அழியாச்சுடர்கள்

கடற்புலிகளின் துணைத் தளபதி : லெப் கேணல் சாள்ஸ் வரலாறு காணொளி


http://www.eelamview.com/2013/06/11/lt-col-charls/

ஜனவரி 18, 2018 Posted by | ஆனி மாவீரர்கள், ஈழமறவர், ஈழம், காணொளிகள் | , , , | கடற்புலிகளின் துணைத் தளபதி : லெப் கேணல் சாள்ஸ் வரலாறு காணொளி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

2000 ம் ஆண்டு ஆனி மாதம் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம்

ltte veeravanakam

ஓகஸ்ட் 17, 2015 Posted by | ஆனி மாவீரர்கள், ஈழமறவர், ஈழம், வீரவணக்கம், வீரவரலாறு | , , , , | 2000 ம் ஆண்டு ஆனி மாதம் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

எம்.ரி சொய்சின் கப்பலில் வீரச்சாவைத் தழுவிய போராளிகள்…

ஆழக்கடலில் கரைந்த மாவீரங்கள்

சமாதான காலத்தில் சிறீலங்கா கடற்படையினரின் யுத்த நிறுத்த மீறலால் சர்வதேசக் கடற்பரப்பில் 14.06.2003ம் ஆண்டு அன்று விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் தாக்கி அழிக்கப்பட்டபோது ஆழக்கடலில் கரைந்த உறவுகள்….

M.T-Soysin ltte ship

எம்.ரி சொய்சின் கப்பலில் வீரச்சாவைத் தழுவிய போராளிகள்…

international sea lttes

கப்பல் கப்டன் நிர்மலன்
சீவ் ஒவிசர் கதிர்
2ம் ஒவிசர் வீரமணி
3ம் ஒவிசர் கன்னியநாடன்
றேடியோ ஒவிசர் கஜேந்திரன்
சீவ் எஞ்சினியர் அன்புக்குமரன்
2ம் எஞ்சினியர் கடற்கரும்புலி வள்ளுவன்
3ம் எஞ்சினியர் கடற்கரும்புலி நிமால்
எலக்ரிக் எஞ்சினியர் வீரநாதன்
போஸன் கடற்கரும்புலி மணியரசன்
ஏபிள் சீமன் செழியன்
நாட்டுப்பற்றாளர் மோகன்

ஜூன் 15, 2015 Posted by | ஆனி மாவீரர்கள், ஈழமறவர், ஈழம், வீரவணக்கம், வீரவரலாறு | , , , , | எம்.ரி சொய்சின் கப்பலில் வீரச்சாவைத் தழுவிய போராளிகள்… அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

மாமனிதர் பேராசிரியர் துரைராசா வீரவணக்க நாள்

இறந்தும் இறவா மாமனிதர் – பேராசிரியர் அ. துரைராஜா

Mamanithar Alagiah Thurairajah

இறந்தும் இறவா மாமனிதர் பேராசிரியர் அ. துரைராஜா ஆம் நீங்கள் வாசிப்பது நிஜம்தான் இறந்தும் இறவா மாமனிதர் என்ற அடைமொழி கற்பனையாக இருந்தாலும் அவ் அடைமொழி பேராசிரியர் அ.துரைராஜாவின் பெயரின் முன்னால் இருக்கும்போது அது உயிரோட்டமாகவே இருக்கின்றது. அவ்வாறான மாமனிதரை இன்றைய அவரது நினைவு தினத்தில் நினைவு கூறுவது சாலப்பொருத்தமாக இருக்கும்.

பேராசிரியர் துரைராஜா 1934 ஆம் ஆண்டு பெரும் தலைவர்களை உலகுக்கு வழங்கி பெருமைபட்டுக் கொள்ளும் கார்த்திகை மாதம் 10 ஆம் திகதி வேலுப்பிள்ளை அழகையாவுக்கும்,செல்லமாவுக்கும் மகனாக யாழ்ப்பாணத்தின் மூளை என்றழைக்கபடும் வடமராட்சி பிரதேசத்தில் உடுப்பிட்டியில் அவதரித்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியிலும், பின் தனது உயர்கல்வியை பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியிலும் பயின்றிருந்தார்.

பேராசிரியர் அவர்கள் உயர்தரத்தில் கணித பிரிவில் முதல் மாணவனாக 1953 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு தெரிவானார். அன்றைய காலகட்டத்தில் கொழும்பில் இயங்கிய இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பொறியியற்பீடத்தில் குடிசார் பொறியற் கற்கைநெறியை 1957 ஆம் ஆண்டு நிறைவு செய்து விஞ்ஞானப்பட்டம் பெற்றார். அதன் பின்னர் மேற்படி பல்கலைக்கழகத்திலேயே 1958 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை குடிசார் பொறியியல் விரிவுரையாளராக கடமையாற்றினார்.

பின்னர் 4 மாதங்கள் பொதுச்சேவை திணக்களத்தின் இளம் உதவி பொறியலாளராக பணிபுரிந்தார். தொடர்ந்து ‘கேம்ப்ரிச்’ பல்கலைக்கழகத்துக்கு ‘ஸ்கொலர்ஷிப்பில்’ சென்ற பேராசிரியர் Kenneth H. Roscoe அவர்களின் கீழ் ஆராய்ச்சி மாணவனாக அக்டோபர் 1958 இலிருந்து 1961 டிசம்பர் வரை மணல்துறை சார்ந்த ஆராய்ச்சிகளுக்காக பணியாற்றியிருந்தார்.

இவ் ஆராய்ச்சிகளின் பயனாக ‘துரை விதி’ எனும் மணல்துறை சார்ந்த விதியொன்றை நிறுவினார். இன்றும் குடிசார் பொறியியலில் கற்பிக்கப்படும் Cam- clay locus ஆனது துரை விதியிலிருந்தே பெறப்படுகின்றது. இறுதியாக 1962ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது பி‌எச்‌டி பட்டத்தை நிறைவு செய்திருந்தார்.

பின் சிறிது காலம் பிரித்தானிய கம்பெனியான ‘Terreasearch’ என்ற நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு இலங்கைக்கு திரும்பி இலங்கை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இணைந்து கொண்டார். அதன் பின் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் 1971 ஆம் ஆண்டு பேராசிரியராக இணைந்து கொண்டார்.Mamanithar Prof.Alagiah Thurairajah

பேராதனை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இணைந்துகொள்ள முன்னர் ‘வாட்டர்லூ’ பல்கலைக்கழகத்தின் வருகைதரும் விரிவுரையாளரகாவும் இருந்துள்ளார்.பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியற்பீடத்தின் பீடாதிபதியாகவும் மே 1975 தொடக்கம் செப்டெம்பர் 1977 வரையும், பெப்ரவரி 1982 தொடக்கம் பெப்ரவரி 1985 வரையான இருவேறுபட்ட காலங்களில் பணியாற்றியுள்ளார்.

மேலும் பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைகழகத்தின் வருகை தரு விரிவுரையாளராகவும் அக்டோபர் 1977 முதல் டிசம்பர் 1978 வரை பணியாற்றியுள்ளார். அதன் பின் இலங்கை திறந்த பல்கலைக்கழக பொறியியற்பீடத்தின் பீடாதிபதியாக ஏப்ரல் 1987 முதல் ஆகஸ்ட் 1988 வரை பணியாற்றினார்.

அதன் பின் 1988 செப்டெம்பர் மாதம் போர்ச்சூழல் காரணமாக எவரும் வரத்தயங்கிய தருணம் துணிச்சலுடன் யாழ் பலகலைக்கழகத்தின் துணைவேந்தராக, ‘பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு’ யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியற்பீடம் ஆரம்பிக்கபடும் என்ற கொடுத்திருந்த வாக்குறுதியுடன் பதவியேற்றுக்கொண்டார்.

ஆனாலும் பேராசிரியரின் கனவு 36 வருடங்களின் பின்பே இவ்வருடம் மாசி மாதம் கிளிநொச்சி அறிவியல் நகரில் யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீட அங்குரார்ப்பண நிகழ்வுடன் பூர்த்தியாகியுள்ளது. பேராசிரியர் அவர்கள் 1994 ஆம் ஆண்டு கொடிய நோயின் பிடியில் அகப்படும் வரைக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக அளப்பெரும் சேவை புரிந்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலம் தனது .வதிவிடமான வடமராட்சியின் வதிரி பிரதேசத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்கு வல்லை வெளியினூடாக போர் மேகங்கள் சூழ்ந்திருந்த காலங்களில் 30 ற்கும் மேற்பட்ட கிலோமீட்டர்கள் தூரத்தை மீதி வண்டியினூடே பயணித்திருந்தார் .

பேராசிரியர் அவர்கள் பேராதனை பல்கலைக்கழத்தில் இருந்த காலத்திலேயே தற்போது காணப்படும் அக்பர் பாலம் நிர்மாணிக்கபட்டது. இப்பாலம் சிங்கள பேராசிரியர் ஒருவர் விட்ட சவாலை ஏற்று மகாவலிகங்கைக்கு குறுக்கே ஒரேயொரு தூணை எழுப்பி பேராசிரியரின் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டது. மேலும் பேராசிரியர் நினைவாக பேராசிரியர் துரைராஜா கிண்ணம் எனும் சுற்றுபோட்டி வருடாவருடம் பேராதனை, கொழும்பு, மொரட்டுவ பல்கலைகழகங்களுக்கிடையில் இன்றும் இடம்பெற்றுவருகிறது.

சிறந்த ஒழுக்க சீலராகவும், பழகுவதற்கு இனிமையானவரான பேராசிரியர் எளிமையான வாழ்க்கை வாழ்ந்திருந்தார். மேலும் பேராசிரியர் துரைராஜாவின் மாணவன் என்றால் அதற்கு ஒரு தனிமதிப்பு இன்றும் உள்ளது. தமிழர்கள் சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காக பேரளவு உதவிகளை இக்கட்டான காலகட்டத்தில் செய்ததால்தான் பேராசிரியர் இன்று மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

90 களில் யாழ்ப்பாணம் பொருளாதார சிக்கலில் தவித்திருந்த பொழுது, எல்லாத்தரத்திலான எல்லா வகையிலான கல்வியாளர்களையும் தொழில் நுட்பவியலாளர்களையும் தொழிலாளர்களையும் நிர்வாகிகளையும் சிவில் சமூகவியலாளர்களையும் ஒன்றிணைத்து பொருளாதார அபிவிருத்திக்கான எதிர்கால திட்டமிடலை மேற்கொண்டிருந்தார்.

தமிழர் நல்ல கல்வியைப் பெறவேண்டும் என்பதற்காக பல்கலைக்கழக கல்வி முறையில் தொழிலாளர் கல்வி வெளியார் கற்கைபோன்றவற்றை அறிமுகப்படுத்தி யாழ்ப்பாண சமூகத்தை பல்கலைக் கழகம் வரைகொண்டு வந்தவர். வடக்குக் கிழக்கு தமிழர்களில் பெரும்பான்மையானோர் விவசாயிகளாக இருப்பதால் விவசாய பீடத்தை கிளிநொச்சியில் நிறுவினார்.

பேராசிரியர் மணவாழ்க்கையில் ராஜேஸ்வரியை கரம்பிடித்து இல்வாழ்க்கையின் பேறாக தம்பதியினருக்கு 3 மகள்களும் 2 மகனும் உள்ளனர். நல்ல மனிதர்களை இவ்வுலகம் நீண்ட நாட்கள் தன்னுடன் வைத்திருப்பதில்லை போலும் பேராசிரியரை இன்றையநாளில் இருபது வருடங்களுக்கு முன் தன்னுடன் 1994ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி அழைத்துகொண்டது.

பேராசிரியர் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம்,. இலங்கை சிவில் பொறியிலாளர்கள் அமைப்பு, தேசிய விஞ்ஞான அக்கடமி என்பவற்றின் தலைவராகவும் இருந்து அளப்பெரும் சேவைகள் ஆற்றியுள்ளார்.

1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற அனர்த்தங்களில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி முற்றிலுமாக சிதைவடைந்திருந்தபோது, வெளிநாடுகள் சென்று கல்லூரியின் நிலையினை எடுத்துரைத்து அங்குள்ள பழையமாணவர்களை ஒன்று திரட்டி நிதி சேகரித்து இன்றைய உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி நிமிர்ந்து நிற்பதற்கு பேராசிரியரே துணை புரிந்தார்.

இன்றும் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் நூலகம் அமைந்த கட்டிடதொகுதி பேராசிரியரின் பெயராலேயே பேராசிரியர் துரைராஜா கட்டிடதொகுதி என்றே அழைக்கபடுகிறது.

முருகவேல் சண்முகன்

 

 

ஜூன் 11, 2015 Posted by | ஆனி மாவீரர்கள், ஈழமறவர், ஈழம், வீரவணக்கம், வீரவரலாறு | , , , , | மாமனிதர் பேராசிரியர் துரைராசா வீரவணக்க நாள் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

லெப்.கேணல் அம்மா (அன்பு)

Lt.Col.Amma

முல்லை மாவட்டம் சுதந்திரபுரம் – வள்ளிபுனம் கிராமங்களில் 10.06.1998 அன்று சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட வான் குண்டு வீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் வழங்கற் பகுதிப் பொறுப்பாளர் லெப். கேணல் அம்மா / அன்பு உட்பட ஏனைய போராளிகளின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் அன்பு / அம்மா அவர்களின் வீரப்பிறப்பும் வீரவரலாறும்…..

வீரம் விளையும் தமிழீழ மண்ணில் திருநெல்வேலி நகரிலே வைத்திலிங்கம் நாகம்மா தம்பதிகளின் ஆறாவது புதல்வனாக 1965.09.03ம் நாளன்று அம்மா என்றழைக்கப்படும் வைத்திலிங்கம் திருக்கேதீஸ்வரன் வீரப்பிறப்பெடுத்தான். இவனை வீட்டாரும் உற்றாரும் “ரவி” என்று செல்லமாக அழைப்பார்கள், தனது ஆரம்ப கல்வியை திருநெல்வேலியில் அமைந்திருந்த பரமேஸ்வராக் கல்லூரியில் உயர் கல்வியை யாழ். மத்திய கல்லூரியிலும் கற்றான். இவன் சிறந்த பண்பாளனாகவும் பணியாளனாகவும் விளங்கினான். கல்லூரியின் சாரணர் இயக்கமும் இவனை நெறிப்படுத்தியது. அத்துடன் இவன் ஒரு பல் தொழினுட்ப வல்லுனனாகவும் விளங்கினான்.

1986ம் ஆண்டளவில் ஈழ விழுதளைப் பணிகளில் ஈடுபட்டு 1986ம் ஆண்டு தனது இருபத்தோராவது வயதிலே தன்னை முழுமையாகப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டான். தமிழீழத்தில் சாவகச்சேரியில் நடைபெற்ற முதலாவது பயிற்சிப் பாசறையில் தனது போர்ப்பயிற்சியினை முடித்துக் கொண்ட இவன் அவ்வாண்டிலேயே தேசியத் தலைவரையும் சந்தித்தான்.

போராட்ட ஆரம்ப காலங்களில் நாவற்ற்குழிப் பகுதியில் சிறிலங்கா இராவுவத்தினருடனான மோதல்களில் பங்காற்றியதுடன், உணவு வழங்கலிலும், போர் ஆளணி ஒழுங்குபடுத்துவதிலும் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டான். பின்னர் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு இடம்பெற்ற காலத்தில் பல்வேறு இடங்களிலும் இடம்பெற்ற தாக்குதல்களிலும் கலந்து கொண்டான். அக்காலப்பகுதியில் தமிழ்ச்செல்வன் அண்ணையுடன் இவனும் சக போராளிகளும் இணைந்து யாழ்ப்பணத்தில் இருந்த எம்மக்களையும் போராளிகளையும் வன்னியில் இருந் எமது தேசியத் தலைவருடன் இணைக்கும் தொடர்புப்பாலமாய் செயற்பட்டார்கள். இந்திய இராணுவ வெளியேற்றத்திற்கு இச் செயற்பாடுகள் ஒரு காரணமுமாய் அமைந்திருந்தது. இரண்டாம் ஈழப்போர் ஆரம்பித்த வேளையில் பலாலி இராணுவத் தளத்தில் முன்னணிப் போர் நிலைகளுள் ஒன்றான “வண் வ்ண்” நிலையில் நின்று சிறப்பாக பணியாற்றினான்.

அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜேரத்தினாவால் தீபாவளி நாளன்று தொடக்கி வைக்கப்பட்ட பலாலி இராணுவத்தின் ஆக்கிரமிப்பான “ஒப்பரேசன் ஜெயசக்தி” நடவடிக்கைக்கு எதிரான போரில் தீவிரமாகப் போராடி காலில் விழுப்புண் அடைந்தான். பின்னர் யாழ் மாவட்டத் துணைத் தளபதியாகவும் ஆவண ஆயுதக் காப்புப் பணிகளிலும் பொறுப்பாகச் செயற்பட்டான். அதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டத் தளபதியாக அம்மா விளங்கினான். அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி தொடங்கப்பட்ட வேளையில் இவன் அதிகாரிகள் பயிற்சியும் பெற்றிருந்தான் யாழ் மாவட்ட தளபதியாக இருந்த காலத்தில் நடந்த பல சமர்களில் துணிச்சலுடன் பங்காற்றி வெற்றிகள் பலவற்றை விடுதலைப் புலிகளுக்குப் பெற்றுத் தந்தான். பலாலி கிழக்குப் புறமான காவலரண்கள் மீதான தாக்குதலில் சிறப்பாக பங்காற்றி கையில் விழுப்புண் அடைந்தான் இத்தாக்குதலில் தனது உற்ற நண்பர்களான மேஜர் டொச்சனையும் கப்டன் வீமனையும் சக போராளிகள் சிலரையும் இழந்தான்.

1994ம் ஆண்டில் வழங்கல் பகுதிப் பொறுப்பாக நியமிக்கப்பட்டான். வன்னி மண்ணில் குறிப்பாக முல்லைப் படைத்தள வெற்றி தொடக்கம் ஜயசிக்குறூய் (ஜெயசிக்குறூய்) ஓராண்டு வெற்றி விழா நாளிற்கும் மேலாக வழங்கல் பணி இவனால் திறமையாக மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கைக்கு வழங்கல் பகுதி போராளிகளும் பணியாளர்களும் தமது கடின உழைப்பினை வழங்கியிருந்தனர். இதற்கான பாராட்டினை தமிழீழத் தேசியத் தலைவரிடமிருந்து பெற்றிருந்தான் அதுமட்டுமன்றி தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இறுதிவரை செயற்பட்டு வந்தமை குறிபிடத்தக்கது.

தனது இதயத்தின் ஒகு மூலையில் தன்னை நேசித்தருக்கு இடம் கொடுத்திருந்த அம்மா என்ற பெரு வீரனின் இருதிவீர வரலாற்று வரிகள் அவனது உதிரத்தால் வழங்கலின் மையத்தில் 1998.06.10ம் நாளன்று எழுதப்பட்டத்து.

நினைவுபகிர்வு:- வே. கடலரசன்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதித்துறை,தமிழீழம்.

PDF-லெப்.கேணல் அம்மா (அன்பு)

ஜூன் 10, 2015 Posted by | ஆனி மாவீரர்கள், ஈழமறவர், ஈழம், வீரவணக்கம், வீரவரலாறு | , , , , | லெப்.கேணல் அம்மா (அன்பு) அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது