அழியாச்சுடர்கள்

தமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி வீரவணக்கம்

**

 

Advertisements

மார்ச் 10, 2017 Posted by | ஈழமறவர், ஈழம், வீரவணக்கம், வீரவரலாறு | , , , | தமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி வீரவணக்கம் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

2009 தை -பங்குனி மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்

      *

மார்ச் 10, 2017 Posted by | ஈழமறவர், ஈழம், வீரவணக்கம், வீரவரலாறு | , , , | 2009 தை -பங்குனி மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

மகளீர் தின வாழ்த்துக்கள் !

பாரதியார் கண்ட
புதுமைப் பெண்கள்
நாங்கள் இல்லை :

பிரபாகரன் வளர்த்தெடுத்த
வேங்கைகளே நாங்கள் ”

அடுக்களை கிடந்தோம்
ஆயுதம் ஏந்தியே,
விடுதலை தீயைச் சுமந்தே
விரைந்திட வைத்தான் ”

பூமாலை உதிர்த்து
நஞ்சு மாலை சூடி
புயலாய் மாறிய எங்கள்
புனிதப் பெண்களுக்கு
இனிய மகளீர் தின நல்
வாழ்த்துக்கள் “”

-ஈழவன் தாசன்

மார்ச் 8, 2017 Posted by | ஈழமறவர், ஈழம், உலைக்களம் | , , | மகளீர் தின வாழ்த்துக்கள் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

புலிகளின் வேவு வாழ்க்கையை கண்முன் நிறுத்தும் அப்பால் ஒரு நிலம் !

புதிதாக ஒரு கதைக்களனைத் தேர்ந்தெடுக்கும்போதே, ஒரு நாவல் பாதி வெற்றியடைந்து விடுகிறது. சொல்ல வந்ததை சரியாகச் சொல்லி விட்டால் முழு வெற்றியையும் பெற்று விடுகிறது. பல எழுத்தாளர்கள் புதியதொரு கதைக்களனைத் தேர்ந்தெடுத்துவிட்டு, சொல்லும் முறையில் கோட்டை விட்டு விடுவார்கள். ஆனால், கதைக்களன், சொல்லும் முறை இரண்டிலும் கோட்டை கட்டியிருக்கிறார் குணா.கவியழகன்.

கிளிநொச்சியை சிங்களர்களிடமிருந்து மீட்க, புலிகள் மேற்கொண்ட வேவு நடவடிக்கைகள்தான் கதையின் களம். இதைச் சுற்றி விடுதலைப் புலிகளின் அன்றாட வாழ்க்கை, பயிற்சி முறைகள், இயக்க செயல்பாட்டு முறைகள், போர்க்குணம், போரினால் அலைக்கழிந்த எளிய மனிதர்களின் வாழ்க்கை ஆகியவற்றை மிக நெருக்கமாக நம்முன் காட்சிப்படுத்துகிறார் குணா.கவியழகன்.

குணா.கவியழகனின் வார்த்தைகளில் பெருமிதமோ, மிகைப்படுத்தலோ இல்லை. அந்தப் போராளிகளின் வாழ்க்கைக்குள் நம்மைக் கைபிடித்து அழைத்துச் செல்கிறார். ஆங்கிலப் போர்ப் படங்களில் வரும் போர் வீரர்கள் போல் அசகாய சூரர்களாகவோ, நாடி நரம்பெல்லாம் தேசபக்தி புடைத்து, எதிரிகளை நிலைகுலையச் செய்யும் வீராதி வீரர்களாகவோ இல்லாமல், இயல்பான மனிதர்களாக விடுதலைப் புலிகளை உலவ விட்டிருக்கிறார்.

அமைப்பில் இளையவர்கள் சேர்வதற்கான காரணம், போருக்கான நியாயம், சிங்களப் படையினரும், புலிகளும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த மதிப்பீடுகள் என பல செய்திகளை குணா.கவியழகன் மிக நுட்பமாக சொல்லிச் செல்கிறார்.

நாவலின் அமைப்பும், போக்கும் நம்மைக் கட்டிப் போடுகிறது. எந்தவொரு இடத்திலும் தொய்வு இல்லை. தேவையான அளவு விவரணைகளும், வர்ணிப்புகளும் எளிதாக நம்மை நாவலுக்குள் உள்ளிழுத்துக் கொள்கின்றன.

இலக்கியம் என்ற பெயரில், விலைக்கு வாங்கப்பட்ட எழுத்தாளர்களால் விடுதலைப் புலிகளைப் பற்றிய எதிர்மறையான செய்திகளே தமிழ் இலக்கியமாக அதிகம் பரப்பப்பட்டு வந்த சூழலில், இந்நாவல் இரண்டு முக்கியமான செய்திகளைத் தொட்டுச் செல்கிறது. ஒன்று, புலிகள் இயக்கத்துக்கும் மக்களுக்கும் இடையே இருந்த நெருக்கம். மற்றொன்று, போரினால் சிதைந்த மக்களின் வாழ்க்கையை சீர்படுத்த, முறையானதொரு அரசு போன்று புலிகள் இயக்கம் காட்டிய அக்கறை.

இயக்கத்தில் சேர்ந்த வீரர்களின் குடும்பங்களை, தங்களது குடும்பமாகவே புலிகள் அனைவரும் கருதியது; அந்தப் பக்கமாக செல்லும் புலிகள், அந்த வீரர்களின் வீடுகளுக்கு சென்று வருவது, குடும்பத்தினரும் தங்களது பிள்ளைகள் போலவே, புலிகள் அனைவரையும் பாவித்து உணவு வழங்குவது; புலிகள் பெறும் சிறுவெற்றியைக் கூட மக்கள் அனைவரும் கொண்டாடிக் களிப்பது, போரினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிலம் வழங்குதல், தொழில் வாய்ப்பு நல்குதல், குழந்தைகளுக்கு படிக்க வசதி ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகியவற்றில் புலிகள் காட்டிய அக்கறை, இயக்கத்தில் இருந்த கட்டுப்பாடுகள், ஒழுக்க விதிகள் வளர்ச்சிப் போக்கில் படிப்படியான மாற்றம் பெறுவது ஆகியவை மிக அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

பிரமிப்பை ஏற்படுத்தும் இன்னொரு விஷயம், ஓர் அமைப்பாக புலிகள் செயல்பட்ட விதம். கட்டளைப் படிநிலை, குறைந்த படைக்கருவிகள், வீரர்கள் இருந்தாலும் இலக்கை அடைவதில் புலிகளின் திட்டமிடல், வீணாக ஓர் உயிரிழப்பு நேர்ந்துவிடக் கூடாது என்பதில் இயக்கம் காட்டிய அக்கறை, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதில் புலிகள் காட்டிய தீவிரம், ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் வழங்கப்பட்ட சிறப்பான பயிற்சி, போரில் சாதித்துக் காட்டியவர்களுக்கு வழங்கப்பட்ட மரியாதை, பதவி உயர்வு, காயமடைந்த வீரர்களுக்கு இயக்கம் வழங்கிய மாற்றுப் பணிகள் என நாவலில் ஆங்காங்கே தொட்டுக் காட்டப்படும் செய்திகள், உலகின் சிறந்ததொரு இராணுவ அமைப்பாக புலிகள் இயக்கம் வளர்ந்திருந்ததைக் காட்டுகிறது.

போர் இலக்கியத்தில் மட்டுமல்ல, தமிழ் இலக்கியத்திலும் உன்னதமான ஒரு நாவலாக ‘அப்பால் ஒரு நிலம்’ அமைந்திருக்கிறது. குணா.கவியழகனுக்கு எழுத்து நன்கு வசப்பட்டிருக்கிறது. தனது எழுத்தின் மூலம் நாவலின் முதல் பக்கத்திலிருந்து இறுதிப் பக்கம் வரை வாசகனை தனது கட்டுக்குள் வைத்திருக்கும் சூட்சுமம் அவருக்குத் தெரிந்திருக்கிறது. காதல், வீரம், பாசம், தியாகம், நட்பு என அனைத்து உணர்வுகளையும் தனது எழுத்தின் வழி வாசகனுக்குக் கடத்தத் தெரிந்திருக்கிறது. எந்த இடத்தில் விவரிக்க வேண்டும், எந்த இடத்தில் குறிப்பால் உணர்த்த வேண்டும், எந்த இடத்தில் சொல்லாமல் புரிய வைக்க வேண்டும் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கிறது.

வேவுப் படை குறித்தே இவ்வளவு நுட்பமான செய்திகளையும், சம்பவங்களையும் குணா.கவியழகனால் தர முடிகின்றது என்றால், அவரிடம் சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது என்பதை உணர முடிகிறது. வயதிலும் இளையவர் என்பதால், அவரிடம் இன்னும் இதுபோன்ற பல நாவல்களை எதிர்பார்க்கலாம். மூன்று நாவல்களிலேயே தமிழ் இலக்கியப் பரப்பில் அழுத்தமான முத்திரையைப் பதித்துவிட்ட குணா.கவியழகன், அடுத்தடுத்து வரும் படைப்புகளில் சிகரம் தொட்ட தமிழ்ப் படைப்பாளிகளில் ஒருவராக இருப்பார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

அப்பால் ஒரு நிலம்
குணா.கவியழகன்
வெளியீடு: தமிழினி பதிப்பகம்,
25-ஏ, தரைத்தளம், முதல் பகுதி, ஸ்பென்சர் பிளாஸா,
769, அண்ணா சாலை, சென்னை – 2. தொலைபேசி: 044-28490027
பக்கம் – 269, விலை – ரூ.240

– கீற்று நந்தன்

துயர் கவிந்த சரிதையில் அழுத்தி பதியும் நிழல் – அப்பால் ஒரு நிலம்

குணா கவியழகனின் நஞ்சுண்ட காடு, விடமேறிய கனவு முதலான நாவல்களைக் கடந்து வெளிவந்த நாவலே அப்பால் ஒரு நிலம். ஈழத்தின் ஆனையிறவு, பரந்தன், கிளிநொச்சியின் வன்னிக்களமுனை அப்பட்டமாக வெளிப்படுத்தும் இந்நாவல் வேவுகாரர்களின் வாழ்வை உணர்வின் தளத்தில் சித்திரிக்கிறது. செங்கையாழியானின் ‘சாம்பவி’ வேவு புலிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் ஈழத்து நாவல் என்றாலும் அதில் யதார்த்தம் இருக்கவில்லை. உணர்வின் கூர்மையை விட கதை சொல்லியின் கற்பனையே அதில் விஞ்சி நின்றது. குணா கவியழகனின் இந்நாவல் சம்பவங்களின் வாயிலாக மக்களின், போராளிகளின் அனுபவங்களை உணர்வுத் தளத்தில் சித்திரிக்கிறது. வேவுப் போராளி ஏனைய போராளிகளில் வித்தியாசமானவன். அவனின் சிந்தனை மற்றவர்களின் சிந்தனைகளைப் போலிருக்காது. அவன் தனித்துவமானவன். தனக்கென எல்லைகளை வகுத்துக் கொண்டவன். போருக்கு பழக்கப்பட்டவன். துன்பங்களைச் சுமந்தவன். காதலை, காமத்தை கடந்து எதிர்காலத்தைச் சிந்திப்பவன். குடும்ப உறவுகளை கடந்து சிந்திப்பவன். தன்னலமற்றவன். தாயக வேட்கைமிக்கவன்.

இவ்வுணர்வுகளின் வடிவமே நாவலில் வரும் மணி இ வீரா என்ற போராளிகள்.

கிளிநொச்சி களமுனைக்கு சென்று வேவு நடவடிக்கையின் போது போராளிகள் படும் அல்லல்களை குணா கவியழகன் உணர்வு பூர்வமாகவும் இதய சுத்தியோடும் விபரிக்கிறார். களமுனைகளும் போராளிகளின் தலைவர்கள் வகுக்கும் வியூகங்களும் குணா கவியழகன் மூளையின் செயற்றிரன் கொண்டு படைக்கப்பட்டாலும் வீரனின் தாயார் வதனா, மணியின் காதலி அருளினி முதலான பாத்திரங்கள் குணா கவியழகன் உணர்வின் மையத்தில் எழும் பாத்திரங்கள்.

வேவுக்கு போகும் முன் தாயைச் சந்திக்க வரும் வீரா அத்தாயின் அன்புக்குள் கட்டுண்டு தன்னை இழக்கிறான். அவன் தங்கியிருக்கும் மூன்று நாளில் தாய் கஸ்டப்படக்கூடாது என நினைத்து அவளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் சராசரி மகனாக செயற்படுகின்றான். இது வீராவின் வாழ்க்கையன்று. களத்தில் தம்மைக் காவு கொடுக்க முன் தாய் வீடு சென்று தம் இன்னுயிரை நீத்த போராளிகளின் வாழ்க்கை. நேசத்தின் ஆழ் சுளிப்பிலில் இருந்து விடுபட்டு களத்துக்கு செல்ல முற்படும் தம்மகவுக்கு எழைத்தாய் கொடுக்கும் சிற்றூண்டிகள் தம்மகனுக்கு மட்டுமானதல்ல. அவன் முகாமில் தங்கியிருக்கும் ஏனைய போராளிகளுக்குமானவை. என்பதை இந்நவீனம் மக்களின் நுண்ணுணர்வுத் தடத்தில் விபரிக்கிறது.

ஒரு போராளியின் தாய் ஒரு மகனுக்கு சொந்தமானவல்ல. எல்லா போராளிகளுக்கும் சொந்தமானவள். குணா வெளிப்படுத்தும் வதனா பாத்திரம் வன்னி மண்ணுக்குள் இன்றளவும் நம் கண்முன் உலாவும் உணர்வுபூர்வமான தாய்ப் பாத்திரம். கணவனையிழந்து தம்முறவுகளைப் பலி கொடுத்து காமத்துக்கும் சமூகத்துக்கும் இடையில் அல்லாடும் எத்தனையோ தாய்மார்கள் வதனாவைப் போல் உறவிழந்து அநாதையாய் நிர்க்கதியாய் நிற்கின்றனர்.

தவறுகள், குற்றங்கள் நிகழும் போது போராளிகள் தலைமை குழுக்களால் தண்டிக்கப்படுவார். தம் நிலை, அந்தஸ்து இழந்து சக போராளிகளால் கூட மதிக்கப்படாது நடாத்தப்படுவார். ஆனால் அவர் இயகத்தின் மீது விசுவாநமிக்கவராகவும் தம் தலைமைத்துவத்தின் மீது பாசமுள்ளவராகவும் இருப்பார். இயக்கம் அவரைக் கண்டு கொள்ளாவிட்டாலும் அவரின் மனோநிலை இயக்கம் பற்றியதாகவே இருக்கும். இயக்கத்தில் பால்ராஜ் அண்ணரின் மனோநிலையை ஒத்த ஒரு பாத்திரமாகவே ரோமியோ பாத்திரத்தை குணா கவியழகன் படைத்துள்ளார். போராட்ட வாழ்வுக்கு தம்மை அர்பணித்து நம் கண்முன்னே மடிந்த படைத்தளபதிகளின் நிழல் விம்பமே சேரா, கில்மன் முதலான பாத்திரங்கள். போராட்டம் மீதும் தம் தலைவன் மீதும் தம் போராளிகளின் மீதம் அவர் கொண்டிருந்த ஈடுபாடு என்பது மிகச் சாதரணமானதன்று. அவர்களின் இலட்சியங்கள் உன்னதமானவை. தம்தாய் நிலத்தை உரம் கொள்ளச் செய்பவை.

போராளி ஒருவனின் இழப்பால் குடும்பம் மாத்திரம் துயரை அனுப்பவிப் பதில்லை. அவனோ: ஒத்தியங்கிய போராளிகளும் அவ்விழப்பால் அல்லற்படுகின்றனர். ஒரு போராளியின் இழப்பு குடும்பத்தை மாத்திரமன்றி இயக்கத்தையும் பாதிக்கின்றது என்பதை இதயனின் இழப்புக்கூடாக குணா கவியழகன் வெளிப்படுத்துகிறார்.

இயக்கவாழ்வு என்பது இனிப்பானதல்ல. அது இனிப்பும் கசப்பும் நிறைந்த கூட்டுக்குடும்ப வாழ்வு. இவ்வாழ்வு றாகுலன், கவி, கோபி, மணி, வீரா முதலானவர்களின் முகாம் வாழ்வுக்கூடாக வெளிப்படுத்தப்படுகிறது. குணாகவியழகனின் மூளையால் எழுதப்பட்ட இப்புனைவு ஈழத்தின் வரலாற்றுப் பதிவாக விளங்குகிறது. செய்நேர்த்திமிக்க மொழி உள்ளத்தின் உணர்வுகளுக்கும் போர்கிளர்த்தும் எண்ணங்களுக்கும் உருக்கொடுக்கிறது. ஈழத்தில் பேசப்படாததும் பேச அஞ்சும் விடயங்களைப் பேசும் இப்புனைவு கடந்தகால வாழ்வின் பக்கங்களைப் புரட்டிப் படிக்கின்றது

-சி.ரமேஸ்

http://www.nanilam.com

**

**

மார்ச் 4, 2017 Posted by | ஈழமறவர், ஈழம், வீரவரலாறு | , , | புலிகளின் வேவு வாழ்க்கையை கண்முன் நிறுத்தும் அப்பால் ஒரு நிலம் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தேசத்தின் விடுதலை வரலாற்றில் சாந்தனின் கலைப் புரட்சி!

தேசியத்தின் தணியாத தாகம்

ஈழ விடுதலையின் வீரியத்தை இன்னொரு கட்டத்திற்கு எடுத்துச் சென்றது தமிழீழ பண்பாட்டு இயக்கமும், தமிழீழ இசைக்குழுவினரும்.

தேசத்தின் விடுதலை வரலாற்றை புரட்சிப் பாடகர் சாந்தனின் பங்களிப்பு இன்றி முழுமை பெறாது. புரட்சிப் பாடல்களாலும், உணர்ச்சிக் குரலின் தாக்கத்தினாலும், இளைஞர்கள், யுவதிகளை விடுதலைப் போராட்டத்தில் இணைய வைத்ததில் இவரின் பாடல்கள் மிக முக்கிய பங்காற்றியிருக்கின்றன.

தாயகத்தை, தாயக மண்ணை, தேசியத் தலைவரை, விடுதலைப் புலிகளின் வெற்றியை, தமிழீழ மக்களின் உணர்ச்சிகளை, பக்திப் பாடல்களை என்று அத்தனையிலும் தன்னை அவர் ஈடுபடுத்தியிருக்கிறார்.

தாயகத்திற்காக அவரின் குரல்கள் எவ்வாறு ஒலித்தது என்பதை பின்வரும் பாடல்கள் நினைவு படுத்துக்கின்றன.

தொன்னூறுகளின் ஆரம்பத்தில் தமிழ் மக்களின் மனங்களை அதிகம் கவர்ந்திழுத்த பாடல் தான் “ இந்த மண்ணன் எங்களின் சொந்த மண் ” சாந்தனின் இந்தப் பாடலில் பொதிந்திருக்கும் உள்ளார்ந்த அர்த்தங்களும், குரலின் நயமும் ஈழ தேசத்தின் விடுதலையை மேலும் தமிழ் மக்கள் மத்தியில் விதையிட்டது.

சோழர் காலத்தை நினைவுபடுத்தி, ஈழத்தில் சோழர் ஆட்சி திரும்புவதாக நினைத்து பாடப்பட்டது ஆழக் கடல் எங்கும் சோழ மகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று, சரித்திரத்தில் பேசும் பாடலாகியிருக்கிறது.

“ ஈடு வைத்து ஈடு வைத்து நந்தலாலா தமிழ் ஈழம் தரப் போகிறாவே நந்தலா ” சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியின் போது விடுதலைப் புலிகள் ஈட்டிய வெற்றியை பறைசாற்றிக் கொண்டிருந்த பாடல் இது.

தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்செல்வன் அவர்கள் இலங்கை விமானப் படையினரின் தாக்குதல்களின் போது வீரமரணமடைந்தார். அன்றைய நாள் தமிழின மக்களின் மனதில் ஏற்படுத்திய காயத்தை இன்னொரு வடிவமாக மாற்றினார் சாந்தன், “ நித்திய புன்னை அழகன் இன்று நீள் துயில் கொள்ளுகிறான், நாங்கள் தொட்டு அழைக்கவும் சொல்லி அழைக்கவும் ஏதுமே பேசாமலே தூங்குகிறான் ”

“ காலை விடிந்ததடா கண்ணைத் திற கண்ணைத் திற, வீரப்படை சேனை ஒன்று வென்றதடா கண்ணைத் திற” விடுதலைப் புலிகள் கட்டுநாயக்க விமான நிலையத் தாக்குதலை காலையில் எழுந்த தமிழ் மக்களுக்கு வெற்றியோடு பறைசாற்றிய பாடல் இது. இந்தப் பாடலை எளிதில் தமிழ் மக்கள் மறந்து விடமாட்டார்கள்.

“ கல்லறை மேனியர் கண் திறப்பார்களே கார்த்திகை நாளிலே ” மாவீரர்களின் கனவுகளை சுமந்து வந்த பாடல் இது.

“இனிவரும் இனிவரும் காலங்கள் அவை எங்களின் காலங்கள்” ஆனையிறவு தாக்குதலும் அதன் வெற்றியையும் காற்றினில் கலந்த கீதங்கள் இவை.

“ உள்ளுக்குள்ளே நெருப்பெரியும் அட உலகிங்கே இது புரியும் ” கரும்புலிகளின் கனவை சுமந்த பாடல் இது.

தமிழீழ காலம் உள்ளவரை சாந்தனின் விடுதலைப் போராட்டத்தில் இசை வகித்த வகிபாகங்கள் என்றும் அழியாது. இன்னும் விடுதலைக்கும் இந்தப் புரட்சிப் பாடகனின் இசை ஊக்கிவித்துக் கொண்டே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

விடுதலைப் போராட்ட வீரர்களின், தமிழ் மக்களின் ஆஸ்தான விடுதலைப் போராட்ட குயிலின் உடல் சொந்த மண்ணில் விதையாகட்டும். அவன் இந்த மண் எங்களின் சொந்த மண் என்று பாடி, இன்று அதே சொந்த மண்ணில் விதையாகிவிட்டான்.

சுதந்திரமாய் தூங்குங்கள், தேசம் ஒரு நாள் விடுதலை பெறும், அதுவரை உங்கள் பாடல்கள் ஊக்கிவித்துக் கொண்டே இருக்கும்.

**

சாந்தனின் காந்தக் குரல்! இவன் புரட்சிப் பாடகன்! தேசம் மறக்குமோ காலம் உள்ளவரை!

சாந்தன்….! இந்தப் பெயரைக் கேட்டாலே ஈழத்தவர்களுக்கு ஒரு வகையான உற்சாகம் பிறக்கும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சரித்திர நாயகர்களில் இவரும் ஒருவர்.

உலக வரலாறுகளில் இசையாலும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த இனம் எனில் அது தமிழினம் அன்றி வேறெந்த இனமாகவும் இருக்க முடியாது.

ஏனெனில் தமிழ் மொழிக்கு அத்தகைய சிறப்புண்டு. முத்தமிழை தன்னகத்தே கொண்டு துடிப்போடு இருக்கும் இந்த மொழியை லாவகமாக கையாண்டவர் சாந்தன்.

இதனை சரியாக உணர்ந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தில் சாந்தனின் பங்கினை உள்வாங்கிக் கொண்டார்.

ஈழத்தமிழர்களின் மரபோடு இசையும் கலந்தது என்பதற்கு தக்கசான்றினை இராமாயணம் எடுத்து இயம்புகிறது.

ஈழத்தின் அரசனான இராவணன், .இசையில் சிறந்த வித்துவானாகவும், வீர யுகபுருஷனாகவும் இருந்திருக்கிறான்.

சிறந்த சிவபக்தனான இராவணன் இசையினால், சிவனை வசப்படுத்தினான். அந்த இசையை சாந்தனும் தன் நாக்கினில் உள்வாங்கியிருந்தார்.

ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப நிலையில் சிறு குழுக்களாக இளைஞர்கள் ஒன்று திரண்டு அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக போரிட்ட வேளையில், எதிர் கொண்டுவரும் எதிரிப்படைகளை தகர்க்க ஆள்பலம் தேவை.

ஆனால், ஆரம்பத்தில் இணைந்திருந்த இளைஞர்களின் தொகை மிக மிக குறைவானது. எனினும் திறமையும், இனத்தின் மீது இருந்த பெரும் பற்றும் அவர்களை அந்தப் பாதையில் இருந்து விலகவிடவில்லை.

தொடர்ந்தும் அதிகார வர்க்கத்திற்கு எதிராக அணிதிரள வைத்தது. ஆரம்ப காலகட்டங்கில் விடுதலைப் போராட்டத்தையும், தமிழின உணர்ச்சிகளையும் மக்களிடத்திலும், இளைஞர்களிடத்தில் விதைத்தது தென்னிந்திய உணர்ச்சிப் பாடல்கள் தான்.

அவற்றை முச்சக்கரவண்டிகளில் ஒலிபெருக்கிகளைப் பொருத்தி மிகச் சந்தமாக ஒலிக்கவிட்டனர்.

மக்கள் மனங்களில் அது ஒருவகையான கிளர்ச்சிகளைத் தூண்டியது. ஆனால் பின்நாட்களில் ஈழத்து இளைஞர்கள், கவிஞர்கள் விடுதலைப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

போராட்டத்தில் இணைந்தவர்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுக்கப்பட்டாலும், அவர்களிடத்தே மறைந்திருக்கும் ஏனைய திறமைகளை பகுத்தறிந்து எந்தத்துறையில் யாருக்கு திறமைகள், நாட்டங்கள் அதிகமாக இருந்ததோ அவர்கள் அத்துறையில் வளரவும் விடுதலைப் புலிகளின் தலைமை ஏற்பாடு செய்தது.

ஆரம்பத்தில் தென்னிந்தியப் பாடல்களைக் கொண்டு ஈழப்போராட்டத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்த்த காலம் மெல்ல மறைந்து ஈழத்து இளைஞர்கள் ஈழமண்ணுக்கே உரித்தான மொழிநடையில் கவி வடிக்க, இன்னொரு பிரிவு அதை பாட்டாய் இசைக்க, ஈழ மண்ணின் வீர முழக்கம் இசையில் இணைந்தது.

விடுதலைப் போராட்டத்திற்கு இளைஞர்களை எவ்வாறு பிரசாரங்களும், பேச்சுக்களும் இணைத்துக் கொண்டதோ அதற்கு இணையாக விடுதலைப் போராட்டப் பாடல்களும் பங்காற்றியிருக்கின்றன.

இளைஞர்களை விடுதலைப் புலிகள் அமைப்பில் அதிகம் உள்வாங்கியதில் சாந்தனின் புரட்சிப்பாடல்களுக்கும் அதிக பங்குண்டு. கார்த்திகை 27 ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னமே மாவீரர் வாரம் தொடங்கிவிடும்.

அந்த நாட்களில் புரட்சிப்பாடல்கள் விண்ணைப் பிளக்கும். சாந்தன் அண்ணாவின் காந்தக் குரல் செவிகளில் பாய, விடுதலை மறவர்களின் தியாகம் மனத்திரையில் ஓடும். விழிகள் இரண்டும் கண்ணீர் தானாக சிந்தும்.

எனினும் துரதிஷ்டவசமாக ஈழப்போராட்டம் 2009ம் ஆண்டு மௌனித்துப் போனது. ஆனால், அந்த வலியை மறக்கடிப்பதும், பழைய நினைவுகளை நமக்கு மீட்டித் தருவதும் சாந்தனின் புரட்சிப்பாடல்கள் தான்.

ஈழத்தின் நீங்காத நினைவுகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் சாந்தனின் அந்தப் பாடல்களில் மிகவும் பிரசித்தி பெற்ற பாடல், இந்த மண் எங்களின் சொந்த மண்…! தமிழர்களை தூங்கவிடாமல் எழுப்பிய பாடல் அது.

தேசியத் தலைவரின் புகழ்பாடிய பாடல்கள் ஏராளம், தேசத்தைப் புகழ்பாடிய பாடல்கள் ஒரு நூறு. தமிழினத்தை எடுத்தியம்பிய பாடல்கள் எத்தனை. அத்தனையையும் இவன் கொடுத்திருக்கிறான்.

ஈழ தேசத்திற்கு இவனால் இவன் குரலால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறான். விடுதலையை வேண்டி நிற்கும் அத்தனை தமிழர்களுக்கும், வலியை சுமந்து நிற்கும் அத்தனை உறவுகளுக்கும் இவன் பாடல்கள் தான் அருமருந்து.

புரட்சிப்பாடல்களில் இவன் புலி, பக்திப் பாடல்களில் இவன், தேச பக்தன், பிட்டுக்கு மண்சுமந்த பெருமானை இவன் பக்தி நனிசொட்டச் சொட்ட பாடியிருக்கும் பா எவ்வளவு உணர்ச்சியானது.

இவன் பாடல் இன்றி எந்தக் கோவில் திருவிழாக்களிலும் கொடி ஏறாது. ஈழம் மலர்ந்தாலும் இவன் பாடல் இன்றி தேசிய கொடி ஏறாது. தேசத்தை இசையால் கட்டிப்போட்டவன், இன்று தேச மண்ணில் விதையாகிறான்.

**

எழுச்சிப் புயல் எதிரியால் நசுக்கப்பட்டது ! பிரபாகரனின் எண்ணத்திற்கு உயிர் கொடுத்த குரல் இன்று பறிக்கப்பட்டது

ஈழ எழுச்சிப் பாடல்களினூடாக போராட்டத்தின் குரலாக ஒலித்தவர் எஸ்.ஜி.சாந்தன். காலங்கள் மாறி காட்சிகள் மாறினாலும் அவரின் குரல் ஏற்படுத்திய அதிர்வினை இன்றைக்கும் உள்வாங்கி உணர வைக்கின்றன அவர் குரல்.

எழுச்சிப் பாடல்கள் வரிசையில், போராளிப் பாடகராக இருந்து மறைந்த ‘சிட்டு’ கே.ஜே.ஜேசுதாஸாகவும், ‘சாந்தன்’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்றும் கோலோச்சியவர்கள். இன்றைக்கு இருவரும் எம்மிடத்தில் இல்லை.

ஆனால், அவர்கள் பாடிவிட்டுச் சென்ற நூற்றுக்கணக்கான பாடல்கள்… எம்மை சோர்ந்து போன தருணங்களில் எழுச்சி பெறவும், போராட்டத்தின் தியாகங்களை அடுத்த தலைமுறையிடம் எடுத்துச் செல்லவும் உதவுகின்றன.

எழுச்சிப் பாடல்களில் மாத்திரமின்றி, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர் பற்றி சாந்தன் பாடிய “பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்” பாடல் அவ்வளவு பரவசமாக இருக்கும். அதற்குள்ளும் ஒரு அதிர்வு இருக்கும். அது அவர் குரலின் தாக்கம்.

பெரும் புயலென வீசிய உன் எழுச்சியின்..

குரல் எதிரிகளால் நசுக்கப்பட்டது அன்று

இன்று உன் உயிர் மூச்சும் பறிக்கப்பட்டது

வியாதியெனும் கொடிய அரக்கனால்

சாந்தன் ஒரு சிறந்த பாடகர். நாடகக் கலைஞர். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதானப் பாடகராக இருந்தவர். 1995 வரை யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபலமான நட்சத்திரப் பாடகராக இருந்தவர்.

இவர் நடித்த அரிச்சந்திர மயான காண்டம் இவரது நடிப்புத்திறனுக்குச் சான்றாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இன்று 26-02-2017 அன்று உடல்நலக்குறைவு காரணமாக மறைந்தார்.

இவரது தந்தைக்கு கொழும்பில் ஒரு கடை இருந்தது. அங்கு தங்குவதற்கு அறையும் இருந்தது. அதனால் பாடசாலை விடுமுறைக்கு கொழும்புக்குப் போய் விடுவது இவரது வழக்கம்.

அப்படியொரு தருணத்தில் 1972 இல் கொழும்பு, செக்கடித் தெரு கதிரேசன் கோவிலில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கச் சென்ற போது அங்கு பாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

மருதமலை மாமணியே முருகையா என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பற்றுக் கொண்டார். இவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாக இதுவே அமைந்தது.

இது இவரது முதல் மேடை அனுபவமாகவும் அமைந்தது. இதன் பின்னர் இவர் வீதியில் செல்லும் போது இவரை அழைத்து தம்பி அந்த மருதமலைப் பாடலை பாடு என்று இவரது ரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.

இதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார்.

அதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார். 1977 இல் கிளிநொச்சிக்குக் குடிபெயர்ந்தார். 1981 இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார்.

அந்த இசைக்குழுது 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் கோஷ்டி (சாந்தன் இசைக்குழு) என்ற பெயரில் இசைக்குழு ஒன்றை ஆரம்பித்தார்.

இவரது இரு மகன்கள் மாவீரர்கள். மூத்த மகன் இரண்டாம் லெப்டினன்ட் கானகன். இவர் 1998 களின் பிற்பகுதியில் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரின் போது மூன்று முறிப்புப் பகுதியில் வீரச்சாவைத் தழுவியவர்.

இரண்டாவது மகன் இசையரசன்

தமிழர்களின் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டம் கூர்மையடைவதற்கு முன்னர் அறவழிப் போராட்ட காலத்தில் இசையில் குறிப்பாக பாடல்கள் மூலம் விடுதலைப் புலிகளின் வீரவேட்கை அதிகரித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் கூர்மையடைந்த காலத்தில் கலைத்துறையும் வளர்ச்சிப் பரிமாணத்தில் பின்னிற்கவில்லை.

குறிப்பாக ஈழத்தின் புகழ்பூத்த உணர்ச்சிப் பாடகரான, விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் பலமுறை கெளரவிக்கப்பட்ட பாடகருமான, புலத்திலும், ஈழத்திலும் அதிகளவிலான ரசிகர்களைக் கவர்ந்த பாடகருமான.,

எஸ்.ஜே.சாந்தனின் பாடல்கள் மூலம் தமிழர்களின் போராட்டத்தின் நியாயத்தையும் எழுச்சியையும் உண்மையையும் உணர்ச்சிகரமாக வெளியில் கொண்டுவந்த பெருமையும் சாந்தன் பாடிய பாடல்களால் என்பதை யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.

ஈழம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் சாந்தனின் காந்தக் குரலுக்கென தனியான ரசிகர்களே உள்ளனர்.

இந்நிலையில் இப் பாடகர் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் நோய் வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.

ஈழத்து புரட்சிப்பாடகர் வரலாற்றில் பதியப்பட்டுள்ளார் வைர நெஞ்சங்களை படைக்க வல்ல குரலோன் இன்று நிச்சயமாக சொர்க்கத்தின் வாசலில் நின்றிருப்பார்.

கனத்த இதயத்தையும் கரைய வைத்த சாந்தன் இறந்தும் வாழ்வார் தன் குரலால் அவர் தன் சிறப்பு மிக்க பெருமை வாழ்க.

மார்ச் 1, 2017 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், வீரவணக்கம், வீரவரலாறு | , , , , | தேசத்தின் விடுதலை வரலாற்றில் சாந்தனின் கலைப் புரட்சி! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது