அழியாச்சுடர்கள்

சீமான் மாவீரர்நாள் எழுச்சி உரை ! #நாம்தமிழர்கட்சி #Seeman #MaaveerarNaal #Prabhakaran #MaaveerarNaal2020 #SeemanSpeechToday #NaamThamizharKatchi #NaamTamilarKatchi #NTK

#Seeman #MaaveerarNaal #Prabhakaran

சீமான் மாவீரர்நாள் எழுச்சி உரை

திசெம்பர் 6, 2020 Posted by | ஈழமறவர், ஈழம், தமிழர், மாவீரர் நாள், மாவீரர் நாள் உரைகள் | , , , | சீமான் மாவீரர்நாள் எழுச்சி உரை ! #நாம்தமிழர்கட்சி #Seeman #MaaveerarNaal #Prabhakaran #MaaveerarNaal2020 #SeemanSpeechToday #NaamThamizharKatchi #NaamTamilarKatchi #NTK அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

திமுகவை ஆதரித்ததே ஈழ போராட்டத்தை காப்பாற்றத்தான் #ஜெகத்கஸ்பர் #JegathGaspar #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Prabhakaran #genocide #Tamil #Eelam #TamilGenocide #Mullivaikkal #ltte


திமுக, ஈழ போரில் என்ன செய்திருக்க வேண்டும்?” – ஜெகத் கஸ்பர்

திசெம்பர் 5, 2020 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், காணொளிகள், சுத்துமாத்துக்கள், தமிழர், பிரபாகரன் | , , , , , , | திமுகவை ஆதரித்ததே ஈழ போராட்டத்தை காப்பாற்றத்தான் #ஜெகத்கஸ்பர் #JegathGaspar #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Prabhakaran #genocide #Tamil #Eelam #TamilGenocide #Mullivaikkal #ltte அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

நாட்டுப்பற்றாளர் நாகமுத்து கருணானந்தசிவம் ஆசிரியர் அவர்களின் நினைவு நாள் ! # நாட்டுப்பற்றாளர் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #இனப்படுகொலை #ltte #Maaveerar #Tamil #Eelam

நாட்டுப்பற்றாளர். நாகமுத்து கருணானந்தசிவம் ஆசிரியர் அவர்களின் நினைவுநாள் 04 .12.2020ம்.திகதி 32ம் ஆண்டு நினைவுநாள்

ஓடையிலே எம் சாம்பல்

கரையும் போது

ஒண்டமிழே சலசலத்து

ஓடவேண்டும்

பாடையிலே படுத்தூரைச் சுற்றும் போது பைந்தமிழின் ஓசையை நான் கேட்க வேண்டும்!

இது பாவேந்தர் பாரதிதாசன் எழுச்சிக்கவிதை வரிகள்….

இது சிவம் மாஸ்ரருக்கு மிகப்பிடித்த வரிகளும் கூட….

சிவம் மாஸ்ரர் பெயரைச் சொல்லும்போதே, தமிழ் என்று விரியும் நினைவு காங்கேசன்துறை ஊரவர்க்கு

மனதில் தோன்றும் உருவம்!

இளம்வயதில் இருந்தே தந்தை குஞ்சன் நாகமுத்துவால், தமிழ் உணர்வும் ஊட்டமாகி வளர்ந்தது!

இவர் உணர்ச்சிமிக்க மேடைப்பேச்சாளனாக முதிர்ந்த வேளை அனைத்துக் கூட்டங்களிலும் அரங்கம் அதிரும் வண்ணம் இவரது பேச்சு அமைந்திருக்கும்.

இதேவேளை ஊர்நண்பர்களுடன் இணைந்து இளந்தமிழ் மன்றம் எனும் கலை மற்றும் விளையாட்டுடனான கழகத்தை உருவாக்கும்போது, மாம்பிராய் காந்தி விளையாட்டுக்கழக இளைஞர்களும் இணைந்து

நாடகம், கவியரங்கம், வழக்குரை மன்றம், எனத் தனியாகவும், ஆண்டுவிழாக்கள், நாடகப்போட்டிகள் என்ற முத்தமிழ் ஊரில் ஒவ்வோர் ஆண்டும் களைகட்டும்! இவற்றுள் எல்லாம் சிவம் மாஸ்ரரின் அலவாங்குக் குழிவெட்டி கப்பு நடுவதில் இருந்து, அரங்கு அலங்கார மஞ்சள், சிவப்புக் கீலமாக ஆடும் வெள்ளைத்தாளை வெட்டிக் கோதுமைமாவில் கிண்டிய பசைதடவி நைலோன் நூலில் ஒட்டுவது ஈறாக மேடையில் முழங்கி, நாடகத்தில் நடித்து,கவிதைபாடி,

” குற்றக்கூண்டில் பாரதி தாசன்” முன்னாள் கல்வி அதிகாரி,அதிபர், தமிழ்அறிஞர், ஆன்மீகவாதிகள் தமிழ்ப்பற்றாளர் மதிப்பிற்குரிய

திரு வேலாயுதம் ஆசிரியர் நீதிபதியாக வீற்றிருக்க,சூடுமறக்க வெடிக்கும் தமிழ் வாதாட்டுமொழி சிவம்மாஸ்ரரை மேடையில் ஓர் சிவனாகவே பார்க்கலாம்! அழகும் வேகமுமாக அடுத்தடுத்து அள்ளிவரும் தமிழ்…

இப்படியே ஆண்டுகள் நகர, தமிழினவிடுதலை மென்முறைப்போராட்டங்ககள் பலவற்றிலும், தமிழாராட்சி மாநாட்டிலும் கலந்து நின்ற வாத்தியார்……

காலத்தின் தேவை, இன ஒடுக்குமுறையின் சிங்கள வன்முறையின் உச்சக் கோரதாண்டவம், எதிர்வினையாகத் தமிழ் இளைஞர்களின் கரங்களில் கருவிகளைத் திணித்தது காலம். காலப்பிரசவமாய், ஈழத்தமிழர்களின் பாரம்பரிய போர்முகம் பிரபாகரன் எனும் தமிழ் எழுச்சி வடிவமாகதோற்றமுற, இயல்பாகவே சுதந்திரத் தாகம் கொண்ட சிவம் மாஸ்ரரும், காலத்தின் கரிசனையைத் தானும் உணர, பூம்புகார் வீடு ஓர் புலிகள் சரணாலயமானது! இதற்கு முன்னரான காலத்திலும், பலபோரளிகள் அந்தவீட்டீன் அன்னம் சுவைக்காமல் சென்றதில்லை!

இறுதியாக அவர் தலையையும், மார்பையும் துளைத்த துப்பாக்கியின் சொந்தக்காரர்களான செந்தோழர்கள், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என

அனைவருக்கும் அடைக்கலமும், ஆதரவும் கொடுத்த அந்த மனிதம் மிகு மனிதன், தமிழ்ப்பற்றாளன், மக்கள் நேய ஊரவன்,

இருண்டகாலமாக எமது மண்ணில் இறங்கிய இந்திய நஞ்சுக்காற்றால் மூச்சுத்திணறவைத்தவேளை

அமைதி முகம் கிழிய, ஆயுத அரக்கரானபோது, மீண்டும் மாஸ்ரர் வழமைபோல விடுதலைக்குஞ்சுகளைக் காக்கும் தாய்க்கோழியானார்.

யாழ்மாவட்ட அரசியற் துறைப்பொறுப்பாளராக இருந்த தியாக தீபம் லெப்.கேணல்திலீபன் அவர்களுக்குஅடுத்ததாகப் பொறுப்பேற்ற

பிரசாத் அவர்களின் அணியினது பாதுகாப்பான தலைமறைவு செயற்பாட்டுக்கு உறுதுணையாக நின்றார்!

அத்தோடு குடாநாட்டை விட்டு வெளியேறிய பல போராளிக்குழுவின் இளைப்பாறும் இடைத்தங்கல் இல்லமாக, பல பற்றைக் காடுகளில், அவர்கள் காத்திருந்தார்கள்! மாஸ்ரரின் உணவும், மருந்தும் வரும் என்று!

அத்தகைய இருத்தலில் ஒன்றின் காட்டிக்கொடுப்புச் சுற்றிவளைப்பில் மாஸ்ரரும், திலகனும் இன்னுமொரு நண்பரும் இந்திய இராணுவத்தால் கைதைசெய்யப்பட்டு, பண்டத்தரிப்புச் சந்தி முகாமில் கடுமையாகத் தாக்கி விசாரணை செய்தபின்,காங்கேசன் துறை முகாமிற்கு மாற்றப்பட்டபின், இந்திய இராணுவத்தால் செல்வாக்கு மிக்க இரட்டைமுக காங்கேசன் பிரமுகர்கள், சில அரச நண்பர்கள் அதற்கும் மேலான நடேஸ்வராக்கல்லூரியின் அன்றைய அதிபர், மாஸ்ரரில் அன்பும், மரியாதையும் கொண்ட மாணவர்கள், சக ஆசிரிய நண்பர்கள் ஆகியோரின் முயற்சியும்,

இளந்தமிழ் மன்ற நண்பர்கள், தெல்லிப்பளை பநோகூ சங்கத்தலைவர் சிவமகாராஜா,

மாஸ்ரர் பண்டத்தரிப்பு முகாமில் தான் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து சொன்ன, அவரது ஒன்றைவிட்ட பிராம்பற்று அண்ணன் உட்பட பலரின் அயாராமுயற்சியால் மாஸ்ரர் மறுபடி விடுவிக்கப்பட்டார். அவர் நண்பர்களோடு!

பின்பு மறுபடியும் விடுதலைக்குரல் ஒலிக்கத்தொடங்க அதனை ஒடுக்க நினைத்த இந்திய உளவுத்துறையும், அதன் நிறைவேற்றுக்குழுவான, ஈபிஆர்எல்எவ் இன் அடியாட்களும் தமது எண்ணத்தை அவகாசமின்றி 1988 டிசம்பர் 4 ம் திகதி நிறைவேற்றின!

ஒரு ஆயுதம் ஏந்தாத ஆசிரியனை ஒழிக்க பல ஆயுதம் தாங்கிய முழுமையான கொலைகாரர்கள்!

அந்த ஜீவன், கல்லூரிவீதி இரண்டாம் குறுக்குத் தெரு வீதி சந்தியில்,தலையுலும் மார்பிலும் குண்டேந்தியபடி,

தான் பிறந்த மண்ணில் தன் குருதி வழிய தான் உயிரிலும் மேலாய் நேசித்த தாயகவிடுதலைக்காக தன்னுயிரீந்தார்.இதே சந்தியில், இந்திய இராணுவம் முன்பு தன் உரிமை முழக்கம் இட்டதும்,இதே சந்தியிலேயே ஈரோஸ் அமைப்பின் போராளிகள் நால்வர் வீரச்சாவடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்க சிவந்த மண் சிவம் மாஸ்ரர் வீழ்ந்த மண்!  நாட்டுப்பற்றாளரின் நினைவை நெஞ்சில் நிறுத்தி அவருக்கு எமது அக நினைவு வணக்கம்

திசெம்பர் 5, 2020 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், தமிழர், நாட்டுப்பற்றாளர், வீரவணக்கம் | , , , , , | நாட்டுப்பற்றாளர் நாகமுத்து கருணானந்தசிவம் ஆசிரியர் அவர்களின் நினைவு நாள் ! # நாட்டுப்பற்றாளர் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #இனப்படுகொலை #ltte #Maaveerar #Tamil #Eelam அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

2009 போரை 2002 இல் முன்கூட்டியே தெரிவித்தார் பிரபாகரன் ! #காணொளி #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #prabhakaran

இங்கே ஒரு நெருடலான ஒரு விடயம் 2002 இல் நடைபெற்ற செவ்விகளை 18 வருடங்கள் கழித்து பகிரங்கப்படுத்துவது தான் ???????

#kolakalasrinivasan


தேசிய தலைவரை சந்தித்த வேளையில் – அப்துல் ஜப்பார்



அப்துல் ஜப்பார் | #Prabhakaran -ஐ ஈர்த்த ஊடகவியலாளரின் குரல்

‘நீங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா என்ன?”

இப்படியொரு துணிச்சலான கேள்வியை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவராக இருந்த பிரபாகரனிடம் கேட்க முடிகிற ஒரு காட்சியை கற்பனை செய்து பார்த்தாலே சற்று திகைப்பாகத்தான் இருக்கிறது இல்லையா?

இதைக் கேட்டவர் பிரபல கிரிக்கெட் வர்ணணையாளரும், தமிழறிஞரும், எழுத்தாளருமான அப்துல் ஜப்பார்.

ஏப்ரல் 10, 2002 அன்று சர்வதேச ஊடகங்களின் பிரதிநிதிகள் பெரும்பாலும் கிளிநோச்சியில் இருந்தார்கள். ஒட்டுமொத்த ஊடக உலகின் கண்களும் அன்று அந்த திசை நோக்கிதான் இருந்தன.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சர்வதேச ஊடவியலாளர் மாநாட்டினை அன்று ஏற்பாடு செய்திருந்தார். ‘அது ஒரு துன்பியல் சம்பவம்’ என்று ராஜீவ்காந்தி படுகொலையைப் பற்றி முதன்முறையாக புலிகள் தரப்பிலிருந்து கருத்து தெரிவிக்கப்பட்டது அன்றுதான்.

இந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டிற்குத்தான் அப்துல் ஜப்பார் சென்றிருந்தார். மாநாட்டின் நிறைவில் எதிர்பாராததொரு ஆச்சரியமாக பிரபாகரனை சந்திக்கும் வாய்ப்பு, அப்துல் ஜப்பாருக்கு கிடைத்தது.

இவரின் வானொலி நிகழ்ச்சிகள் அங்கு பிரபலம் என்பதால் பிரபாகரனே இவரைச் சந்திக்க விரும்புகிறார். அந்த உரையாடலின் இடையில்தான் ஒரு தருணத்தில் மேற்குறிப்பிட்ட கேள்வியை ஜப்பார் கேட்கிறார்.

***
இந்த மாநாட்டிற்கு சென்ற அப்துல் ஜப்பாரின் பயண அனுபவங்களும் பிரபாகரனுடனான சந்திப்பு விவரங்களும் தொகுக்கப்பட்டு ஒரு சிறிய நூலாக வெளிவந்திருக்கிறது.

‘கண்டேன் சீதையை’ என்று அனுமன் சொல்வது போல ‘அழைத்தார் பிரபாகரன்’ என்பது நூலின் அழகான தலைப்பு.

எதிர்பாராமல் அமைந்த இந்த பயண நிகழ்வு, அதில் ஏற்பட்ட நடைமுறைச் சிரமங்கள், அதைத் தாண்டி வந்த சாதனைகள் என்று தன் பயணம் தொடர்பான ஒவ்வொரு நுண்தகவலையும் எளிமையான, அழகு தமிழில் பதிவு செய்திருக்கிறார். அவருடனேயே நாமும் சென்று வந்த உணர்வு இந்நூலின் மூலம் கிடைக்கிறது.

போரினால் அழிந்த கட்டிடங்கள், புதைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகள், எல்லா ஏற்பாடுகளையும் நேர்த்தியாகவும் பாதுகாப்பாகவும் செய்யும் புலிகளின் ஒழுங்கு, நிர்வாகத்திறமை, அவர்களின் தியாகவுணர்வு உள்ளிட்ட பல தகவல்கள் இந்த நூலில் சுவாரசியமாக வெளிப்படுகின்றன.

#Tamilniram #HBDLeaderPrabhakaran66 #JegathGaspar

என் உண்மையான எதிரிகள் இவர்கள்தான்- கோபப்பட்ட மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்



நாடாளுமன்றை அதிரவைத்த கூட்டமைப்பு உறுப்பினரின் பேச்சு!!

முகப்புத்தகத்தில் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை பிரசுரித்தவர்களை சிறிலங்கா காவல்துறை கைசெய்வது என்பது அரசாங்கத்தின் இயலாமையை மூடி மறைக்கும்படியான செயல் என்று தெரிவித்திருந்தார் த.தே.கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்.

நீங்கள் உண்மையான பெளத்தர் என்றால் மனிதத்துவதிற்கு மரியாதை செலுத்த முதலில் பழகிக்கொள்ளுங்கள் என்ற எச்சரிக்கையையும் அவர் விடுத்திருந்தார்

ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் அரசாங்கத்தை சரமாறியாக குற்றம்சுமத்தி சாணக்கியன் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி:

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் படத்தை பகிர தடையா? – ஃபேஸ்புக் பதில்
பிபிசி தமிழ்

திசெம்பர் 5, 2020 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், பிரபாகரன் | , , , , , | 2009 போரை 2002 இல் முன்கூட்டியே தெரிவித்தார் பிரபாகரன் ! #காணொளி #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #prabhakaran அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

அகவை காணும் தமிழீழக்கவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயா ! #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #இனப்படுகொலை #tamilgenocide #Tamil #Eelam #ltte

breaking

இன்று அகவை காணும் தமிழீழக்கவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயாவிற்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

: டிசம்பர் 3, 1948 –  டிசம்பர் 3-2020


தமிழ் வாசகர்களுக்கு புதுவை அண்ணருக்குமான அறிமுகம் தேவையில்லை. வீச்சும், மூச்சுமான அவரது படைப்புக்களுக்கு எமது விடுதலைப்போரில் தனியானதோர் இடமுண்டு.

சொல்லப்போனால் விடுதலைப்போரின் வரலாற்றுடன் சேர்ந்து அவரது கவிதைகளும் பயணித்துள்ளன எனலாம்.

விடுதலைப் போராடடம் போரியலில் முனைப்புப்பெற்ற 1987க்கு முந்திய காலத்தில் அவரது கவிதைகள் ஒரு தேசம் என்ற கருத்தின் தோல்வியை உரைத்தன. எம் தேசியத்து எழுச்சியின் நம்பிக்கையைக் கூறின.

இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு காலத்தில் அவரது பாடல்கள் காடுகளின் கரந்துறை விடுதலை வாழ்வியலுடன் பயணித்தன.

யாழ்ப்பாணத்தில் பதுங்குகுழி வாழ்க்கைக்கும் அவரது கவிதைகள் பழக்கமாயின. விமானத்தின் குண்டு வீச்சுக்களும், பீரங்கிகளின் எறிகணை வீச்சுக்களும் அவரது கவிதைப் பொருளாயின. அவற்றின் படுகொலை வீச்சுக்கண்டு வெம்பி, வெடித்து கோபம் கொண்டு சாபமிட்டன.

யாழ்ப்பாணத்தைவிட்டு விடுதலைப்போரியல் தலைமை இடம்பெயர்ந்த போது புதுவை அண்ணரின் கவிதைகளும் அழுதபடியே சேர்ந்துவந்தன. ஆனால் நம்பிக்கை தளராத வரிகளுடன் விடுதலைக்கனவு குலையாத பாடல்களாய்.

பொருட்தடை, மருந்துத்தடை, போக்குவரத்துத்தடையென எல்லாத் தடையினுள்ளும் கிடந்தழுந்திய எம்மக்களுடன் சேர்ந்திருந்தன புதுவை அண்ணரின் கவிதைகள். வன்னியினுள்ளே நடந்தேறிய விடுதலை வேள்வியில் சேர்ந்தொலித்தன அவரது பாடல்களும்.

இராணுவக் கொலை வலயத்தினுள் பயணிக்கும் இளம் வீரருடன் சேர்ந்து புதுவை அண்ணரின் பாடல்களும் பயணித்தன. எம்மக்களுக்கு ஆறுதல் சொல்லின…… போரிட அழைத்தன….. போரிட்டன….. வெற்றிச் செய்திகளும் சொல்லின…. விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் பற்றி மட்டுமல்லாது, தமிழீழ கட்டமைப்பு, எமது தேசத்து நிலபுலங்கள், மக்களது கலாச்சார வாழ்வியல்கள், தமிழீழப் பெண்களது புரட்சிகர போரியல், சர்வதேச அரசியலுடனான எம்மின வாழ்வு என புதுவை அண்ணரது படைப்புக்கள் பன்முகப்பட்ட வாசிப்பனுபவத்தை தருபவை.

புதுவை அண்ணரது கவிதைகள், பாடல்கள் பற்றி எம்முள்ளே பேசப்படும் வேளைகளில் “காலத்தின் குரல்கள்” என்று கூறுவேன். எமது விடுதலைப்போர் கடந்து வந்த பாதையின் வீரமும், சோகமும், கோபமும், மகிழ்ச்சியும், பெருமிதமுமென மாறி மாறிய உணர்வுகளைக் கொண்ட காலங்களைக் கடந்துள்ளோம். அந்தக்கால உணர்வுகளின் குரலாக புதுவை அண்ணரின் படைப்புக்கள் பதிவு பெற்றுள்ளன என்பது எனது கருத்து.

புதுவை அண்ணருக்கு வாய்த்துள்ள அற்புதமான கவி ஆற்றலும், அனாசயமான சொல் வளமும் அவரை பெரும் கவிஞர்களது வரிசையில் சேர்த்துள்ளது. இவற்றுடன் அவர் தன்னை இணைத்துக் கொண்ட இல்டசிய வாழ்வும் அவரது படைப்புக்களில் சேர்ந்துள்ளது. இவையே அவரை “காலத்தின் குரலாகப் பேசும்” கவிஞராக ஆக்கியது எனலாம்.

இங்கு நூலுருப் பெறும் உலைக்களம் அவ்வகையில் எழுந்த உணர்வு வரிகளின் தொகுப்பு. அந்தந்த காலத்தய விடுதலைப் போரின் களநிலைகளைத் தழுவிய உணர்வின் குரல்கள்.

இந்த உலைக்களத்தின் சிறப்பு என நான் பார்ப்பது இது வெறும் புதுவை இரத்தினதுரை என்ற தனி ஒருவனின் உணர்வின் குரலாக மட்டும் அமைந்து விடாததுதான். மாறாக உலைக்களத்தை ஆழ்ந்து, விரும்பி வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பொருந்திப் போகும் உணர்வுகளின் வெளிப்பாடுகளை அவற்றில் காணலாம். போராளி நிலையிலோ, பொதுமகனின் நிலையிலோ அல்லது படித்தவரின் நிலையிலோ, பாமரரின் நிலையிலோ எந்த நிலையில் நின்று பார்க்கும் போதும் அவரவரின் உணர்வின் வரிகளாக உலைக்களம் பொருந்தி வரும்.

ஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதமென வர்ணிக்கும் விடுதலைப் போரியல் நடவடிக்கைகள் உலைக்களத்தில் பல இடங்களில் பேசப்பட்டுள்ளன. அந்நடவடிக்கைகளின் பின்னே உள்ள அர்ப்பணிப்புக்களையும், எம்மினத்தின் உணர்வுகளையும், அரசியல் அர்த்தங்களுடன் உலைக்களத்தில் பதிவாக்கியுள்ளார்.

எமது தலைவர் அவர்கள் உலைக்களத்தை ஒவ்வொரு வாரியாக ஏற்றி, இறக்கி, தணித்து வாசிக்கும் வேளையில் அருகில் இருந்து கேட்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். சிலவேளைகளில் எனக்கென தனியாகக்கூட தலைவர் அவர்கள் வாசித்து காட்டியுள்ளார். தலைவர் அவர்கள் சிறந்த வாசகர் என்பதற்கு மேலாக உலைக்களத்தின் கருத்தோட்டத்தில் மீதான ஈர்ப்பே அதனை அவரை அப்படி வாசிக்க வைத்திருக்குமென நம்புகிறேன்.

“போர்க்கால இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்த பெருமைக்குரியவர்” எனவும், “எம் விடுதலைப் போராட்ட வாழ்வையும், வரலாற்றையும் தமிழீழ இலக்கிய இயக்கத்திற்குள் முதன்மைப்படுத்தி தமிழ்த் தேசிய பிரக்ஞையை விழிப்புறச்செய்ய உழைத்தவர்.” எனவும் எம் தேசியத் தலைவர் அவர்களால் விதந்து பாராட்டுப்பெற்ற புதுவை அண்ணரைப் பற்றி நான் சொல்ல என்னதான் உள்ளது?

இலக்கிய வித்தகரும், பெரும் கவிஞருமான அவரது நூலுக்கு கருத்து எழுதுவதற்கு வாசகன் என்ற தகுதிநிலை போதுமெனக் கூறிய புதுவை அண்ணரது வார்த்தைக்கு கட்டுண்டு எழுதியுள்ளேன்.

 

எமது விடுதலைப்போர் எதிர்கால மாணவர்களுக்கான ஆய்வுப் பொருளாகும் காலம் வரும். அவ்வேளையில் விடுதலைப் போராட்டம் கடந்துவந்த வரலாற்றுப் பாதையின் போக்குகளையும், இந்த போருடன் வாழ்ந்த மானிடரின் மன உணர்வுகளையும், சொல்லும் பெட்டகமாக உலைக்களம் திகழும் என நம்புகிறேன்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அன்புடன்
ச.பொட்டு அம்மான்
பொறுப்பாளர்
புலனாய்வுத் துறை,
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்

திசெம்பர் 3, 2020 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள் | , , , , | அகவை காணும் தமிழீழக்கவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயா ! #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #இனப்படுகொலை #tamilgenocide #Tamil #Eelam #ltte அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது