அகவை காணும் தமிழீழக்கவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயா ! #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #இனப்படுகொலை #tamilgenocide #Tamil #Eelam #ltte

இன்று அகவை காணும் தமிழீழக்கவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயாவிற்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்
: டிசம்பர் 3, 1948 – டிசம்பர் 3-2020
தமிழ் வாசகர்களுக்கு புதுவை அண்ணருக்குமான அறிமுகம் தேவையில்லை. வீச்சும், மூச்சுமான அவரது படைப்புக்களுக்கு எமது விடுதலைப்போரில் தனியானதோர் இடமுண்டு.
சொல்லப்போனால் விடுதலைப்போரின் வரலாற்றுடன் சேர்ந்து அவரது கவிதைகளும் பயணித்துள்ளன எனலாம்.
விடுதலைப் போராடடம் போரியலில் முனைப்புப்பெற்ற 1987க்கு முந்திய காலத்தில் அவரது கவிதைகள் ஒரு தேசம் என்ற கருத்தின் தோல்வியை உரைத்தன. எம் தேசியத்து எழுச்சியின் நம்பிக்கையைக் கூறின.
இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு காலத்தில் அவரது பாடல்கள் காடுகளின் கரந்துறை விடுதலை வாழ்வியலுடன் பயணித்தன.
யாழ்ப்பாணத்தில் பதுங்குகுழி வாழ்க்கைக்கும் அவரது கவிதைகள் பழக்கமாயின. விமானத்தின் குண்டு வீச்சுக்களும், பீரங்கிகளின் எறிகணை வீச்சுக்களும் அவரது கவிதைப் பொருளாயின. அவற்றின் படுகொலை வீச்சுக்கண்டு வெம்பி, வெடித்து கோபம் கொண்டு சாபமிட்டன.
யாழ்ப்பாணத்தைவிட்டு விடுதலைப்போரியல் தலைமை இடம்பெயர்ந்த போது புதுவை அண்ணரின் கவிதைகளும் அழுதபடியே சேர்ந்துவந்தன. ஆனால் நம்பிக்கை தளராத வரிகளுடன் விடுதலைக்கனவு குலையாத பாடல்களாய்.
பொருட்தடை, மருந்துத்தடை, போக்குவரத்துத்தடையென எல்லாத் தடையினுள்ளும் கிடந்தழுந்திய எம்மக்களுடன் சேர்ந்திருந்தன புதுவை அண்ணரின் கவிதைகள். வன்னியினுள்ளே நடந்தேறிய விடுதலை வேள்வியில் சேர்ந்தொலித்தன அவரது பாடல்களும்.

இராணுவக் கொலை வலயத்தினுள் பயணிக்கும் இளம் வீரருடன் சேர்ந்து புதுவை அண்ணரின் பாடல்களும் பயணித்தன. எம்மக்களுக்கு ஆறுதல் சொல்லின…… போரிட அழைத்தன….. போரிட்டன….. வெற்றிச் செய்திகளும் சொல்லின…. விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் பற்றி மட்டுமல்லாது, தமிழீழ கட்டமைப்பு, எமது தேசத்து நிலபுலங்கள், மக்களது கலாச்சார வாழ்வியல்கள், தமிழீழப் பெண்களது புரட்சிகர போரியல், சர்வதேச அரசியலுடனான எம்மின வாழ்வு என புதுவை அண்ணரது படைப்புக்கள் பன்முகப்பட்ட வாசிப்பனுபவத்தை தருபவை.
புதுவை அண்ணரது கவிதைகள், பாடல்கள் பற்றி எம்முள்ளே பேசப்படும் வேளைகளில் “காலத்தின் குரல்கள்” என்று கூறுவேன். எமது விடுதலைப்போர் கடந்து வந்த பாதையின் வீரமும், சோகமும், கோபமும், மகிழ்ச்சியும், பெருமிதமுமென மாறி மாறிய உணர்வுகளைக் கொண்ட காலங்களைக் கடந்துள்ளோம். அந்தக்கால உணர்வுகளின் குரலாக புதுவை அண்ணரின் படைப்புக்கள் பதிவு பெற்றுள்ளன என்பது எனது கருத்து.
புதுவை அண்ணருக்கு வாய்த்துள்ள அற்புதமான கவி ஆற்றலும், அனாசயமான சொல் வளமும் அவரை பெரும் கவிஞர்களது வரிசையில் சேர்த்துள்ளது. இவற்றுடன் அவர் தன்னை இணைத்துக் கொண்ட இல்டசிய வாழ்வும் அவரது படைப்புக்களில் சேர்ந்துள்ளது. இவையே அவரை “காலத்தின் குரலாகப் பேசும்” கவிஞராக ஆக்கியது எனலாம்.
இங்கு நூலுருப் பெறும் உலைக்களம் அவ்வகையில் எழுந்த உணர்வு வரிகளின் தொகுப்பு. அந்தந்த காலத்தய விடுதலைப் போரின் களநிலைகளைத் தழுவிய உணர்வின் குரல்கள்.

இந்த உலைக்களத்தின் சிறப்பு என நான் பார்ப்பது இது வெறும் புதுவை இரத்தினதுரை என்ற தனி ஒருவனின் உணர்வின் குரலாக மட்டும் அமைந்து விடாததுதான். மாறாக உலைக்களத்தை ஆழ்ந்து, விரும்பி வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பொருந்திப் போகும் உணர்வுகளின் வெளிப்பாடுகளை அவற்றில் காணலாம். போராளி நிலையிலோ, பொதுமகனின் நிலையிலோ அல்லது படித்தவரின் நிலையிலோ, பாமரரின் நிலையிலோ எந்த நிலையில் நின்று பார்க்கும் போதும் அவரவரின் உணர்வின் வரிகளாக உலைக்களம் பொருந்தி வரும்.
ஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதமென வர்ணிக்கும் விடுதலைப் போரியல் நடவடிக்கைகள் உலைக்களத்தில் பல இடங்களில் பேசப்பட்டுள்ளன. அந்நடவடிக்கைகளின் பின்னே உள்ள அர்ப்பணிப்புக்களையும், எம்மினத்தின் உணர்வுகளையும், அரசியல் அர்த்தங்களுடன் உலைக்களத்தில் பதிவாக்கியுள்ளார்.
எமது தலைவர் அவர்கள் உலைக்களத்தை ஒவ்வொரு வாரியாக ஏற்றி, இறக்கி, தணித்து வாசிக்கும் வேளையில் அருகில் இருந்து கேட்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். சிலவேளைகளில் எனக்கென தனியாகக்கூட தலைவர் அவர்கள் வாசித்து காட்டியுள்ளார். தலைவர் அவர்கள் சிறந்த வாசகர் என்பதற்கு மேலாக உலைக்களத்தின் கருத்தோட்டத்தில் மீதான ஈர்ப்பே அதனை அவரை அப்படி வாசிக்க வைத்திருக்குமென நம்புகிறேன்.
“போர்க்கால இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்த பெருமைக்குரியவர்” எனவும், “எம் விடுதலைப் போராட்ட வாழ்வையும், வரலாற்றையும் தமிழீழ இலக்கிய இயக்கத்திற்குள் முதன்மைப்படுத்தி தமிழ்த் தேசிய பிரக்ஞையை விழிப்புறச்செய்ய உழைத்தவர்.” எனவும் எம் தேசியத் தலைவர் அவர்களால் விதந்து பாராட்டுப்பெற்ற புதுவை அண்ணரைப் பற்றி நான் சொல்ல என்னதான் உள்ளது?
இலக்கிய வித்தகரும், பெரும் கவிஞருமான அவரது நூலுக்கு கருத்து எழுதுவதற்கு வாசகன் என்ற தகுதிநிலை போதுமெனக் கூறிய புதுவை அண்ணரது வார்த்தைக்கு கட்டுண்டு எழுதியுள்ளேன்.

எமது விடுதலைப்போர் எதிர்கால மாணவர்களுக்கான ஆய்வுப் பொருளாகும் காலம் வரும். அவ்வேளையில் விடுதலைப் போராட்டம் கடந்துவந்த வரலாற்றுப் பாதையின் போக்குகளையும், இந்த போருடன் வாழ்ந்த மானிடரின் மன உணர்வுகளையும், சொல்லும் பெட்டகமாக உலைக்களம் திகழும் என நம்புகிறேன்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அன்புடன்
ச.பொட்டு அம்மான்
பொறுப்பாளர்
புலனாய்வுத் துறை,
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்
தலைவர் பிரபாகரனின் குழந்தைகள் கூறும் கதைகள் ! #MaveerarNaal #MaveerarNaal2020 #Prabhakaran #Sencholai #காணொளி #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Tamil #Eelam #ltte
தமிழ்மக்களுக்கான நீதி?
தமிழீழ விளையாட்டுத்துறையின் பெரும் வளர்ச்சிக்கு ஒளியூட்டிய பத்மநாதன் காலமானார்… #இனப்படுகொலை #ஈழம் #ஈழமறவர் #தமிழர்
வட தமிழீழம் , யாழ்,பல்கலைக்கழக முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் பத்மநாதன் அவர்கள் காலமானார் உயிரிழந்த பத்மநாதன் அவர்கள் தமிழீழ விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காய் பெரும்பங்கு செய்தவர் .இந்தநிலையில் அவரின் மறைவுக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றன.இவர் மாவீரர் கப்டன் கெனடி/பாவாணனின் தந்தையும் ஆவார்
ஜெகத் கஸ்பாரின் காலம் கடந்த தேசியத்தலைவர் ஞானம் ,சந்தேகங்கள் ? #இனப்படுகொலை #ஈழம் #ஈழமறவர் #சுத்துமாத்துக்கள் #தமிழர்
2002 இல் தேசியத் தலைவர் பிரபாகரனின் பேட்டியை 18 வருடங்களின் இப்போது வெளியிட்டிருக்கின்றார் அதில் உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அதில் பல சந்தேகங்களை எழுப்பியிருந்தது ஆனால் யாரும் கேட்கவில்லை ஒரு பெண் மட்டும் துணிந்து கேட்டிருக்கின்றார்.
அது கீழே தரப்பட்டிருக்கின்றது.
ஜெகத் கஸ்பாரின் காலம் கடந்த தேசியத் தலைவர் பற்றிய பார்வை பதிவில் ஏற்கனவே நாம் வெளியிட்டிருந்தோம் !
அதில் அவர் கேட்காத கேள்விகள் பல இருக்கின்றது.
இறுதி யுத்த சரணடைவில் கனிமொழியோடு இவரின் பங்கு என்ன ? அதை முழுமையாக வெளியிட முடியுமா ?
இந்திய -திமுக அரசின் அழுத்தம் இருப்பதாக இருந்தால் எப்படி இந்தக் காணொளியை ஏன் வெளியிட்டார் ?
2018 மாவீரர் நாளில் இருந்து நீண்ட மெளனத்திற்கு பின்னர் மீண்டும் தேசியத் தலைவர் ஞானம் வந்திருக்கின்றது.
—-
- கருணாநிதியும் கனிமொழியும் புலிகளுக்குத் துரோகம்
- புலிகளை அழிக்கும் நிலைப்பாட்டில் இருந்த இந்தியா, பொதுமக்களின் இழப்புகளை கண்டுகொள்ளவில்லை – கோடன் வைஸ்
- ‘வெள்ளைக் கொடி விவகாரம்’: ஐநா வல்லுநர் குழுவின் அறிக்கையிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது
- மேனனிடம் நிலைகுலைந்த ராஜபக்ச
- இறுதிக்கட்ட போரின் மேற்குலகின் பங்கு: விக்கி லீக்ஸ் அதிரடித்தகவல் !
- தலைவர் பிராபாகரன் மகள் -கரும்புலியாகி வெடித்து வீரச்சாவு ..!
இலண்டனில் வீரச்சாவைய்திய முன்னாள் பெண் போராளி சுபாசினி #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #இனப்படுகொலை #ltte #Maaveerar #Tamil #Eelam
இலண்டன் லூசியம் பகுதியில் வாழ்ந்துவந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி படையணி போராளியான தமிழன்பு என்று அழைக்கப்பட்ட பா சுபாசினி அவர்கள் உடல்நலக்குறைவால் சாவடைந்துள்ளார்
தேச விடுதலைப்போரில் கிளாலிப்பகுதியில் ஏற்பட்ட மோதலில் தனது காலை இழந்த இவர் பின்னர் கணனிப்பிரிவுடன் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் போரின் கொடூர பக்க விளைவுகளால் மிகவும் கடுமையான வலிகளை சுமந்தபடி லண்டனில் வாழ்ந்து வந்த ஒரு பிள்ளையின் தாயான இவர் நேற்று (22/11/2020) இறைவனடி சேர்ந்தார்.
இவருக்கு எமது வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்
–
எல்லைப்படை மாவீரர்கள்
எல்லைத் திசையெங்கும் நிலையாகினர்- எங்கள்
உரிமைக்கு பலம் தேடி வித்தாகினீர்
மகிழ்வோடு ஈழம் காணப் படையது சேர்ந்தீர்- வேங்கை
வீரரென விடுதலைக்கு உயிர் கொடுத்தீர்
-அன்பரசு
ஒரு விடுதலைப் போராட்டம் வெற்றி பெற வேண்டுமானால் அது மக்கள் இயக்கமாக இடம் பெற வேண்டும். போராடுவோர் வேறாகவும் மக்கள் வேறாகவும் பிரிந்து நிற்கும் போது வெற்றி வாய்ப்புக்கள் அரிதாகக் கிடைக்கின்றன. உலக விடுதலை வரலாற்றில் மக்கள் பங்களிப்பின் சிறப்பை எம்மால் உணர முடியும். மக்களும் போராடுவோரும் ஒரேயணியாக நிற்கும் போது எந்த சக்தியாலும் அவர்களை வெல்ல முடியாது. மக்களின் அரசியல் வளர்ச்சியும், போராட்டம் பற்றிய விழிப்பும் மிகப் பெரிய பின்னணி சக்தியாக இடம்பெறுகின்றன. மக்களின் நேரடிப் பங்களிப்பு அதன் அடுத்த கட்டமாக அமைகிறது. அந்த நிலை வரும் போது மக்களும் போராளிகளும் ஒன்றாகி விடுகின்றார்கள்.
வியட்னாம் போரின் போது விவசாயிகள் ஒரு தோளில் கலப்பையையும் அடுத்த தோளில் துவக்கும் சுமந்த படி வயற்காட்டிற்குச் சென்றுள்ளார்கள். மக்கள் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் அவ் வேளையில் அவர்கள் போராட்டத்திலும் பங்களிப்புச் செய்தார்கள். எமது விடுதலைப் போரின் பரிணாம வளர்ச்சியாக எல்லைப் படையின் தோற்றத்தைக் கணிப்பிடலாம். எல்லைப் படையினருக்கு குடும்ப வாழ்வும் குடும்பப் பொறுப்பும் உண்டு. அவர்கள் பொது மக்களின் அங்கமாவர். ஏன்றாலும் அவர்களால் பார்வையாளர்களாகத் தூர நிற்க முடியவில்லை. தேவை உணர்ந்து எல்லைப் படையில் இணைந்தார்கள். தீரமுடன் போராடினார்கள். மாவீரானர்கள்
தலைவன் கண்கலங்க ஒரு போர்வீரன் சாவானாகில் அந்தச் சாவைத் தேடிப் பெற வேண்டும் என்று தமிழ் இலக்கியம் கூறுகின்றது. எல்லைப் படைவீரர்கள் இத் தகுதியைப் பெற்று விட்டார்கள். மனைவி, பிள்ளைகள், வாழ்க்கைப் பணி என்பவற்றை ஒரு புறம் வைத்து விட்டு அவர்கள் களமாட வந்தார்கள். தமது வரலாற்றுக் கடமையை உணர்ந்து அவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். எமது எல்லைப்படை மாவீரர்களில் பெண்களும் இருக்கிறார்கள். தமிழ் இருக்கும் வரை அவர்கள் புகழ் பாட்டாகவும் நூலாகவும் வெளிவரும்.
1778 இல் நடந்த அமெரிக்கச் சுதந்திரப் போரில் மொல்லி மெக்கோலி என்ற குடும்பப் பெண் பங்கு பற்றினாள். அவள் போராளியல்ல. பீரங்கிப் படையில் போராடிய கணவனுக்கு உதவ வந்தவள். ஒரு கட்டத்தில் அவளே பீரங்கியை இயக்கும் கட்டம் தோன்றியது. அமெரிக்கச் சுதந்திரப் போராட்டத்தின் கதாநாயகி என்ற சிறப்பு இப் பெண்ணுக்கு உண்டு.
ஒரு இனம் ஒரு தேசமாக எழுச்சி அடைவதற்கும் சுயநிர்ணயக் கோரிக்கையை முன்வைப்பதற்கும் மக்கள் சக்தி அடித்தளமாக அமைகின்றது. ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட்டம் மக்கள் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் போது சுதந்திரம் நிச்சயம் கிடத்தே தீரும். எல்லைப் படை மாவீரர்களின் தியாகம் ஒரு போதும் வீண் போக மாட்டாது. அவர்கள் பங்களிப்பு அளப் பெரியது. அவர்களுடைய வரலாற்றுப் பதிவை இதன் மூலம் வெளிப்படுத்துகின்றோம்.
முதல் எல்லைப்படை மாவீரர்
முதல் பெண் எல்லைப்படை மாவீரர்
You must be logged in to post a comment.