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் மேடையேற்றினார்.

‘மயானத்தில் மன்னன்’ என்ற பேரில் அரியாலையைச் சேர்ந்த பொன்னையா சண்முகலிங்கம் என்பவரால் நடிக்கப்பட்டது. இந்த அரிச்சந்திரன் கதா பாத்திரம் மகாத்மா காந்தியின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அரசுரிமை, மனைவி, மகனை இழந்த போதும் சத்தியத்துக்காக நிலைகுலையாத மன்னன் அரிச்சந்திரனின் வரலாறு அது. மகாத்மாகாந்தி தனது சுய சரிதையை சத்தியசோதனை என்ற பெயரிலேயே எழுதினார்.

தமிழர் தம் வரலாற்றிலும் இதேபோன்ற நிலை எழுந்தது. உணர்வுள்ள ஒவ்வொரு தமிழ் மகனும் ‘அவர்’ உயிருடன் வாழவேண்டும் எங்காவது தப்பித்து இருக்க வேண்டும் என மனதார விரும்புகின்றனர்.

ஆனால் அவர் இல்லை என்பதே யதார்த்தம். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக சாத்திரிமாரை அணுகும்போது அவர் ஓரிடத்தில் உள்ளார்; மறை பொருளாகக் காட்டுகிறது என்றே சொல்லுவர்.

உண்மையில் அவர்களுக்குத் தெரியும் ஆள் இல்லையென்று. அதைச் சொன்னால் அன்று கிடைக்கும் வருமானத்துக்குப் பின் எதுவும் கிடைக்காது. ஆகவே இருக்கிறார் – இருக்கிறார் என்று தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்.

இதையொத்த நிலைதான் 2009 மே 18இற்கு பின் ஏற்பட்டது. சுமார் முப்பத்தையாயிரம் மாவீரர்களை வழிநடத்தியவர் மாவீரராகிவிட்டார். அவரை மாவீரர் பட்டியலில் சேர்க்கத் தயாரில்லை புலம்பெயர்வாசிகளை வழிநடத்துவோர்.

அவரின் அண்ணன் மனோகரன் ‘சிலர் மண்ணில் தேடுகிறார்கள், சிலர் விண்ணில் தேடுகிறார்கள்’ என ஒரு ஊடகத்தினரின் கேள்விக்குப் பதிலளித்தார். வேறு எப்படித்தான் பதிலளிப்பது? அவர் தமிழரின் மனங்களில் வாழ்கிறார் என்பதே உண்மை.

குலம் அண்ணா அவருக்கு விளக்கேற்றி தமது உணர்வை வெளிப்படுத்த முயன்றார். அதற்கு தடை விதிக்கப்பட்டது. அவர் உயிரோடு உள்ளார் என்று மற்றவர்களுக்கு சொல்லலாம்.

குலம் அண்ணருக்கே சொல்ல முடியுமா? தலைவருக்கு விளக்கேற்ற அனுமதிக்காத இடத்தில் எனக்கென்ன வேலை? என நினைத்தார். ஒரு மாபெரும் பொய்யை வழிமொழிய அவர் தயாராக இருக்கவில்லை.

இதற்காக அல்பிரட் துரையப்பா, கருணா போன்றோருக்கு கொடுத்த பட்டத்தை வாய்மொழியாகவும், சமூகவலைத் தளங்களிலும் பரப்பினர். எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு 2009இற்கு பின்னர் மாவீரர் நாளில் ஒரு சாதாரண தமிழ் மகனாக ஒரு மூலையில் நின்று சுடரேற்றி விட்டுத் திரும்புகிறார்.

‘ஒரு விளக்கேற்ற வேண்டுமென்று துடிக்கிறார்கள்’ என்றும் ஒரு பிரகிருதி இவரது நிலைப்பாட்டைக் கொச்சைப்படுத்தினார். 2009 இல் ‘எமது ஆயுதப்போராட்டம் மௌனித்து விட்டது’ என்று அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் உத்தியோகபூர்வமாக அறிவித்தாயிற்று.

2011 ஜனவரி 11இல் சுவிஸ் ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாட்டாளர்கள் 7 பேரை சுவிஸ் அரசு கைது செய்தது. இவர்கள் உட்பட 13 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

சுவிஸிலுள்ள தமிழர்களிடம் பலாத்காரமாக நிதி சேகரிக்கப்பட்டது என்றொரு குற்றச்சாட்டு. இப்பணம் குற்றவியல் அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டது என்றுமொரு குற்றச்சாட்டு.

வங்கியை ஏமாற்றினர் என்றும் ஒரு குற்றச்சாட்டு. இறுதி யுத்தத்தின் தேவைகளுக்கென தனி மனிதர்களின் பெயர்களில் கடன் பெற்று இயக்கத்துக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அங்குள்ள அப்போதைய மற்றும் தற்போதைய தலைமை மௌனம் காத்தது. அவர்கள் வேண்டிய காசு அவர்களே கட்டட்டும் என்பது அவர்களின் நிலைப்பாடு.

இந்தக் காசு எங்கே போனது என்பதும் சந்தேகமறத் தெரியும். அந்தப் பொய்யை தொடர்ந்து சொல்ல விடாமல் குலம் அண்ணா போன்றோர் தடுக்கிறார்கள் என்பதே அவர்களின் கோபம்.

சுவிஸில் உள்ள தமிழர்களிடம் நாம் மனம் விரும்பியே நிதி வழங்கினோம் என்றொரு ஆவணத்தைச் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் வழங்கினால் வழக்கை முடிக்கலாம் என்றொரு நிலை இருந்தது.

மாவீரர் நாள் நிகழ்வு மற்றும் ஆலயங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் மக்களிடம் கையெழுத்து வாங்க முயன்றனர். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கடந்த 14ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் குலம் அண்ணர் இந்த விடயத்தை உலகுக்கு வெளிப்படுத்தினார். உலகெங்கும் உள்ள ஆர்வலர்கள், உணர்வாளர்கள் சம்பந்தப்பட்டோரின் செயல் குறித்து கடும் சீற்றமடைந்தனர்.

எனினும் பூப்புனித நீராட்டு விழா, திருமணம் போன்ற வைபவங்களில் இந்த விடயத்தை தெரியப்படுத்திய எஸ்.ரி.ஏ எனும் அமைப்பினர் மக்களிடம் படிவத்தை வழங்கிக் கையொப்பம் பெற்றனர்.

இச் செய்தியை குலம் அண்ணரின் வாயால் கேட்டதும் மிகவும் ஆறுதல். இவ்வாறு கையெழுத்திட்ட 5069 உணர்வுத் தமிழர்களே! உங்கள் அனைவரையும் ஒவ்வொரு போராளியாக நான் மதிக்கிறேன், என் நண்பர்களாக ஏற்கிறேன்.

எனது நட்பை ஏற்றுக்கொள்ளுங்கள். மன்னிக்கவும்! எனது தலைவன் யார் காலிலும் விழக்கூடாது என்றுதான் எங்களுக்குக் கற்பித்திருக்கிறார். இன்றோ போராடிய இனம் யார் யாரோ காலிலெல்லாம் விழுகிறது. அவர் இருக்கிறார் திரும்பி வருவார் என்று சொல்வதன் மூலம் தமக்கான கடமையை நாசூக்காக நிராகரிக்கின்றனர்.

யுத்தம் முடிந்தபின் வாழ்வாதாரத்துக்கு ஏற்ற ஏற்பாடுகளைச் செய்யவேண்டிய கடமை மக்கள் பிரதிநிதிகளுக்கும், வெளிநாட்டில் முதலீடுகளை வைத்திருப்போருக்கும், ஏனைய புலம்பெயர்ந்த உறவுகளுக்கும் உள்ளது.

மூன்றாம் தரப்பினர் ஏதோ தம்மாலான உதவிகளை செய்கின்றனர். மலைபோல் உள்ள தேவைக்கு இது மிகவும் அற்பமே. இருக்கும் பணத்தை நாட்டில் தேவை உள்ளோருக்கு அனுப்பாமலிருக்க தீர்மானித்த இரண்டாம் தரப்பினர் இந்த முதலீடுகளை எப்படி மேலும் பெருக்கலாம் என எண்ணுகின்றனர்.

அரசியல்வாதிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களுக்கு எப்போதுமே அடுத்த தேர்தல் பற்றிய சிந்தனைதான். ஆளுமையுள்ளவர்கள் எவரும் அருகில் வந்துவிடக்கூடாது. அவர்களுக்கு தேவை எடுபிடிகளே.

இந்த நிலையில் தமக்கு சமூக அங்கீகாரமும், வாழ்வாதாரமும் வழங்கும் சக்திகளின் பின்னால் பாதிக்கப்பட்டோர் இழுபட்டுப் போவது தவிர்க்க முடியாதது. ஒரு மனிதனை ‘நூறாண்டு காலம் வாழ்க!’ என்றே வாழ்த்துகிறோம்.

இப்போதிருந்தால் அவருக்கு 64 வயது. இன்னும் 36 வருடங்களுக்கு இப்படியே சொல்லிக்கொண்டிருக்கப் போகிறார்களா? இன்று இவர்கள் சொல்லும் சொல்லை பலர் நம்புகின்றனர். இவர்களின் பிள்ளைகள் 36 வருடங்களுக்குப் பின்னும் இதே பொய்யைச் சொல்லப்போகிறார்களா?

அப்போது எமது பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் இந்தக் கதையைக் கேட்க வேண்டி வருமா? ஒவ்வொருவரும் யாருக்காகச் சுடரேற்றப் போகிறீர்களோ அத்தோடு மனதில் அவரையும் நினைத்துச் சுடரேற்றுங்கள்.

இன்று முன்னாள் போராளிகள், போராட்டத்துடன் நீண்ட காலம் ஒத்துழைத்தோர் யாசகம் கேட்கின்றனர். மனதை உலுக்கும் செய்தி இது. இன்னொரு விடயம் ஒரு ஆண் எந்த வயதிலும் தந்தையாகலாம்.

ஆனால் பெண்ணின் நிலை அப்படி அல்ல. பெரும்பாலும் 35 வயதுக்குப்பின் தாயாக முடியாது. (விதிவிலக்காக சிலர் 40 வயதிலும் குழந்தை பெறுகின்றனர்) அவர் வளர்த்த செஞ்சோலைப் பிள்ளைகள் பலருக்குத் திருமணமாகவில்லை.

ஒரு பகுதியினர் வவுனியா டொன்பொஸ்கோ சிறுவர் இல்லத்தில் உள்ளனர். இன்னொரு பகுதியினர் அகிலாண்டேஸ்வரி இல்லத்தில் உள்ளனர். இவர்கள் பற்றிச் சீரியஸாகச் சிந்திக்க வேண்டும்.

வயது வந்த ஆண் பிள்ளைகள் உள்ள தமிழர்கள் இந்தப் பிள்ளைகளை மருமக்களாக ஏற்கத் துணியவேண்டும். அது அவருக்கு செய்யும் நன்றிக் கடனாகும். நாங்கள் உறவுகள் இருக்கிறோம் என நம்பிக்கையூட்ட வேண்டும்.

இந்த விடயத்தில் ஒவ்வொருவரும் தங்களாலான பங்களிப்பை வழங்க வேண்டும். டொன்பொஸ்கோ சிறுவர் இல்லத்தை நிர்வகிக்கும் அருட்சகோதரி குடிகாரனாக இல்லாமல் இருந்தால் அதுவே போதும் என்கிறார்.

வெளிநாட்டில் சண்டித்தனம் புரிவோருக்கு இவ்வாறான விடயங்களில் அக்கறை இல்லை. முள்ளிவாய்க்காலில் எல்லாத்தரப்பையும் ஒற்றுமையாக்கி விட்டாலும் இவர்கள் விடுவதாய் இல்லை. தனியே சுடரேற்ற ஏற்பாடு செய்தார்கள்.

பிரதேச வேறுபாடு காட்டுகிறார்கள் என்ற மாயையை ஏற்படுத்தத் துணை நின்றார்கள். பிரான்ஸில் மாவை கலந்து கொண்ட மாநாட்டில் கண்ணீர்ப்புகையடிக்க ஏற்பாடு செய்தார்கள்.

எமது மொழியின் பெயரால் யாழ்ப்பாணத்தில் மாநாடு நடந்தாலும், பிரான்ஸில் நடந்தாலும் கண்ணீர் புகைக்குண்டுதானா? அன்று யாழ்ப்பாணத்தில் நடந்த கண்ணீர்ப்புகைக்குண்டு தாக்குதலைத் தொடர்ந்து ஒன்பது பேர் உயிரிழக்க நேர்ந்தது.

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஆயுத வழியை இளைஞர் நாடினர். ஏற்கனவே தமிழ் இளைஞர் பேரவையில் அங்கம் வகித்தவர்களில் குலம் அண்ணரும் ஒருவர்.

‘இந்தப் போராட்ட வரலாற்றில் எம்மைப் பாதுகாத்தவர் நீங்கள். உணவு தந்தவர் நீங்கள். நோயுற்ற வேளையில் பராமரித்தவர்கள் நீங்கள். தேவை என்றால் இரத்தம் தந்தீர். மீட்பு நிதி என்றதும் நகையைத் தந்தீர். இறுதிப் போர் என்றதும் பிள்ளைகளைத் தந்தீர்.

இன்று தலைவன் இல்லாத நிலையில் உங்களுக்கு மட்டுமே நாம் விசுவாசமாக இருக்க வேண்டும். ஆயிரம் தடவை சொல்கிறோம் அவர் எங்கள் மனதில் மட்டுமே வாழ்கிறார்.

தமிழகத்தில் வைகோவிடம், அவரைத் தமிழினம் இழந்துவிட்டது என்று சொன்னதும் விம்மி விம்மி அழுததாக எனது நெருங்கிய நண்பர் எனக்குச் சொன்னார்.

அவரையும், நெடுமாறன் ஐயாவையும், காசி அண்ணாவையும் ஏமாற்றி விட்டனர். அவர்கள் அனைவருக்கும்தான் இந்த வருத்தமான செய்தியை உறுதிப்படுத்துகிறேன். என் மீது மேற்கொள்ளப்படும் எந்தச் சேறடிப்பையும், செருப்படியையும் ஒரு பொருட்டாக மதிக்கப்போவதில்லை.

உண்மையையா, எமக்கு விருப்பமானதையா என்ற கேள்வி வரும்போது உண்மையின் பக்கம் நிற்போர் எங்களுடன் கைகோத்துக் கொள்ளுங்கள். இது சத்தியசோதனை தான்! விடுதலைப் புலிகளை ஒரு குற்றவியல் அமைப்பு அல்ல எனத் தெரிவித்தமைக்காக சுவிஸ் அரசுக்கு நன்றி சொல்வோம்.

தண்டனை கிடைக்க வேண்டுமென எதிர்பார்த்த சக்திகளுக்குள் சில ஊடகங்களும் அடக்கம். அவர்களுக்கு ஏமாற்றம்தான்… அவ்வாறான ஏமாற்றம் தொடரட்டும்.

யார் இந்தக் குலம் அண்ணர்?

இயற்பெயர் – செல்லையா குலசேகரராஜசிங்கம்

சொந்த இடம் – புன்னாலைக்கட்டுவன்

பிறந்த திகதி – 1955 ஏப்ரல் 17

‘சுருக்கமாகச் சொன்னால் ஈழத்துக் காமராஜர். இருவருக்குமிடையில் வழிமுறைகள் மாறுபட்டபோதும் அவரைப்போலவே திருமணமாகாதவர். எளிமைக்கும், யோக்கியத்துக்கும் இவரேயே உதாரணம் காட்டுவர்.

‘புதிய தமிழ்ப் புலிகள்’ இயக்கத்தில் இருந்த சுமார் பத்துப் பேரில் ஒருவர். தமிழ் உணர்வாளர்களைத் தேடித் திரிந்த தலைவர் பிரபாகரன் 1975இல் இவரை இனங்கண்டார்.

துரையப்பாவின் சம்பவத்துக்குப் பின்னர் தலைவரைப் பாதுகாத்தவர்களில் இவரும் ஒருவர். ஒரு தேவைக்காக தலைவருடன் அச்சுவேலிக்குப் போய் வருகையில், வேறொரு விடயமாக வீதிச் சோதனையில் ஈடுபட்ட பொலிஸார் இவர்களை மறித்தனர்.

அவ்வேளை தலைவர் வானத்தை நோக்கித் துப்பாக்கி பிரயோகம் செய்யவே பொலிஸார் சிதறி ஓடினர். அவரின் துணிச்சலை நேரடியாகக் கண்ட குலம் சரியான தலைவனின் தொடர்பு கிடைத்ததற்காகப் பெருமைப்பட்டார்.

தீவிரவாத இளைஞர்களைத் தேடித் திரிந்த இன்ஸ்பெக்டர் சம்பந்தனுக்கு, துரோகி ஒருவர் இவரை இனங்காட்டினார். பொலிஸாரால் கைதான இவர் மோசமான சித்திரவதைக்குள்ளானார்.

பல்வேறு இடங்களுக்குக் கொண்டு திரிந்த பொலிஸார் பின்னர் கொழும்பு நாலாம் மாடியில் தடுத்து வைத்திருந்தனர். 1978 செப்டெம்பரில் இரத்மலானையில் இடம்பெற்ற அவ்ரோ விமானக் குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி வழக்குத் தாக்கல் செய்தனர்.

அதன் பின் ‘அவ்ரோ குலம்’ என்றே எல்லோராலும் குறிப்பிடப்பட்டார்.

அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் மு.சிவசிதம்பரம் வாதாடி இவரை விடுவித்தார். 1980 மே மாதம் இயக்கத்தில் பிளவு உண்டானது. இரு பகுதியினரையும் ஒன்றிணைக்க ராஜா என்பவர் லண்டனிலிருந்து வந்திருந்தார்.

1980 ஓகஸ்ட் மாதம் ஊர்காவற்றுறை கரந்தனில் இணைப்புச் சம்பந்தமாகக் கலந்துரையாடல் நடைபெற்றது. இரு பகுதியினரதும் கருத்துக்களை குலம் அண்ணரே பதிவு செய்தார். சமரச முயற்சி வெற்றிபெறவில்லை.

செல்லக்கிளி அம்மான், காந்தன் முதலியோரைப்போல இவரும் தற்காலிகமாக ஒதுங்கி இருக்க முடிவு செய்தார். எனினும் 1981இல் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் கைது செய்யப்பட்டதும் இவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

விமானம் மூலம் பலாலியிலிருந்து கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டோரில் இவரும் ஒருவராக இருந்தார். பனாகொடை முகாமில் குட்டிமணி, தங்கத்துரைக்கு நிகழ்ந்தது போன்றே கடுமையான சித்திரவதை இவருக்கும்.

1982இல் சந்திரஹாசன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மூலம் விடுதலையானார். எனினும் பிரதி வாரம் பொலிஸில் கையெழுத்திட வேண்டியிருந்தது. பின்னர் சவூதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்றார்.

மண் வீடு, வறுமை, திருமணமாகாத மூன்று சகோதரிகள். வேறு வழியில்லை. 1984இல் இந்தியாவுக்குச் சென்றார். தலைவரை சந்தித்த பின் 1985இல் சுவிற்சர்லாந்துக்குச் சென்றார்.

இவரது புகலிடக் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டது. சுவிஸில் செங்காளன் மாநிலத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகளுக்குத் தலைமை தாங்கினார்.2000ஆம் ஆண்டிலிருந்து சுவிஸ் முழுவதற்குமான பொறுப்பை ஏற்றார். 2009இல் யுத்தம் முடிவடையும் வரை இப்பொறுப்பில் இருந்தார்.

கே.பியின் அறிவித்தலுக்கு அமையவும் ஜீ.ரீ.வி (GTV) (தமிழ் தொலைக்காட்சி) தகவல் அடிப்படையிலும் அலுவலகத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக தலைவர் இருக்கிறார் என ஒரு பகுதியினரும், அவர் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்று இன்னொரு பகுதியினரும் முரண்பட்டுக் கொண்டார்கள்.

இந்நிலையில் முரண்பாட்டைத் தவிர்த்துக் கொள்வதற்காக அலுவலகத்தை விட்டு வெளியேறினார். இறுதி யுத்தத்தில் தலைவரின் இழப்பு இவருக்கு வேதனையைக் கொடுத்தது. மக்களினதும், தமதும் மனங்களில் தலைவர் வாழ்கிறார் என்றார் இவர்.

அவர்களோ மண்ணிலும் வாழ்கிறார் என்று சொன்னார்கள். இவரால் ஏற்கமுடியவில்லை. பல்வேறு பட்டங்கள் கிடைத்தன. 1975இல் விடுதலை இயக்கத்தில் இணைந்த தனக்கு, சுமார் இரண்டு தசாப்தங்களின் பின்னர் இணைந்தவர்கள் வழங்கும் பட்டங்கள் குறித்து அலட்டிக்கொள்ளவில்லை.

‘என் கடமை யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணி செய்து கிடப்பதே…’ என்பது அவரது நிலைப்பாடு. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறிப்பாக கிழக்கு மாகாண மக்களுக்கு உதவி வருகிறார்.

தன்னுடையதும் தனது சகாக்களின் விடுதலை என்பதைவிட ‘விடுதலைப் புலிகள் என்பது குற்றவியல் அமைப்பு அல்ல’ என நீதிமன்றம் தெரிவித்ததே மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார்.

தனக்காகவும், 1994ஆம் ஆண்டிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்புக்காகவும் வாதாடிவரும் தமது சட்டத்தரணி மார்சல் பெஸோநெற் (Marcel Bosonee) அவர்களுக்கு நன்றி கூறுகிறார்.

எழுத்தாளர் டயஸ்

leader prabakaran tribute 4

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார்.

மானிடத்தின் விடுதலையை நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.

leader prabakaran tribute


  1. Prabhakaran’s Death Revisited
  2. Dissecting the Prabhakaran Death Story and profiling the liars
  3. Confronting the Death of Prabhakaran !

ஜூன் 26, 2018 Posted by | ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர், பிரபாகரன் | , , , , | தேசியத் தலைவரின் வீரச்சாவும் ! தேவைப்படுவோரின் தேவைகளும் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி !

என்ன வசீகரமென்றே எனக்கு விளங்கவில்லை– லண்டன் BBC தமிழ்ஓசையின் மூத்த செய்தியாளர் ஆனந்தி!

பி.பி.சி.ஆனந்தி அக்கா-சந்திரகாந்தன் மதிய உணவு உரையாடல் முழுக்க தமிழீழ விடுதலைப் போராட்டத்தையே மையமாகக் கொண்டிருந்தது. சந்திரிகா- புலிகள் குறுகிய கால சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் வன்னிக்குச் சென்று வந்திருக்கிறார் ஆனந்தி அக்கா. “”தலைவரெ பார்த்து சில கேள்விகள் கேட்கணு மென்டுதான் நானும் போனேன்.

ஆனா அங்கு கட்டி வச்சிருக்கிற “செஞ்சோலை’ குழந்தைகள் இல்லத்தைப் பார்த்த பிறகு எனக்குள்ளேயே என்னையுமறியாத ஒரு மாற்றம். என்ட மனக்கசடுகளெல்லாம் கழுவப்பட்டு புதுசா பிறந்த மாதிரியான உணர்வு. வன்னியிலிருந்து திரும்பி பி.பி.சி வந்து “செஞ்சோலை’ பற்றி நிகழ்ச்சி தயாரித்தபோது “என் தெய்வம் வாழும் திருக்கோயில் நின்றேன்’ என்டுதான் தலைப்பிட்டேன்” என்றார்.

தொடர்ந்தவர்,

“”பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவியப்பா. என்ன வசீரமென்டே விளங்கவில்லை, நேரா சந்திச் சீங்களெண்டா அப்படியொரு குழந்தைத்தனம் இருக்கும். நானும் “சனத்துக்கு இவ்வளவு கஷ்டம் ஏன்? உங்களாலெதானே’ என்டெல்லாம் கேட்கணுமென்டுதான் போனேன். ஆனால் நேரா பார்க்கேக்க நினைச்சு பார்க்கேலாத உரிமையும் பாசமும் வந்திடுது”

என்றார்.

உண்மையில் அருகில் பார்க்க வேலுப்பிள்ளை பிரபாகரன் அப்படித்தான். அச்சுறுத்தும், யோசிக்க வைக்கும் முகபாவனை களை சல்லியளவும் அவரிடம் நீங்கள் காணமாட்டீர்கள். குழந்தைத்தன மானதொரு வசீகரம் வேடமின்றி நிழலாடிக்கொண்டே இருக்கும். நான்கூட அவரை சந்தித்தபோது எழுதிக்கொண்டு போகாத எடக்கு மடக்கான கேள்விகளை யெல்லாம் கூட துணிவாகக் கேட்கத் தொடங்கி விட்டேன். ஏதோ துணிவை வரவழைத்துக் கொண்டு கேட்டேன் என்று சொல்வது கூடத் தவறு. இயல்பாக உரையாடி, அளவளாவி, வாதிட்டு சண்டையிடும் இறுக்கமற்ற சூழமைவை அவரது மென்மையான ஆளுமை உருவாக்குகிறதென்பதுதான் உண்மை.

“”ஜனநாயகரீதியான தேர்தல்களில் மக்களைச் சந்திக்கிற துணிவு விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இருக்கிறதா?”

என்று அவரிடம் கேட்டேன். அவர் பின்வாங்குவார் என்றுதான் நான் எதிர்பார்த்தேன். அவரோ தெளிவாகச் சொன்னார். “”அதுபற்றின எந்த தயக்கமும் எங்களுக்கு இல்லை. சமீப காலங்களில் இங்கு நடந்த தேர்தல்களில்கூட விடுதலைப்புலிகள் இயக்கம் ஆதரித்த கூட்டணிதான் மக்களால் அங்கீகரிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் இன்று ராணுவ ஆட்சிக்குள் இருக்கின்ற போதும்கூட எங்களுக்கு ஆதரவான “பொங்குதமிழ்’ நிகழ்ச்சியெல்லாம் பல்கலைக்கழகத்திற்குள்ளேயே நடக்கிறது. இவற்றிலெல்லாம் சந்தேகமிருந்தால் இப்போகூட ஒரு தேர்தலை வைத்துப் பாருங்கள். மக்கள் மத்தியில் எங்களுக்கு ஆதரவு இருக்கிறதா, இல்லையா என்பதை நிரூபிப்பதற்காக நாங்களும் அத்தேர்தலில் நிற்போம்” என்றார்.

அவருடைய நேர்மையான சந்தேகத்திற்கிடமற்ற பதில் எனக்கு வியப்பாயிருந்தது. இறுக்கமற்ற சூழல் எனது கேள்வி கேட்கும் சுதந்திரத்திற்கான தளத்தை எல்லையின்றி விரிவாக்கியிருந்ததாய் உணர்ந்தேன். அந்த உணர்வில் விடாது கேட்டேன்,

“”ஜனநாயக ரீதியான மக்கள் போராட்டங்களை விடுதலைப் புலிகள் இயக்கம் வரவேற்குமா, அது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கெதிரான போராட்டமாக இருந்தாலும்கூட?”

அதற்கும் அவர் தயங்காமல் “நிச்சயமாக’ என்றார். “”மக்களை அழைத்துப்பேசி எனன பிரச்சனையென்பதை அறிந்து அதை சரி செய்வோம்” என்றார்.

நான் நிறுத்தவில்லை. “”புலிகள் ஜனநாயக மற்றவர்கள், சர்வாதிகாரிகள், மாற்றுக் கருத்தை சகிக்க முடியாதவர்கள்” என்ற உலகப்பார்வைக்கு ஒரு பதிலை அவரிடமிருந்தே பெற்று பதிவு செய்யவேண்டும் என்ற உறுதியோடு கேட்டேன்.

“”நாளை கிளிநொச்சியில் மக்கள் கூடி “விடுதலைப் புலிகள் ஒழிக! “வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற சர்வாதிகாரி ஒழிக!’ என்றெல்லாம் முழக்க மிட்டுப் போராடுகிறார்களென்று வைத்துக் கொள்வோம் அவர்களை எப்படி அணுகு வீர்கள்?”

என்றேன்.

இக்கேள்விக்காவது கொஞ்சம் கோபப்படுவார். குறைந்தபட்சம் முகம் கோணுவார் என்று எதிர்பார்த்தேன். அப்போதும் அவர் பொறுமையாகவே பதில் சொன்னார். “”அப்படியான நிலை வந்தாலும்கூட அவர்களை சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்ப்போம். முன்பு இப்படியான சில அதிருப்திகள் எழுந்தபோதெல்லாம் அவற்றை பேசி நிவர்த்தி செய்திருக்கிறோம். நாங்கள் சர்வாதிகாரிகள் இல்லை என்பதும் நீங்கள் சொல்வது போன்று எங்களுக்கும் மக்களுக்குமிடையே இடைவெளி இல்லை என்பதுதான் உண்மை” என்றார்.

இதற்குப் பின்னரும் கூட நான் அவரை விடவில்லை.

“”உங்களுடைய போராளிகள் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறி குற்றம் புரிந்தால் என்ன செய்வீர்கள்?”

என்று கேட்டேன். உள்ளார்ந்த தன்னம்பிக்கையோடு அவர் பதில் சொன்னார் :

“”பொதுவில் போராளிகளுக்கும் மக்களுக்கு மிடையேயான உறவு ஆழமானது. மக்கள் தலைமை மீது கொண்டி ருக்கும் நம்பிக்கையும் உறுதியானது. சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு போராளிகள் பொதுமக்களை அடித்தால்கூட “தலைவர் உங்களை இப்படி அடிக்கச் சொல்லித் தந்தவரோ?’ என்றுதான் கேட்பார்கள். அந்தளவுக்கு தலைமை மீது மக்களுக்கு நம்பிக்கை உண்டு. அதேவேளை போராளியாக இருப்பவர் தனது ஆயுதங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் அவரை அமைப்பிலிருந்து நீக்கி எமது தமிழீழ சிவில் நிர்வாக காவல்துறையிடம் ஒப்படைத்து விடுவோம். காவல்துறை அவரை சிவில் சட்டங்களின் படி விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை வழங்கும். இப்படித்தான் எங்கள் அமைப்பு முறை உள்ளது.”

உள்ளபடியே விடுதலைப்புலிகளின் சிவில் நிர்வாகம் கட்டுக்கோப்புடன் நடந்து வந்ததற்கான காட்சித் தெறிப்புகளையும் நான் வன்னியில் இருந்தபோது கண்டேன். கொழும்பிலிருந்து பழக்கமான நண்பர் ஒருவரது பஜேரோ வாகனத்தில்தான் நான் கிளிநொச்சி சென்றிருந்தேன். எனக்கு வாகனம் ஓட்டுவது, அதுவும் ஜப்பான் தயாரிப்பு வாகனங்களென்றால் ரசித்து ஓட்டுவேன்.

கொழும்பிலிருந்து வவுனியாவரை ஓட்டுநர் ஓட்டி வந்தார். அதற்குப் பிறகு ஓமந்தையில் புலிகளின் குடிவரவு சுங்கப் பிரிவு தாண்டிய பின் நானே ஓட்டினேன். கிளிநொச்சி நகர் எல்லை தொடங்கி வேகத்தடை 40 கி.மீட்டருக்குள் என இருந்தது. நான் சற்று வேகமாகவே ஓட்டி வந்தேன். தமிழீழ காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, “ஏன் இந்த வேகத்தடை ஒழுங்கு, கடந்த ஒருமாதத்தில் மட்டுமே இரண்டு பள்ளிக்குழந்தைகள் விபத்துகளில் உயிரிழக்க நேர்ந்தது ‘ என விளக்கி பொறுமையாய் அறிவுறுத்தி அனுப்பினார்கள்.

என்னோடு வாகனத்தில் இருந்தவர் புனர்வாழ்வுக்கழக தலைவர் ரெஜி. அவரை அங்கு எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆயினும் அதைப்பற்றியெல்லாம் அவர்கள் அக்கறைப்படவில்லை. கடமையைப் பணிவுடனும் பண்புடனும் செய்தார்கள்.

எனது கெட்ட நேரம்… திரும்பி வரும் போதும் அதே காவலரிடம் சிக்கிக்கொண்டோம். நல்லவேளை நான் ஓட்டவில்லை. அப்போதும் ரெஜி உள்ளிருந்தார். “”இரண்டாம் முறையாக இந்த வாகனம் தவறு செய்கிறது. ரெஜி, உமக்கு இங்கேயுள்ள ஒழுங்குகள் தெரியும் தானே? இன்னும் ஒரு முறை இப்படி நடந்தா அபராதம் விதித்து வழக்குப்பதிவு செய்யவேண்டி வரு”மென எச்சரித்தார்.

புலிகள் ஏதோ சர்வாதிகார ராணுவ பயங்கரவாத ஆட்சி நடத்தினார்களென்ற பொய் பரப்புரையின் மாயத்திரைகள் எனது கண்முன்னே கிழிந்து அகன்று போன நாட்கள் அவை.

வன்னியில் நான் இருந்தபோது அறிந்து கொள்ள ஆர்வம் காட்டிய மற்றொரு விஷயம் சந்திரிகா அம்மையாரின் ஐந்தாண்டு கால தொடர் யுத்தம் மற்றும் நீக்குப்போக்கில்லா பொருளாதாரத் தடையிலிருந்து எப்படி 5 லட்சம் மக்களை புலிகள் காப்பாற்றினார்கள் என்பது.

அப்போதைய அரசியல் பிரிவு பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களிடம் இதுபற்றிக் கேட்டேன்.

“”எல்லாமே தலைவரின் தீர்க்கதரிசனம்தான் ஃபாதர். சந்திரிகா பாரிய யுத்தமொன்று தொடங்குவாரென்பதும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு அந்த யுத்தம் தொடருமென்பதும் தலைவருக்குத் தெரிந்திருந்தது.

எங்களையெல்லாம் அழைத்து முதலில் அவர் கதைத்தது மக்களுக்கான உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு பற்றித்தான். அதன்படி எங்கள் கட்டுப்பாட்டிலுள்ள விவ சாயம் செய்யத் தகுதியுள்ள நிலங்களையெல்லாம் துல்லியமாகப் பட்டியலிட்டோம். பணப்பயிர்களை தடை செய்தோம். விதை நெல்கள் சேமித்தோம். இயற்கை உரங்களுக்குப் பழகினோம். பூச்சிக்கொல்லிகளை இயற்கையாக எதிர்கொள் ளும் வழிகளை கற்றறிந்து செயற்படுத்தினோம்… சொன்னால் நம்பமாட்டீர்கள் இவற்றையெல்லாம் நாங்கள் அதிகமாக அறிந்துகொண்டது உங்கட தொலைக்காட்சியின் “வயலும் வாழ்வும்’ நிகழ்ச்சியைக் கேட்டுத்தான்.

அதோட 5 லட்சம் சனத்துக்கும் தேவையான வைட்டமின், புரதச்சத்து தேவைகளுக்கேற்றபடி பிற காய்கறி வகை களையும் விவசாயம் செய்ய வைத்தோம். இப்ப டித்தான் சந்திரிகா அம்மையாரின் கொடுமையான இரக்கமற்ற பொருளாதாரத் தடையினை எதிர்கொண்டு வெற்றி கண்டோம்” என்றார்.

நீண்ட யுத்த காலத்தில் பஞ்சம் பட்டினியிலிருந்து மக்களைக் காப்பதென்பது எளிதான விடயமே அல்ல. ஆனால் அதனை புலிகள் திறம்படச் செய்தார்களென்பது வியப்புத் தந்ததென்றால் நாம் பெரிதாகப் பாராட்டாத வயலும் வாழ்வும் நிகழ்ச்சி அவர்களுக்கு உதவியதென்பதை அவர்கள் வாயால் கேட்க சிலிர்ப்பாகத்தான் இருந்தது. பெரும் பட்டினிச் சாவினை தவிர்க்க நமது “வயலும் வாழ்வும்’ உதவியதென்பது பெருமைதானே?

இவற்றையெல்லாம் நான் இங்கு எழுதக் காரணம் புலிகளை வன்முறையாளர்களாகவே சித்தரித்த இந்திய ஊடகங்கள், அவர் கள் விவசாயம், அமைப்பு நிர்வாகம், கலை- பண்பாடு, நீர்வள மேலாண்மை இன்னபிற துறைகளுக்கு ஆற்றிய அளப்பரியபங்களிப்புகளை திட்டமிட்டே இருட்டடிப்பு செய்ததை கோடிட்டுக் காட்டவும்தான்.

உட்கார்ந்து உரையாடும் வெகு யதார்த்தமான, சுவாரஸ்யமான மனிதர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அப்படித்தான் இயக்கத்திலும் சமூகத்திலும் எழுந்த பல சிக்கல்களையும், முரண்பாடுகளையும் அவர் தீர்த்து வைத்திருப்பார் என நான் எண்ணுகிறேன்.

ஒருநாள்…

(நினைவுகள் சுழலும்)

எமது தலைவனின் சிறப்பை காலம் கடந்து பிபிசி தமிழ் உணர்ந்திருக்கின்றது !

ஜூன் 26, 2018 Posted by | ஈழமறவர், ஈழம், பிரபாகரன் | , , | பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தங்கையே துவாரகா…

தங்கையே துவாரகா…

அன்புக்கும் நேசத்துக்கும் உரித்தான தங்கையே மீண்டும் ஓராண்டு கடந்து செல்கிறது உன் நினைவோடு. உனக்கு நினைவிருக்கும் அன்றைய நாட்கள். அதைப் போலவேஎனக்குள்ளும் நிறைந்து கிடக்கிறது அந்தப் பொழுதுகள்.

“அண்ண எனக்கு அந்த மஞ்சள் பழத்த பிடுங்கித் தாங்கோ… சிவப்பு டேஸ்ட் இல்ல மஞ்சள் தான் நல்லா இருக்கு. ”

தேக்கம் மரத்தால் சோலையாக இருந்த அந்த வளாகத்தில் நீ என்னை அடிக்கடி கேட்ட போதெல்லாம் முறிந்து விழுந்திடுவேனோ என்ற தயக்கம் எதுவும் இன்றி மர உச்சத்தில் இருந்து உன் விருப்பத்தை நிறைவேற்றிய அந்த நாட்களின் நினைவுகள் என்றும் மறைந்து விடாத பசுமரத்தாணிகள்.

இது ஒன்று போதுமடி உன் எளிமையை உரைக்க. எங்களால் நேசிக்கப்பட்ட ஒருவரின் மகள் என்ற பெருமை, திமிர் உன்னிடம் இருந்ததில்லை. எம்மவர் பலருக்கு உன்னோடு சேர்ந்திருந்த ஒன்றரை வருடத்தின் ஆரம்ப நாட்களில் தெரிந்ததில்லை நீ எவ்வளவு இயல்பானவள் என்று, எங்களில் பலர் கொஞ்சம் அமைதியாகவே உன்னோடு பேச முனைந்தார்கள். அப்போதெல்லாம்

” எதுக்குண்ணா இப்பிடி தயக்கம் நான் உங்கள் தங்கைதானே அப்பாவைப் பற்றி எல்லாம் நினைக்க வேணாம் தயக்கமின்றி தங்கையோடு நீங்கள் பழகலாம்.”

என்று உரைத்த போது அங்கிருந்த அனைவருமே அதியத்தில் உறைந்தார்கள்.

அது உன் அப்பா மீதுள்ள எமக்கு பயமில்லை தங்கையே மதிப்பு நேசம் அவருக்காக எதையும் செய்யும் துணிவு மட்டுமே உண்டு தங்கையே. அந்த மதிப்பு மட்டுமே உன்னிடம் தெருங்க விடாமல் தடுத்தது ஆனாலும் அதன் பின்பு நீ எங்களுள் ஒருத்தியானாய்.

“நீங்க நேசிப்பவரின் மகளாக இருந்தால் நான் பெரியவளா? நானும் சாதாரண பிள்ளை தான் அண்ணா. “

என்று தயங்காமல் சிரிக்கும் உன் வதனத்தை நினைத்து பெருமைப்பட்ட காலங்கள் அவை. இதை கேட்ட போது கூடி இருந்தவர்கள் பெருமிதம் அடைந்தார்கள்.

சாதாரண ஒரு ஆசிரியரின் மகள் என்றாலே திமிராக உலவும் சில பெண்பிள்ளைகள் மத்தியில் எம் நேசத்துக்குரியவரின் வாரிசு எந்த சலனமும் இன்றி எமக்குள் ஒருத்தியாக வாழ்ந்தது உன்னோடு கூட இருந்தவர்களில் உன்னை உயரத்துக்கே கொண்டு போயிருந்தது.

உன் பெயருக்குள் உறங்கிக்கிடக்கும் பல நியங்கள் வெளியில் தெரிவதில்லை. ஆனால் அருகில் இருந்து உணர்ந்தவர்கள் நாம். உன்னை நன்றாக புரிந்திருந்தோம். தங்கையே நீ வார இறுதி நாட்களில் உன்னால் தயாரிக்கப்பட்ட எதாவது உணவுடன் எம்மிடம் வருவாய். அப்போது அதை வாங்கி சுவைத்த தருணங்கள் மறக்க முடியாது. உன் சமையலை விரும்பி உண்டவர்கள் நாம். திங்கட் கிழமைகளை அதற்காகவே நாம் விரும்பினோம்.

கல்லூரியின் இறுதி நாட்களில் ஒருநாள் எல்லாருக்கும் நான் என் கையால் சமைத்து தர வேண்டும் என்று நீ ஆசைப்பட்டு உணவு தயாரித்தாய்.

அப்போது,

சொதி கடுமையாக உறைத்தது. சமையலுக்காக வாங்கிய பச்சை மிளகாய் முழுவதும் அதற்குள் போட்டுவிட்டாய் என்று எண்ணினோம் அதனால் உன்னை அருகில் அழைத்து

என்ன “………….. ” இறைச்சிக்கறிக்கு உறைப்புக் கூட என்றா சொதிய விட்டு சமப்படுத்தலாம் சொதி இறைச்சி மாதிரி உறைத்தா எதை விட்டு சமப்படுத்துவது என்று கேட்டு சிரித்தோம்.

“உங்களுக்கெல்லாம் கொழுப்பண்ண அதுக்குத்தான் இந்த சொதி ”

புன்னகை மாறாது நீ சொல்லி சென்றாய்.

இப்பிடித்தான் நீ இருந்தாய். எம்முள் எமக்குள் அன்றும் நீ வாழ்ந்தாய். இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். நீ யார் என்பதை உணராமல் பலர் இருக்கும் போது உன்னை உணர்ந்தவர்களாய் உன் அருகில் இருக்க அருகதையுள்ளவர்களாய் நாங்கள் இருந்தோம்.

நீ பிறந்ததில் இருந்து செய்தது பெரும் தவம். தமிழீழ கனவு சுமந்து வாழ்ந்த உன் பெற்றவரைப் போலவே உன் இலட்சிய்மும் ஒரு புள்ளியை நோக்கியே இருந்தது. உன் வயது அதுக்கான தருணத்தைக்காய் காத்திருந்தது. அந்த வயதை அடைய முன்னமே உன்னை அதற்காக தயார்ப்படுத்த முனைந்தாய். ஆனாலும் வயது குறைந்த நிலையில் தோற்றுப் போய் வயது வரும் வரை காத்திருந்தாய். அதற்கான தருணம் வந்தது சாதாரண உடை துறந்து பயணிக்க வேண்டிய நேரம் நெருங்கியது அதனால் வரியுடை தரித்து களமுனைக்கு விரைந்தாய். அங்கும் பல சாதனைகள் புரிந்தாய் சகோதரியே. அவற்றை வரிசைப்படுத்த என்னால் முடியவில்லை.

ஆயிரமாயிரம் கற்பனைகளை உலகின் முன்னே நீ விரித்தாய். உண்மை விளம்பிகள் என்று தம்மைக் காட்டிக் கொள்ளும் பல ஆயிரம் பேர் நீ வெளிநாட்டில் கல்வி கற்றதாய் எழுதித் தள்ளுகிறார்கள். கற்பனை சிறகடித்துப் பறக்கும் அவர்களின் வார்த்தைகளில் எம்மால் நேசிக்கப்பட்டவரின் உண்மை முகம் மழுங்கடிக்கப்படுகிறது என்பதை ஏன் உணரவில்லை. அவர் உன்னையும் எங்களைப் போலவே நேசித்தார். எமக்கு என்ன கிடைத்ததோ அதைத்தான் உங்களுக்கும் தந்தார். உணவு, உடை, கல்வி என அத்தனையும் எமக்குக் கிடைத்ததையே நீங்களும் பெற்றுக் கொண்டீர்கள். ஆனால் பலர் ஏன் அதை உணராமல் இருக்கிறார்கள் என்று புரியவில்லை.

நீ உன் அண்ணன் உன் தம்பி என அத்தனைபேரும் தமிழீழ மண்ணில் தான் உங்கள் அறிவை வளர்த்தீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? இது எனக்கு விடைகிடைக்காத கேள்வி.

க.பொ.த சாதாரண தரத்தில் அனைத்துப் பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்றாய். அதுவும் ஒரு ஆண்டு முன்பாகவே அந்தப் பரீட்சையை எழுது வென்றாய். க.பொ.த உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானத்துறையில் கல்வி கற்று பல்கலைக்கழகம் தெரிவானாய். இது அனைத்தும் உன்னை நீ மெருகேற்றவே அன்றி பட்டங்களுக்காக அல்ல என்பதை நான் அறிவேன்.

உன் எண்ணங்கள் முழுவதும் தொழில்நுட்பத்தை நாடியதால் தொடர்ந்து தொழில்நுட்பக் கல்வியில் உன்னை ஈடுபடுத்தினாய். கற்று முடித்த காலங்கள் நகர்ந்த போது “இலத்திரணியல் மருத்துவம் “ (E-Medicine ) என்ற உயர் தொழில்நுட்பம் சார்ந்த புதிய கண்டுபிடிப்பை வன்னிக் காட்டுக்குள் இருந்தே கண்டு பிடித்தாய். நீ வன்னியின் காட்டுக்குள்ளே உன்னைத் தயார்ப்படுத்தினாய். அறிவார்ந்த செயற்பாடுகளை அதிகம் மெருகூட்டினாய். கிடைத்த வளங்களைக் கொண்டு உயர்ந்த பெறுமதிகளை உனக்கானதாக கொண்டாய். உன் சிறு வயதுக்காலம் எப்படி இருந்தது என்று நான் அறியேன். ஆனால் உன் கல்விக்காலம் முழுவதும் வன்னியில் தான் என்பதை அடிக்கடி உறுதிப்படுத்துவாய். உன் புன்னகை தவழும் வதனம் அதை அடிக்கடி கூறிக்கொள்ளும். ஆனால் நாங்கள் துர்ப்பாக்கியவாதிகளானோம் தங்கையே நீ கண்டு பிடித்த அந்த கண்டுபிடிப்பை எம்மால் பயன்படுத்தக் கூடிய நிலையில் எம் காலச் சூழல் இடம் தரவில்லை. கண்டுபிடிப்பு எம் கைகளில் பயன்பாட்டுக்கு இல்லாமலே போய்விட்டது.

எமக்கு பாடங்களில் கவனம் குறைவு அதனால் பல வேளைகளில் கொப்பி பேஸ்ட் நடவடிக்கைதான். அது ஆசிரியருக்குத் தெரியுதோ இல்லையோ உனக்குத் தெரிந்தால் எம்மிடம் கோவித்துக் கொள்வாய். அந்தக் கோவமும் அழகானது தங்கையே. ஆசிரியர் பாடம் நடாத்தும்
போதெல்லாம் புன்னகை மாறாது பதில் கூறும் அந்த இனிய முகத்தை நாம் இனி பார்ப்போமா?

“ அண்ணா வாடி போடி என்று சொல்ல வேண்டாம் எனக்கு பிடிக்காது “

என சொல்லும் உன்னை வாடி போடி என்று அழைத்து சீண்டுவேன். அப்பிடி அழைத்தால் கோவம் வரும் உனக்கு. உன் புன்னகை மாறாத கோவத்தை ரசிப்பது கூட எமக்கு பிடித்திருந்தது. உனக்கும் எமக்குமான கல்லூரிக் காலங்கள் என்றும் மறைந்து போகாதவை. சாதாரண தோழியாக தங்கையாக எம்மைப் போலவே உண்டு உடுத்து வாழ்ந்து வந்தவளே அன்புத் தங்கையே விழி கலங்குகிறது உன்னை நினைக்கையில்.

பயம் என்பது கொஞ்சம் கூட இல்லாது இருக்கும் உன் வதனத்தை இனி எப்போது நாம் காண்போம் என்று தெரியவில்லை. இனி காண நீ வருவாயா இல்லையா என்ற உண்மை தெரியாதவராய், உனக்கான இந்த நாளில் இன்னொரு ஆண்டை கடந்து செல்கிறோம்.

உன் வரவு நிச்சயமற்றது உன் இருப்பு எமக்குத் தெளிவற்றது ஆனாலும் நீ வர வேண்டும்
என்னை போல அண்ணன்கள் உனக்காக காத்திருக்கிறோம். தங்கையோடு சேர்ந்து வாழ வேண்டும் நல்ல அண்ணன்களாய் உனக்கு பிடித்த அண்ணன்களாய்…

நேற்று உன்னைப் பற்றிய உரையாடல் ஒன்றில் உன் என் சகோதரி ஒருத்தி உன்னைக் கண்ட இறுதி சந்திப்பை நினைவு கூர்ந்தாள். முல்லைத்தீவின் கப்பலடி என்று சொல்லப்படுகிற இடத்தில் உன்னை அவள் கண்டபோது, அவளை இராணுவத்திடம் இருந்து காப்பாற்றுவதற்கு பாதை கூறி இருக்கிறாய்.

“அக்கா இதுக்க ஆமி வந்துட்டான்
இதுக்குள்ளால போக வேண்டாம் வலது பக்கம் திரும்பி போங்கோ… தம்பிய கவனமா பார்த்துக் கொள்ளுங்கோ அக்கா சந்தர்ப்பம் வந்தால் மீண்டும் சந்திப்போம் “

என்று கூறிய உன் இறுதி வார்த்தையை அவள் அழுகையோடு கூறினாள்.

நீ என்றும் அமைதியான பொழுதுகளை கழித்தது கிடையாது. ஆபத்து நிறைந்த பாதைகளில் தான் உன் பயணம் நிறைந்து கிடந்தது. சாதாரணமான தமிழ் சிறுமியாய் நீ வாழ்ந்ததில்லை. லட்சம் லட்சமாய் இடர் சுமந்த எம் குழந்தைகளுக்குள் நீயும் முதன்மையானவள். ஆனாலும் எம்மை விட அதிகமான துயர்களை சுமந்தாய்

அண்ணனுடனும் தம்பியுடனும் கூடிப் பிறந்திருந்தாலும், அவர்களில் மிஞ்சிய பாசத்தை உன் தம்பி மீது வைத்திருந்தாய். அவன் தினமும்
எதோ ஒன்றுக்காய் சண்டை போட்டாலும் அந்தக் குழப்படிகாறனை மன்னித்து அரவணைப்பாய்.

எப்போதும் எம்மை நோக்கி திரும்பி நின்ற எதிரிகளினதும் துரோகிகளினதும் துப்பாக்கி முனைகள் எம்மை விட உன்னை குறிபார்த்து அதிகம் காத்திருந்தது. இன்றும் காத்திருக்கிறது. ஆனாலும் அந்த முனைகள் தாண்டி நீ மீண்டு வர வேண்டும் அண்ணா அக்கா மாமா சித்தி என்று நீ பாசம் வைத்த அத்தனை பேரும் உன் புன்னகைக்காக காத்துக் கிடக்கிறார்கள்.

நீ உதித்த இந்த நாளில் உனக்கு வாழ்த்துக்கள்
சொல்ல வார்த்தை வரவில்லை அன்பான தங்கையே துவாரகா எங்கிருந்தாலும் நீ வாழ்க…

பல இலட்சம் உறவுகளின் சார்பில் எதிர்பார்ப்புடன்
கவிமகன்.இ
02.06.2018

தெரியாத பல தகவல்களை பகிர்வதற்காக எனக்கு சந்தர்பம் தந்த ………. சகோ நன்றி

இரத்தினம் கவிமகன்

-தமிழ்த் தேசிய ஆவண மையம்

ஜூன் 3, 2018 Posted by | ஈழமறவர், ஈழம், பிரபாகரன் | , , | தங்கையே துவாரகா… அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது