சீமான் மாவீரர்நாள் எழுச்சி உரை ! #நாம்தமிழர்கட்சி #Seeman #MaaveerarNaal #Prabhakaran #MaaveerarNaal2020 #SeemanSpeechToday #NaamThamizharKatchi #NaamTamilarKatchi #NTK
#Seeman #MaaveerarNaal #Prabhakaran
சீமான் மாவீரர்நாள் எழுச்சி உரை
தாயத்தில் தடைகளை உடைத்து நினைவேந்தப்பட்டது #மாவீரர்நாள் #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #MaaveerarNaal #ltte #Maaveerarday #Tamil #Eelam
பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவுகூரலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,
தமிழ் மக்களின் இல்லங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 06:05மணிக்கு நினைவுகூரப்பட்டுள்ளது.
துப்பாக்கி முனையில் இலங்கை அரசபடைகள் முடக்கி வைக்க தடை உடைத்து தமிழர் தேசம் இன்று மாவீரர்களிற்கு சுடரேற்றி அஞ்சலித்துள்ளது.
வடமராட்சி எள்ளங்குளத்தில் சுடரேற்ற இளைஞர்கள் மீது படையினர் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர்.
மாவீரர் துயிலுமில்ல வீதிகளில் தடை போட்டு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்க அதனை தாண்டி வீடுகள் தோறும் மக்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதனிடையே யாழ் ஆயர் இல்லத்துக்கு முன்னால் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வினை செய்ய முற்பட்டார் என கிறிஸ்தவ மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குருமட அதிபரான இளவாலை பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்ற கிறிஸ்தவ மத குருவே கைதாகியுள்ளனர்.
இதனிடையே அரசியல் தலைவர்கள் பலரும் தமது வீடுகளில் சுடரேற்றி மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சிங்கள படைகளின் அச்சுறுத்தல்கள், புலனாய்வாளர்களின் தீவிர மோப்ப நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் மாவீரர்கள் நினைவுகூரப்பட்டுள்ளனர். சரியாக 6.05 இற்கு மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் யாழ். மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
தென் தமிழீழத்தில், அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அங்குள்ள தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் ஒருவரின் இல்லத்தின் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெற்றது.
தலைவன்டா! தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்
வலைத்தளங்களில் மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.குறிப்பாக, டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் இதுவரை 60,000ற்கும் மேற்பட்ட பதிவுகள் தேசியத்தலைவரின் பிறந்தநாளுக்காக பதிவிடப்பட்டுள்ளன. இது சம்பந்தப்பட்ட டுவிட்டர் ஹாஸ்டாக் ஆன #HBDமேதகுPRABHAKARAN தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடக்த்தகது.
மாவீரர் கல்லறை மீது உறுதி செய்கின்றோம் ! #வீரவணக்கம் #காணொளிகள் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்நாள் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerarday #Tamil #Eelam
மாவீரர் நாள் வரலாற்றுப் பதிவுகள்
தலைவர் வே.பிரபாகரன் வரலாற்றுப் பதிவுகள்
தேசியத் தலைவர் வே.பிரபாகரன்/ leader V.Prabaharan
தேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் ஒளிப்படங்கள் /Leader V.Prabakaran Maaveerar day Pictures
Leader V.Prabakaran wallpapers/ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பின்னணி விம்பகம்
வரலாறு தந்த வல்லமை: பிரபாகரன் எங்கள் தேசியத்தின் ஆத்மா ஓர் இறைதத்துவம்
“பிரபாகரம் மறையாது” அது “அகிலம் எங்கும் வியாபிக்கும்” வரலாற்றின் ஓர் உண்மை
மாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர் ! #மாவீரர்நாள் #பிரபாகரன் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #காணொளிகள் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam
”எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவுக்காக தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும்வரை தொடர்ந்து போராடுவோம். தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வாழ்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களை பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்” – தேசியத் தலைவர் (2008)
இந்த மாதம் 27ம் திகதி மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் உயிர்க்கொடை தந்த புனிதர்களுக்கு மக்கள் ஒன்றுகூடி வணக்கம் செய்யும் மாவீரர் நாள்.
இது முப்பத்தியிரண்டாவது ஆண்டு மாவீரர் நாள். 1989 கார்த்திகை 27ம் நாள், தமிழீழத்தின் வன்னிப்பரப்பிலுள்ள அடர்ந்த காடொன்றுக்குள் முதலாவது மாவீரர் நாள் பிரகடனம் செய்யப்பட்டது.
இந்திய ஆக்கிரமிப்புப் படை தாயக பூமியை கையகப்படுத்தி அட்டூழியங்களை மேற்கொண்டிருந்த அவ்வேளை, மாதலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீரத்துடனும் தீரத்துடனும் பிரகடனம் செய்து முதலாவது மாவீரர் நாள் உரை நிகழ்த்திய வரலாறு உலக சரித்திரத்தில் முதன்மையானது.
முள்ளிவாய்க்காலில் போராட்டம் மௌனிக்கப்படுவதற்கு முன்னைய ஆண்டான 2008வரை மாவீரர் நாள் உரையை மாதலைவர் நிகழ்த்துவார். அந்த உரைக்காக உலகம் விழித்துக் காத்திருக்கும்.
நவீன உலகின் இருப்பும் உயர்வும் பலத்தின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது என்ற கூற்றுக்கிணங்க, ஈழத்தமிழினம் ஒரு தலைமையில், ஒரு குடையின்கீழ் பலமாக நின்று தங்கள் விடுதலை இயக்கத்தை நடத்தியது. இதனால் தமிழரின் உரிமைக்குரல் ஓர்மத்துடன் பிசிறின்றி ஓங்கி ஒலித்தது. எல்லா இசங்களையும் ஒன்றாக்கி ஜனநாயக விரோதச் செயல் புரிந்தவர்களை இந்தப் போராட்டம் இனங்கண்டு ஓரங்கட்டியது.
தாயகம் தேசியம் தன்னாட்சி என்பதுவே ஈழத்தமிழரின் பேச்சாகவும் மூச்சாகவும் எழுந்து சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை மிரளச் செய்தது. தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் புறப்பட்ட தமிழ் மக்கள்இ விடுதலைப் போராட்டத்தின் அரணாகவும் பக்கபலமாகவும் இயங்கினர். இது சிங்கள ஆட்சிபீடத்தை நிலைகுலையச் செய்தது.
தமிழீழம் என்பது 20369 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு என்று தமிழர் கூறியபோது சிங்களம் சினம் கொண்டது. தமிழீழ மாவட்டங்களை துண்டாடுதல், தமிழர்வாழ் நிலப்பரப்பை அபகரித்தல், சிங்கள குடியேற்றங்களை துரிதமாக்குதல், சிங்கள நிர்வாக அலகுகளை தமிழர் வாழ்புலங்களில் உருவாக்குதல், தமிழர் தலைப்பட்டணங்களைச் சிதை;தல், தமிழீழ மாவட்ட எல்லைகளை மாற்றியமைத்தல், தமிழரின் எல்லைக் கிராமங்களை சிங்கள மாவட்டங்களுடன் இணைத்தல், தமிழ்க் கிராமங்களின் பெயர்களை சிங்களப் பெயராக்குதல், சிங்கள அரச படைகளுக்கு தமிழீழக் காணிகளை வழங்குதல் என்று பல வழிகளால் தமிழர் தாயகத்தை அழித்தொழிக்க சிங்கள பௌத்த அரசுகள் எடுத்த நடவடிக்கைகளால் தமிழீழத் தாயகம் என்ற குரல் வீரியம் பெறத்தொடங்கியது.
அரச ஏவல் படைகளின் ஆயுதங்களை ஆயுதங்களால் மட்டுமே சந்திக்க முடியுமென்ற நிலையை சிங்கள ஆட்சித் தலைமைகள் உருவாக்கின. பல்கலைக்கழக தரப்படுத்தலால் பாதிப்புற்ற தமிழ் இளையோர், பள்ளிப் பைகளை வீசி விட்டு ஆயுதப் பைகளை ஏந்தத் தள்ளப்பட்டனர்.
மாவீரர் என்ற வரலாறு இங்கிருந்து – இப்படித்தான் ஆரம்பமானது. 1207 போராளிகள் வீரச்சாவு கண்டிருந்த காலத்தில், 1989 முதலாவது மாவீரர் நாளின்போது தேசியத் தலைவர் ஆற்றிய உரையில் பின்வருமாறு கூறியிருந்தார்:
‘இதுவரை காலமும் எங்களுடைய இனத்தில் வீரர்கள் என்றால் யாரென்று கேட்கும் நிலையிருந்தது. இன்று எம்மினத்தின் வீரர்களை நினைவுகூரும் நாள் ஒன்றை உருவாக்கியுள்ளோம். இனி எமது இனம் நிச்சயமாக அழியாது. அவர்களுடைய வீரமான, தமது உயிரையே மதியாது போராடிய உண்மையான தியாகம்தான் எங்களுக்கு இன்று உலக நாடுகளில் ஒரு மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த மாவீரர் நாளை நாங்கள் எங்களுடைய வாழ்நாளில் முக்கியமான நிகழ்வாகக் கருதி ஒவ்வொரு வருடமும் கொண்டாட உள்ளோம்” என்று அன்று பிரகடனம் செய்திருந்தார்.
32 ஆண்டுகளின் பின்னர், முக்கியமாக முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டதன் 12வது ஆண்டில் இக்கூற்றை மீள்நினைவுக்குட்படுத்துவதற்கு முக்கிய காரணமுண்டு.
புனிதர்களுக்கான இந்த மாவீரர் நாளை தமிழ் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் தங்கள் சொந்த அரசியலுக்காகவும் ஊடக புதினத்துக்காகவும் பயன்படுத்துவது மேலோங்கி வருகிறது. கடந்த மாதம் தியாகி திலீபன் நினைவு தினத்துக்காக ஒன்றிணைந்து காட்சியளித்த தமிழ் அரசியல் சீலர்கள், மாவீரர் தினத்தையொட்டி தனித்தனியாக மண்வெட்டி, அலவாங்கு, துடைப்பங்களுடன் காட்சி கொடுக்கின்றனர்.
மாவீரர் துயிலும் இல்லங்களை துப்பரவு செய்யப் புறப்பட்டிருக்கிறார்கள். கிளிநொச்சியில் எம்.பி. ஒருவர் தமது தொகுதிக்குள் துப்பரவுப் பணி மேற்கொள்கிறார். யாழ்ப்பாணத்தில் இன்னொரு எம்;;.பி. தமக்குரிய பிரதேசமென அதேபாணியில் துப்பரவு செய்கிறார். முல்லைத்தீவிலும் இதே பாணியில் துப்பரவு. அடுத்த சில நாட்களுக்கு இது தொடரக்கூடும்.
நாடாளுமன்றத்தில் ஒரு எம்.பி. மாவீரர் நினைவேந்தலுக்கு தடைவிதிக்கக்கூடாதென்று உரையாற்றியுள்ளார். மாவீரர்களான விடுதலைப் போராளிகள் தங்கள் போராட்டத்துக்கு தெரிவு செய்த வழிமுறையை தாம் ஒருபோதும் ஏற்கப்போவதில்லையென்று பகிரங்கமாகக் கூறியவரே இவர்.
கடந்த பொதுத்தேர்தலில் அதற்குரிய பரிசாக தமக்குக் கிடைத்த குறைந்த வாக்கு வெற்றிக்கு பிரயாச்சித்தமாக இவ்வாறு பேசியிருக்கலாம். மகிந்த ராஜபக்சவுடன் நேரடியாகப் பேசி நினைவேந்தலுக்கு அனுமதி பெறப்போவதாக தமிழரசுக் கட்சி தலைவரும் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சில சட்டத்தரணிகள் மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்த நீதிமன்றத்தை நாடியுள்ளனர். காவற்துறையினர் தடையுத்தரவு பெறுவதற்கு முன்னர் இதனைச் செய்ய வேண்டுமென்ற முன்னெடுப்பு இதுவென்று காரணம் கூறப்பட்டது. அதற்கு வவுனியா மன்னார் மாவட்டங்களில் காவற்துறையினர் நீதிமன்ற தடையை பெற்றுவிட்டனர். யாழ்ப்பாண மாவட்டத்திலும் தடைகோரி காவற்துறையினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இங்கும் தடை கிடைக்குமானால் எங்கள் அரசியல்வாதிகளும் சட்டத்தரணிகளும் என்ன செய்யப் போகிறார்கள்?
தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முகக்கவசமணிந்து, சமூக இடைவெளி பேணி நினைவேந்தலை ஒழுங்கமைக்க சட்டத்தில் இடமுண்டு. சிலவேளை ராணுவத் தளபதி இதனைத் தடுப்பதற்கு படையினரை ஏவலாம். அப்படியானால் அதனை மீறும் சக்தியும் வலுவும் எம்மவர்களிடம் உள்ளதா? செய்நேர்த்தியுடன் துணிந்தால் நிச்சயமாக முடியும்.
ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி நடைபெற்ற தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் போட்டியிட்டவர்கள் 1400க்கும் அதிகமானோர். இவர்களுள் தமிழ்த் தேசியம், தமிழருக்கான அரசியல் தீர்வு என்ற கோசங்களுடன் போட்டியிட்டவர்கள் சுமார் எண்ணூறு பேருக்கு மேல்.
இவர்கள் ஒவ்வொருவரதும் நெருங்கிய ஆதரவாளர்கள் என்றும், வெற்றிபெற்ற தமிழ்த் தேசிய கட்சிகள் மூன்றினதும் பதின்மூன்று எம்.பிக்களின் ஆதரவாளர்களென்றும் பார்த்தால் குறைந்தது ஒரு லட்சம் பேராவது தேறும். இவர்களை இணைத்துக் கொண்டு அரசியல்வாதிகள் அன்று களமிறங்கிளால் அரசபடைகள் என்ன செய்ய முடியும்?
தமிழீழ விடுதலைப் போரில் மரணித்த இந்திய வீரர்களுக்கு நினைவுத்தூபி அமைத்து வணக்கம் செலுத்தப்படுகிறது. இப்போரில் இறந்த இலங்கை அரச படைகளுக்கு யுத்த வீரர் தினம் கொண்டாடப்படுகிறது. இதே போரில் இறந்த போராளிகளின் தியாகத்துக்கு எவ்வாறு தடைவிதிக்க முடியும்?
அந்தப் புனிதர்களின் ஈகையை மக்கள் எழுச்சியுடன் நினைவேந்த, அரசியல்வாதிகள் உடன்வர வேண்டும். மாவீரர் குடும்பங்கள் தங்களுக்கான உரிமையை வென்றெடுக்க அரசியல்வாதிகள் பின்னிற்கக்கூடாது. அரசபடைகளின் தடையை உடைத்து சிறைச்சாலைகளை நிரப்ப அவர்கள் தயாராக வேண்டும்.
வழக்கமான மேடை முழக்கங்களாலும் வெற்று வேட்டுகளாலும் தங்களின் வாக்கு வங்கியை நிரப்ப மாவீரர் தியாகங்களை, அவர்களின் குடும்பங்களின் உரிமைகளை அரசியல்வாதிகள் துஸ்பிரயோகம் செய்யக்கூடாது.
மாவீரர் என்பவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. பட்டம் பதவிகளுக்கு ஆசைப்படாது சுயநலமின்றி குடும்பங்களைத் துறந்து மண்பற்றால் போராட வந்தவர்கள். தங்கள் மண்ணுக்காகப் போராடியவர்கள். இன்றும் மண்ணுக்காக மண்ணுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவர்கள் கல்லறைகளுக்குள் கண்மூடித் தூங்கவில்லை. மண்ணின் காவலர்களாக மண்ணுக்குள் விழித்துக் கொண்டிருப்பவர்கள்.
இந்த வருட மாவீரர் நினைவேந்தல் இதனை சிங்கள தேசத்துக்கு எடுத்துக்கூறுவதாக அமைய வேண்டும். போர்க்குற்றங்கள் புரிந்த ஒரு சிங்கள ராணுவத் தளபதி, இந்நாளின் மகோன்னதத்தையும், மதிப்பையும் கொரோனாவுடன் சம்பந்தப்படுத்தி தடுக்க இடமளிக்கக்கூடாது.
சுதந்திர தாயகத்துக்கு உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் ஆற்ற வேண்டிய பணியை 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் தேசியத் தலைவர் தமக்கே உரிய வகையில் பின்வருமாறு கூறியுள்ளார்:
‘எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவுக்காக தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும்வரை தொடர்ந்து போராடுவோம். தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வாழ்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களை பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன். தங்களது தாராள உதவிகளை வழங்கி தொடர்ந்தும் பங்களிக்குமாறு உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். இந்த சந்தர்;ப்பத்திலே தேச விடுதலைப் பணியை தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கு எமது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்த தேசியத் தலைவர் இறுதியில்,
சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமேன உறுதியெடுத்துக் கொள்வோமாக என சத்தியம் செய்துள்ளார்.
இந்த சத்திய வாசகம் உலகம் முழுவதும் வியாபித்து வாழும் ஒவ்வொரு தமிழருக்கும் உரித்தானது. இலட்சியம் நிறைவேறும்வரை இதுவே தமிழரின் மந்திரமாக உச்சாடனம் செய்யப்பட வேண்டியது.
பனங்காட்டான்
—
11 ஆண்டுகளுக்குப் பிறகும் சிங்களப் பேரினவாதிகள் தொடர்ந்து தமிழின அழிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்!! – பழ. நெடுமாறன்
துளிர்க்கும் மலர் மொட்டுகள் மலர்ந்து மணம் பரப்புவதற்கு முன்னர் கருகி உதிர்ந்து சருகுகளாகிவிட்டன. தமிழீழ மண்ணில் இளைஞர்கள், இளம் பெண்கள் ஆகிய பலரும் வாழ்வின் வசந்த காலத்தை எட்டுவதற்கு முன்பே வீரத்தைக் களத்தில் நிறுத்தி ஈகத்தின் வடிவமாகி மறைந்து போனார்கள்.
வாழவேண்டிய வயதில், இளமை பூரித்துப் பொங்கும் பருவத்தில் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு தாயக மண்ணின் விடுதலைக்காக தங்களை முழுமையாக ஒப்படைத்துக்கொண்டு வீரச்சாவை விரும்பித் தழுவிக்கொண்ட அந்த இளந்தளிர்களின் உன்னதமான ஈகத்திற்கு இணை எதுவுமில்லை.
பெற்றெடுத்து அன்பை அள்ளிப் பொழிந்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோரையும், உடன் பிறந்த அன்புமிகு அண்ணன், தம்பிகளையும், அக்கா, தங்கைகளையும், உற்றார், உறவினர்களையும் உதறித் தள்ளிவிட்டு தாயக மக்களைக் காப்பதற்காக தங்களின் வாழ்வைத் துறந்து மாவீரர்களானவர்கள். எத்தனை ஆயிரமாயிரமானவர்கள்?
அதிலும் இன்ன நாளில், இந்த நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் தங்களது உயிர்களை ஆயுதமாக்கி எதிரியை அழித்து இணையற்ற ஈக மறவர்களான கரும்புலிகள் கணக்கற்றவர்களாவார்.
சிங்கள இனவெறிக் கொடுமைகளுக்கும், அநீதிகளுக்கும் எதிராக ஈழத் தமிழர்கள் 30ஆண்டு காலம் அறவழியிலும், 30 ஆண்டு காலம் மறவழியிலும் தங்களின் உரிமைகளை நிலை நிறுத்தப் போராடினார்கள். கடந்த 60ஆண்டு காலத்தில் சுமார் இரண்டு இலக்கத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் சிங்கள இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள். 10 இலக்கத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்களுக்குச் சொந்தமான தாயக மண்ணில் வாழ வழியில்லாமல் எல்லாவற்றையும் இழந்து ஏதிலிகளாக உலக நாடுகளில் அடைக்கலம் புகுந்தார்கள்.
உள்நாட்டில் 5 இலக்கத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த ஊர்களிலிருந்தும், வீடுகளிலிருந்தும், நிலங்களிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டு தங்களது மண்ணிலேயே ஏதிலிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழர்களில் இளைஞர்கள் பிரித்தெடுக்கப்பட்டுப் பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் சிங்கள இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டு மிகக் கொடுமையான சித்திரவதைகளுக்கும், படுகொலைகளுக்கும் ஆளாகிக் காணாமல் போனார்கள். இளம்பெண்கள் கைது செய்யப்பட்டு சிங்கள இராணுவத்தின் முகாம்களில் பாலியல் வன்முறைக் கொடுமைகளுக்கு இரையாக்கப்பட்டுச் சிதைக்கப்படுகிறார்கள். போர் முடிந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகும் சிங்களப் பேரினவாதிகள் தொடர்ந்து தமிழின அழிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இனப்படுகொலை குறித்து ஐ.நா. பேரவை கண்டனம் செய்த பெருங்குற்றத்திற்குள் அடங்கக்கூடிய செயற்பாடுகள் அத்தனையையும் சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்து செய்கிறது.
தமிழினத்தின் குழந்தைகள் பிறப்பு திட்டமிட்டுத் தடுக்கப்படுகிறது. கருவுற்றிருக்கும் தமிழ்ப் பெண்களுக்குக் கட்டாய கருச்சிதைவு, கருத்தடை போன்றவற்றை சிங்கள இராணுவம் ஈவிரக்கமில்லாமல் செய்துவருகிறது. தமிழ்க் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, வெவ்வேறு இடங்களுக்குக் கடத்தப்பட்டு, உளவியல் ரீதியில் ஊனமாக்கப்படுகிறார்கள்.
தமிழர்களின் இன விகிதாச்சாரத்தை அழித்து வடக்கு-கிழக்குப் பகுதியில் சிங்களக் குடியேற்றங்கள் அரசு ஆதரவுடன் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. இலங்கை விடுதலை பெற்ற 1948ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தமிழர்களின் பூர்வீகத் தாயகமான வட-கிழக்கு மாநிலத்தில் 40 சதவிகிதம் தமிழர்களின் இன விகிதாச்சாரத்தை சிங்கள அரசு அழித்துள்ளது. தமிழர்களின் சிற்றூர்கள், பேரூர்கள் ஆகியவற்றுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டுத் தமிழ்ப் பெயர்கள் அழிக்கப்படுகின்றன.
தமிழர்களுக்குச் சொந்தமான காணி நிலங்கள் பறிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்படுகிறது. இராணுவத்தின் தேவைக்காக என்று கூறி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள தமிழ் மண் பறிக்கப்பட்டுள்ளது.
தமிழீழத்தில் நடைபெற்ற இறுதிப் போரில் ஈவிரக்கமின்றித் தமிழர்கள் மீது ஐ.நா. பேரவை தடை செய்த ஆயுதங்களை ஏவிக் கொன்று குவித்த இராசபட்சே சகோதரர்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். முன்னிலும் மோசமான முறையில் இன அழிப்பை அவர்கள் தொடர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
அழிவின் விளிம்பிலிருந்து கதறும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்புணர்வும் கொண்ட ஈழத் தமிழ்த் தலைவர்கள் பிரிந்து கிடக்கிறார்கள். இதன் விளைவை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பார்த்தோம். தமிழீழ மண்ணில் சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெறக்கூடிய துயரம் நிகழ்ந்தது.
உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் அடைக்கலம் புகுந்து வாழும் ஈழத் தமிழர்களிடையேயும் முன்பு நிலவிய ஒற்றுமை உணர்வு இன்று இல்லை. மாவீரர் நாளை கொண்டாடும்போதுகூட பிரிந்து, தனித் தனியே கொண்டாடுகிற அவலப்போக்கு நிலவுகிறது.
ஈழத் தமிழ் மக்களும், விடுதலைப் புலிகளும் தங்களின் தாயக மண்ணை விடுவிக்கும் போராட்டத்தில் தங்கள் வலிமைக்கும் மேலாக அளப்பரிய தியாகங்களைப் புரிந்திருக்கிறார்கள். உலகில் எந்தவொரு தேசிய இனமும் தனது விடுதலைப் போராட்டத்தில் சந்தித்திராத வெங்கொடுமைகளுக்கும், பேரிழப்புகளுக்கும் ஈழத் தமிழர்கள் ஆளாகியிருக்கிறார்கள். ஈழத் தமிழ் மக்களும், மாவீரர்களும் சிந்திய குருதியால் தமிழீழ மண் சிவந்து கிடக்கிறது.
மாண்டு மடிந்து மண்ணோடு கலந்துவிட்ட அந்த மக்களும், அந்த மக்களுக்காகத் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர்களும் புரிந்த மாபெரும் தியாகம் வீண்தானா? விழலுக்கு இறைத்த நீர் தானா?
தமிழினத்தின் வரலாற்றில் என்றும் காணாத வகையில் மாபெரும் அவலத்தை நாம் சந்தித்திருக்கிறோம். உலகம் வியந்துப் போற்ற வாழ்ந்த தமிழினம் வாழ்வா? அல்லது சாவா? என்ற இறுதிக் கட்டத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஈழத் தமிழினத்தின் அழிவு, உலகத் தமிழினத்தின் அழிவுக்கு முன்னோடியாகும். இந்தக் காலகட்டத்திலாவது நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்காவிட்டால், நடக்கக்கூடாதது நடந்துவிடும். சீரிளமை திறன் குன்றாத தமிழ் மொழிப் பேசும் தமிழினம் உலகப் பந்திலிருந்த அடையாளமே தெரியாமல் துடைக்கப்பட்டுவிடும்.
தமிழீழத் தாயகத்தை விடுவிக்கும் போரில் உயிர் ஈந்த மக்களும், மாவீரர்களும் நம்மை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். ஈழத் தமிழ்த் தலைவர்கள் தோளோடு தோள் இணையவேண்டும். அவர்கள் ஒன்றுபட்டால் உலகத் தமிழினமும் ஒன்றிணையும்.வரப்போகும் நவம்பர் 27 மாவீரர் நாளில் உலகத் தமிழர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய சூளுரை இதுவாக அமையட்டும்.
You must be logged in to post a comment.