அழியாச்சுடர்கள்

ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.

தமிழர் சேனை ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்றிய நாள் (ஏப்ரல் 22.)

உலகப் போரியல் வரலாற்றின் சாதனைச் சமரான குடராப்பு தரையிறக்கமும் 34 நாட்கள் நீண்ட இத்தாவில் சமர்க்களத்தின் விளைவாக தமிழர் சேனை ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்றிய நாள் (ஏப்ரல் 22.)

ஆனால் மறுவளமாக இலங்கை இந்திய அரசுகளின் குறியாக இருந்த தமிழர் சேனை மேற்கு நாடுகளினதும் குறியாக மாறிய தாய்ச்சமர்க்களம் அது.

மறைந்த படைத்துறை ஆய்வாளர் தராகி சிவராம் எங்களோடு பேசும் போது கூறியது பின்வருமாறு ” நான் அமெரிக்க படைத்துறை கல்லூரிக்கு அழைக்கப்பட்ட போது என்னைச் சூழ்ந்த அமெரிக்க அதிகாரிகள் பிரபாகரன் எப்படி இந்த திட்டத்தை வரைந்தார்? 34 நாட்கள் எப்படி 1200 போராளிகள் 40000 படையினரை சமாளித்தார்கள்? பிரபாகரன் என்ன நம்பிக்கையில் தனது மூத்த தளபதியை (பால்ராஜ் ) தரையிறக்கினார்? நாம் புலிகளை சாதாரணமாக எடைபோட்டு விட்டோம். கற்பனையில் கூட யோசிக்க முடியாத போர்த் தந்திரோபாயம் அது. பிரபாகரன் உண்மையிலேயே ஒரு மிலிட்ரி ஜீனியஸ்” என்று புகழ்ந்ததாக குறிப்பிட்டார்.

ஆனால் அவர்கள் இதன் விளைவாக புலிகளை அழித்தொழிக்கப்பட வேண்டிய இலக்குகளாக தெரிவு செய்து விட்டார்கள் என்ற உண்மையையும் அப்போது கூறினார்..

பிறகு நடந்தது வரலாறு..

அப்போது சிவராம் கூறியது இப்போதும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

” புலிகளை இலங்கை இந்திய அரசுகளால் மட்டுமல்ல யாராலும் சண்டையிட்டு அழிக்க முடியாது. ஆனால் அனைவரினதும் பின்கதவு கூட்டு சதியும் சூழ்ச்சியும் துரோகமும் அவர்களை அழிக்கலாம்”

-Parani Krishnarajani

http://www.eelamview.com/2014/04/21/elephant-pass-battle-day-3/

Advertisements

ஏப்ரல் 22, 2017 Posted by | ஈழமறவர், ஈழம், வீரவணக்கம், வீரவரலாறு | , , , | ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள். அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ஆனந்தபுர வீரமறவர்களுக்கு வீரவணக்கம் !

 

ஏப்ரல் 3, 2017 Posted by | ஈழமறவர், ஈழம், வீரவணக்கம், வீரவரலாறு | , , , | ஆனந்தபுர வீரமறவர்களுக்கு வீரவணக்கம் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

அடங்காப்பற்றின் வன்னி மண்ணில் மல்லாவியில் பெருமையாக சொல்ல ஓர் வீரத்தளபதி எங்கள் “கேணல் கோபித் அண்ணா !
இளந்தென்றல் வீசும் வன்னி காற்றில் கோபித் எனும் பெயர் உச்சரித்தாலே எம் மனதில் மட்டுமல்ல அடர்ந்த காடுகளுக்கு கூட இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சி வரும் !

பாசம் எனும் கூட்டில் விழாமல் தேசம் எனும் நேசம் கொண்டு சாள்ஸ் அன்ரனி படையணியை திறம்பட கோலோச்சிய பல சாதனைகளின் சரித்திர நாயகனே !
உன்னுடைய நிதானமான பேச்சும், மற்றவர்களிடையே அன்பாக பம்பலாக நீ பழகும் விதமும் இன்றும் என் மனத்திரையில் அண்ணா !

இரட்டைவாய்க்கால் என உச்சரிக்க முடியவில்லை எம்மால் சிங்களத்தின் சீரழிந்த செயலால் உன்னை இழந்து ஆண்டுகள் தான் ஆச்சு ஆற வில்லை இன்னும் எம் வலிகள்,

அருவி கண்ட விழிகள் அடங்க வில்லை இன்னும்,நெஞ்சுக்குள் நின்றாடும் நினைவுகள் அழியாத கோலங்களாய்…..
அழகாய் பூத்திடும் எம் தமிழீழம் அதில் மொட்டாக மலர்ந்திடும் உன் திருமுகம்!
அன்றும் இன்றும் என்றும் உன் தன்னம்பிக்கை தோற்காது வன்னி மைந்தா !

ஒரு கணம் எம் நினைவுகள் ஒடுக்கியே உங்கள் நினைவுகளை சுமந்து கண்ணீர் பூக்களை காணிக்கை ஆக்குகிறேன் !

நினைவுபகிர்வு மார்ஷல் வன்னி

**

 

 

மார்ச் 31, 2017 Posted by | ஈழமறவர், ஈழம், வீரவணக்கம், வீரவரலாறு | , , , | சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

லெப்.கேணல் ஜொனி வீரவணக்கம்

March 13th

March 14th

**

பங்குனி மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்

மாதங்கள் வாரியாக வீரகாவியமான மாவீரர்கள் தொகுப்பு

 

மார்ச் 13, 2017 Posted by | ஈழமறவர், ஈழம், வீரவணக்கம், வீரவரலாறு | , , , | லெப்.கேணல் ஜொனி வீரவணக்கம் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி வீரவணக்கம்

**

 

மார்ச் 10, 2017 Posted by | ஈழமறவர், ஈழம், வீரவணக்கம், வீரவரலாறு | , , , | தமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி வீரவணக்கம் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது