அழியாச்சுடர்கள்

திமுகவை ஆதரித்ததே ஈழ போராட்டத்தை காப்பாற்றத்தான் #ஜெகத்கஸ்பர் #JegathGaspar #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Prabhakaran #genocide #Tamil #Eelam #TamilGenocide #Mullivaikkal #ltte


திமுக, ஈழ போரில் என்ன செய்திருக்க வேண்டும்?” – ஜெகத் கஸ்பர்

திசெம்பர் 5, 2020 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், காணொளிகள், சுத்துமாத்துக்கள், தமிழர், பிரபாகரன் | , , , , , , | திமுகவை ஆதரித்ததே ஈழ போராட்டத்தை காப்பாற்றத்தான் #ஜெகத்கஸ்பர் #JegathGaspar #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Prabhakaran #genocide #Tamil #Eelam #TamilGenocide #Mullivaikkal #ltte அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

நாம் தமிழர் கட்சி தடா சந்திரசேகர் ஈழத்தமிழர் விவகாரம் பேச்சு திரிப்பும், திசை திருப்பல்களும் #நாம்தமிழர்கட்சி #NTK #ஈழம் #ஈழமறவர் #சுத்துமாத்துக்கள் #தமிழர்

ஈழத்தமிழரே எங்களை கேள்வி கேட்க நீங்கள் யாரடா தடா சந்திரசேகர் நாம் தமிழர் கட்சி
முன்னாள் தேசியத்தலைவர் பாதுகாவலர் சுமன் சீமானை கேள்விகளால் துளைக்கிறார் , “தமிழ்நாட்டு அரசியலை பேசக்கூடாதா.!?” ஈழத்தமிழர் சுதன்

” நல்லவர்கள் நேர்மையானவர்களை கட்சியில் இருந்து நீங்கிவிட்டு ”

இப்படிப் பல ஆதரமற்ற குற்றச்சாட்டுக்கள் இதன் பின்னணியில் கல்யானசுந்தரமும், ராஜீவ்காந்தின் ஆதரவாளர்கள் Tharan Tamilanda என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை அவர்கள் நீக்கப்பட்டதும் சரியே என்பதும் இப்போது நிருபனமாகிவிட்டது ! இவரின் யூரியூப் தளம் கல்யானசுந்தரத்திற்கு துதி பாடுகின்றார்

சீமான் ஆதரவாளர்களை

நீ என்ன பைத்தியமா?  Tenttukottai விக்கி vs Eelathamilan ஜீவன் /சீமானால் மிரட்டப்படும் கல்யாணசுந்தரம் ஈழத்தமிழர்களிற்க்கு விமர்சிக்க உரிமை இல்லையா/ – Tharan

தலைவர் பிரபாகரனைத் தவிர்த்து ஈழத்தமிழர்கள் தனிநபர்களை பின் தொடருபவர்கள் இல்லை கொள்கைகளைத் தான் பின் தொடருபவர்கள் ஆனால் அவை எல்லாம் இப்பொது மாறிவிட்டது கருணா,டக்லஸ், சம்பந்தன், சுமந்திரன் என்று தமிழர்களை விலை பேசுபவர்களுக்கு கூட ஒரு கூட்டம் இப்பொது இருக்கின்றது. அதில் இவர்கள் எல்லாம் எம்மாத்திரம் , புலி வேசம் போட்டு தமிழ்த்தேசியவாதியாக நடித்து தேசியத்தை சிதைக்க முற்படுகின்றவர்கள் ஒருவிதம்

கல்யானசுந்தரமும், ராஜீவ்காந்தின் என்ற தனி நபர்களுக்காக நாம் தமிழர் கட்சியை உடைக்க முயலுகின்றார்கள் அல்லது அவர்களுக்கு துணைபோகின்றார்கள் இதுவும் ஒரு கருணாவின் செயல் தான் வேறு வித்தியாசம் கிடையாது.

தமிழகத்தில் பேச்சுவாக்கில் எப்போது ஒரு ஈழத்தமிழனை விமர்சிக்கும் போதெல்லாம் ஈழதமிழர்கள் என்று பொதுவாக விமர்சிக்கும் பாங்கு பல இடங்களில் வெளிப்பட்டிருக்கின்றது.

தடா சந்திரசேகர் விவகாரம் கூட  கட்சியோடு பேசி தீர்க்கப்பட்டிருக்கலாம் அந்தக் காணொளியை நாம் கேட்கவில்லை, கேட்கப்போவதுமில்லை உண்மையில் முன்னாள் போராளி , தேசியத்தலைவர் பாதுகாவலர் அவரால் வளர்க்கப்பட்ட , அதையே இப்போதும் பின்பற்றுபவரான சுமன் என்றால் இப்படி பொதுவெளியில் சீமானை கேள்வி கேட்டு மிஞ்சி இருக்கின்ற ஒரே ஒரு தமிழ்த்தேசியக் கட்சியை இழிவுபடுத்தி பிரிவினைக்கு வழி சமைத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். ஆமைக்கறி விவகாரம் வந்த போதெல்லாம்  இவர் ஏன் அது பற்றிய உண்மையை உரைக்கவில்லை

நாம் தமிழர் கட்சி வளர்ந்து வரும் ஒரு கட்சி சீமான் உட்பட 10 வருடங்களுக்கு முன்பிருந்த சீமான் அல்ல இப்பொது அவரின் பக்குவம் தெரிகின்றது.  இது  புலிகளுக்கும் பொருத்தம்  , தேசியத் தலைவரின் வளர்ச்சியும்  பக்குவமும் அப்படியே, விமர்சிப்பதை விடுத்து அதை திருத்துவதற்கு முற்பட்டிருக்கலாம்

புலிகள் கூட ஆரம்பத்தில் தவறுகள் தண்டிக்கப்பட வேண்டியவை என்று எழுதியதை திருத்தப்படவேண்டியவை என்று மாத்தினார்கள் அது வளர்ச்சியின் அனுபவத்தில் எடுக்கப்பட்டவை.

அது தவிர இவர்கள் யாரும் புலிகளினதோ, ஈழத்தமிழர்களினதோ  பிரதிநிதிகள் இல்லை தனிப்பட்ட கருத்துக்களே இவர்கள் தங்களது தனிப்பட்ட கருத்தாக பதிவு செய்யலாமே தவிர , ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களுக்காக  ஒப்பாரி வைக்க முடியாது, அப்படி குரல் கொடுக்கச் சொல்லி யாரும் சொல்லவில்லை.

நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியில் பங்கெடுக்காதவர்களுக்கு விமர்சிக்கும் உரிமையும் இல்லை தானே

வறுமையில் வாடும் முன்னாள் போராளிகளுக்கே ஈழத்தமிழர்கள் உதவி செய்வதில்லை அப்படியிருக்க நாம் தமிழர் கட்சிக்கு அள்ளிக் கொடுக்கின்றார்கள் என்பது போலவும் ஈழத்தமிழர்களின் நிதியில் தான் கட்சியே ஒடுகின்றது என்பது போலவும் ஓட்டுவது மிகைப்படுத்தப்பட்டது.

இதற்கு வக்காளத்து வாங்கிய புலம்பெயர் ஊடகம் வெளிச்சவீடு மட்டுமே மற்றவர்கள் யாரும் அலட்டிக்கவில்லை !

இது பற்றி Mr பழுவேட்டரையர் தெளிவான விளக்கக் காணொளி

திசெம்பர் 3, 2020 Posted by | ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர் | , , , | நாம் தமிழர் கட்சி தடா சந்திரசேகர் ஈழத்தமிழர் விவகாரம் பேச்சு திரிப்பும், திசை திருப்பல்களும் #நாம்தமிழர்கட்சி #NTK #ஈழம் #ஈழமறவர் #சுத்துமாத்துக்கள் #தமிழர் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ஜெகத் கஸ்பாரின் காலம் கடந்த தேசியத்தலைவர் ஞானம் ,சந்தேகங்கள் ? #இனப்படுகொலை #ஈழம் #ஈழமறவர் #சுத்துமாத்துக்கள் #தமிழர்

2002 இல் தேசியத் தலைவர் பிரபாகரனின் பேட்டியை 18 வருடங்களின் இப்போது வெளியிட்டிருக்கின்றார் அதில் உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அதில் பல சந்தேகங்களை எழுப்பியிருந்தது ஆனால் யாரும் கேட்கவில்லை ஒரு பெண் மட்டும் துணிந்து கேட்டிருக்கின்றார்.

அது கீழே தரப்பட்டிருக்கின்றது.



ஜெகத் கஸ்பாரின் காலம் கடந்த தேசியத் தலைவர் பற்றிய பார்வை பதிவில் ஏற்கனவே நாம் வெளியிட்டிருந்தோம் !

அதில் அவர் கேட்காத கேள்விகள் பல இருக்கின்றது.

இறுதி யுத்த சரணடைவில் கனிமொழியோடு இவரின் பங்கு என்ன ?  அதை முழுமையாக வெளியிட முடியுமா ?
இந்திய -திமுக அரசின் அழுத்தம் இருப்பதாக இருந்தால் எப்படி இந்தக் காணொளியை ஏன் வெளியிட்டார் ?

2018 மாவீரர் நாளில் இருந்து நீண்ட மெளனத்திற்கு பின்னர் மீண்டும் தேசியத் தலைவர் ஞானம் வந்திருக்கின்றது.

—-

திசெம்பர் 1, 2020 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர் | , , , , | ஜெகத் கஸ்பாரின் காலம் கடந்த தேசியத்தலைவர் ஞானம் ,சந்தேகங்கள் ? #இனப்படுகொலை #ஈழம் #ஈழமறவர் #சுத்துமாத்துக்கள் #தமிழர் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

விடுதலை புலிகளும், மாற்று இயக்கங்களும், எதிரிகளின் வாக்குமூலங்களும் ! #இனப்படுகொலை #ஈழம் #ஈழமறவர் #சுத்துமாத்துக்கள் #தமிழர்

விடுதலை புலிகள் மாற்று இயக்கங்களை போராட்ட பாதையில் இருந்து அப்புறப்படுத்தியது என்பது ஆயுதப்போராட்டத்தின் இலக்கு தடம் மாறாமல் செல்வதை உறுதிபடுத்துவதற்காக அவர்கள் கட்டாயமாக செய்ய வேண்டியிருந்த போரியல் நிர்ப்பந்தம்.

இது பற்றிய பதிவை இன்னொரு நாள் எழுதுகிறேன்.அதற்கு முன்னர் எதிரிகள் விடுதலை புலிகளை பற்றியும் , மாற்று இயக்கத்தவர்களை பற்றியும் என்ன கணிப்பீடு வைத்திருந்தார்கள் என்பதை காட்ட, அவர்கள் கடந்த காலங்களில் கூறியிருந்ததை கீழே தந்திருக்கிறேன். இதுவே ‘அந்த போரியல் நிர்ப்பந்தம் ஏன் உருவானது‘ என்ற சின்ன குளுவை உங்களுக்கு தரும்.

• Lieutenant General Depinder Singh, Overall Force Commander of the Indian Peace Keeping Force தனது ‘#IPKF in Sri Lanka’ எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்.
” This is a left-handed salute to the LTTE whose deviousness cannot over shadow their incredible motivation and magnificent lighting prowess, for which the Indian armed forces will always have a healthy respect”.

• Lieutenant General S.C. Sardesh Pande, IPKF Divisional Commander, Jaffna தனது ‘#Assignment Jaffna’ எனும் நூலில் குறிப்பிட்டவை கீழே.
” I have a high regard for the LTTE for its discipline, dedication, determination, motivation and technical expertise”.

தனது ‘Assignment Jaffna’ எனும் நூலில் லெப்டினன்ட் ஜெனரல் சர்தேஷ் பாண்டே விடுதலை புலிகளை பற்றியும் மாற்று இயக்கத்தினரை பற்றியும் அவரது பார்வையில் விவரித்திருப்பதை பற்றி போரியல் ஆய்வாளரான தராகி சிவராம் தனது கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்.

“As part of his overall counter insurgency project, Sardeshpande had to develop a close relationship with the people of Jaffna to collect information, isolate the Tiger; etc. But that task in turn leaves him with the impression that the LTTE is a popular sentiment (and hence cannot be totally destroyed as long as the sentiment was there) and, that the other groups, which , Delhi was promoting, could seriously jeopardize his counter insurgency project by alienating the Jaffnaites from the IPKF because they saw these groups as “unprincipled, indisciplined, opportunistic, cowardly, corrupt, crude, and selfish bands of thugs and extortionists” (p. 36).

மாற்று இயக்கங்களை பற்றி சர்தேஷ் பாண்டே தனது நூலில் கூறியதை அவரது வார்த்தைகளிலேயே கீழே தருகிறேன்.
“unprincipled, indisciplined, opportunistic, cowardly, corrupt, crude, and selfish bands of thugs and extortionists”
(p. 36 Assignment Jaffna).

• J.N.Dixit , India’s Foreign Secretary தனது ‘#Assignment Colombo’ எனும் நூலில் பின்வருமாறு விவரித்திருப்பார்.

” The LTTE’s emergence as the most dominant and effective politico-military force representing Tamil interests was due to the following factors:
First, the character and personality of its leader V Pirabaharan who is disciplined, austere and passionately committed to the cause of Sri Lankan Tamils’ liberation. Whatever he may be criticised for, it cannot be denied that the man has an inner fire and dedication and he is endowed with natural military abilities, both strategic and tactical. He has also proved that he is a keen observer of the nature of competitive and critical politics. He has proved his abilities in judging political events and his adroitness in responding to them. “
(J.N.#Dixit had once protested to the IPKF High Command that some of its officers were saluting Prabhakaran)

• Major General Harkirat Singh, Indian Peace Keeping Force’s first commander in Jaffna ஒரு கேள்விக்கு அளித்த பதில்
“ The LTTE is not a simple soul to crack. A hard nut. Lead by Prabhakaran, a highly- motivated man. He has only one aim, Eelam.”

• விடுதலை புலிகளுக்கு எதிராக தொடர்ந்து பொய் பரப்புரைகளை செய்து வந்த பத்திரிகையாளர் D.B.S ஜெயராஜ் கூட தனது கட்டுரையில் , 80 களின் மத்தியில், J.N.Dixit உம் இலங்கையின் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியும் தலைவர் பிரபாகரனை பற்றியும் , மாற்று இயக்கத்தினரை பற்றியும் தன்னிடம் கூறியதை பின்வருமாறு பகிர்ந்து கொள்கிறார்.

“ One person who opined that Prabhakaran had inculcated the philosophy of the ‘Gita’ was former Indian High Commissioner to Sri Lanka Jyotindra Nath Dixit. This was during the time when LTTE was fighting the Indian Army. I could see that Dixit meant it as a “compliment” when he said this. “

“ On an earlier occasion, Dixit told me that of all the top Tamil militant leaders only Prabhakaran had “fire” in him. This was after Dixit met for the first time all leaders of the five big groups. Umamaheswaran – PLOTE, Sri Sabaratnam – TELO, Padmanabha – EPRLF, Balakumar – EROS and of course Prabhakaran– LTTE.”

“ #I also recall a conversation in early 1985 with former National Security Minister Lalith Athulathmudali. Long before the Indo-Lanka Accord of 1987, Athulathmudali predicted that all the Tamil groups would give up the struggle and fall in line. But not Prabhakaran, said Lalith then. “He will never compromise and will die fighting to the last,” he said. How true! “

க.ஜெயகாந்த்

நவம்பர் 21, 2020 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர் | , , , , | விடுதலை புலிகளும், மாற்று இயக்கங்களும், எதிரிகளின் வாக்குமூலங்களும் ! #இனப்படுகொலை #ஈழம் #ஈழமறவர் #சுத்துமாத்துக்கள் #தமிழர் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

இராவணனின் வாரிசுகளுக்கும், இராமனின் வாரிசுகளுக்கும் நடக்கும் இணையதள யுத்தம் !.#LandOfRavanan #TamilsPrideRaavanan #TamilsPrideRavanaa #இராவணன் #ஈழம் #தமிழர் #இலங்காபுரி

தமிழன் இராவணன் ஆண்ட புரி
ஹிந்திய இராமன் ஆக்கிரமித்த புரி
தமிழிச்சி குவேனி பூர்வீகமாய் குடியேறிய புரி
கள்வன் விஜயன் குடி அமர்ந்த புரி..!

மொழிப் பிசையல் சிங்களம் உதித்த புரி
செந்தமிழ் உதிர்ந்த புரி
சிங்கம் – மனிதக் கலப்பு கதை தலையெடுத்த புரி
சோழப் பரம்பரை புலி தலை சரிந்த புரி..!!

மேற்கு ஐரோப்பியர் விரும்பிய புரி
வடக்கு ஹிந்தியர் அரவணைத்த புரி
பெருஞ்சுவர் தாண்டி சீனர் கொண்டாடும் புரி
கிரம்ளின் கண்ட ரஷ்சியர் அதிசயத்த புரி..!!!

கடலலை கொட்டும் மணற்திட்டால் இணைந்த புரி
பல கடற்கோள் கண்ட புரி
மகிந்த எனும் மந்தியால் சிதையும் புரி
ஆண்ட தமிழர்களுக்கு புதைகுழியாகி நிற்கும் புரி..!!!!

கழனியும் காடும் கண்ட புரி
மலையும் மடுவும் கொண்ட புரி
இனக் குரோதம் வளர்த்த புரி
இரத்தக் காட்டேரிகள் வாழும் புரி..
இன்று அந்த இலங்கா புரி…!!!!!

ஓகஸ்ட் 5, 2020 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர் | , , , , | இராவணனின் வாரிசுகளுக்கும், இராமனின் வாரிசுகளுக்கும் நடக்கும் இணையதள யுத்தம் !.#LandOfRavanan #TamilsPrideRaavanan #TamilsPrideRavanaa #இராவணன் #ஈழம் #தமிழர் #இலங்காபுரி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது