அழியாச்சுடர்கள்

பிரிகேடியர் சொர்ணம், சசிக்குமார் வீரவணக்கம்

**

வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் வீரவணக்கம்

**


**

பிரிகேடியர் சசிக்குமார் வீரவணக்கம்

**மே 14, 2018 Posted by | ஈழமறவர், ஈழம், காணொளிகள், முள்ளிவாய்க்கால், வீரவணக்கம், வீரவரலாறு, வைகாசி மாவீரர்கள் | , , , , , | பிரிகேடியர் சொர்ணம், சசிக்குமார் வீரவணக்கம் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

எளிமையின் சிகரம் பிரிகேடியர் கபிலம்மான்

Brigadier Kapil ammanதமிழீழத்தின் தலைநகரம் திருகோணமலை மண்ணில் மலராகி ஈழமண்ணுக்காக சிறு வயதிலேயே தலைவனின் வழியில் நடந்தவர் தான் கபிலன் அல்லது கபிலம்மான் என அழைக்கப்படும் இந்த வீரம் செறிந்த வேங்கை. 1984 தமிழகத்தில் விடுதலைபுலிகளின் 4 வது பயிற்ச்சி முகாமில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுடன் பயிற்ச்சி பெற்றார். இவர்கட்கான பயிற்ச்சியை முன்னாள் திருமலை தளபதி புலேந்திஅம்மான் அவர்கள் வழங்கினார். அதன் பின்னர்………

திருமலை வந்து புலேந்தி அம்மான் அவர்களுடன் இணைந்து பல வெற்றிகர தாக்குதல்களை நடத்தினார் அங்குள்ள மக்களுடன் நல்லா உறவினை பேணி அவர்களின் உதவியுடன் திறமையாக செயற்பட்டார். திருமலை மக்கள் மனதில் இன்றும் கபிலம்மான் நிறைந்திருக்கிறார்.அவர் பழகிய மக்கள் எல்லோரும் அவரின் மனதினை பாராட்டுகிறார்கள். பின்னர் தலைவர் மணலாறு காட்டில் இருந்த பொழுது அவரின் பாதுகாப்பு பணியில் நின்றார். தலைவரின் உடலில் எந்த கீறும் வராமல் பாதுகாத்த பெருமை இவரையும் சாரும்.

1990 இல் பொட்டு அம்மான் புலனாய்வுத்துறை பொறுப்பாளராக நியமிக்கபட்டார். அப்பொழுது துணை பொறுப்பாளராக தலைவர் அவர்களால் கபிலம்மான் நியமிக்க பட்டார்.இதில் நாம் ஒன்றை தெரிந்து கொள்ளவேண்டும் எதிரிக்கோ அல்லது பெரும்பாலான மக்களுக்கோ இவரின் முகாம் தெரியாது. அவ்வாறு தனது அடயாளம் யாருக்கும் தெரிய கூடாது என்று என்றும் விழிப்பாக இருப்பார் .இவ்வாறு மிகவும் திறமையாக பல வெற்றிகர தாக்குதல்களை எதிரியின் பகுதிக்குள் செய்தவர் . 1993 ம ஆண்டு அச்சுவேலி கதிரிப்பாய் வளலாய் போன்ற பகுதிகளிக்குள் ஊடுருவி நடத்திய தாக்குதலுக்கு நிர்வாக பொறுப்பாக இருந்தவர்.தன்னுடன் இருந்த போராளிகளின் நலன்களில் அக்கறையாக இருந்து அவர்கட்கு ஏற்படும் துன்பங்களில் தானும் ஒருவனாக இருந்து அவர்கட்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி அவர்களுக்கு நல்ல பொறுப்பாளனாக இருந்தவர்.

அவரை தேடி அல்லது எதோ ஒரு தேவை கருதி தன்னுடைய முகாம் வரும் மக்களை அதற்காக அமைத்திருக்கும் இடத்தில் அமர வைத்து முதலில் அவர்கட்கு எதாவது அருந்த கொடுத்து விட்டு அதன் பின்னர் தன்னுடன் நிற்கும் ஒரு போராளியை அனுப்பி அவர்களின் வேண்டுதலை கேட்டு அதை நிவர்த்தி செய்யும் அந்த பண்பு அவரையே சாரும். சிலவேளைகளில் சில மக்கள் தங்களின் வறுமை நிலைமைகளை சொல்லும் போது அவர்கட்கு பண ரீதியாகவோ அல்லது பொருள் ரீதியாகவோ உதவி செய்வார். தேச துரோகிகள் என்று தண்டனை வழங்க பட்ட வர்களின் குடும்பங்கள் விடுதலை புலிகளினை ஒரு தவறான அமைப்பாக கருத கூடாது என்பதற்காக அவர்கட்கு தண்டனை வழங்கப்பட்டவர்களின் துரோக செயல் பத்தி தெளிவு படுத்தி வறுமையால் துன்பப்படும் குடும்பகட்கு பண உதவி செய்து நல்லா ஒரு நட்புறவுடன் வாழ்ந்தவர். எந்த மக்களும் இலகுவாக சந்திக்க கூடிய ஒருவர் என்றால் கபிலம்மான் தான் .

மக்களால் அனுப்பப்படும் கடிதங்களை வாசித்து அவர்களின் குறைகளை அறிவதற்கு நேரடியாக தன்னுடைய போராளிகளில் ஒருவரை அவர்களின் வீட்டுக்கு அனுப்புவர் அதன் பின்னர் அவர்கட்கான அந்த முடிவை தன்னால் முடிந்தால் செய்வார் அல்லது அதை தலைவருக்கு அனுப்பி முடிவு காண்பார். இவ்வாறு மக்கள் எப்பொதும் அமைப்பின் மீது நல்ல ஒரு அவிப்பிராயம் இருக்கா வேணும் என்பதில் அக்கறையா இருப்பார். போராளிகட்கும் நல்ல ஒரு ஆலோசகராக அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான ஆலோசனைகளை வழங்குவார். தன்னுடன் நிக்கும் போராளிகளின் வளர்ச்சியில் என்றும் அக்கறையா இருப்பார். தலைவரால் பாதுகாப்புக்கு போராளிகளை வைத்து கொள்ளுமாறு சொன்ன போது அதை விரும்பாமல் அதை மறுத்தவர். அதற்கு காரணம் கேட்ட போது எனக்கென ஒரு போராளி என்னுடன் நின்று என்னை பார்த்து கொள்ளும் வேலையே மட்டும் செய்வான். அவன் வளருவதற்கான எந்த வழியும் இருக்காது எனவே அது எனக்கு வேண்டாம. என்று இறுதி வரை வாழ்ந்தவர்.poddu

இப்படித்தான் ஒரு முறை வேலை விடயமாக செம்மலை சென்ற போது தன்னுடன் இரண்டு போராளிகளை அழைத்து சென்றார்.இடையில் பிரிகேடியர் சொர்ணம் அவர்கள் வாகனம் ஒன்றில் வந்துகொண்டிருந்தார். இவரை கண்டதும் வாகனத்தை நிறுத்தினார். கபிலம்மான் வாகனத்தில் இருந்து இறங்கிய போது பின்னால்இருந்த மேஜர் எழிலரசன் என்ற போராளி உடனே இறங்கி அவருக்கு பின்னால சென்றான் . திரும்பி பார்த்த கபிலம்மான் ”நில்லு ஏன் இப்ப பின்னால வாறாய் போய் வாகனத்தில் இரு பார்ப்பம்” என்று தனக்கு தானே பாதுகாப்பு என்று வேற யாரும் தனக்காக தங்களது நேரத்தினையும் வீணாக்க கூடாது என்பது அவரின் பெரும் தன்மை. தலைவர் அவர்கள் மூத்த தளபதிகளுக்கு பிஸ்டல்வழங்கினார் அதனை தனது இடுப்பில் என்றும் அணிந்ததில்லை எங்கு போனாலும் கொண்டும் செல்வதில்லை. இவ்வாறு என்றும் எளிமையாக வாழ வேண்டும் என்பது அவரின் கொள்கை .

2000 இல் மட்டக்களப்பில் மற்றும் தென்னிலங்கையில் இருந்து பல வெற்றிகர தாக்குதல்களை நடத்தி விட்டு ஈழம் திரும்பிய மற்றுமொரு தளபதி கேணல் சாள்ஸ் அவர்கள் வெளியக பொறுப்பாளராக நியமிக்க பட்டார். இவ்வேளை சாள்ஸ் அவர்களின் நிர்வாகத்தில் சில மாதங்கள் பணி செய்தார். அதன் பின்னர் தனியாக வெளியக வேலைகளை செய்தார். இவ்வேளை இவருக்காக புதிய பிக்கப் வாகனம் கொடுக்கபட்டது .ஆனால் அந்த வாகனத்தில் அவர் சென்ற நாட்களே குறைவு. வேலை ரீதியாக பயன்படுத்தியவர்களின் தயார் படுத்தலுக்காகவே அந்த வாகனம் பயன்படுத்த பட்டது அதிகம். அவரின் முகாமில் இருந்து தனது வீடு செல்வதானால் கூட மிதி வண்டியில் அல்லது போராளிகளினை கொண்டு சென்று விடும் படி கேட்டு செல்வார். வாகனத்தை தனது விட்டுக்கு கொண்டு போனதே இல்லை. ஒருமுறை யாரிடம் உதவி கேட்காமல் நடந்தே வீடு சென்றவர்.இவாறு பல தடவை .யாருக்கும் தன்னால் கஷ்டம் இருக்கா கூடாது என்பது அவரின் எண்ணம்..

உண்மையில் அவர் வாழ்ந்த வீடு மிகவும் சின்னது. ஓலையால் மேயப்பட்டது. அவருக்கு பலர் பல தடவை உங்களின் வீட்டை கொஞ்சம் பெரிதாக்கி ஓலைய விட்டு சீட் போடலாம் அல்லது ஓடு போடலாம். இவ்வாறு சொன்னவர்கள் அவரின் நண்பர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் .தாங்கள் நிதி உதவி செய்கிறோம். நண்பன் என்ற ரீதியில் அதற்கு அவர் சொன்ன விளக்கம் நான் மக்களுக்காக போராட வந்தவன் இறுதிவரை அவர்கட்காக போராடி சாக போறவன். இறுதிவரை எளிமையாக வாழவே விரும்புகிறேன் ஏனென்றால் நான் அப்படி ஆடம்பரமாக வாழ்ந்தால் அது எமது அமைப்பின் பணமாக மக்கள் கருத நேரிடும் அப்படி அவர்கள் கருதுவது பிழையும் அல்ல. ஏன் மீது யாரும் எந்த குறையும் சொல்ல கூடாது அதற்கு நான் சந்தர்பம் கொடுக்க மாட்டன். என்று பதிலளித்தார் கபிலம்மான்.

இவ்வாறுதான் ஒரு முறை லண்டன் இல் இருந்து அவரின் நண்பன் ஒருவர் வந்தார் முகாம் வந்தவர் நீண்ட நேரமாக பேசிவிட்டு போகும் போது சிறு தொகை பணத்தை அவரிடம் கொடுத்து இதை உங்கள் போராளிகளின் முகாம் தேவைகட்கும் மேலும் கொஞ்சம் பணத்தை கொடுத்து இது நண்பனாக உங்கள் தனிபட்ட தேவைகட்கு என்று சொல்லி கொடுத்தார் .எல்லாவற்றையும் வாங்கிய அம்மான் ஒரு போராளியிடம் கொடுத்து இவற்றை எல்லாம் கணக்கில் எழுதி முகாம் செலவுக்கு பாவியுங்கள் என்று கூறினார். நண்பனுக்கு மிகவும் சந்தோசம் என்ன அம்மான் என்னும் நீங்க மாறவே இல்லை என்று கூறி விட்டு சென்றார். இப்படியாக வாழ்ந்த பெரு மனிதன் கபிலம்மான். என்னும் நிறைய சொல்லலாம் வார்த்தைகள் இல்லை.

கபிலம்மானுக்கு அழகான பெண் குழந்தை அவரின் சிரிப்பு எல்லாம் அந்த குழந்தையில் தான் காணலாம் போராளிகளின் சிறு பிள்ளைகள் பராமரிப்பதற்காக தளிர் எனும் இடம் உள்ளது அங்கே எப்போதும் காலையில் கொண்டுபோய் விடனும் பெரும்பாலான போராளிகளின் பிள்ளைகள் எதோ ஒரு வாகனத்தில் வருவார்கள். இதை அவதானித்த பிள்ளை கபிலம்மானிடம் ”அப்பா எல்லா பிள்ளைகளும் வாகனத்தில் வருகிறார்கள் நான் மட்டும் மிதிவண்டியில் தான் போகிறன் ஏனப்பா என்னையும் உங்கட வாகனத்தில் கொண்டுபோய் விடலாம் தானே” என்று கேட்டது அதற்கு அம்மான் ” இல்லை அது உதுக்கெல்லாம் பாவிக்க கூடாது நீங்க மிதி வண்டியிலே போங்கோ பிறகு நாங்கள் ஒரு வண்டி வாங்குவம்” என்று சொல்லி சமாளித்து விட்டார் . அவ்வாறு என்றைக்கும் தனது சுகபோகங்கட்கு இயக்க சொத்தை பாவித்து இல்லை. எளிமையாக வாழ்ந்தவர்

அவரின் வீரம் செறிந்த தாக்குதல்களை பாதுகாப்பு கருதி பிரசுரிக்க முடியாது மக்கள் மகிழ்ந்த பல தாக்குதல்களை செய்து விட்டு இப்படி ஒருவர் இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த வீரன் .தளபதி இறுதி சமரில் இவரின் பயணம் பாதுகாப்பாக அமைந்து விட்டதா இல்லையா என்பது தெரியாது. அவரின் இன்றைய நிலை தெரியவில்லை இருந்தும் அவருக்கு பிரிகேடியர் என்ற அந்த உயரிய நிலையை வழங்குவதில் பெருமை அடைகின்றோம்.

கபிலம்மானின் அந்த உயரிய பண்பு வீரம் விடுதலையை பெற்று தரும் ………………

அன்புடன்

சக போராளி.

ஜனவரி 23, 2016 Posted by | ஈழமறவர், ஈழம், வீரவரலாறு, வைகாசி மாவீரர்கள் | , , , | எளிமையின் சிகரம் பிரிகேடியர் கபிலம்மான் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

வசந்த் வாத்தி தமிழீழத்தின் வீர ஆசான்

Col Vasanthan“அணீ சீராய் நில், இலகுவாய் நில் இயல்பாய் நில்,… ” இந்த அதிகாரக்குரல் இன்றும் ஒலித்துக் கொண்டே இருகிறது தாயக தேசம் எங்கும் வீசும் காற்றோடு எங்கள் காதுகளில். தமிழீழம் எங்கும் விடுதலைப்புலிகள் அமைப்பில் அடிப்படை பயிற்சியை பெற்ற எந்த போராளியும் இந்த வார்த்தைகள் அடங்கிய குரலை கேட்காமல் விட்டதில்லை தமிழீழத்தின் மூலை முடுக்கெங்கும் விரிந்து கிடந்த பயிற்சி முகாம்களின் அணிநடை பயிற்சிக்கான இந்த கட்டளைகளை அந்த அதிகார குரல் குடுக்காமலும் இருந்ததில்லை. எமது அமைப்பில் அணிநடை பயிற்சியாளர் மட்டுமல்லாது சர்வதேச அரங்கிலையே முதன்முதலாக கனரக ஆயுதங்களுடனான (PK, RPG, AKLMG)அணிநடை பயிற்சியை அறிமுகப்படுத்திய இராணுவ ஆசிரியர் என்ற பெரும் பெயரையும் தன்னகத்தே கொண்ட வேங்கையே கேணல் வசந்த் அல்லது குமரிநாடான்.

விடுதலை புலிகளின் ஒரு தொடக்கப்பள்ளியானது படைத்துறைப்பள்ளி என்று பெயர் கொண்டது. இதை அறியாதவர்கள் யாரும் இல்லை. இங்கு தான் அவரது திறன்கள் அனைத்தையும் வெளிப்படுத்தும் ஒரு அணி தயாராகி கொண்டிருந்தது. அதற்கு பிரதம ஆசிரியர் வசந்த். அணிநடையில் ஒவ்வொரு நுணுக்கங்களையும் கற்பித்த வசந்த் படைத்துறை பள்ளி போராளிகள் அணிக்கு தாயாக தந்தையாக நண்பனாக ஆசானாக என்று அத்தனை நிலைகளிலும் அவர்களுக்கு எல்லாமாகி நின்றார்.

படையணிகளுக்கு இடையில் நடைபெறும் ஒவ்வொரு விளையாட்டு போட்டிகளிலும் தனது படைத்துறை பள்ளி சார்ந்த போராளிகளை கொண்டு போட்டிகளை வெற்றி பெறத் தவறியது இல்லை. அதுவும் அணிநடையில் தொடர் வெற்றிகளை பெற்று வந்தது படைத்துறைப்பள்ளி அணி. இதற்கு அடித்தளம் இட்டது வேறு யாரும் அல்ல “கேணல் வசந்த்” என்று அவரது நினைவு பகிர்வை என்னோடு பகிர்ந்து கொள்கிறார். படைத்துறை பள்ளியின் முதலாவது அணி போராளியாக இருந்து பின் நாட்களில் கணணிப்பிரிவின் முது நிலை பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்த போராளி ஒருவர்.

குறித்த சில வருட படைத்துறைப்பள்ளி பயிற்சிகளின் பின் போராளிகள் வேறு வேறு படையணிகளுக்கு சென்ற போது குறித்த சில போராளிகளை தன்னுடனே தனது ஆசிரியர் பணிக்காக வைத்திருந்த வசந்த் தனது நேரடி நெறிப்படுத்தல்களில் அவர்களை வலு மிக்க ஆசிரியப் போராளிகளாக மாற்றுவதில் வெற்றி கண்டார். இது நியமாக போனது 1999 காலப்பகுதியில் நடைபெற்ற கராத்தே போட்டி ஒன்றில். இவரது அணியும் பொதுமக்களில் இருந்து பல வீரர்களும், விடுதலைப்புலிகளின் ஏனைய படையணியை சேர்ந்த கராத்தே அணியினரும் பங்கு பற்றி இருந்தார்கள்.

ஆனால் இவரது அணியை சேர்ந்தவர்களது சண்டையிடும் ஆற்றலானது அங்கு போட்டிக்கு வந்திருந்தவர்களை ஒரு கணம் திகைக்க வைத்திருந்ததை மறுக்க முடியாது. டேய் “வசந்தன் வாத்திண்ட பெடியள் வந்திருக்கிறாங்கள் அவங்களோட சண்டை போடா எங்களால முடியாது ” வெளியில் இருந்து வந்திருந்த பொதுமக்களின் அணிகள் இவர்களுடன் சண்டையிட பயந்து நின்றன. ஏனைய படையணி போராளிகளும் கூட இவர்களை கண்டு கொஞ்சம் தயக்கத்துடனே போட்டியில் பங்கு பற்றினர். அவ்வாறாக வசந்த் அவர்களை வளர்த்திருந்தார். விடுதலை புலிகளின் படையணிகளில் வசந்த் ஒரு முக்கிய பயிற்சியாளராக தனது போராளிகளை வளர்த்திருந்தார்.

தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் நம்பிக்கைக்குரிய போராளியாக உயர்ந்திருந்த வசந்த் தொடர்பாக மூத்த போராளி ஒருவரிடம் வினவினேன். அப்போது ” தம்பி முதலில் வசந்தன் என்ற பெயரை உச்சரிக்காதீர்கள். அவருக்கு வசந்தன் அல்ல பெயர். “வசந்த்” என்பதுவே அவரது இயக்க பெயர். “வசந்தண்ண” என்று போராளிகள் அழைப்பதன் மூலமாக மருவிய பெயரே வசந்தன். ஆனால் அவனது உண்மை பெயர் வசந்த். வசந்தன் என்பது அவருக்கு விருப்பம் இல்லாத பெயர் அதனால் அதை பயன்படுத்தாதீர்கள். மன்னிக்கனும் அண்ண இந்த தகவல் நான் அறியாதது. அனைவரையும் போலவே நானும் வசந்தன் என்றே நினைத்திருந்தேன். என் அறியாமையை நினைத்து கொண்டு மன்னிப்பு கேட்டு தொடர்கிறேன் அவரை பற்றி சொல்லுங்க.

கேணல் வசந்த் நீண்ட காலமாக போராளிகளை வளர்த்தெடுக்கும் ஆசானாகவே தனது போராட்ட பணியில் இருந்தார் ஆனால் அவர் அந்த காலங்களிலும் களமுனைகளை ஆராய்ந்து அதற்கு ஏற்ப முடிவுகளை எடுத்து ஒவ்வொரு கலச்சூழலையும் போராளிகளுக்கு தெளிவு படுத்துவார். அதற்காக களமுனைகள் ஒவ்வொன்றையும் நேரடியாக ஆய்வு செய்து கொண்டே இருப்பார். அவர் என்றும் களமுனைகளை துறந்தது இல்லை. களமுனைகளுக்காக காத்திருந்ததும் இல்லை.

எங்கெல்லாம் களமுனைகள் விரிந்து கிடந்தனவோ அங்கெல்லாம் களத்தினை தேடி செல்லும் துணிச்சல் மிக்க போராளி தான் வளர்த்த ஒவ்வொரு போராளிகளின் மனதிலும் தேசியத்தலைவரையும் மக்களையும் எங்கள் மண்ணையும் நேசிப்பதற்கான அடித்தளங்களை அவர் பலமாகவே இட்டிருந்தார்.

தமிழீழ மகளிர் படையணிகளுக்கு தற்காப்பு பயிற்சிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களுக்கான தற்காப்பு பயிற்சியாளராக வசந்த் செயற்பட்ட காலங்களில் சாதாரண ஆயுதங்கள் முதல் கனரக ஆயுதங்கள் வரை சிறப்பாக இயக்கம் வல்லமை தாங்கிய மகளிர் படையணிகளாக அவர்களை வளர்ப்பது மட்டுமல்லாது. தமது தற்காப்பு பயிற்சிகளிலும் முன்னிலை வகித்தார்கள் என்றால் அது வசந்த் என்ற ஆசிரியரின் முழு முயற்சிகள் என்றால் மிகையில்லை. “கராத்தே” மட்டுமல்லாது எதிரியை மடக்குவது, சத்தமின்றி எதிரியை கொல்லுவது, சிலம்பு, கம்புவீச்சு, வாள்வீச்சு, நெஞ்சாக்கு, கத்திச்சண்டை, யோகாசனம் எதிரியை நினைவிழக்க செய்யும் முறைகள் போன்றவற்றோடு ஜப்பானிய சீன கலைகள் உள்ளடக்கிய தற்காப்பு பயிற்சிகளை மகளிர் படையணிகளுக்கு விதைத்தார் கேணல் வசந்த்.

“உண்மை தான் அண்ண வசந்த் மாஸ்டர பற்றி எழுத வேண்டும் என்று தோன்றிய போதே நான் சேகரித்த தகவல்களில் முதன்மையானவையாக இருந்தது அவரது தற்காப்பு பயிற்சிகள் மற்றும் நடையணி பயிற்சி தான். இவற்றை விட வேறு என்ன இருக்கிறது சொல்லுங்கள்.

அண்ண சண்டைகள் பற்றிய திட்டமிடல்களின் போது அருகில் வைத்திருக்கும் ஒரு போராளிகளுள் ஒருவராக இவர் இருந்தவர் என்பது யாவரும் அறிந்த விடையம் தான். ஆனாலும் வசந்த் என்ற இந்த போராளி மீது எங்கள் தலைவர் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையின் வெளிப்பாடுகளே அங்கு இடம்பெறும் சண்டைக்கான திட்டமிடலில் கருத்துக்களை கூறும் ஒரு முது நிலை போராளியாகவும் கள நிலவரங்களை நன்கு அறிந்து அதற்கேற்ப திட்டங்களை வகுக்க கூடிய செயற்பாட்டாளனாகவும் வசந்த் தோன்றினார். அதனால் தான் பல வெற்றி சண்டைகளுக்கான திட்டங்களை வசந்த் தலைவருக்கு கொடுத்திருந்தான்.

2005 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலங்களில் முற்றுமுழுதாக ஆசிரியர் என்ற நிலையில் இருந்து உயர்த்தப்பட்டு தலமைசெயலக ஆயுத படைக்கலங்களுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட போதும் தலைமைசெயலக சிறப்புத் தாக்குதல் அணியான “மணாளன் சிறப்பு தாக்குதல் அணியின் ” பயிற்சியாளராகவும் களமுனை ஆலோசகராகவும் செயற்பட்டார். இங்கு மீண்டும் நான் அவரை பற்றி குறிப்பிட நினைப்பது கேணல் வசந்த் களமுனைகளை விட்டு பிரிந்திருந்ததில்லை. என்பதாகும்.

அவர் தனது நினைவு பகிர்வை முடித்திருந்த போதும் வசந்த் அவர்களின் களமுனை செயற்பாடுகளை விட முக்கிய செயற்பாடுகளாக பல விரிந்து கிடந்ததை நான் வேறு பலரிடம் திரட்டிய தகவல்களில் கண்டுகொண்டேன்.Col Vasanthan 2

கேணல் வசந்த் படைக்கல பிரிவுக்கான பொறுப்பாளராக இருந்த போது எங்கோ ஒரு நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட “ஸ்கோப்” என்று சொல்லப்படுகிற ஆயுத இலக்கு குறிகாட்டி ஒன்றினை தமிழீழ மண்ணில் கிடைக்கும் பொருட்களை வைத்தே செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்டினார். 600 அமெரிக்க டொலர் குடுத்து வாங்க வேண்டிய அந்த குறிகாட்டியை நான் உருவாக்குகிறேன் என்று தலைவரிடம் அனுமதி பெற்று கிட்டத்தட்ட ஆறு முறைகள் முயற்சியில் தோல்வியடைந்து, ஏழாவது முறை தனது கண்டுபிடிப்பை தலைவரிடத்திலே வெற்றியாக சேர்த்திருந்தார்.

வெறும் 1200 இலங்கை ரூபாக்களின் பெறுமதியில் உருவாக்கப்பட்ட அந்த குறிகாட்டி வெளிநாடுகளில் இருந்து வாங்கிய குறிகாட்டிகளின் தரத்தில் இருந்து எந்த குறைவும் இல்லாமல் இருப்பதை கண்டு தலைவர் வியந்தார் என்பது வரலாறு. உடனடியாக இவற்றை விடுதலைப்புலிகளின் படைக்கல உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்ய பணிக்கப்பட்டாலும், நெருங்கி வந்து கொண்டிருந்த இராணுவ முற்றுகையும், சண்டைக்களங்களும் அதற்கு நேரத்தை தராது போனது இந்த வெற்றியில் இருந்து ஒரு பாடத்தை அவர் எம்மிடையே விட்டு சென்றார். தோல்வி என்பது எமக்கு படிக்கல், எத்தனை முறை தோற்றாலும் அத்தனை முறையும் ஒருவன் எழுவான் எனில் அவன் தோற்றதாக வரலாறு இல்லை குறைந்த வளப்பரப்புக்குள் இருந்த எம்மால் இப்படியான குறிகாட்டிகளை வெற்றிகரமாக உருவாக்க முடிந்தது எனில் அதற்கு வசந்த் வாத்தியோட விடா முயற்சியும் கிடைத்த வளங்களை பயன்படுத்த தெரிந்த நுண்ணறிவும் என்றால் அது பொய்யில்லை. இத்தகைய ஒரு பெரு வீரன் தேசத்தில் எரிந்த எறிகணைகளின் துண்டுகளால் வீழ்ந்து தீப்பிழம்புகளின் வேகம் தாங்காது மண்ணுக்காக மடிந்து விட்டார் என்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆனால் தான் நேசித்த ஆசிரியத்துவத்தின் புனிதத்தை தொலைத்து உயிர்வாழ்வதை விட சாவதே மேல் என்று நினைத்து சென்ற வேங்கை அவர். இதை அவரது இறுதி வார்த்தைகள் நிரூபணம் செய்கின்றன. இந்த வீர ஆசான் தனது இறுதி கணங்களுக்காக காத்திருக்கிறேன் என்பது தெரியாது தனது பொறுப்பின் கீழ் உள்ள படைக்கலங்களை ஒழுங்கு படுத்தல்களில் முனைப்பாக ஈடுபட்டு கொண்டிருந்த நேரம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி மாலை கடந்து இரவு ஆகிகொண்டிருந்தது. முள்ளிவாய்க்கால் பகுதியில் அவருடன் இருந்த சில போராளிகளுடன் இறுதிச் சண்டைக்கான ஆயுத வினியோகத்துக்கான தயார்படுத்தல்களில் சுத்திகரிப்பு, சீர்திருத்தம், களஞ்சியம், விநியோகம் என பல முனைப்புக்களில் இருந்த நேரம்.

பல் முனை தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் அவலங்கள் நிறைந்த பாதைகளில் உயிர் காக்க ஓடி கொண்டிருக்கிறார்கள். போராளிகள் தங்கள் தயார்படுத்தல்களில் மும்முரமாகி இருக்கிறார்கள். அப்போதும் அங்கே ஒரு இனத்துரோகம் அரங்கேறுகிறது. என்பது நடந்த சம்பவங்களின் துல்லியம் எமக்கு எடுத்துரைத்து நின்றது. அன்று இரவு சூழ்ந்த அந்த நேரத்தில் எங்கிருந்தோ எமது பாதுகாப்பரனை விட்டு வெளிவந்து வீதியில் ஏறிய இராணுவ அணி ஒன்று சரியாக இலக்கு வைத்து வசந்த் வாத்தியுடைய படைக்கல களஞ்சியத்தை நோக்கி தாக்குதலை தொடுக்கிறது. உடனடியாக தாக்குதலை முடித்து அந்த இடம் விட்டு போகிறது.

பகைவன் அடித்த தானியங்கி 40 mm எறிகணை ஒன்று (Auto dongan ) அவரது களஞ்சிய எரிபொருள் கலன் மீது விழுகிறது. எரிபொருள் காலன் சிதறி தீ அனைத்து இடங்களிலும் பரவுகிறது. அந்த தீயை அணைக்க முடியாத நிலை.. போராளிகளும் வசந்த்தும் முயன்று கொண்டே இருக்கிறார்கள். தீ பரவி களஞ்சிய முழுவதுக்கும் பரவுகிறது. கரும்புகை மூட்டம் வானைத்தொடுகிறது. கட்டுப்படுத்த முடியாதளவுக்கு வெடிபொருள் களஞ்சியத்தின் ஏனைய பகுதிகளும் தீயால் சூழ்கிறது. கட்டுக்கடங்காமல் சூழல் இவர்களுக்கு பாதகமாகி கொண்டு போன நிலையில் ஆயுதம் துடைக்கும் துணி (சிந்தி) மீது தீ மூள்கிறது. எதுவுமே செய்ய முடியாத நிலை
அடுத்தது வெடிபொருள்கள் மீது பரவப் போகிறது நடப்பை புரிந்த வசந்த கட்டளை இடுகிறார். ஓடு, ஓடு வெளீல எல்லாரும் ஓடுங்கடா அனைவரும் வெளியேறி விடுகின்றனர். அருகிருந்த மக்கள், காயப் பட்ட போராளிகள் என அனைவரும் பாதுகாப்பாக அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் வசந்த் தனது பொறுப்பில் இருந்த அந்த வெடிமருந்து களஞ்சியம் தன் முன்னே எரிந்து கொண்டிருப்பதை கூட மறந்து மீண்டும் உள் நோக்கி ஓடுகிறார்.

மாஸ்டர் வேண்டாம்… நெருப்பு எல்லா இடமும் பரவீட்டுது இனி ஆபத்து போகவேண்டாம் போராளிகள் மறித்தார்கள், கெஞ்சினார்கள் ஆனால் வசந்த் மாஸ்டர் கேட்கவே இல்ல. தடுத்தவர்களுக்கு தனது தெளிவான நிலைப்பாட்டை விளக்குகிறார். ” தமிழீழ படைக்கல பொறுப்பாளர் நெருப்புக்கு பயந்து தனது உயிரை காத்து கொள்ள தன்னுடைய கைத்துப்பாக்கியையே விட்டிட்டு ஓடிட்டாராம்” என்று என் எதிர்காலம் பேசக்கூடாது.

இந்த இழி சொல் எனக்கு வேண்டாம். அதை விட இத்தனை காலமாக நான் பயிற்சி குடுத்த போராளிகளுக்கு நான் எதை கண்டிப்பாக போதித்தனோ அதை இனிவரும் காலங்களில் புதிய போராளிகளுக்கு எப்படி போதிப்பேன்…? படைகல பாதுகாப்பு பற்றிய கட்டுக்கோப்பான போதனைகளை நான் போராளிகளுக்கு வழங்கும் போது அவர்கள் என்னிடமே கேள்வி கேட்க மாட்டார்களா? “நெருப்புக்கு பயந்து தானே அன்று நீ உன்னோட பிஸ்டல விட்டிட்டு ஓடினி” இன்று உனக்கு என்ன தகுதி இருக்கு என்று கேட்க மாட்டாங்களா? இதை எல்லாத்தையும் விட இது எனக்காக அண்ண பிரத்தியேகமா தந்த கைத்துப்பாக்கி. இதை விட்டிட்டு அவரிடம் எப்படி போவது…? அவரிடம் எந்த முகத்தை வைத்து பிஸ்டல நெருப்புக்க விட்டிட்டு வந்திட்டன் என்று சொல்வது. என் உயிரிலும் மேலான எனது ஆசிரியத்துவத்தையும் எனது படைக்கல பாதுகாப்பையும் நானே பாதுகாக்க வேண்டும். நில்லுங்கடா நான் எடுத்து கொண்டு ஓடி வாறன்.

போராளிகள் தடுக்க முடியாது அவரது வீர போராளிக்கான குணத்தை கண்டு விக்கித்து போய் நிற்கிறார்கள். எத்தனையோ சமர்க்களங்களில் தீய்க்கு தீயாக எரிந்த நாயகர் வரிசையில் தானும் சேர்வது தெரியாது கைத்துப்பாக்கியை பாதுகாக்க தீயின் நாக்குகளுக்கு போக்குக்காட்டி உள்ளே நுழைகிறார் எரிபொருள் மூண்டு எரிகிறது, வெடிபொருட்கள் வெடிக்கின்றன. சிந்தி கொழுந்து விட்டு எரிகிறது. வாகனங்கள் தீயின் நாக்குகளால் பொசுங்குகின்றன. உள்ளே ஓடிய புலியை பார்த்துக் கொண்டு காத்திருக்கிறது புலியணி. ஆனால் போனவர் மீண்டும் வரவில்லை… காத்திருப்பு அதிகாலை வரை தொடர்கிறது. ஆனால் தீயின் நாக்குகள் அடங்கவில்லை.

நடு இரவு கடந்து விடியலுக்கு நேரம் வரும் போது தீ அடங்கத் தொடங்கி எல்லாம் ஓய்வுக்கு வந்த போது அனைவரும் வசந்த் மாஸ்டரை தேடுகிறார்கள். வோக்கிகள் அனைத்தும் ஒவ்வொரு நிமிடமும் அந்த பெயரை உச்சரிக்கிறது. புலிகளின் அணிகள் தாம் தங்களது வசந்த் மாஸ்டரை இழந்து விட்டோம் என்பது தெரியாது தேடிக்கொண்டிருக்கிறார்கள். எங்கும் கிடைக்காத அவரது தொடர்பு இவர்களை அந்த களஞ்சியத்தின் உட்பகுதிக்குள் தேட வைக்கிறது. தேடல் தொடர்ந்து உள்ளே சென்ற போது களஞ்சியத்தின் உள் பகுதியில் அவரது உடலம் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறது. காலிலிருந்து இருந்து அரைவாசி வயிற்றுப் பகுதி வரை எரிந்து கிடந்தது புலியாசானின் வீர உடலம். தான் நேசித்த கைத்துப்பாக்கியை இறுக்க பற்றி கிடக்கிறது அவரது கரம். தான் நேசித்த விடுதலை போராட்டத்திற்காக தடையுடைக்கும் முது நிலை போராளியாக வாழ்ந்த வசந்த் நெருப்பின் நாக்குகளுள்ளுள் எரிந்து கிடக்கிறார். ஆனாலும் உடலத்தை துளைத்து கிடந்த எறிகணை துண்டுகள் அவரது வீரவுடல் தீயால் வீழவில்லை என்பதை எமக்கு காட்டி நின்றது.

அவர் தனது கைத்துப்பாக்கியை எடுத்து விட்டு வெளியில் வரும்போது எதிரி தொடர்ந்து களஞ்சியம் மீது ஏவிய எறிகணைகளின் துண்டுகள் அவரை வீழ்த்தியிருக்கிறது. அவரால் காயத்துடன் வெளியேற முடியவில்லை அவர் முயன்று கொண்டே இருக்கிறார். ஆனால் அவரது உடலத்தை துளைத்து வெளியேறிய இரும்புத் துண்டுகள் அவரை நிலத்தில் சாய்த்து விட்டது. எறிகணை குண்டுகளால் வீரச்சாவடைந்த பின் தான் தீயின் நாக்குகள் அவரை தீண்ட முடிந்தது… அதுவும் அவரை முழுமையாக அல்ல குறையாகவே தீண்டி சென்றது நெருப்பு.

என்னை சுட்டுவிட்டு ஆயுதத்தை தலைவரிடம் குடுங்கள் என்று தன் கதை முடித்த சீலன் தடம் பதித்து நிமிர்ந்தவர்களில் ஒருவனாக எங்கள் வசந்த் மாஸ்டரும் தான் நேசித்த கைத்துப்பாக்கிகாக மூச்சை நிறுத்தி கொண்டார். தேச தலைவனின் தம்பியாக நேசத்துக்குரியவனாக வாழ்ந்து தேச விடுதலைக்காகவே தன்னை எதிரியின் எறிகணைக்குள் ஆகுதியாக்கி கேணல் குமரிநாடான் அல்லது வசந்த் என்று நிலையெடுத்து எங்கள் மனங்களை வென்று பதிந்து போய் கிடக்கிறார்

நினைவுப்பகிர்வு:- கவிமகன்

நவம்பர் 29, 2015 Posted by | ஈழமறவர், ஈழம், வீரவரலாறு, வைகாசி மாவீரர்கள் | , , , | வசந்த் வாத்தி தமிழீழத்தின் வீர ஆசான் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கப்டன் திவாகினி

கப்டன் திவாகினி தொலைத் தொடர்பாளராய் பணி ஆரம்பித்து நிர்வாகப் பணியும் இடையிடையே போர்களப்பணியும் ஆற்றியவள். அலைகள் விரிந்து ஓயாத அலை மூன்று வீச்சம் கொண்ட தருணத்தில் ஆட்பற்றாக்குறை நிவர்த்தியாய் தருணத்திற்குப் பொருத்தமாய் எல்.எம்.ஜி (L.M.G) கனரக இயக்குநராய் வேவுப்புலியாய் வேண்டிய விதமாய் அடையாளப்பட்டுக் கொண்டவள்.

Cap Thivakini

இயல்புச் சுபாவத்தில் தனித்த கலவை அவள். அதிகம் நெருங்கிக் கொள்ளாதவர்களுக்கு அவள் கடுமை அடிதடி அடாவடி. நெருங்கியவர்களுக்கு காரியவதி கண் பார்த்தால் கை செய்யும் நுட்பக்காரி அன்னியையும் பொன்னியாக்கும் கைவரிசைக்காரி.

மனமுண்டானால் இடமுண்டு என்பதற்கு உதாரண புருசி.

கூட்டுப்பணி எனில் குழப்பம்தான். தனித்த பணியே தடம் வைத்திருக்கிறது. தொடக்க காலத்தில் மனமொப் பாத பணியாகில் இஞ்சி தின்ற குரங்காய் அவள் செய்கைகள் வெளிப்படினும் கட்டளைக்குக் கீழ்பணிந்து காரியம் நடக்கும். பெறுபேற்றில் அது வெளிப்பட்டிருக்கும். மனமொப்பிவிட்டாலோ வானத்திற்குமாய் குதிப்பு நடக்கும். பணிக்கப்பாலும் பறப்பு நடக்கும்.

நிர்வாக பணிகளில் நீண்டகாலம் அடக்கப்பட்டு விட்டதாய் அங்கலாய்த்தவர்களுக்கு ஓயாத அலைகள் மூன்று அலைக்கரம். அத்தனை பேருக்குமான சண்டைக்கள வாய்ப்பைத் திறந்து விட்டது என்று குறிப்பிடும் அளவிற்குஅநேகமான நிர்வாகப் பணியாளருக்கு வாய்ப்புக் கொடுத்த வள்ளன்மை கொண்டது. திவாகினிக்கு ஓயாத அலைகள் மூன்றுதான் போர்கள வாய்ப்பை கொடுத்த முதற்களம் அல்ல. ஏலவே ‘சத்ஜெய” களத்தில் அணித்தலைவியாயும் கொம்பனி மேலாளரின் உதவியாளராகவும் பணியாற்றிய அனுபவமிருந்தது. அதிகாரிகள் கற்கைநெறிக்காய் தெரிவாகி கற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் (1997) “ஜெயசிக்குறு” ஜெயம் என்ற போது கற்றுக் கொண்ட காட்டுப்vபயிற்சிகளைக் கொண்டு களமாடிய அனுபவமுமிருந்தது. எனினும் சத்ஜெயக் களமோ ஜெசிக்குறுக் களமோ அவளிற்கு அவ்வளவாய் சரிப்பட்டு வரவில்லை.

ஓயாத அலைகள் மூன்றே அவளது போர்முகத்தை வெளிப்படுத்தியது. ஆட்பற்றாக்குறை மட்டுமன்றி அது அதுபற்றிய அறிவு கொண்டோர் அருந்தலாய் இருந்த நெருக்கடியான அக்காலமதில் நிலமை புரிந்து “இடனறிந்து” துணிந்த போர்குணமே அவளது நிமிர்வு.

அத்தியாயம் முடிந்தாய்அரணிட்டு இறுமார்ந்திருந்த பகுதிகளை அடுத்தடுத்து விடுவித்தபடியே சீறிக்கொண்டிருந்த வீச்சக் காற்றில்விடுவிக்கப்பட்ட பகுதிகளை தக்கவைத்துக் கொள்ளதக்க தற்காப்பு வேண்டும் விதமாய் நீண்டுகொண்டேயிருந்தது. அப்போது பல மைல்கள் பல பத்துப் பேருமின்றி ஒரு சில கனரகங்களையும் மன ஓர்மத்தையுமே மாற்றாய்க் கொண்டிருந்த காலம் அது.

திவாகினி எல்.எம்.ஜி பற்றி தான் சுயமாய் அறிந்துகொண்டே சிற்றறிவோடு துணிவாய்ப் பணியேற்றாள். வேண்டும்போது வேவுப் புலியாயும் மாறிப் போனாள். மணலாறு, கலகலப்பையாறு, பப்பாசிப் பொயின்ற், சத்துருக்கொண்டான், சேமடு என்று எல்.எம்.ஜி யோடு பவணி வந்தாள். மரையடித்த குளத்திற்கு பணி நகர்ந்தபோது அணித் தலைவியாய், வேவுப் புலியாய் கனரகம் வேண்டிய போது கனரக இயக்குநராய் களமிறங்கினாள். ஓயாத அலைகள் மூன்று வடபோர்முனை நோக்கி திரும்பியபோது அவள் உற்சாகம் மென்மேலும் கரைபுரண்டு கொண்டது. விடுவிப்புச் செயற்பாட்டு அணியாயும் அழைப்பு வந்தது சொந்த மண்ணிற்கே. சொந்த மண்ணின் சுகம்! உணர்ந்து கொண்டர்களுக்குப் புரியும். திவாகினியும் விதி விலக்கல்ல.

மருதங்கேணி மையப்பகுதி வீடு விக்கப்படாது சீறிச்சினந்து கொண்டிருக்கையில் உள்நுழைந்து உற்சாகம் தந்தவள். முகாவில், இயக்கச்சி, பளை என்று பணிசெய்து முகமாலையில் தரித்து நின்றபோதுதான் அது நிகழ்ந்தது.

04.05.2000 “சட்” சிறிய சத்தம். நிலையிலிருந்தவளிடம் நிசப்தம்! ஓய்விலிருந்தபோது அது நிகழ்ந்தது. அவள் முகமாலை மண்ணை முத்தமிட்டுக் கொண்டாள்.

”ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தான் செயின்”

”தகுந்த காலத்தைக் குறித்து இடனறிந்து செய்வானாயின் அவன் உலகமெல்லாம் பெற நினைத்தானாயினும் பெறலாம்” என்ற திருவள்ளுவரின் திருவரிகள்கப்டன் திவாகினியின் பட்டறிவாய் படிப்பினையாய் பதிவாகியது.

”நான் வீரச்சாவடைந்த பின் என் இக்குறிப்பினை வாசிக்கும் யாராக இருந்தாலும் என் ஆசைத் தங்கையை என் வழியில் அழைத்து வாருங்கள்.”

புதிதாய் பிறக்கும் புலிகளுக்குள் அவள் ஆன்ம வரிகள் அர்த்தம் கொள்ளும்.

நினைவுப்பகிர்வு:- அகநிலா.
எரிமலை இதழிலிருந்து…..

மே 29, 2015 Posted by | ஈழமறவர், ஈழம், வீரவரலாறு, வைகாசி மாவீரர்கள் | , , , | கப்டன் திவாகினி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கரும்புலி மேஜர் அரசப்பன் வீரவணக்க நாள்

கரும்புலி மேஜர் அரசப்பன் வீரவணக்க நாள் இன்றாகும்.

BT Maj Arasappan

மட்டக்களப்பு மாவட்டத்தில் 29.05.1999 அன்று தேசத்துரோகி ‘ராசிக்’ மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் அரசப்பன் ஆகிய கரும்புலி மாவீரரின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மே 29, 2015 Posted by | ஈழமறவர், ஈழம், கரும்புலிகள், காணொளிகள், வீரவணக்கம், வீரவரலாறு, வைகாசி மாவீரர்கள் | , , , , , , | கரும்புலி மேஜர் அரசப்பன் வீரவணக்க நாள் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது