அழியாச்சுடர்கள்

படுத்த படுக்கையாக கிடக்கும் முன்னாள் ஜெயந்தன் படையணி போராளி!

கண் திறப்பார்களா புலம்பெயர் தமிழர்கள்?

மட்டக்களப்பு கரவெட்டியாறு கிராமத்தில் ஜெயந்தன் படை போராளியான திலீபன் என்கிற வடிவேல் தில்லையம்பலம் 48 வயது என்பவரே இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாக உள்ளார். இவரை ஒரு வயோதிப தாயாரே கவனித்து வருகின்றார். இவருடைய தகப்பனாரான வடிவேல் என்பவரும் நடக்க முடியாது உள்ளார்.

இவரை வைத்திய சாலைக்கு கொண்டு பராமரிக்க ஒருவரும் இல்லாத நிலையில் இவர் தொடர்ந்தும் படுத்த படுக்கையாக உள்ளார்.

இவருக்கு சக்கர நாற்காலி மற்றும் மலசலகூட வசதிகள் எதுவும் இன்றி கஷ்டப்பட்டு வருகின்றார்.

இவரது மூத்த மகனை இறுதி யுத்தத்தில் இழந்து தவிக்கும் இவர் தனது குடும்பத்தையும் பிரிந்து வாழ்கிறார்.

இவரது குடும்பத்தில் இரண்டு மாவீரர்கள் களப்பலி ஆகியுள்ளனர்.. இவரது அக்காவான விஜித்தா என்பவரின் பெயரிலேயே கரவெட்டியாறு விஜித்தா தமிழ் கலவன் பாடசாலை இயங்கி வந்துள்ளது. குறித்த பாடசாலையும் ஆசிரியர் பற்றாக்குறையால் தற்போது இயங்காது உள்ளது.

மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் வைத்திய உதவிகள் இன்றி படுத்த படுக்கையாக இருக்கும் திலீபனை காப்பாற்றி அவருக்கு மறுவாழ்வளிக்க முன்வருமாறு புலம்பெயர் அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கின்றார் அவரது தாய்

(அந்த முன்நாள் போராளியை 0094771105199 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொண்டு பேசலாம்)

ஜூன் 15, 2018 Posted by | அவலம், இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், தமிழர் | , , , , | படுத்த படுக்கையாக கிடக்கும் முன்னாள் ஜெயந்தன் படையணி போராளி! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

நம் தாயகம் உற்பத்திகளை வாங்குவீர் வாழ்வு கொடுப்பீர் !


அண்மையில் இதை பார்க்க நேரிட்டது இது முல்லைத்தீவில் போரில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்திற்காக அவர்களினால் தயாரிக்கப்பட்ட உற்பத்திகள்

இவை கனடாவில் ஒரு சில வர்த்த நிலையங்களில் மட்டுமே காணப்படுகின்றது. அதுவும் இறைச்சிகள் பகுதியில் காண நேரிட்டது !

தேசியம் பேசுபவர்களின் வியாபார நிலையங்களில் அது கூட இவைகள் இல்லை !

புலம் பெயர் நாடுகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து தமிழர் பொருட்களும் இலங்கை இந்தியாவிலிருந்து தான் தருவிக்கப்படுகின்றன எதுவும் புலம் பெயர் நாடுகளில் தயாரிக்கப்படுவதில்லை ஆகவே சுகாதாரம் என்று பார்த்தால் எல்லாம் ஒன்று தான்

இவர்கள் எங்கு தயாரிக்கின்றார்கள் என்று தெரிகின்றது ஆனால் மற்றைய உற்பத்திகள் எங்கு எப்படித் தயாரிக்கின்றார்கள் என்பது யாருக்கும் தெரியாது !

 

இதை பாவிப்பவர்கள் நன்றாக இருப்பதாகவே சொல்கின்றார்கள் நீங்களும் ஒரு முறை வாங்கிப் பாருங்கள் !

நம் தாயகம் உற்பத்திகளை வாங்குவீர் வாழ்வு கொடுப்பீர்

மார்ச் 3, 2018 Posted by | அவலம், இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், தமிழர் | , , , , | நம் தாயகம் உற்பத்திகளை வாங்குவீர் வாழ்வு கொடுப்பீர் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

முன்னாள் போராளிகளின் அவலநிலை -10 !

தமிழ் இனத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்கள்..
அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில்…
வலி சுமந்தவர்கள், வாழ வழியின்றி வாடுகின்ற சோகம்.. என் இனமே என் சனமே..!!

நன்றி
IBC Tamil

மார்ச் 10, 2017 Posted by | அவலம், இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம் | , , , | முன்னாள் போராளிகளின் அவலநிலை -10 ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

முன்னாள் போராளிகளின் அவலநிலை -9 !

தமிழ் இனத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்கள்..
அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில்…
வலி சுமந்தவர்கள், வாழ வழியின்றி வாடுகின்ற சோகம்.. என் இனமே என் சனமே..!!

நன்றி
IBC Tamil

பிப்ரவரி 22, 2017 Posted by | அவலம், இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம் | , , , | முன்னாள் போராளிகளின் அவலநிலை -9 ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

முன்னாள் போராளிகளின் அவலநிலை -8 !

தமிழ் இனத்திற்காக தம்மை அர்ப்பணித்தவர்கள்..
அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில்…
வலி சுமந்தவர்கள், வாழ வழியின்றி வாடுகின்ற சோகம்.. என் இனமே என் சனமே..!!

நன்றி
IBC Tamil

*
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ‘கோபு’ மர்மமான முறையில் மரணம்

வவுனியாவில் முன்னாள் போராளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ‘கோபு’ என அழைக்கப்படும் முன்னாள் போராளியான 28 வயதுடைய இலங்கராசா இளங்கோவன் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் பொலிசார் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிப்ரவரி 19, 2017 Posted by | அவலம், இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம் | , , , | முன்னாள் போராளிகளின் அவலநிலை -8 ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது