புலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…!
ஈரானுக்கு அருகாமையில் உள்ள ஹோமஸ் நீரிணையை தனது ஆதிக்கத்தினுள் கொண்டு வரும் முயற்சியில் ஈரான் உள்ளது. அதன் ஒரு கட்டமாகவே 2010இல் கடற்புலிகளின் படகு தொழில் நுட்பத்தை இலங்கை அரசிடம் இருந்து பெரும் தொகைக்கு வாங்கியிருந்தது.
சிலர் இதை ஏற்க மறுக்கலாம்.! ஒரு விடுதலை அமைப்பின் தொழில் நுட்பத்தை ஒரு முன்னனி நாடு வாங்கியதா என்று ?? (இது பற்றிய செய்திகள் அந்த நேரத்தில் வெளியாகி இருந்தன) அனால் அது தான் உண்மை.! உலக வல்லரசுகள் தமது கடல் படையில் உள்ள சிறிய சண்டைப்படகுகளில் நம்பிக்கை கொள்ளவில்லை.
அவர்களது கட்டுமானம் எல்லாம் பெரியளவிலேயே இருந்தது. தங்கள் நாடுகளின் பொலிஸ், கடல் ரோந்து, மற்றும் வேறு சில தேவைகளுக்காகவுமே சிறிய ஆயுதப் படகுகள் வடிவமைக்க பட்டன.
இவைகளின் உச்ச வேகம் 35 கடல் மைல்களே( knots). அனால் இதில் இஸ்ரேல் விதிவிலக்காக சிறிய வகை சண்டைப் (டோராப் படகு போன்றன) படகுகளை தயாரித்தது. அந்த படகுகளையே எதிரி கொள்முதல் செய்து, கடற்புலிகலுக்கு எதிராக பயன் படுத்தினான்.
அந்த படகில் 20mm கனொன் (20mm cannon) இரண்டு 50 கலிபர் பொருத்திய படியே அதன் வேகம் 40-45 நொட்ஸ் ஆக இருந்தது. அதன் பின் எதிரி கைக்கு புதிதாக வந்த “பேபி டோரா” என்னும் சண்டை படகின் உச்ச வேகம் 45-55 கடல் மைல்களேஇதுவே உலகின் அதி வேகம் கூடிய இலகுவான சண்டைப்படகு ஆகும்.
அனால் கடல் புலிகளின் சண்டைப்படகுகளில் படகுகளில் 23mm கனொன் ஒன்று 14.5mm கனொன் ஒன்று 50கலிபர் அல்லது GPMG இயந்திர துப்பாக்கிகள் பூட்டிய படியே அதன் உச்ச வேகம் (நிறை கூடிய கனரக ஆயுதங்களுடன்) 50-60 கடல் மைல்கல் (knots) ஆகும்.
இந்த படகை பற்றிய விபரம் வெளிப்படாது புலிகள் பாத்து கொண்டனர். புலிகளின் கடல் வெற்றியின் பின்னால் இருந்தது வேகம் கொண்ட படகின் உற்பத்தியும், அதில் பொருத்தி இருந்த மேன்மையான சூட்டாதரவுமே அன்றைய நேரத்தில் கடற்புலிகள் வெற்றியை தீர்மானித்தது.
இறுதி யுத்தத்தின் பின் இந்த படகுகளை எதிரி கைப்பற்றி இருந்தான். அந்த படகின் தொழில்நுட்பம், மற்றும் தற்கொலைக் குண்டுத் தாக்குதளுக்கென்றே பிரத்தியேகமாக தயாரித்த படகின் தொழில் நுட்பங்களை தான் “கோட்டபாய”ஈரானுக்கு வித்திருந்தார்.
இதில் இருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்ள முடியும் உலகத்திலேயே அதி கூடிய சிறிய சண்டை படகுக்கு தொழில்நுட்பத்துக்கு தமிழர்களே சொந்த காரர்கள்.! இதை நாம் தமிழர் என்னும் ஒரு காரணத்துக்காக மறுக்க படலாம், ஆனால் இது தான் உண்மை.!
ஈரானும் இந்த தொழில் நுட்பத்தை வைத்து ஆயிரக்கணக்கில் சிறிய சண்டை படகுகளை உற்பத்தி செய்துள்ளது. ஈரான் ஹோமஸ் நீரிணையை இந்த சண்டை படகுகளை வைத்து தனது ஆதிக்கத்துனுள் கொண்டு வர விரும்புகின்றது. மத்திய கிழக்கின் வளைகுடாவில் உள்ள முக்கிய போக்குவரத்து பாதையாக ஹோமஸ் இருக்கின்றது.
உலகின் எரிபொருளின் வழங்களில் 40% இந்த பாதை ஊடாகவே நடை பெறுகின்றது. ஹோமஸ் நீரிணை ஓமான் வளைகுடாவையும்,பாரசீக வளைகுடாவையும் இணைக்கும் 35மைல்கள் கொண்ட நீரிணையாகும். சவுதிஅறேபியா, ஈராக், குவைத்,ஹட்டார். பாக்ரெய்யின் போன்ற நாடுகளின் எண்ணை வளங்கள் இந்த பாதை ஊடாகவே நடை பெறுகின்றது.
இந்த பாதையில் ஆதிக்கத்தை கொண்டு வருவதற்கு “கிஸ்புல்லா”போராளிகளின் உதவியுடன் புலிகள் பயன் படுத்திய அதே போர் முறையுடன் வெடி குண்டு படகுகளையும் உருவாக்கி வைத்துள்ளது.
அதாவது புலிகளின் முக்கிய போர்முறை எதிரி கப்பலில் குறிப்பிட்ட ஒன்றை இலக்கு வைத்து பல சண்டை படகுகளை ஒருங்கிணைத்து பெரும் சூட்டாதரவு மூலம் எதிரி படகை தடுமாற செய்து, கரும்புலி படகால் மோதி அழிப்பதே ஆகும். இதன் சண்டை முறையை சர்வதேச பொறி முறையில் “குழவி குத்தல்” என்று அழைக்கிறார்கள். அதையே ஈரானும் செய்ய ஆயத்தமாகி விட்டது.
இதற்கு மாற்றீடாக அமெரிக்காவும் மூன்று ஆண்டுகள் ஆராச்சியின் பின் “லேசர் படைக்கலன் முறை” (laser weapon system) ஒன்றை உருவாக்கி உள்ளது. சுருக்கமாக LAWS என்று பெயரிட்டுள்ளது. இதை இப்போது ஆளில்லா விமானங்களிலும் கடல் கலங்களிலும் பொருத்திய அமெரிக்கா நாசகாரி கப்பல்கள் ஹோமஸ் நீரிணைக்கு நகர்த்தபட்டுள்ளது.!
தமிழனின் தொழில் நுட்பத்தின் உச்ச வளர்ச்சி இது அல்ல. எம்மிடம் இருந்த சொற்ப வளங்களின் ஊடே உருவான தொழில் நுட்பம் தான் இது. தமிழீழம் ஒரு நாடாக அங்கிகரிக்க பட்டு எல்லா வளங்களும் தன்னிறைவாக கிடைக்க பெற்றுப்பின், நிச்சயாமாக தமிழரின் தொழில் நுட்பம் உலகை ஆண்டிருக்கும்.!!
ஏக்கமுடன்…
ஈழத்து துரோணர்.!!!
ஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.
தமிழர் சேனை ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்றிய நாள் (ஏப்ரல் 22.)
உலகப் போரியல் வரலாற்றின் சாதனைச் சமரான குடராப்பு தரையிறக்கமும் 34 நாட்கள் நீண்ட இத்தாவில் சமர்க்களத்தின் விளைவாக தமிழர் சேனை ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்றிய நாள் (ஏப்ரல் 22.)
ஆனால் மறுவளமாக இலங்கை இந்திய அரசுகளின் குறியாக இருந்த தமிழர் சேனை மேற்கு நாடுகளினதும் குறியாக மாறிய தாய்ச்சமர்க்களம் அது.
மறைந்த படைத்துறை ஆய்வாளர் தராகி சிவராம் எங்களோடு பேசும் போது கூறியது பின்வருமாறு ” நான் அமெரிக்க படைத்துறை கல்லூரிக்கு அழைக்கப்பட்ட போது என்னைச் சூழ்ந்த அமெரிக்க அதிகாரிகள் பிரபாகரன் எப்படி இந்த திட்டத்தை வரைந்தார்? 34 நாட்கள் எப்படி 1200 போராளிகள் 40000 படையினரை சமாளித்தார்கள்? பிரபாகரன் என்ன நம்பிக்கையில் தனது மூத்த தளபதியை (பால்ராஜ் ) தரையிறக்கினார்? நாம் புலிகளை சாதாரணமாக எடைபோட்டு விட்டோம். கற்பனையில் கூட யோசிக்க முடியாத போர்த் தந்திரோபாயம் அது. பிரபாகரன் உண்மையிலேயே ஒரு மிலிட்ரி ஜீனியஸ்” என்று புகழ்ந்ததாக குறிப்பிட்டார்.
ஆனால் அவர்கள் இதன் விளைவாக புலிகளை அழித்தொழிக்கப்பட வேண்டிய இலக்குகளாக தெரிவு செய்து விட்டார்கள் என்ற உண்மையையும் அப்போது கூறினார்..
அப்போது சிவராம் கூறியது இப்போதும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
” புலிகளை இலங்கை இந்திய அரசுகளால் மட்டுமல்ல யாராலும் சண்டையிட்டு அழிக்க முடியாது. ஆனால் அனைவரினதும் பின்கதவு கூட்டு சதியும் சூழ்ச்சியும் துரோகமும் அவர்களை அழிக்கலாம்”
-Parani Krishnarajani
http://www.eelamview.com/2014/04/21/elephant-pass-battle-day-3/
ஈழ தேசத்தின் இளவரசியே !
பாருக்கு எம்மினத்தை
பறைசாற்றிய படைவீரன்
வேலுப்பிள்ளை மகனின்
குருதிப் பகிர்வே – எம்
குலக்கொழுந்தே !!!!
யாருக்கும் அஞ்சாமல்
கரிகாலன் கைபிடித்து
போருக்குள் வாழ்வமைத்த
புங்கையின் பேரழகி
பெத்துப்போட்ட பொக்கிஷமே !!!
அகிலமே வியந்து போற்றிய
அப்பனுக்கு பிள்ளையாகினும்
அடுத்தவீட்டுக் குழந்தையைப் போல்
ஆடி, ஓட முடிந்ததா உன்னால்
அமைதித்தூக்கம் கிடைத்ததா உனக்கு ??
குளிரூட்டியின் சுகக்காற்றும்
சொகுசான படுக்கைகளும்
எம்மில் பலருக்குத் தந்துவிட்டு
குண்டுச்சத்தமும்,கொசுக்கடியும்
எளிமை வாழ்க்கையும் ஏற்றவளே !!!
உங்கப்பன் நினைத்திருந்தால்
உலகில் எங்கேனும் ஒரு மூலையில்
உல்லாச வாழ்க்கை கொடுத்திருக்கலாம்
உனக்காக எல்லாமும் செய்திருக்கலாம்
செய்தானா, செய்ய நினைத்தானா ??
காட்டிலும், மேட்டிலும், கடற்கரையிலும்
இடம்பெயர்வுகளும், இன்னல்கள் கடப்பும்
சொல்லொணாத் துயரமும் சகித்தவளே
எம் இனத்தின் விடியலுக்காய் – உன்
சுகங்களெல்லாம் விட்டுக் கொடுத்தவளே !!!
எங்கே தாயே நீ ?
எங்கே உன் குடும்பம் ?
எப்போது சோறு இறங்கும் போதும்
என் ஆத்மா உங்களை நினைக்கும்
என்னடா வாழ்க்கையென்று நெஞ்சம் துடிக்கும்…
என் ஈழ தேசத்தின் “இளவரசியே”
என் இன விடுதலைக்காய் – உன்
குலம் சிதைந்தும், அடங்கவில்லையே
எம்மவர் நாடகங்களும் நடிப்பும்….
மன்னித்துக்கொள் தாயே !!!
உன் தந்தை,
உலகின் தன்னிகரற்ற தளபதி
தமிழனாய்ப் பிறந்தது தலைவிதி..!!
-ஐங்கரன்-
-அனாதியன் கவிதைக் களம்
ஆனந்தபுர வீரமறவர்களுக்கு வீரவணக்கம் !
- ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு
- விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத பெரும் சமர்
- தளபதி பிரிகேடியர் தீபன் சவாலான களமுனைகளின் சாதனை நாயகன்
- நச்சுக் குண்டு வீசி படுகொலை செய்யப்பட வீரத்தளபதி பிரிகேடியர் தீபன் (படம் இணைப்பு)
- பிரிகேடியர் தீபன் – 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த புயல்
- சமர்கள நாயகனுக்கு சளைக்காத சீடன் பிரிகேடியர் தீபன்
- பிரிகேடியர் துர்க்கா வீரவணக்கம்
- தலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர் பிரிகேடியர் விதுசா
- பிரிகேடியர் மணிவண்ணன் வீரவணக்கம்
- பிரிகேடியர் ஆதவன் (கடாபி)
- குறிபார்த்துச் சுடுவதும் ஒரு கலை என்பதை நிரூபித்த பிரிகேடியர் ஆதவன்/கடாபி.
- கேணல் கோபித்
- கேணல் நாகேஸ்
- கேணல் வீரத்தேவன்
- கேணல் அமுதாப்:சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி
- Battle of Aanandapuram
- Brigadier Theepan Heroic saga of a Northern warrior
சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
அடங்காப்பற்றின் வன்னி மண்ணில் மல்லாவியில் பெருமையாக சொல்ல ஓர் வீரத்தளபதி எங்கள் “கேணல் கோபித் அண்ணா !
இளந்தென்றல் வீசும் வன்னி காற்றில் கோபித் எனும் பெயர் உச்சரித்தாலே எம் மனதில் மட்டுமல்ல அடர்ந்த காடுகளுக்கு கூட இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சி வரும் !
பாசம் எனும் கூட்டில் விழாமல் தேசம் எனும் நேசம் கொண்டு சாள்ஸ் அன்ரனி படையணியை திறம்பட கோலோச்சிய பல சாதனைகளின் சரித்திர நாயகனே !
உன்னுடைய நிதானமான பேச்சும், மற்றவர்களிடையே அன்பாக பம்பலாக நீ பழகும் விதமும் இன்றும் என் மனத்திரையில் அண்ணா !
இரட்டைவாய்க்கால் என உச்சரிக்க முடியவில்லை எம்மால் சிங்களத்தின் சீரழிந்த செயலால் உன்னை இழந்து ஆண்டுகள் தான் ஆச்சு ஆற வில்லை இன்னும் எம் வலிகள்,
அருவி கண்ட விழிகள் அடங்க வில்லை இன்னும்,நெஞ்சுக்குள் நின்றாடும் நினைவுகள் அழியாத கோலங்களாய்…..
அழகாய் பூத்திடும் எம் தமிழீழம் அதில் மொட்டாக மலர்ந்திடும் உன் திருமுகம்!
அன்றும் இன்றும் என்றும் உன் தன்னம்பிக்கை தோற்காது வன்னி மைந்தா !
ஒரு கணம் எம் நினைவுகள் ஒடுக்கியே உங்கள் நினைவுகளை சுமந்து கண்ணீர் பூக்களை காணிக்கை ஆக்குகிறேன் !
நினைவுபகிர்வு மார்ஷல் வன்னி
**
- கரும்புலி மேஜர் ஆந்திரா வீரவணக்கம்
- மாமனிதர் ஜெயக்குமார் வீரவணக்கம்
- 31.03.1996 யாழ் – சுண்டிக்குள கடற்பரப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்
- 31.03.2000 ஓயாதஅலை-03 நடவடிக்கையில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்
- கரும்புலி கப்டன் சத்தியா
- கேணல் கோபித்