அழியாச்சுடர்கள்

இராணுவ முகாமில் பெண்கள் தனியாகப் பிரிக்கப்பட்டோம் – ஒரு இளம் பெண்னின் மனதை உருக்கும் சாட்சி ! #இனப்படுகொலை #முள்ளிவாய்க்கால் #ஈழமறவர் #ஈழம் #JusticeForTamilGenocide #Mullivaaikkaal #TamilGenocide

ஒரு மனித அவலத்தின் கடைசிக் கணங்களில் அங்கு சாட்சியாக நின்ற ஒரு பெண்ணின் அணுபவப் பகிர்வுதான் ‘முள்வேலி நாட்கள்’ என்ற இந்தப் பதிவு.

ஒரு கொடூரமான இன அழிப்பின் வாழுகின்ற சாட்சி ‘மித்ரா’.

முள்ளிவாய்க்காலின் கொடிய அணுபவத்தைப் பெறாதவர்கள் ஒரு தடவை அங்கு சென்று திரும்பலாம் இந்தப் பெண்ணின் சாட்சியைக் கேட்கின்ற பொழுது..

மே 18, 2020 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர், முள்ளிவாய்க்கால் | , , , , , | இராணுவ முகாமில் பெண்கள் தனியாகப் பிரிக்கப்பட்டோம் – ஒரு இளம் பெண்னின் மனதை உருக்கும் சாட்சி ! #இனப்படுகொலை #முள்ளிவாய்க்கால் #ஈழமறவர் #ஈழம் #JusticeForTamilGenocide #Mullivaaikkaal #TamilGenocide அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

#முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு #வீரவணக்கம் ! #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #Maaveerar #Tamil #Eelam #Mullivaikkal #ltte #Genocide #May18 #TamilGenocide

leader prabakaran tribute 4

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார்.

மானிடத்தின் விடுதலையை நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.”

ltte leaders dead


leader prabakaran tribute

praba god
எம்மைப் பொறுத்தவரையில் இறுதி யுத்தில் முள்ளிவாய்க்கால் வரை போராடியவர்கள் மட்டுமல்ல புலிகளோடு வாழ்ந்த அனைத்து மக்களும் , சரணடைந்து கொல்லப்பட்டவர்களும் ,விடுவிக்கப்பட்டவர்களும் ,எஞ்சி வாழ்பவர்களும் அதில் பங்காளிகள் தான் அனைவரும் போற்றுதற்குரியவர்கள் தான் !

Mullivaikal Remembrance 2

மே 18, 2020 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர், பிரபாகரன், முள்ளிவாய்க்கால், வீரவணக்கம் | , , , , , , , | #முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு #வீரவணக்கம் ! #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #Maaveerar #Tamil #Eelam #Mullivaikkal #ltte #Genocide #May18 #TamilGenocide அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

போர்க்கால ஊடகப்பணி என்பது உயிரை வெறுத்துப் பணி செய்வது ! #சுத்துமாத்துக்கள் #துரோகிகள் #இனப்படுகொலை #முள்ளிவாய்க்கால் #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #தமிழர் #Mullivaikkal #ltte #Tamil #Eelam #Traitors #TNAMedia #Genocide #May18 #TamilGenocide #மே18இனப்படுகொலைநாள் #தமிழினப்படுகொலைநாள் #கோமாளி_ஸ்டாலின் #தமிழினதுரோகிதிமுக #திமுக #தமிழர் #DMK #MKStalin #Justice4TamilGenocide #ReferendumForTamilEelam #JusticeForTamilGeonicide #FreeTamilEelam #JusticeForTamilEelam #May18TamilGenocide #TamilEelam #tamilgenocide #May18 #Mullivaaikkaal #TamilGenocide #RememberMay18 #SriLanka

2002 ஆம் ஆண்டு ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்திற்கு நான் பணிக்காக சேர்ந்த போது, முதலில் அங்கே எனக்கு பத்திரிகை வடிமைப்புப் பணியே கொடுக்கப்பட்டது. அதனால் கணினிப்பகுதியிலேயே பணியாற்றத் தொடங்கி இருந்தேன். ஆனாலும் எனக்கு செய்திப்பிரிவில் பணியாற்ற வேண்டும் என்று இருந்த ஆர்வம் என்னை குறுகிய கால இடைவெளிக்குள் செய்திப்பிரிவுக்கு மாற்றி விட்டிருந்தது. அதன் பின்னரே நான் அலுவலகச் செய்தியாளராக ஈழநாதத்தில் பணியைத் தொடங்கினேன்.

அக்காலத்தில் வன்னியின் அனைத்து பாகங்களிலும் செய்திகளை சேகரிப்பதற்காக எம்மில் பலர் வன்னி முழுவதிற்கும் பயணிக்க வேண்டி இருந்தது. அதில் நானும் ஒருவனாக பணியாற்றினேன். அந்த நேரம் தாயகப் பிரதேசம் எங்கும் வியாபித்திருந்த ஆள ஊடுருவும் படையணியின் தாக்குதல்களில் இருந்தும், வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் இருந்தும் எம்மைப் பாதுகாக்க வேண்டிய பெரும் ஆபத்திருந்தது.

இது எங்களுக்கு மட்டுமல்ல தாயகம் எங்குமே இந்த ஆபத்து நிறைந்து கிடந்தது. அதுவும் பெருங்காடுகள் அடங்கிய வீதிகளால் பயணிக்கும் அனைவரைக்கும் அச்சம் நிறைந்த பயணமாகவே இருக்கும். ஆள ஊடுருவும் படையணியைச் சேர்ந்த இலங்கைப்படைகள் விடுதலைப்புலிகளின் சீருடையில் இத்தாக்குதல்களை நடாத்துவதால், பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருந்தது. அது மிகப்பெரிய சவலாகவும் அமைந்திருந்தது. இக்காலங்களில் உயிராபத்தையும் உணராது நானும் என் சக ஊடகவியலாளர்ளும் பணியாற்றினோம். உண்மையில் போர்க்கால ஊடகப்பணி என்பது ஆபத்துக்கள் நிறைந்த பணி. ஆனாலும் மனம் நிறைவான பணி.

ஈழநாதம் மக்கள் நாளிதழின் இறுதிக் காலச் செயற்பாடுகள்?

இறுதிக் காலத்துக்கு எமது பணிகள் நகர்த்தப்படுவதற்கு முன்பு எமது பத்திரிகையில் பல மாற்றங்கள் வந்து பத்திரிக்கை புது மிடுக்குடன் வெளிவந்து கொண்டிருந்தது. நீண்டகாலமாக கறுப்பு வெள்ளை வண்ணத்தில் வந்து கொண்டிருந்த ஈழநாதம் குறித்த சில வருட இடைவெளியில் வண்ணப் பக்கங்களைக் கொண்ட பத்திரிகையாவும், மக்களுக்கு செல்லும் வகையில் வளர்ந்திருந்தது. இதற்காக எமது பத்திரிகையின் பொறுப்பு நிலையில் இருந்த பொறுப்பாளர்களும் பணியாளர்களும் உறுதியாக பணியாற்றினார்கள்.

2008 இல் உச்சகட்டத் தாக்குதல்கள் ஆரம்பித்து எமது பிரதேசங்கள் இலங்கைப் படைகள் வசம் ஆகிக்கொண்டு வந்த காலத்தில் , கிளிநொச்சில் இருந்து நாம் நகர வேண்டிய சூழல் ஏற்பட்டது, கிளிநொச்சியில் இருந்து தருமபுரத்திற்கு வந்து ஈழநாதம் நிறுவனம் இயங்கிய பொழுது ஓரளவு செயற்பாடுகளை செய்யக்கூடியமாதிரி இருந்தாலும் 2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அதாவது ஒவ்வொரு இடங்களாக இடம்பெயரும் போது ஈழநாதத்தின் இயந்திரங்களையும் கணனிகள் மற்றும் அச்சுத்தாள்களையும் பாதுகாப்பாக கொண்டுசெல்வதற்கு மிகவும் சிரமப்பட்டது மல்லாமல் சில இடங்களில் எறிகணைத் தாக்குதலுக்குள்ளாகி ஈழநாதத்தின் முக்கிய இயந்திரங்களையும் இழக்க வேண்டி வந்தது. அதனால் எங்களின் வளங்கள் குறுகத் தொடங்கின.

அத்துடன் எரிபொருளினை பாதுகாப்பது என்பது மிகவும் சிரமம். இடம்பெயர்ந்து மக்கள் நெருக்கமாக வசிக்கும் இடங்களில் எரிபொருட்களை களஞ்சியப்படுத்த முடியாமல் படையினர் முன்னேறிவரும் வேளையில் அதனை அப்படியே கைவிட்டு விட்டு அடுத்த இடத்தினை நோக்கி செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டிருந்தது. தருமபுரம், உடையார்கட்டு, சுதந்திரபுரம், தேவிபுரம், இரணைப்பாலை, புதுமாத்தளன், வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால் இறுதியாக முள்ளிவாய்க்கால் வரைக்கும் ஈழநாதம் தனது ஊடகப் பணியை பலத்த சிரமங்கள் மத்தியிலும் செய்திருந்தது.

எப்போது பத்திரிகைப் பாதிப்பு முழுவதும் நிறுத்தப்பட்டது

19 பிப்ரவரி 1990 அன்று யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வ நாளிதழாக வெளிவந்த எமது ஈழநாதம் நாளிதழ், பல்வேறு இடையூறுகளுக்கும் தடைகளுக்கும் மத்தியில் பத்தொன்பது வருடங்கள் இடைவிடாத நாளிதழாக தொடர்ந்து வெளிவந்து, 2009 மே 10 அன்று தனது பணியினை முழுதாக நிறுத்திக் கொண்டது.

ஈழநாதப் பணியாளர்களின் அல்லது போர்க்கால ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகள்?

நிச்சயமற்ற வாழ்வு. எப்போது சாவு வரும் என்றே தெரியாது. செய்திகள் சேகரிக்கும் அதேநேரம் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக நகர்த்தவேண்டும். மிகக்குறைந்தளவான பணியாளர்களே போர்க்காலத்தில் பணியாற்றியிருந்த வேளையில் ஒருவர் பல வேலைகளை செய்யவேண்டியிருந்தது. குறிப்பாக என்னை எடுத்துக் கொண்டால் நானே செய்திகள் சேகரிப்பது, புகைப் படங்கள் எடுப்பது, கணனியில் வடிவமைப்புப் பணியை செய்வது, பத்திரிகை விநியோகம் செய்வது, படையினர் முன்னேறிவரும் வேளைகளில் பாதுகாப்பாக இயந்திரங்களை நகர்த்துவது என பணியாற்ற வேண்டி இருந்தது. குறித்த சிலரே பணியில் இருந்ததால், பல பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக இருந்தோம்.

நீங்கள் இனவழிப்புப் போரின் கண்கண்ட சாட்சி அந்த வகையில் முள்ளிவாய்க்காலில் இனவழிப்புப் படை என்ன செய்தது?

  • போரில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தியமை
  • படையினரின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றவர்களை பிடித்துபணயமாக படையினரின் வேலிகளின் அருகில் வைத்திருத்தமை.
  • அவர்களை முன் நகர்த்திக் கொண்டு பின்னால் நகர்ந்து வந்து விடுதலைப்புலிகளின் படையணிகள் மீது தாக்குதல் தொடுத்தமை.
  • முன்னேறி வந்த படையினர் பதுங்கு குழிகளில் இருந்த மக்கள் மீது கைக்குண்டுகளை வீசி கொன்றழித்தமை
  • பாதுகாப்பு வலய பகுதியில் அமைந்திருந்த வைத்தியசாலையினை முற்றுகையிட்ட படையினர் அங்கிருந்த காயமடைந்தவர்களை சுட்டுப்படுகொலை செய்தமை
  • அத்துடன் துப்பாக்கியால் மிகக்கிட்டிய தூரத்தில் இருந்து மக்களை நோக்கி குறிபார்த்து சுடுவதன் மூலமும் பலர் கொல்லப்பட்டிருந்தனர்.
  • வைத்தியசாலைகள் மீதான தாக்குதல் – உடையார்கட்டு, சுதந்திரபுரம், வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன். முள்ளிவாய்க்கால் மற்றும் இறுதியாக, முள்ளிவாய்க்கால் அரசினர் தமிழ் தலைவன் பாடசாலையில் இயங்கிய மருத்துவமனை போன்ற வற்றின் மீது நேரடித்தாக்குதல்களை செய்ததை முக்கியமாக குறிப்பிட வேண்டும்.
  • இதில் கொடுமை என்னவென்றால், வைத்தியசாலைகளில் ஏற்கனவே படையினரின் தாக்குதல்களில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்ற பலர் மீண்டும் தாக்குதல் நடாத்தியதில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
  • இதில் முக்கியமாக சாட்சியம் ஒன்றைப் பதிவு செய்கிறேன். நான் படையினரின் தாக்குதலில் படுகாயமடைந்து முள்ளிவாய்க்கால் பகுதியில் இயங்கிய முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுக் கொண்டிருந்த போது, 29.04.2009 மாலை கடற்படையினரும் தரைப்படையினரும் இணைந்து தாக்குதல் நடாத்தியதில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை பெரும் சேதத்துக்கு உள்ளானது. நான் கட்டிலில் இருந்து தூக்கி எறியப்பட்டிருந்தேன். அந்தத் தாக்குதலினால் எனக்கு ஒன்றும் ஆகவில்லை எனிலும் எனது நெஞ்சுக் காயம் பயங்கரமாக வலித்தது. அவ்விடத்தில் மீண்டும் அடி பட்டதினால் வலியை தாங்க முடியாது இருந்தது. இருந்தும் நான் தலையை நிமிர்த்தி பார்த்த போது நான் படுத்திருந்த கட்டிலுக்கு அருகில் இருந்த பலர் சாவடைந்திருந்தனர்.
இதற்கான ஆதாரங்களை நீங்கள் ஒரு ஊடகவியலாளனாக சேகரித்துள்ளீர்களா ?

நிச்சயமாக, நான் பணியில் காயமடைந்ததினால் பல ஆவணங்கள் தவறி இருந்தாலும் பெரும்பாலானவை இப்போதும் இருக்கின்றது. போரில் தடைசெய்யப்பட்ட குண்டுகளை மக்கள் மீது வீசி கொன்றழித்ததை நேரில் கண்டிருக்கின்றேன். அதனுடைய செய்தி மற்றும் ஒளிப்படங்களை சேகரித்தும் வைத்திருக்கின்றேன்.

இனவழிப்புத் தாக்குதல்களை அரச படைகள் செய்த காலப்பகுதியில் அரச சார்பற்ற நிறுவனங்களின் பணி எவ்வாறிருந்தது?

இது கொஞ்சம் விரிவாகவே சொல்லவேண்டும். தனியாக ஒரு பகுதியாகவே இப்பணியினை எழுதவேண்டும். முழுமையாக இதில் சொல்லமுடியாது.

தமிழர் புனர்வாழ்வுக் கழக தொண்டர்கள் அர்ப்பணிப்பு மிக்க பணியினை செய்திருந்தார்கள். ஒவ்வொரு எறிகணைகளும் மக்களின் உயிரைக்குடிக்கும். அதேவேளை பலரை காயப்படுத்தியுள்ள நிலையில் அவர்களை தூக்கி வைத்தியசாலைக்கு கொண்டு செல்வது தொடக்கம் இறந்தவர்களை புதைக்கும் நடவடிக்கையினையும் செய்து வந்திருந்தனர். உண்மையில் தொற்று நோய் வராமல் அல்லது குறைவாக இருந்தமைக்கு இவர்களின் உழைப்பும் அதில் அடங்கியுள்ளது.

தங்களின் குடும்பங்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்திக் கொண்டு மக்களுக்கு உதவி புரிவது என்பது பலராலும் இயலாத காரியம். அவ்வேளை சிறிலங்கா அரசின் உணவுத்தடையிலும் பொருளாதாரத் தடையிலும் மக்களுக்காக பசியாற்றும் பணியினை செய்தமையை அங்கிருந்த எவரும் மறந்துவிடமாட்டார்கள். கஞ்சி வழங்கல் சேவையினை ஒவ்வொரு இடங்களிலும் நிறுவி மக்களின் பசியினை போக்குவதற்கு அயராது உழைத்திருக்கின்றார்கள்.

2007 ஆம் ஆண்டு மன்னாரில் தொடங்கிய யுத்தம். முள்ளிவாய்க்கால் வரைக்குமான இவர்களின் அயராத உழைப்பினை நேரில் கண்டிக்கின்றேன். இடம்பெயரும் மக்களையும் அவர்களது உடைமைகளையும் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்த்துவதற்கு தமிழர்புனர்வாழ்வுக்கழகம் இலவசமாக உதவி செய்திருந்தது. இந்நிறுவனத்தின் தொண்டர்களை பெரிதும் மதிப்புமிக்கதாகவே நான் கருதுகிறேன். யுத்தம் எங்களின் வாழ்வை நொடிநொடியாக துவம்சம் செய்து கொண்டிருக்கும் வேளையில் கூட அயராது மக்களுக்கான மனிதாபிமான பணியினை செய்து முடித்தமையை இங்கே நினைவு படுத்துகின்றேன்.

சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் பற்றி ?

உண்மையில், அந்த நிறுவங்கள் பற்றி பேசவே மனம் வெறுக்கிறது. இலங்கை அரசு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களை உடனடியாக போர் பிரதேசங்களை விட்டு வெளியேறும் படி கூறிய போது, இங்கே ஒரு இனவழிப்பு நடவடிக்கை நடந்து கொண்டிருக்கின்றது என்பதை மறந்து வெளியேறினார்கள். எமது மக்கள் எத்தனையோ முறை எத்தனையோ வழிகளில் நடப்பதை, நடக்கப்போவதை புரிய வைத்தும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தவிர்ந்த ஐநா சார்ந்த நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் வெளியேறின. உண்மையில் இந்த நிறுவங்கள் வெளியேற்றப்பட்டதன் பின்பே பாரிய அளவிலான போரியல் சட்டங்களுக்கு முரணாக தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் கொண்டு இனவழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது இலங்கை அரசு.

உங்களின் ஊடகப்பணியில் அதி துயர சம்பவமாக எதை கருதுவீர்கள்?

என் நண்பனின் இழப்பு. என் அருகிலேயே உயிரைவிட்ட அந்த நாள் என்றைக்கும் என்னால் மறக்க முடியாது. ஈழநாதம் பத்திரிகையின் இயந்திரப்பகுதியில் பணியாற்றி வந்தவர் சுகந்தன் என்றழைப்படும் சுசிபரன். 25.04.2009 அன்று நானும் மோகன் அண்ணையும் சுகந்தனும் வலைஞர்மடம் சென்று கொண்டிருக்கையில் சிறிலங்கா படையினரின் சினைப்பர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

நான செய்தி சேகரிக்கச் செல்லும் இடங்களுக்கு என்னுடன் சுகந்தனும் வருவதுண்டு. அங்கு காயமடைந்த பொதுமக்களை எப்படியாவது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் எனத் துடிப்பவர்களில் சுகந்தனும் ஒருவர். அன்று என் கண்முன்னே படுகொலை செய்யப்பட்டமை மிகுந்த வேதனையான விடயம்.

துப்பாக்கி ரவையால் சுகந்தன் தாக்கப்பட்டு விழும் போது, சுகந்தன் உயிருடன் இருப்பார் என நினைத்தே அவரைக் காப்பாற்ற முயற்சி செய்தேன். ஆனால் சுகந்தன் என் கண் முன்னே சாவடைந்திருந்தான். அவனைக் காப்பாற்றும் முயற்சியின் போது தான் நான் படுகாயமடைந்தேன். நான் படுகாயமடைந்தாலும் எனது நண்பன் உயிருடன் இருந்திருந்தால் மனதுக்கு நிம்மதியாக இருந்திருக்கும், இக்காயத்தைப் பற்றி கவலை கொண்டிருக்க மாட்டேன். ஆனால் அவன் என்னை விட்டு சென்று விட்டான். ஆறாத வடுக்களாக இன்றும் சில இரும்புத்துணடுகள் என் உடலில் காணப்படுகிறது. சுகந்தன் இல்லாத தருணங்கள் மட்டுமே வலியைத் தருகிறது.

ஈழநாத பணியாளர் சுகந்தன்

சிங்களப்படையின் தடைசெய்யப்பட்ட ஆயுதப் பயன்பாட்டை உறுதி செய்யும் ஆவணம் எதாவது உண்டா?

ஆம்.

‪2008 -11.29 அன்று அதிகாலை கல்லாறு கிராமம் மீதான கிளஸ்ரர் குண்டுத்தாக்குதல் செய்தியினை சேகரித்திருந்தேன். காலையிலேயே கிளஸ்ரர் குண்டு தாக்குதல் தான் என்று புலிகளால் அடையாளம் காணப்பட்டிருந்தது. அதனுடைய ஒளிப்படங்கள் என்னிடம் இருக்கின்றது. அன்றைய நாளில் என்ன நடந்தது என்பதை விரிவாக இதில் சொல்ல விரும்புகிறேன். ‬

“அன்றைக்கு 29 ஆம் திகதி நவம்பர் மாசம் 2008 ஆம் ஆண்டு. அதிகாலை 1.35 மணியிருக்கும். மக்கள் அந்த நேரத்திலயும் இடம்பெயர்ந்து வந்துகொண்டிருந்தார்கள். எங்கட வீடு விசுவமடுவில இருந்தது. நான் வீட்ட படுத்திருந்தனான். அந்த நேரம் திடீர் எண்டு வந்த மிக் விமானங்கள் எம்மைத் தாண்டி சில மைல்கள் தூரத்தில் குண்டு போட்ட சத்தம் கேட்டது. எழுந்து பார்த்த போது, எமது பிரதேசம் எங்கும் பகல் போல காட்சி தந்தது.

ஏனெனில் வந்த மிக ரக விமானங்கள் பரா வெளிச்சக் குண்டுகளையும் வீசி இருந்தன. அவ்வெளிச்சம் எமது பிரதேசம் எங்கும் சூரிய வெளிச்சத்தை போல காட்சி தந்தன விமானங்கள் மிக அருகில் எங்கயோ தான் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டன என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.

அந்தளவுக்கு விமானங்களின் இரைச்சல் ஒருவித பயத்த எனக்குள் ஏற்படுத்தியிருந்தது. பயம் இருந்தாலும் என்ர வேலையச் செய்ய வேணும் எண்டு நினைத்துக் கொண்டு, உந்துருளியில் விசுவமடுவில் இருந்து சுண்டுக்குளம் சந்தி நோக்கிப் போனேன். நான் போற திசையிலயே விமானங்கள் தாக்குதல்கள் நடத்துவது எனக்குத் தெரிந்தது. அதுமட்டுமல்லாது , தாக்குதல் நடக்கிற இடம், இடம்பெயர்ந்த மக்கள் அதிகமாக வாழ்ந்த முகாம். இந்தத் தாக்குதலில மக்களுக்குத்தான் அதிக பாதிப்புக்கள் வந்திருக்கும் என்று என் மனம் சொல்லிக்கொண்டிருந்தது.

இரண்டாவது தடவை குண்டுத்தாக்குதல் நடக்கும் போது நான் சுண்டிக்குளம் சந்திக்குப் போயிருந்தேன். இந்தத் தாக்குதலில் மக்கள் காயப்பட்டிருந்தால் தருமபுரத்தில் இயங்கி வந்த கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்குத் தான் கொண்டு வருவார்கள் என்று எண்ணி அங்கே போனேன். ஆனால் அங்கே எந்த காயக்காறரும் கொண்டு வரப்படவில்லை. அவசரமாக வரப்போகும் காயக்காறர்களை காப்பாற்றும் நோக்கில் மருத்துவர்களும் மருத்துவமனைப் பணியாளர்களும் தயாராக இருந்தார்கள். நான் திரும்பி தாக்குதல் நடந்த பக்கமாக செல்கின்றேன். அப்பொழுது எனது உந்துருளிக்கு மண்ணெண்ணெய் முடிந்து இடைவெளியில் நின்றுவிட்டது.

அந்த நேரத்தில யாரிட்ட உதவி கேட்கிறது..? நான் யோசிச்சிக்கொண்டு நிற்க, இன்னொரு உந்துருளி தாக்குதல் நடந்த பக்கமிருந்து வேகமா வந்தது. அவர்களிடமே நான் தாக்குதல் நடந்த இடத்தை பற்றி அறிந்து கொண்டேன். அதை விட அங்கே இருந்த மோசமான நிலையையும் உணர்ந்து கொண்டேன். எனது உந்துருளியின் இயங்கு நிலை இல்லாது போனதால் என்னால் தாக்குதல் நடந்த இடத்துக்கு உடனடியாக செல்ல முடியவில்லை. ஆனாலும், மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக அங்கிருந்து அவசர உதவி வண்டிகளை அனுப்பி காயமடைந்தவர்களை மீட்டெடுத்தார்கள்.

நானும் என் நண்பனான இறுதிப் போர் வேளையில் பணியாற்றிய பத்திரிகையாளரான லோகீசனும் காலையில் தான் கல்லாறு பகுதிக்கு போனோம். அங்கே சில குண்டுகள் வெடித்து சிதிறிப் போய் கிடந்தன. ஆனால் ஒரு குண்டு கொட்டிலுக்கு முன்னால் நிலத்துக்குள் அரைவாசி இறங்கியிருந்தது. அவற்றை நாங்கள் படம் எடுத்த தருணத்தில் தான் அங்கே வந்திருத்த, ஊடகப்பிரிவுப் போராளிகளால் அந்தக் குண்டு தான் கொத்துக் குண்டு என்று அடையாளம் காட்டப்பட்டது. அங்கு தான் நான் முதன் முதலாக அவ்வகையான தடைசெய்யப்பட்ட குண்டைக் கண்டேன்.

கொத்துக்குண்டு முதல் வெடிப்பின் பின் பல குண்டுகளாக பிரியும் காட்சி

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக கண்கண்ட சாட்சியா நீங்கள்?

ஒம், தமிழீழ விடுதலைப்புலிகளின் வவுனியா மாவட்ட கட்டளைத்தளபதியாக இருந்த லோறன்ஸ் மற்றும் வவுனியா மாவட்ட கட்டளைப்பணியக தளபதிகளில் ஒருவரான கி.பாப்பா ஆகியோர், மே 17 ஆம் நாள் அன்று என் முன்னாலே வட்டுவாகல் ஊடாக படையினரின் பகுதிக்குச் சென்றனர். அவர்கள் இருவரும் காயமடைந்தவர்கள் என்பதால் நான் இருந்த பகுதியிலேயே படையினர் தடுத்து வைத்திருந்தனர். ஆனால் அதன் பின்னர் அவர்கள் எங்கே கொண்டு செல்லப்பட்டார்கள் என்பது எனக்குத் தெரியாது. குறித்த சில நேரங்களில் என்னை மருத்துவமனைக்கு இராணுவம் அனுப்பி இருந்தது. அதனால் அவர்களுக்கு என்ன ஆனது என்பது எனக்குத் தெரியவில்லை.

ஊடகவியலாளர் என்ற வகையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய அல்லது இனவழிப்புப் பற்றிய ஆவணங்கள் எதாவது செய்திருக்கிறீர்களா?

” Witness from the war zone “என்ற ஆவண நூல் ஒன்றினைச் செய்து வருகின்றேன். விரைவில் வெளியிட இருக்கின்றேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் சமநேரத்தில் வெளிக் கொண்டு வருவதற்கான முயற்சியில் இப்போது இருக்கின்றேன். அதைவிட போரில் தடைசெய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுத்தாக்குதல், மற்றும் வைத்தியசாலை மீதான தாக்குதலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கண் கண்ட சாட்சியாளராக பகிரங்கப்படுத்தியிருக்கின்றேன்.

இனவழிப்புத் தாக்குதல்களில் சாகடிக்கப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றி?

ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலம் தொட்டு பல ஊடக பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். தராக்கி சிவராம், நடேசன், நிமலராஜன், சுகிர்தராஜன், சுதாகரன் என பல ஊடகப் பணியாளர்கள் சாகடிக்கப்பட்டிருந்தார்கள். அதைப்போலவே இறுதி சண்டைகளின் உக்கிர காலத்தில் அதாவது 2009 ஆம் ஆண்டில் தேவிபுரம் பகுதியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்கள் எறிகணைத்தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்டிருந்தார். போரின் உக்கிரத்தை சர்வதேசமெங்கும் கொண்டு செல்லவேண்டும் என்று அயராது உழைத்தவரகளில் அவரும் ஒருவர் என்பது இங்கே முக்கியமாக குறிப்பிட வேண்டியது. இதை விட தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி ஊடகப் போராளியான இசைப்பிரியாவின் படுகொலை இனவழிப்பின் உச்சம் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. இவ்வாறு பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில், பலர் வலிந்து காணாமலும் ஆக்கப்பட்டுள்ளனர்.

புலிகளின் குரல் /தமிழீழ வானொலிப் பொறுப்பாளார் தமிழன்பன் (ஜவான்) மற்றும் செய்தியாசிரியர் இறைவன் (தவபாலன் ) ஆகிய இருவரும் தாயக விடுதலைப் போர் முள்ளிவாய்க்காலில் மௌனித்த போது காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பற்றி இன்று வரை தகவல் தெரியவில்லை. இவர்கள் உயிருடன் இருந்திருந்தால் இனவழிப்பின் ஆவணங்களை வெளிக்கொண்டு வந்திருப்பதுடன் அடுத்த தலைமுறைக்கு எம் போராட்டத்தின் நியாயப்பாட்டையும் எம்மினம் மீது இலங்கை அரசு செய்த போர் வெறியின் தன்மைகளையும் பக்குவமாக எடுத்துச் சொல்லியிருப்பார்கள்.

இதே நேரம் எமது ஈழநாத ஊடகப்பணியாளர்களையும் இங்கே குறிப்பிடவேண்டும்.

மகேஸ்வரன், சுகந்தன், அன்ரனி, தர்சன், அன்ரன் பெனடிக், மேரி, டென்சி ஆகிய எமது பணியாளார்களை இனவழிப்பில் பறி கொடுத்துள்ளது ஈழநாதம் நாளிதழ் குடும்பம்.

சிறுவர்கள் மீதான தாக்குதல்கள் பற்றி?

கருவறையில் இருந்த குழந்தையைக்கூட இனவழிப்பு விட்டுவைக்கவில்லை. அதற்கான ஆதாரத்தினை எனது ஒளிப்படம் ஒன்றில் காணலாம். இறுதிக் காலத்தில் எமது மக்கள் பட்டினியால் சாகும் நிலைக்கு தள்ளப்பட்ட கொடிய நிகழ்வுகளை முள்ளிவாய்க்கால் சந்தித்தது. பசி என்பது போரை விட கொடியது. ஆபத்துக்கள் வரும் என்று தெரிந்தும் கஞ்சி எங்கே குடுக்கிறார்களோ அங்கே பல மணித்தியாலங்கள் காத்திருந்து பசியாறினார்கள்.

பசியோடு கஞ்சிக்காக வரிசையில் நிற்கும் போதெல்லாம் படையினரால் ஏவப்படும் எறிகணைகள் சிறுவர்களின் உயிரை குடிக்கும். அந்த இருண்ட நாட்கள் மீண்டும் ஒரு போதும் வரக்கூடாது. குறிப்பாக பொக்கணைப் பகுதியில் குழந்தைகளுக்கான பால்மா பைக்கற்றுக்கள் வாங்குவதற்கு வரிசையில் நின்ற 40 பேருக்கு மேலானவர்கள் ஒரே நேரத்தில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். அதில் கர்ப்பிணிப் பெண்களும், பச்சிளம் பாலகர்களும் சிறுவர்களுமே அடங்கி இருந்தார்கள்.

முள்ளிவாய்க்கால்ஒரு ஊடகவியலாளனாக உங்களுக்கு எதை சொல்லிச் சென்றுள்ளது?

நிறைய விடயங்களை நிச்சயமாக விட்டுச் சென்றுள்ளது. தொடர்ந்தும் எனது ஊடகப்பணியில் எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை தெளிவாக சொல்லிவிட்டே சென்றுள்ளது. அதன் செய்தியே ” Witness from the war zone ” என்ற எனது ஆவணப் பொத்தகம். இதனூடாக முள்ளிவாய்க்கால் எனக்குச் சொல்லிச்சென்ற செய்தி அடுத்த தலைமுறைக்கு சென்று சேரும் என்று நம்புகிறேன்.

போர்க் கால ஊடகவியலாளராக இப்போது பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அரச அதிகாரம் மிரட்டும், கைது செய்யும், வலிந்து காணாமல் ஆக்கும், ஆனால் அதிகார வர்க்கத்தின் ஆணி வேரை ஆட்டம் காண வைக்கும் அதிகாரம் ஊடகத் துறைக்கு இருக்கின்றது என்பதை மனதில் வையுங்கள். துணிந்து உண்மைகளை வெளிக்கொண்டு வாருங்கள். இறுதி வரை ஊடகப்பணியாற்றிய விடுதலைப்புலிகளின் ஊடகத்துறையை சார்ந்த போராளிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் ஆவணங்கள் மட்டுமே இன்று இனவழிப்பின் சாட்சியங்களாக நின்று இலங்கை அரசுக்கு பெரும் பிரச்சனைகளாக இருக்கின்றது.

இது மட்டுமே போர்க் காலத்தில் நான் பெற்ற அனுபவம். இதைத்தான் உங்களுக்கு இப்போது என்னால் கூற முடியும்.

எதையும் எதிர்த்துத் துணிந்து நில்லுங்கள்…

– சுரேன் கார்த்திகேசு

புலர்வுக்காக நேர்கண்டது இ.இ.கவிமகன்
நாள்: 17.05.2020
ஒப்பு நோக்கியது : மஞ்சு மோகன்

ஐயோ என்ட தங்கைச்சி…

2009 வைகாசி 12 ஆம் நாள் சர்வதேசமே எங்களைக் கைவிட்டுவிட சிங்கள இனவெறிப் படைகளின் இனவழிப்பின் உச்சம் நடந்து கொண்டிருந்த நாள். நாம் எமது இருப்பை உறுதிப்படுத்த முடியாது தவித்து கொண்டிருந்த நாட்களில் ஒன்று.வழமை போலவே அந்த இரவும் எமக்கு விடிந்து போனது. எறிகணையும் ரவையும் விமானமும் எங்கள் தலைகளை குறிவைத்து பாய்ந்து வந்து கொண்டிருந்தன. அவ்வாறான தாக்குதல்களின் மூர்க்கத்திலும், எம்மைப் பாதுகாத்துக்கொள்ள பதுங்ககழிகளை அமைக்க வேண்டிய தேவை இருந்தது.

அதனால் அதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தோம். ஆனால் அந்த நந்திக் கழிப் பகுதியில் பதுங்ககழி அமைப்பது என்பது நினைக்க முடியாத காரியமாக இருந்தது அந்த பிரதேசம் வறட்டிக்கழிமண்ணால் ஆனது. அதனால் மண்வெட்டியை எம்மால் பயன்படுத்த முடியவில்லை. மண்ணை வெட்டும் ஒவ்வொரு தடவையும் மண்வெட்டி கணீர் என்ற ஒலியோடு சறுக்கிக் கொள்ளும். மீண்டும் முயலுவோம். மீண்டும் சறுக்கும். இவ்வாறு அந்தப் பற்றைக் காட்டுக்குள் தீவிரமான முயற்சியின் பின் ஒரு சிறிய” I ” வடிவ பதுங்குகுழியை அமைத்து முடித்தோம்.

அப்போது அம்மாவின் குரல் ஒலிக்கிறது. “எல்லோரும் சாப்பிடுவம் வாங்கோ”… கிடந்த சிறிய அளவு அரிசியில் கிடைத்த உப்பை இட்டு காச்சப்பட்ட கஞ்சிதான் உணவு. அதற்குள் அரிசியை விட தண்ணீர் தான் அதிகம் இருக்கும். ஆனாலும் கிடைக்கும் அந்தக் கஞ்சி இரண்டு நாளுக்கு கொஞ்சம் பலத்தைக் கொடுக்கும். விரும்பியோ விரும்பாமலோ அனைவருமே பிரியத்துடன் குடிக்க வேண்டிய சூழல். ஏனெனில் எப்ப கிடைக்கும் என்று தெரியாத நிலையில் கிடைக்கும் அருமையான உணவு. அதிலும் ஒரு குவளை கஞ்சிதான் அப்போதெல்லம் எமக்கு கிடைக்கும் உணவு.

இது ஒருபுறம் இருக்க, அதை குடிக்க என்று தலை நிமிர்த்தி நடக்க முடியவில்லை. தூக்கினால், வற்றாப்பளைப் பக்கமாக இருக்கும் சிங்களத்தின் பதுங்கி சுடும் குறியாளர்களின் தாக்குதல் நிட்சயமாக எம்முயிரைப் பறிக்கும். அதனால் குனிந்து கொண்டும் தவழ்ந்தபடியும் பற்றை மறைவுகளுக்கால் அம்மா இருந்த பற்றை பக்கமாக செல்கிறோம்.

அப்போது என் சித்தப்பாவின் மகள் என்னை அழைத்து “தூதுவளை சம்பல் “ தாறதா என வினவுகிறாள். எப்பிடி அதை தயார் செய்தாய் ? அவள் பற்றைக்கு மேலே படர்ந்திருந்த தூதுவளை கொடியை நிமிர்ந்து பார்க்கிறாள். அந்தப் பார்வை எனக்கு பதிலைத் தந்தது. அதனால் அந்த ஆராட்சியை அதோடு நிறுத்தி விட்டு வெறும் உப்புக் கஞ்சிக்கு அந்த சம்பல் சுவையாக இருக்கும் என்று நம்பி கஞ்சியை உறிஞ்சத் தொடங்கினேன். அவளோ அங்கே பற்றைக்குள் படர்ந்திருந்த தூதுவளை இலைகளை பறித்து உப்பு மட்டும் போட்டு சம்பலை செய்திருந்தாள். எனது தங்கை செய்த தூதுவளை சம்பலை சுவைத்துக் கொண்டு கஞ்சியை குடித்த போது உண்மையில் அந்த நேர மரண அச்சம் கூட காணாமல் போயிருந்தது.

எமக்கு சாவுக்கான மணித்துளி எண்ணப்பட்டுகொண்டிருந்த போதும் கஞ்சிக்கு சுவையாக அதை தயார் செய்ய அவளுக்கு எப்படி எண்ணம் வந்தது? யாரும் அறியா நியம். பல வேளைகள் உண்ணாதிருந்த எமக்கு அது உண்மையில் அமிர்தமாகவே இருந்தது.

தொடர்ந்து கொண்டிருந்த தாக்குதல்கள் எம்மை நிலத்தில் இருந்து நிமிர முடியாது வைத்திருந்தது. அன்றைய பொழுது சாய்ந்து இருள் சூழ்ந்த அந்த மணிப்பொழுதில் வெற்று அமைதியாக கழிந்தது நடுச்சாமம். கேட்டுக் கொண்டிருந்த அல்லது பாய்ந்து வந்து கொண்டிருந்த உயிர்குடிக்கும் இரும்புத் துண்டுகளின் வரவில் அப்போது சிறு ஓய்வு வந்தது. பத்து பதினைந்து நிமிடங்கள் அது நீடித்திருக்கும். அதுவே எங்கள் மேல் விழப்போகும் சாவுக்கான குறியீடு என்று எமக்கும் புரியவில்லை. அதனால் சிறிது நேரம் விழி அயர்ந்து போனோம்.

அந்த அமைதிக்குப் பின் பெரும் பிரளயமே உருவாகப் போகிறது என்பது எமக்குத் தெரியவில்லை. நாங்கள் கண்மூடிக் கிடந்தோம். நானும் என் மைத்துனனும் ஒரு வீர மரத்தின் வேர்களுக்கு இடையில் தலையை வைத்தபடி உறங்கிப் போனோம். அந்தத் தூக்கம் வெறும் 10-15 நிமிடமாக இருக்கலாம். திடீர் என்று எங்கள் தலைக்கு மேலாக “வண்டு” என்று எம்மால் குறியிடப்படும் வேவுவிமானம் (Beech Craft ) ஒன்றுசுற்றிச் சுழல்கிறது. வேகமாக அந்த ஒலி இரைகிறது. அதன் இரைச்சல் என் மனதுக்கு நடக்க இருக்கும் அசம்பாவிதத்தை உணர்த்தியது. தூங்கிய அனைவரையும் எழுந்து பாதுகாப்பு தேட சொல்லி உத்தரவிடுகிறேன். அனைவரும் தம்மால் முடிந்த பாதுகாப்பு நிலையை எடுப்பதற்காக குப்பற படுத்து கொள்கிறனர்.

நான் நினைத்ததைப் போலவே குறித்த ஓரிரண்டு நிமிடத்தில் முல்லைத்தீவில் அமைந்திருந்த பிரதான ஆட்லறித்தளத்தில் இருந்து எறிகணை ஏவப்படுகிறது. பராஜ்ச் என்று கூறப்படும் பல்முனைத் தொடர் தாக்குதலுக்கு நந்திக்களிப் பகுதி இலக்காகிறது. அப்போது தான் ஒரு எறிகணை நாம் தங்கி இருந்த பற்றைகளைத் தாண்டி ஐந்து மீற்றர் தூரத்தில் மரம் ஒன்றின் அடியில் விழுந்து வெடிக்கிறது. மரங்கள் முறிந்து சரிகின்றன. திடீர் என்று மரண ஓலம் எங்களை தவிக்க வைக்கிறது.

யாருக்கு என்ன நடந்தது என்று புரியாத அளவிற்கு கதறல் ஒலியும் தொடர்ந்த தாக்குதல்களும் செவியை அடைத்தது. எறிகணை வெடித்த மரத்தின் கீழே அமைக்கப்பட்டிருந்த பனங்குற்றிகளால் மூடிய பதுங்ககழிக்குள் இருந்தவர்களின் சத்தத்தை காணவே இல்லை. எறிகணைத் தாக்குதலால் முழுமையாக அது சிதைந்து கிடந்தது. அதற்குள் சிறுநேரத்துக்கு முன்னால் எதோ ஒரு தேவைக்காக தாயிடம் அடம்பிடித்து அழுது கொண்டிருந்த குழந்தையின் சத்தமும் அடங்கிப் போயிருந்தது. கிட்டத்தட்ட பத்துக்கும் அதிகமான ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதற்குள் இருந்தார்கள். இப்போது அவர்கள் எவரின் சத்தமும் கேட்கவில்லை. அத்தனை பேரும் இறந்திருப்பர் என்றே நான் நம்பினேன். அதனால் என்ன நடந்தது என்று பார்க்கலாம் என எழுந்தோடிய போது, என் உறவுகளின் கதறல் என்னைத் தடுத்து நிறுத்தியது.

எனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலர் அந்ததாக்குதலில் படுகாயமடைந்திருந்தார்கள். 25 பேருக்கு மேலாக நாம் ஒரே இடத்தில் தங்கி இருந்தோம். அதனால் அந்த ஒற்றை எறிகணை எம் குடும்பத்தில் பலரை தாக்கிச் சென்றது. அங்கே படுத்திருந்த என்னையும் மைத்துனனையும் தவிர மற்ற எல்லோர் உடல்களையும் எறிகணைச் சிதறல்கள் கீறி சென்றன. என் தந்தை தலையிலும் சிறிய தந்தை முதுகிலும்என காயமடைகிறார்கள். சிறிய தந்தையின் இரு மகள்களும் இன்னும் ஒரு சித்தியின் மகளும் பலத்த காயங்களுக்குள்ளாகிறார்கள்.

அது மட்டுமல்லாது ஏற்கனவே காலில் 8 இஞ்சி அளவுக்கு எலும்பை இழந்து காயப்பட்டிருந்த மூத்த போராளியும் எனது மைத்துனனுமான தயா என்ற போராளியும் அவரது மனைவி மற்றும் மனைவியின் சகோதரி சகோதரன் என அனைவரும் பாரிய காயங்களுக்குள்ளானார்கள். திரும்பும் இடமெங்கும் இரத்த வெள்ளம். நான் நிதானித்து எழுந்திருக்க முதல் ஒவ்வொருவரும் என்னை அழைக்கிறார்கள். கவி என்றும் அண்ணா என்றும் தம்பி என்றும் அழைத்த குரல்களுக்குள் நான் தடுமாறத் தொடங்கி விட்டேன். ஆனாலும் நிதானமாக செயற்பட்டேன்.

மைத்துனனும் நானும் அருகருகே வெடித்துக் கொண்டிருந்த எறிகணைகளை பொருட்படுத்தவில்லை. எப்படியாவது எல்லோரையும் காத்துவிட வேண்டும் என்ற எண்ணம். கொலைவலையமாக இருந்த அப்பிரதேசத்தில் என் உறவுகளைக் காப்பாற்றப் போராடினோம். அனைவரின் காயங்களுக்கும் கட்டுபோட முடியவில்லை யாருமே யாரையும் பார்க்க முடியவில்லை அந்த அளவுக்கு அந்த இடம் முழுவதும் புகை சூழ்ந்திருந்தது. அழுகுரல்கள் வானளவு எழுந்தது. முதலில் பலமான காயமடைந்தவர்களின் காயங்களுக்கு முதலுதவி செய்கிறோம். சிறுகாயமடைந்த மற்றவர்கள் தாமே தமக்கு கட்டுப் போடுகிறார்கள்.

அப்போது சித்தப்பா என்னை அழைத்தார். தங்கைச்சிய பாருடா தம்பி என்று கூறியபடி அவளை தூக்கினார். அவளின் வாயில் இருந்து இரத்தம் வெளிவந்து கொண்டிருந்தது. முதுகுப்பக்கத்தால் உட்புகுந்த எறிகணைத்துண்டு இதயத்தின் அருகே கீறலை உருவாக்கி தங்கிக் கொண்டது. வெளி வராது உள்ளே நின்று கொண்ட அந்தத் துண்டு அவளை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றது. அவள்இறந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த போது என்னால் என்னைக் கட்டுப் படுத்த முடியவில்லை. அண்ணா

“ தூதுவளைச் சம்பல் வேணுமா “

என்று கேட்டு எனக்கு இறுதியாக உணவு தந்த அவளது கரங்கள் சோர்ந்து கொண்டிருந்ததை என்னால் தாங்க முடியவில்லை. வழமையாக தனது தாயோடு படுத்து தூங்கும் அவள் அன்று சாவதற்காகவோ என்னவோ

“பெரியம்மா உங்களோட வந்து படுக்கவா ? “

எனக் கேட்டு என் அம்மாவின் இருகில் படுத்த காட்சி எனக்கு நெஞ்சை உருக்கியது. என் தாய் அவளின் நிலையை பார்த்து

“ஏனடி என்னோட வந்து படுத்தாய் கொம்மாவோட படுத்திருந்தா தப்பி இருப்பியேடி”

என்று அழத் தொடங்கிய அந்த நிமிடம் என்னால் எப்போதும் கடந்து செல்ல முடியாதது.

உடனடியாக அவளைத் தூக்கிக் கொண்டு போங்கோ என்று சித்தப்பாவை பணித்து விட்டு மற்றவர்களில் யாருக்கு பாரிய காயம் என பார்த்து நடக்க கூடியவர்களை நடத்தியும் தூக்க வேண்டியவர்களை ஏலுமானவர்கள் தூக்கிக் கொண்டும் சிறு காயமடைந்தவர்களை பாதுகாப்பாக இருக்கச் சொல்லி அறிவுறுத்தி விட்டு இறுதியாக இயங்கிக் கொண்டிருந்த முள்ளிவாய்க்கால் மருத்துவமனைக்குச் செல்கிறேன்.

அங்கே நிறைந்து கிடந்த காயக்காறருள் யாரைத் தரம் பிரித்து சிகிச்சை செய்வது என்று தெரியாத அளவுக்கு பாரிய காயங்கள் நிறைந்து கிடந்தது. மருத்துவப் போராளிகள் முடிந்தவரை காயங்களுக்கு சிகிச்சை செய்கிறார்கள். என்னையும் மைத்துனனையும் முடிந்தவரை குருதியை கட்டுப்படுத்த சொல்லி பணிக்கிறார்கள். நாங்கள் அங்கே வந்த பெரும்பாலானவர்களுக்கு பெட்சீட்டுகளாலும் கிடைத்த துணிகளாலும் குருதியை கட்டுப்படுத்த முயல்கிறோம்.

அதே நேரம் அங்கே இருந்த மருத்துவ போராளியான இறையொளி என் தங்கையை அவசரமாக பரிசோதிக்கிறார். அவள் இறந்து விடுவதற்கான சாத்தியமே அதிகம் எனத் தெரிந்தும், “முயற்சி செய்வம்.” என்று கூறியபடி சிகிச்சை கொடுக்கிறார். இதயைத்தை வெட்டியபடி உள்ளே நின்ற எறிகணைத்துண்டில் இருந்து தங்கைச்சியை காப்பாற்றுவது சாத்தியமில்லை என்று தெரிந்தும் முழு முயற்சியையும் செய்தார் மருத்துவர் இறையொளி. சிகிச்சை முடித்து வெளியில் கொண்டு வந்து பாயில் கிடத்திய படி கொஞ்ச நேரத்தில தான் தெரியும் என்ன நிலமை என்று அதுவரை இதில கிடக்கட்டும் என்று கூறி அவர் அடுத்த காயத்துக்கான சிகிச்சைக்குச் சென்ற போது அவள் தலைசரிந்து கிடந்த கோலத்தைப் பார்த்து, அவளது நாடியைப் பிடித்துப் பார்க்கிறேன். அவள் துடிப்பு அடங்கி விட்டது. என் கண்முன்னே ஆசையாக அண்ணாவுக்கு தூதுவளைச் சம்பல் செய்து தந்த எனது தங்கை சுலக்‌ஷனா சிங்களத்தின் கொடூரமான இனவழிப்புத் தாக்குதலில் சாவடைந்த கணம் எப்படி மறக்கக் கூடியது…?

அங்கே நின்ற இன்னும் ஒரு மருத்துவப் போராளி அவள் சாவடைந்து விட்டதை உறுதிப்ப்டுத்துகிறார். விழிகள் கலங்க நானும் சித்தப்பாவும் அவளை தூக்கிச் சென்று வெளிப்பக்கமாக இறந்த உடலங்கள் குவிக்கப்பட்டுக் கிடந்த இடத்தில் வெற்றுத் தரையில் படுக்க வைத்துவிட்டு மற்றவர்களை பார்க்க என்று நகர்ந்து சென்றோம்.

நினைவுப் பகிர்வு : இ.இ. கவிமகன்
நாள் : 13.05.2020

 

மே 17, 2020 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர், முள்ளிவாய்க்கால் | , , , , , | போர்க்கால ஊடகப்பணி என்பது உயிரை வெறுத்துப் பணி செய்வது ! #சுத்துமாத்துக்கள் #துரோகிகள் #இனப்படுகொலை #முள்ளிவாய்க்கால் #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #தமிழர் #Mullivaikkal #ltte #Tamil #Eelam #Traitors #TNAMedia #Genocide #May18 #TamilGenocide #மே18இனப்படுகொலைநாள் #தமிழினப்படுகொலைநாள் #கோமாளி_ஸ்டாலின் #தமிழினதுரோகிதிமுக #திமுக #தமிழர் #DMK #MKStalin #Justice4TamilGenocide #ReferendumForTamilEelam #JusticeForTamilGeonicide #FreeTamilEelam #JusticeForTamilEelam #May18TamilGenocide #TamilEelam #tamilgenocide #May18 #Mullivaaikkaal #TamilGenocide #RememberMay18 #SriLanka அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கொடிய போரிலும் பட்டினிச் சாவைத் தவிர்த்த தமிழீழ அரசு ! #சுத்துமாத்துக்கள் #துரோகிகள் #இனப்படுகொலை #முள்ளிவாய்க்கால் #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #தமிழர் #Mullivaikkal #ltte #Tamil #Eelam #Traitors #TNAMedia #Genocide #May18 #TamilGenocide #மே18இனப்படுகொலைநாள் #தமிழினப்படுகொலைநாள் #கோமாளி_ஸ்டாலின் #தமிழினதுரோகிதிமுக #திமுக #தமிழர் #DMK #MKStalin #Justice4TamilGenocide #ReferendumForTamilEelam #JusticeForTamilGeonicide #FreeTamilEelam #JusticeForTamilEelam #May18TamilGenocide #TamilEelam #tamilgenocide #May18 #Mullivaaikkaal #TamilGenocide #RememberMay18 #SriLanka

மே 18 தமிழின அழிப்பு நினைவு நாளில் இணையத்தளத்தின் ஊடான நினைவேந்தல், நினைவுகூருவோம் தொடர்ந்தும் போராடுவோம்!

தமிழினத்துக்கு எதிராக சிறீலங்கா ஆட்சிபீடத்தினால் பல தசாப்தங்களாக பல்வேறு வடிவங்களில் இனஅழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் உச்சக்கட்டமாக மே 2009 இல் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், அவர்களது வாழ்விடங்களும், உடமைகளும் அழிக்கப்பட்டன.

இந்த நாளையே தமிழின அழிப்பு நினைவு நாளாக மே18 இனை, 2009 ற்குப் பின் தமிழ் மக்கள் உலகளாவிய ரீதியில் நினைவுகூர்ந்து நீதிகேட்டுப் போராடுகின்றனர் .

இத்தகைய பின்னணியிலேயே, கொவிட் 19ஐ கவனத்திற்கொள்ளும் அதேவேளை, முள்ளிவாக்கால் படுகொலையின் பதினோராவது ஆண்டு நினைவுகூரலையும் முன்னனெடுக்க வேண்டியுள்ளது. அதற்கமைவாக, இந் நினைவுகூரலை இணையவழியாக ஒருங்கிணைக்க வேண்டியுள்ளது.

சிறீலங்கா அரசபயங்கரவாதத்தின் இனஅழிப்பில் கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவேந்தி சுடரேற்றி நினைவுகொள்ளும் அதேவேளை, இனப்படுகொலையாளர்களை நீதியின் முன்னிறுத்தி எம் தேசம் விடுதலை பெறும் வரை தொடர்ந்தும் போராடுவோம் என உறுதியெடுப்போம்.

இந் நினைவேந்தலை https://tamilsresist.com/ என்ற இணையத்தளம் ஊடாக சென்று சுடர் ஏற்றி நினைவுகொள்வதுடன் அனைத்துத்தளங்களிலும் பகிர்ந்துகொள்ளவும்.

——-

உலகில் போர்கள் இடம்பெறும் போது நேரடியான போரில் மட்டுமன்றி பட்டினி ,நோய் போன்றவற்றாலும் அதிகளவு மக்கள் உயிரிழப்பது நாமறிந்த வரலாறு.

ஆனால் பாரிய பொருண்மியத் தடைகளை ஏற்படுத்தி, உணவுப் பொருட்களை அனுப்பாது, மக்களிடம் இருந்த உணவுக் களஞ்சியங்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டு மக்களின் வாழ்வாதாரங்களை முற்றாக அழித்தவாறு  ஒரு இனஅழிப்பு போரையே மேற்கொண்து சிறீலங்கா அரசு. ஆனால் அதனை எதிர்கொண்டு தமது மக்களை பட்டனிச்சாவில் இருந்து காப்பாற்றியிருந்தது எங்களது விடுதலை அமைப்பு.

தமிழீழ நிர்வாகக் கட்டமைப்பு தம்மிடம் இருந்த வளங்களைப் பயன்படுத்தி எவ்வாறு மக்களைப் பட்டினிச் சாவினைத்தவிர்த்தனர், விடுதலைப் புலிகள் சாவின் விழிம்பில் நின்று போராடிய போதும் மக்களுடன் இணைந்து கிடைத்த வளங்களைக் கொண்டு எவ்வாறு உணவைப் பகிர்ந்து கொண்டனர் என்பது தொடர்பிலும் தமிழீழ நிர்வாகக் கட்டமைப்பின் திட்டமிடல் பணிப்பாளராக பணியாற்றிய மூத்த போராளி ஒருவர் தெரிவித்த கருத்துக்களை இங்குதருகின்றோம்.

2009 ஆம் ஆண்டு போர் உக்கிரமாக இடம்பெற்ற போது மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது நாம் இரணைப்பாலைப்பகுதியில்  தங்கியிருந்தோம். இடம்பெயர்ந்த மக்கள் மாத்தளன் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். மிகவும் களைப்பாக இருந்த மக்கள் பட்டினியுடனே தமது பயணத்தை மேற்கொண்டு வந்தனர். இவர்களில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் நிலை மிகவும் வேதனை தந்தது.

எனவே இந்த மக்களின் பட்டினியை போக்கி அவர்களை காப்பாற்றும் திட்டம் தொடர்பில் சிந்தித்தோம். ஆனால் அப்போது எம்மிடம்  இருந்தஉணவுக் கையிருப்பு, அதனை இலகுவாக தயாரித்து  எல்லா மக்களுக்கும் வழங்குவதற்குரிய உரிய நடைமுறைச் சாத்தியம் குறித்தும் கஞ்சி தயாரித்து வழங்குவது குறித்தும் ஆலோசித்தோம்.அந்த யோசனை எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நாம் வழங்கும் ஒரு வேளைக் கஞ்சி அவர்களின் பசியை ஒரளவேனும் போக்குவதுடன் அவர்களின் உணவுடன் சேர்வதால் பட்டினிச்சாவில் இருந்து மக்களை காப்பாற்றும் என நாம் நம்பினோம்.

அதற்கான வளங்கள் மற்றும் இதர ஏற்பாடுகள் திட்டமிடல்கள் தொடர்ந்தன. முதலில் இரணைப்பாலையில் உள்ள  ஒரு கொட்டகையில் நாம் தயாரித்த  கஞ்சியை வழங்கினோம். அப்போது எம்மிடம் போதிய பொருட்கள் இருந்ததால் சுவையான பால் கஞ்சியை வழங்கினோம். அதிகளவில் பசியால் வாடிய சிறுவர்களும் குழந்தைகளும் அதனை விரும்பி உண்டனர்.

இதனை அவதானித்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர்  பா.நடேசன் அவர்கள் மக்களின் பசியை போக்கும் இந்தத் திட்டத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தையும் ஈடுபடுத்தியதுடன், தம்மாலான உதவிகளையும் வழங்கினார்.

ஆனந்தபுரத்தில் பிடுங்கப்பட்டதேங்காய்கள், தமிழீழ அரசிடம் இருந்த அரிசி, காடுகளில் சேகரிக்கப்பட்ட விறகு மற்றும் தண்ணீர் என்பவற்றை இந்த நிலையங்களுக்கு விநியோகம் செய்வதற்கு தனித்தனி குழுக்களைஅமைத்தோம்.

ஒரு நிலையம் பின்னர் 3 ஆக மாறியது, அதுவே பின்னர் பல இடங்களில் விரிவாக்கம் பெற்றது. போராளிகள் மட்டுமல்லாது மக்களும் எமதுநிலையங்களுக்கு வந்து உதவினார்கள். அரச பணியாளர்கள், கூட்டுறவுச்  சங்க உறுப்பினர்கள் என பெருமளவானவர்கள் மக்களின் பசியை போக்கி சிறீலங்கா அரசு எதிர்பார்த்த பட்டினிச் சாவை வரவிடாமல் தடுத்தனர். எமது போராட்டத்தை நாம் வெல்ல வேண்டும் என்ற மனநிலை எல்லா மக்களிடமும் இருந்ததை நாம் கண்டபோது எமக்குப்  பெருமையாகஇருந்தது.

எதிரி எமது உணவுக் களஞ்சியங்களைஅழிப்பான் என்பது எமக்கு தெரியும், எனவே நிர்வாக சேவையிடமும், புனர்வாழ்வுக்கழகத்திடமும் இருந்த வாகனங்களில் தான் நாம் உணவை சேமித்து வைத்திருந்தோம். இந்த உத்தியானது உணவுக் கையிருப்பை எதிரியிடம் இருந்து பாதுகாப்பதற்கும் மக்கள் இடம்பெயரும்போது அங்குஉடனடியாக நகர்த்துவதற்கும் உதவியது.

சிறீலங்கா அரசின் போர் உக்கிரமடைய எமது மக்களின் நெருக்கடிகள் மேலும் அதிகரித்தது. அவர்களுக்கான உணவுத் தேவையும் அதிகரித்தது. மூன்று நிலையங்கள் 22 நிலையங்களாக மாற்றம் பெற்றது. ஒவ்வொரு நிலையத்திலும் 3 கிடாரங்களில் கஞ்சி தயாரிக்கப்பட்டது. மக்களிடம் இருந்து அதற்குரிய கிடாரங்களை பணம் கொடுத்தே வாங்கினோம். எந்த பொருளையும் இலவசமாகப் பெற எமது நிர்வாகம் விரும்பவில்லை.

புனர்வாழ்வுக்கழகம் கஞ்சிக்கு அப்பால் தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர் ஆகாரமும் வழங்கியது. அதே சமயம் கிடைத்த கோதுமை மாவைக் கொண்டு வாய்ப்பன் தயாரித்து வாகனங்களில் கொண்டு சென்று மக்களுக்கு வழங்கினோம். ஓவ்வொரு குடும்பத்துக்கும் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்கினோம்.

இரணைப்பாலை பகுதியில் நாம் இருந்தபோதே சிறீலங்கா அரசின் இறுதியான உணவுப் பாரஊர்தி வந்தது. அதற்கு பின்னர் அரசின் உணவு விநியோகம் பெரிதாக இருக்கவில்லை கடற் பகுதியில் இருந்து சில பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. 70 ஆயிரம் மக்களே உள்ளனர் என மக்களின் எண்ணிக்கையை குறைவாக கூறிய அரசு, அவர்களுக்கு போதுமான உணவு உள்ளது எனத் தெரிவித்து உணவு விநியோகத்தை நிறுத்திக் கொண்டது.

ஆனாலும் தமிழீழ நிர்வாக சபையின் சிறந்த திட்டமிடலினால் எம்மிடம் மே 15ஆம் நாள்  வரை விநியோகம் செய்வதற்கான பச்சை அரிசி போதிய அளவில் இருந்தது. ஆனால் உப்பு, தேங்காய் போன்றவற்றை பெற முடியவில்லை. எனவே இறுதி நாட்களில் உப்பு மற்றும் தேங்காய் பால் இல்லாத சுவையற்ற கஞ்சியையே நாம் வழங்கினோம்.

எல்லா நிலையங்களையும் சென்று பார்வையிட்டு தேவைப்படும் விநியோகங்களையும் சீர்படுத்தினோம். காலை வேளையில் எறிகணைத்தாக்குதல்  குறைவாக இருந்தால் எல்லா நிலையங்களுக்கும் நீர், அரிசி மற்றும் விறகு போன்ற தேவையான பொருட்களை அதிகாலையில் விநியோகம் செய்து வந்தோம்.

காலை 10 மணிக்கு முன்னர் மக்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும்,வைத்தியசாலை பணியாளர்கள் மற்றும் வைத்தியர்களுக்கும் நாம் கஞ்சியை வழங்கி விடுவதுண்டு.
ஒரு கட்டத்தில் களஞ்சியங்களில் இருந்தபொருட்களை எம்மால் எடுக்க முடியாது போனபோது, நாம் வாகனங்களில் சேமித்தஉணவுப் பொருட்களை பயன்படுத்தினோம்.

தமது வயிற்றுப் பசிக்காக கஞ்சியை வாங்குவற்கு வரிசையில் நின்றவர்கள் மீதும் வேவு விமானம் மூலம் தகவல்களைத் திரட்டிய சிறீலங்கா அரசு எறிகணைத்தாக்குதல்களை மேற்கொண்டது. சிறுவர்கள் உட்பட பலர் பலியாகினர், பலர் காயமடைந்தனர். இது பல நிலையங்களில் இடம்பெற்றது.

எனது நிலையத்தில் உணவுக்காக காத்திருந்த வயோதிபர் ஒருவர் எறிகணைத் தாக்குதலால் தனது காலை இழந்த சோகம் தற்போதும் எனதுமனதில்  உள்ளது. இருந்த போதும் எமது மக்களை நாம் பட்டினிச்சாவில் இருந்து காப்பாற்றிய மன நிறைவு எங்களிடம் இப்போதும் உண்டு. மிலேச்சத்தனமான, மனித நேயமற்ற தாக்குதல்களுக்கும் இறுக்கமான பொருளாதாரத் தடைகளுக்கும் மத்தியில் ஒரு பட்டினிச்சாவு கூட இடம் பெறாமல் எமது விடுதலை அமைப்பு மக்களைக் காத்தது.

இந்த விடயத்தில் நாம் சிறீலங்கா அரசுக்கு தோல்வியையேகொடுத்திருந்தோம்.
இதில் மக்கள், போராளிகள், அரசபணியாளர்கள், நிர்வாகக் கட்டமைப்புக்கள்,கூட்டுறவு  சங்கங்கள் என எல்லோரினதும் பங்களிப்பு அளப்பரியது, யாரும் அங்கு சுயநலம் பார்க்கவில்லை. இரவு பகலாக பணியாற்றினார்கள். நாம் ஒற்றுமையாக நின்று எமது மக்களை காப்பாற்றினோம்.

எத்தனையோ விடுதலைப் போராட்டங்களில் மக்களின் உணவை கொள்ளையடித்த சம்பவங்கள் நிகழ்ந்தன. பெருமளவானவர்கள் பட்டினியால் மடிந்த சரித்திரங்களும் உண்டு. ஆனால் எமது விடுதலைப் போரில் தான் போரளிகள் மக்களுடன் இணைந்து தமக்குக் கிடைத்த உணவை பகிர்ந்து உண்டனர். மக்களை காப்பாற்றி தமதுஉயிரைத் துறந்தனர்

இறுதி நாள் வரை சிதறிக் கிடந்தன தமிழர் உயிர்கள் – ரஞ்சித்

தமிழீழ விடுதலை புலிகள் என்ற உன்னத அமைப்பின் தமிழீழ நடைமுறையரசு தனது அரச கட்டமைப்பை உருவாக்கித் தமிழீழத்தை அரசாட்சி செய்த காலத்தில் அரசுக்குத் தேவையான பல பிரிவுகளை உருவாக்கி இருந்தது. அந்த வகையில் தமிழீழத்தின் நீதி நிர்வாகத்தை நிர்வகிப்பதற்கென்றும் பிரிவுகள் உருவாக்கம் கண்டன. அதன் அடிப்படையிலையே தமிழீழ காவல்துறை உருவாக்கப்பட்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ அரசு மௌனிக்கும் வரை இயங்குநிலையில் இருந்தது தமிழீழ காவல்துறை. இறுதியாக அரசியல்துறையின் பொறுப்பாளராக இருந்து இலங்கை அரச படைகளால் படுகொலை செய்யப்பட்ட திரு நடேசன் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட அக் கட்டமைப்பு பலத்த சவால்களையும் தடைகளையும் தாண்டி நிமிர்ந்து நின்றது. பின் நாட்களில் திரு இளங்கோ அவர்களின் பொறுப்பின் கீழ் செயற்பட்ட காவல்துறை மக்களுக்காக மக்களின் பணிகளைச் செய்த அதே நேரம் களமுனைகளில் படையணிகளாக நின்ற சண்டையிட்ட வரலாற்றையும் மறக்கலாகாது. இத்தகைய வீரம்மிக்க காவல்துறையின் ஒரு பணிமனை அதிகாரியாக பணியாற்றிய திரு ரஞ்சித்குமார் அவர்களை புலர்வுக்காக நான் சந்திக்கிறேன்.

தமிழீழ காவல்துறையின் உருவாக்கமும் அதன் நோக்கமும் என்ன?

Tamil Eelam Police.

தமிழீழ காவல்துறையானது தமிழர் தாயகத்தில், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் நோக்குடைய ஓர் தொழில் சார் அமைப்பாக 19,11,1991 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காவல்துறை கட்டமைப்பு பற்றி கூறுங்கள்

தமிழீழ காவல்துறையானது, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் நேரடியாக நியமிக்கப்பட்டு, ஒரு பொறுப்பாளரின் நெறிப்படுத்தலில் இயங்கியது. தமிழீழ சட்டக் கோவைகள், காவல்துறை ஒழுக்கவிதிகள், மற்றும் நடைமுறைக் கோவைகளுக்கு அமைய பணிகளை ஆற்றியது.

நிர்வாக இலகுபடுத்தலுக்காக, பிரதேச பணிமனைகளாகவும், குற்றத்தடுப்பு பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு, நகர போக்குவரத்து பிரிவு, மகளிர்-சிறுவர் விவகாரப் பிரிவு, உள்ளக பாதுகாப்புப் பிரிவு உட்பட இன்னும் பல சிறப்பு பிரிவுகளையும்,

ஆளணிப் பிரிவு, நிதிப்பிரிவு, படைக்கலன் பிரிவு, தொலைத்தொடர்பு பிரிவு போன்ற இன்னும் பல நிர்வாகப் பிரிவுகளையும் கொண்டு இயங்கியது.

நீதி நிர்வாக செயற்பாடுகள் தமிழீழத்தில் எவ்வாறு இருந்தன?

தமிழீழத்தில் நீதி நிர்வாகத் துறை மிகவும் சுதந்திரமாக செயற்பட்டது. சட்ட விதிகளுக்கும், விவாதங்களுக்கும் அமையவே வழக்குகள் கையாளப்பட்டன.

உங்களின் தனிப்பட்ட பணி மற்றும் செயற்பாடுகள் பற்றி?

நான் 1991 மே மாதம் முதல் 2009 மே மாதம் வரை தமிழீழ காவல்துறையில் பணியாற்றியிருந்தேன். பெரும்பாலான காலப்பகுதியில் பணிமனைப் பொறுப்பாளராக (O.I.C) பணியாற்றியிருந்தேன்.

நடந்து கொண்டிருக்கும் சிங்கள இனவாத அரசின் இனவழிப்பின் உச்சமாக நடந்து முடிந்த மே 18 2009 ஐ கடந்து 11 வருடங்களாக நிமிர முடியாது கிடக்கின்றோம் இந்த நிலையில் தொடரும் இந்த இனவழிப்புப் பற்றி?

எனது வாழ்நாளில் மிக மோசமான இனவழிப்பு சம்பவங்களை நேரில் பார்த்துள்ளேன். 1990,08,05ம் திகதி, யாழ் மாவட்டம் பாசையூர் பாடசாலையில் தங்கியிருந்த இடம் பெயர்ந்த மக்கள் மீது நடத்தப்பட்ட விமான குண்டுவீச்சு தாக்குதலில் காயமடைந்த பலருக்கு நான் எனது கைகளால் முதலுதவி செய்தேன். அதுதான் எனது முதல் அனுபவம். அதனை இன்னும் மறக்கமுடியவில்லை. இதை விட ஏராளமான அனுபவங்கள் இறுதிக் காலங்களில் இருந்தது.

இறுதி சண்டை நெருங்கி வந்து விசுவமடுவை இராணுவம் கைப்பற்றிய காலத்துக்குப் பின் படு மோசமான ஒருங்கிணைப்புத் தாக்குதல்களை இராணுவம் செய்தது அதில், எனக்குத் திகதி சரியாக நினைவில்லை ஆனால் சம்பவம் உடையார்கட்டுப் பகுதியில் நடந்தது. ஒரு வயது மதிக்கக் கூடய குழந்தை ஒன்று எதிரியின் ஆட்லறி தாக்குதலில் தலை சிதறிப் போய் இறந்ததிருந்தது. நான் அப்பிள்ளையைத் தூக்கிய போது தான் தலை சிதறி இருப்பதைக் கண்டேன்.

முப்பெரும் தேவிகள் கோவில் என்ற இடத்தில் எனது தாய் இருந்த போது, எறிகணை வீச்சு ஒன்று நடந்திருந்தது. அந்த எறிகணையில் இருந்து தன்னைப் பாதுகாக்க நிலத்தில் விழுந்த போது எனது தாய்க்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. அதனால் நான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.

என்னால் அருகில் இருந்த உடையார்கட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. ஏனெனில் உடையார்கட்டு மருத்துவமனை முழுமையாக செயலிழந்து போயிருந்தது. அதனால் நான் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு உந்துருளியில் கொண்டு சென்றேன். அப்போது பரந்தன் முல்லைத்தீவு வீதியில் இருக்கும் அம்மன் கோவில் இறக்கம் என்ற பகுதியில் இராணுவம் நேரடியாக துப்பாக்கிச் சூட்டை செய்தது. மக்கள் தான் பயணிக்கிறார்கள் என்று தெரிந்தும் குறிச்சூட்டாளர்கள் எம்மை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்கள். நாங்கள் தப்பி விட்ட போதிலும், அங்கே கனபேர் இறந்து கிடந்ததை வீதியில் நான் கண்டேன்.

அம்மாவை சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் விட்டுவிட்டு நான் பணிக்குத் திரும்பிய அன்று புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது சரமாரியான எறிகணை வீச்சை இலங்கை அரசபடை செய்தது. அதனால் அங்கே காயமடைந்து வந்த பல மக்கள் மீண்டும் காயமடைந்து அல்லது இறந்து போனார்கள். அந்த தாக்குதலில் எனது தாய் மீண்டும் காயமடைந்திருந்தார்.

தேவிபுரம் பகுதியில் கடமையில் இருந்த போது காயமடைந்தவர்களுக்கு இரத்தம் தருமாறு மக்களிடம் மருத்துவர்களால் கோரப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் மருத்துவர்களிடம் குருதிக்கொடை செய்ய வந்திருந்த மக்களை இலக்கு வைத்து இராணுவம் எறிகணை ஏவியதில் பலர் சாவடைந்தார்கள்.

18.02.2009 அன்று ஆனந்தபுரம் பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்ட வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் மக்கள் இருப்பிடங்களை நோக்கி செய்யப்பட்டது. அதில் குறைந்தது 50 இற்கும் மேலான மக்கள் கொல்லப்பட்டார்கள். அது மட்டுமல்லாது தமிழீழ காவல்துறையின் சீர்திருத்தப்பள்ளி மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டது. அந்த தாக்குதலில் போர்க்கைதிகளாக இருந்த சமன்குமார என்ற சிங்களப்படையை சேர்ந்தவர் சாவடைந்தும் இன்னும் 6 சிங்களப்படைகள் காயமடைந்தும் இருந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவப்பிரிவிடம் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு காப்பாற்றப்பட்டனர்.

இறுதி நேரத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் நகர்ந்து கொண்டிருந்த நேரத்தில், உழவியந்திரத்தின் மீது ஒரு எறிகணை வீழ்ந்து வெடித்து அந்த உழவியந்திர சாரதி தலை சிதறி சாவடைந்திருந்தார். உடனடியாக நாங்கள் உழவியந்திரத்தை அப்பகுதியில் இருந்து அகற்றி மக்கள் பயணிக்கும் பாதையை சீர்ப்படுத்திய போது திடீர் என்று ஒரு பெண் தீ பற்றி எரிந்து சாவடைந்தார். அவரை காப்பாற்ற முனைந்தும் முடியாது போனது. அவர் கையில் மண்ணெண்ணை பரலை வைத்திருந்ததாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் அந்த பெண் எரிந்ததற்கு காரணம் தெரியவில்லை. அதே நேரம் எரிகுண்டுத் தாக்குதலாக இருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. அல்லது தடைசெய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுத் தாக்குதலாக கூட இருக்கலாம்.

ஏனெனில் அதன்பின் நான் பல இடங்களில் இவ்வாறான சந்தர்ப்பத்தை உணர்ந்திருந்தேன். குண்டு வெடித்த சிறு நேரத்தில் அந்த இடமே பற்றி ந்தததை நான் அனுபவித்திருந்தேன். சில காயமடைந்தவர்களின் காயங்களில் இருந்து புகை வெளிவந்திருந்ததை நான் கண்டுள்ளேன். அதனால் அந்த இடத்தில் எதோ ஒரு எரிநிலை குண்டினால் தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் என்றே நான் நம்புகிறேன்.

இவ்வாறு இன்னும் பல நிகழ்வுகள் மறக்க முடியாதவையாக மனங்களில் புதைந்து கிடக்கின்றது.

மனிதநேய பணிகளை தமிழீழ காவல்துறை முன்னெடுத்திருந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழீழ மக்களில் இருந்தே காவல்துறை உறுப்பினர்கள் அந்த மக்களுக்காகவே உருவானதால், அவர்கள் மக்களின் வலிகளை பரிவுடன் நோக்கினர். இதனால் அவர்கள் தமது சேவைக் காலத்தில், குறிப்பாக போரின் இறுதி நாட்களில், காயமடைந்தவர்களுக்கு முதலுதவி, இறந்தவர்களின் உடலங்களை அடக்கம் செய்தல், உணவு விநியோகத்தை சீர்செய்தல், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற பல மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டனர்.

விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்ட சிங்களப் படைகள் போர்கைதிகளாக தமிழீழ காவல்துறையின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்டனர் எனும் செய்தி உண்மையா?

ஆம், நான் அறிந்தவரையில் ஏழு சிங்கள போர்க் கைதிகள் தமிழீழ காவல்துறையின் சீர்திருத்த பிரிவில் தடுத்து வைக்கப் பட்டிருந்தனர். புனலனாய்வுப் பிரிவினரின் கட்டுப்பாட்டில் வேறு இரானுவம் இருந்ததா என்பது எனக்குத் தெரியவில்லை.

அவர்களை பராமரித்தது தொடர்பாக என்ன நினைக்கிறீர்கள்?

இவர்கள் மனிதாபிமானமாக நடத்தப்பட்டனர். அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தின் (ICRC) பதிவுகளுக்கும் உட்படுத்தப் பட்டிருந்தனர். உண்மையில் அவர்களை நாம் கண்ணியத்தோடு பராமரித்தோம் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப்பட்டிருந்தன. இதை அவர்களில் பலர் உயிரோடு உறவினர்களிடம் நாம் ஒப்படைத்ததன் பின் ஊடகங்களிலையே தெரியப்படுத்தி இருந்தார்கள்.

அவ்வாறு கைதான சிங்கள படைகளை தனித்த இடங்களில் பராமரித்த போது உங்களின் மனநிலை எப்படி இருந்தது?

இவர்களை பராமரிக்கும் பணியில் நான் நேரடியாக ஈடுபடவில்லை. இருந்தபோதிலும், இவர்களை எவரும் பகைமையுடன் நோக்கியதாக நான் அறியவில்லை.

இறுதி நேரத்தில் அவர்கள் என்ன ஆனார்கள்?

அவர்கள் அவர்களின் அதிகாரிகளிடம் 2009,05,17 அன்று கையளிக்கப்பட்டனர்.

ஏன் அவர்களை சிங்கள அரசிடம் கையளித்தீர்கள்?

இது நிச்சயமாக தமிழீழ தேசியத் தலைவரது ஆணையாக இருக்க வேண்டும். அதனால் எமக்கு ஒரு கட்டளை வந்தது “அவர்களின் உயிருக்கு ஆபத்தின்றி, அவர்களின் அதிகாரிகளிடம் அனுப்பி வைக்குமாறு, காவல் துறை பொறுப்பாளர் இளங்கோ (ரமேஸ்) அவர்கள் 2009,05,16 அன்று பணிப்புரை விடுத்திருந்தார். மிகக் கடுமையான போர் சூழ்நிலையிலும், காவல்துறை அதிகாரியான தீபன் மற்றும் அவரது அணியினர் சர்வதேச சென்சிலுவைச் சங்கத்தினூடாக இந்த நடவடிக்கையை மிகச் சிறப்பாக நிறைவேற்றியிருந்தனர்.

உங்களின் பராமரிப்பில் இருந்த காலத்தில் சிங்களப் படையினர் யாராவது சாவடைந்திருக்கிறார்களா?

ஆம் நான் ஏற்கனவே இதை கூறி உள்ளேன், 2009/02/18 அன்று ஆனந்தபுரம் சீர்திருத்த பிரிவு மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அஜித் சமன்குமார (AJITH SAMAN KUMARA) என்ற சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த போர்க்கைதி கொல்லப்பட்டிருந்தார்.

கைதாகிய எங்களின் போராளிகளை அல்லது மக்களை சிங்களப்படைகள் சித்திரவதை செய்து கொன்றொழித்தும் காணாமல் போகச் செய்தும் என அவலங்களை நிறைத்த போது நீங்கள் பராமரித்த இராணுவத்தைப் பற்றி என்ன மனநிலை உருவானது?

உண்மையைச் சொல்லப் போனால், அவர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் எங்களில் யாருக்குமே இருக்கவில்லை. அது பற்றி இப்போதும் பெருமைப்படுகிறேன்.

இறுதி நேரத்தில் கூட மனிதமான்பை மதித்த விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்று கூறிக் கொண்டிருக்கும் இனவழிப்பு சிங்கள அரசுக்ககுத் துணை போகும் சர்வதேசம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்பது மனச்சாட்சியுள்ள எல்லோருக்கும் புரியும். அவரவரின் தேவைகள் உண்மையை மறைக்கத் தூண்டுகின்றன.

வட்டுவாகலில் சிங்களப்படைகளிடம் தமிழர்கள் அனைவரும் சரண்டைந்த தருணத்தை எவ்வாறு பாக்கிறீர்கள்?

போரின் இறுதியில் 2009/05/17ம் நாள் நான் வட்டுவாகல் பாலத்தின் ஊடாக பெருந்தொகையான மக்களுடன் சென்று கொண்டிருந்தபோது வழியெங்கும் இறந்த உடல்களை கண்டேன். வட்டுவாகல் ஆற்றில் பல உயிரற்ற உடல்கள் மிதப்பதனை கண்டேன். இலங்கைத்தீவில் தமிழினப் படுகொலையின் உச்சக் கோர காட்சி அதுவாகத்தான் இருக்குமென நான் நம்புகிறேன்.

நாங்கள் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவுப் பகுதியில் வைத்திருந்த போது என் அருகில் பல போராளிகள் கைது செய்யப்பட்டு இருந்தார்கள். பலர் இருந்தாலும் இன்றும் நினைவில் இருந்து மறையாமல் இருப்பது, அரசியல்துறை போராளிகளான வண்ணக்கிளி மாஸ்டர் மற்றும் திலீப் ஆகியோர். திலீப்புக்கு ஒரு கால் தொடையோடு இல்லை. அந்த நிலையிலும் அவரையும் எம்மையும் கைது செய்து வைத்திருந்தார்கள்.

நான் நினைக்கிறேன் 20 ஆம் திகதி காலை அனைவரையும் ஒரு பேருந்தில் ஏற்றிய போது நான் அவர்களை விட்டு வேறு பேருந்தில் ஏற்றப்பட்டேன். இன்றுவரை அந்த பேருந்தில் ஏற்றப்பட்ட பலரை காணவில்லை. குறிப்பாக வண்ணக்கிளி மாஸ்டர் மற்றும் திலீப் ஆகியோரின் இருப்பு இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.

அதன் பின்பு என்ன நடந்தது ?

இவ்வாறான நிலையில் நாம் ஓமந்தைப் பகுதிக்கு நாம் கொண்டு செல்லப்பட்ட போது, கடுமையான நிலைக்குத் தள்ளப்பட்டோம். எந்த அடிப்படை வசதிகளும் அற்று ஓமந்தைப்பகுதியில் தங்கவைக்கப்பட்டோம்.

அங்கே பெரும் அவலம் நிறைந்த நிலமை உருவாகியது. ஆண் பெண் போராளிகள் அனைவரும் ஓரிடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். அங்கே மலசலகூட வசதிகள் இல்லை. இருந்த இரண்டு மலகூடங்களுக்கு கதவுகள் இல்லை. அதனால் பெண் போராளிகள் பலத்த சிரமத்தை அடைந்தார்கள். பின் எம்மிடம் இருந்த சாறங்களை மறைப்பாக பயன்படுத்தி மலகூடங்களை பயன்படுத்தினோம். இருப்பினும், சிங்களப்படைகள் கொடுமையான நிலைகளை உருவாக்கினார்கள்.

பல நாட்கள் குளிக்காமல் இரத்த சிதறல்களை தாங்கி வந்திருந்த எமக்கு ஒரு தடவை என்றாலும் குளித்து எங்களின் உடலை கழுவ வேண்டிய நிலை எழுந்தது. அப்போது அங்கே இருந்த ஒரு கிணற்றை அதற்காக பாவித்தோம். ஆனால் அந்த இடத்திலும் பெண் போராளிகள் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்கினர். எந்த மறைப்புக்களும் இல்லாத அந்த கிணற்றில் குளிக்கும் பெண் போராளிகள் பட்ட துன்பங்களை வார்த்தைகளால் கூற முடியாது.

கிட்டத்தட்ட அந்த இடத்தில் 2000 பேருக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நாம் ஒரு கட்டத்தில் 1440 பேராக குறைந்திருந்தோம். மற்றவர்களுக்கு அங்கே என்ன நடந்தது என்பது இதுவரை எனக்குத் தெரியாது.

இரவில் பெண் போராளிகளை நடுவில் படுக்க வைத்து ஆண் போராளிகள் சுற்றிப் பாதுகாப்பாக படுத்திருப்போம் ஆனாலும் அங்கே தங்க வைக்கப்பட்டிருந்தவர்களை காட்டிக் கொடுத்தவர்களால் இனங்கண்டு சிங்களப்படை பெயரைக் கூப்பிட்டு அழைத்துச் செல்வார்கள். இரவிலும் பகலிலும் பல போராளிகளை அழைத்துச் சென்றது சிங்கள இராணுவம். அழைத்துச் செல்லப்படும் ஆண் பெண் போராளிகளின் அவலக்குரல்கள் எழும். ஆனால் என்ன நடக்கின்றது என்பது தெரியாத நிலையில் நாம் தங்கி இருந்தோம். அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்களா? அல்லது சாகடிக்கப்பட்டார்களா தெரியாது.

ஓரிரண்டு நாட்களின் பின் பெண் போராளிகள் தனியாக அழைக்கப்பட்டு வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்பட நாம் ஓமந்தை மத்திய கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டோம்.

இலங்கை அரசின் புனர்வாழ்வு என்ற பெயரில் இயங்கிய வதை முகாம்கள் பற்றி?

புனர்வாழ்வு முகாம் என்பது நீதிக்குப் புறம்பான சிறைச்சாலை. ஓமந்தை மகா வித்தியாலய தடுப்பு முகாம் முழுமையாக இராணுவப்புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதனால் கொடுமையாக சித்திரவதைகள் இருந்தன.

பொலநறுவை கந்தகாடு தடுப்பு முகாமில் நாம் அடைக்கப்பட்டிருந்த போது எம் எல்லோருக்கும் ஒரு ஊசி ஏற்றப்பட்டது. என்ன ஊசி என்று கேட்ட போது, இது காட்டுப் பிரதேசம் என்பதால் மலேரியா அபாயம் உள்ளது என்றும் அதற்கான தடுப்பூசி என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அது என்ன ஊசி என்பது எனக்குத் தெரியவில்லை. அவ்வூசி போட்டு அடுத்த நாள் ஒரு போராளி இறந்திருந்தார். அவரின் சாவுக்கு இந்த ஊசி காரணமாக இருக்கலாம் என்றே நம்புகிறேன். அதே நேரம், சாவடைந்த போராளியின் உறவினர்களுக்கு அவர் சாவடைந்ததைப் பற்றி சொல்லி இருப்பார்களோ தெரியாது. அல்லது அவரின் உடலத்தையோ கொடுத்திருப்பார்களா என்பது கேள்விக்குறி. ஆனால் எமக்கு ஒரு விடயம் சொல்லப்பட்டது இறந்த போராளி பொய்யான முகவரி தந்ததால் அவரின் உறவினர்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அதனால் தமக்கு உண்மையான விபரங்கள் தரப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த அடிப்படையில் வைத்துப் பார்த்தால் அந்தப் போராளியின் உடலம் உறவினரிடம் கொடுக்கப்படவில்லை என்பது புரிகிறது.

தடுப்பு முகாம்களில் போராளிகள் எவ்வாறு அடைக்கப்பட்டிருந்தார்கள்?

கைது செய்யப்பட்ட ஆரம்ப நாட்களில் மிக மோசமான உணவு, இட, சுகாதார நெருக்கடிகள் இருந்தன. உதாரணமாக கூறுவதானால் ஒரு பாடசாலை வகுப்பறையில் 80 தொடக்கம் 100 வரையான போராளிகள் அடைக்கப்பட்டிருந்தனர். அதை விட அடிப்படை வசதிகள் எதுவும் இருக்கவில்லை. விசாரணை சித்திரவதை அடி உதை இது தான் அதிகமாக இருந்தது.

புனர்வாழ்வு என்ற பெயரில் தடுப்பு முகாம்களில் போராளிகள் அடைக்கப் பட்ட பின்பும் காணாமல் போக செய்யப்பட்டுள்ளார்களா?

நான் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஓமந்தை மத்திய கல்லூரி முகாமுக்கு 2009 ஜுன் மாதம் அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் (ICRC) வருகை தந்து பதிவுகளை மேற்கொண்டது. ICRC இன் வருகைக்கு முன்னரான காலப்பகுதியில், முகாமுக்கு வெளியே பல போராளிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் பலரை இதுவரை நான் காணவில்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி எதுவும் தெரியவில்லை.

அங்கே நடக்கும் விசாரணைகள் எப்படி இருந்தன?

புனர்வாழ்வு முகாம்களில் நடந்த விசாரணைகள் பொதுவாக, விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், தங்கம், பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றும் நோக்குடனேயே நடத்தப்பட்டன. இவற்றை மறைவிடங்களில் இருந்து எடுத்துத் தரும்படி போராளிகள் தூண்டப்பட்டனர் அல்லது வற்புறுத்தப் பட்டனர். மிக முக்கிய கேள்வியாக, எமது அமைப்பு மறைத்து வைத்திருக்கும் இராணுவ ஆயுத தளபாடங்களைப் பற்றியதாகவே இருந்தது. அதோடு போராளிகள் பற்றியதாகவும் இருந்தது.

உணவு வளங்கல் முழுமையாக குறைக்கப்பட்டிருந்தது ஒரு குழந்தைக்கு கொடுக்கும் உணவை விட குறைந்தளவு உணவு வழங்கப்பட்டு போராளிகள் பசியில் வாட வைக்கப்பட்டார்கள். அதே நேரம் அங்கே இராணுவப்புலனாய்வாளர்களால் ஒரு அறிவிப்பு தரப்பட்டது எமக்கு ஒத்துளைத்து நாம் கேட்பவற்றை காட்டித் தந்தால் அதிகமான உணவும் பிஸ்கட் பையும் தரப்படும் என்று. அவ்வளவு கேவலமான நடைமுறைகளைப் பின்பற்றி விசாரணையாளர்கள் எம்மிடம் இருந்த தகவல்களை பெற முயன்றார்கள்.

அதே நேரம் பொது வெளியில் போராளிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு அனைவருக்கும் முன்னால் சித்திரவதைகளும் நடந்தன. படு கேவலமான முறையில் இராணுவபுலனாய்வாளர்கள் தமக்கு ஒத்துளைக்காத எங்களை போராளிகளை சித்திரவதை செய்தார்கள்.

எத்தனை கட்ட விசாரணைகள் யார்யாரெல்லாம் விசாரணையாளர்கள்?

தடுத்து வைக்கப்பட்ட ஒவ்வொருவரும் வெவ்வேறுபட்ட சிறிலங்கா புலனாய்வு அமைப்புகளினால் பல தடவை விசாரிக்கப்பட்டனர்.

விசாரணை என்ற பெயரில் நடந்த சித்திரவதைகள் ?

இது பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம் உண்டு. பொதுவாக இரும்புக் கம்பிகளாலும், பொல்லுகளாலும் தாக்குவதனை நேரில் கண்டுள்ளேன். அத்தோடு மேலே குறிப்பிட்டிருப்பதைப் போல பல சித்திரவதைகள் நடந்தன. எமது நினைவேந்தல் நாட்கள் வந்தால் உதாரணமாக மாவீரர் நாள் கரும்புலிகள் நாள் போன்றவை வந்தால் அன்று முழுவதும் அனைவரையும் மழை வெய்யில் என்று பாராது வெட்டைவெளியில் இருக்க வைப்பார்கள். வெய்யிலில் குடிப்பதற்கு தண்ணீர் கூட தராது தடுத்திருப்பார்கள். உணவு வழங்கப்படமாட்டாது. இவ்வாறு சொல்ல முடியாத துயரங்கள் நடக்கும். நாங்கள் படுத்திருந்தால் போகும் போதும் வரும் போதும் இராணுவம் எம்மை காலால் உதைத்து விட்டே செல்வார்கள். அவ்வாறு அடியும் உதையும் என்று வெளியவே சொல்ல முடியாத கொடூரங்களை எல்லாம் செய்தார்கள்.

அந்த தருணத்தில் நாங்கள் மௌனிக்க முன்பான காலத்தில் இராணுவத்தை நல்லபடி பராமரித்த தருணத்தை எண்ணி எவ்வாறான மனநிலையில் இருந்தீர்கள்?

நாங்கள் எம்மிடம் இருந்த போர்க்கைதிகளை, ஒரு நாட்டின் படைவீரர்கள் என்ற மரியாதையுடன் நடத்தினோம். ஆனால் சிறிலங்கா அதிகாரிகள் பலர், எம்மை சாதாரண மனிதர்களாக கூட பார்க்கவில்லை.

இப்போதும் தொடரும் இனவழிப்பு நடவடிக்கைகள் பற்றி?

2009 மே மாதத்தின் பின்னர் நமது தாயகத்தின் முக்கியமான நிலைகள் இலக்கு வைக்கப்பட்டு, வேண்டுமென்றே பௌத்த மதக் குறியீடுகள் நிறுவப்பட்டு வருகின்றன. இதனை நான் மஞ்சள் அபாயம் (Yellow Danger) எனப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளேன். கத்தியின்றி, இரத்தமின்றி இப்போதும் இனவழிப்பு தொடர்கின்றது.

எம் மக்களுக்கும் மனிதநேயப் பணியாளர்களுக்கும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

நன்றி திரு ரஞ்சித்குமார்
நன்றி கவி

நேர்கண்டது : இ. இ. கவிமகன்
நாள் : 16.05.2020
ஒப்புநோக்கியது: மஞ்சு மோகன்

நிலா இன்னும் நீதிக்காய் காத்திருக்கிறாள்-தணிகை இனியவன்

இயற்கை எழில்கொஞ்சும் கிளிநொச்சி மாவட்டத்தின் விநாயகபுரம் கிராமம் எமது வசிப்பிடம்.அப்பா ஒரு போராளி அம்மா கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய ஆசிரியை.சிறுபிள்ளைபராயம் என்னை அம்மா தினந்தோறும் உந்துருளியில் சந்திரன் சர்வதேச பாடசாலைக்கு கூட்டிச்செல்வதும் பி்ன்பு தனது பாடசாலைக்கு அழைத்துச்செல்வதும் என் வாழ்வின் பசுமை நினைவுகள்.

நான் கல்வி கற்ற சந்திரன் சர்வதேச பாடசாலை தமிழீழ அரச கட்டமைப்பினால் உருவாக்கப்பட்ட பாடசாலை என்பது அங்கு வடிவமைக்கப்பெற்ற சிறுவர் பூங்காவே சான்று.இங்கு கல்வி கற்ற பள்ளித்தோழிகள் எல்லோரும் எமது பாடசாலைக்கு முன்னால் உள்ள மைதானத்தில் உலங்கு வானூர்தியில் சமாதான பேச்சுக்கு வருவோர் போவோரை ஓடிச்சென்று பார்ப்பது ஒருவித மகிழ்வு.

அன்று சுதந்திர தமிழீழத்தில் வாழ்ந்தோம் என்பதை பின் நாட்களில் சிறிலங்கா அரசும் எமக்கு ஏற்படுத்திய துன்பங்கள் துயரங்கள் அவலங்கள் அவமானங்கள் எமக்கு  உணர்த்தி நிற்கின்றன.

கொலை வெறித்தனமான ஆக்கிரமிப்பு நடவடிக்கையினால், 2008 செப்டம்பர் நடுப்பகுதியில் கிளிநொச்சி பகுதியை விட்டுவெளியேறி மக்களுடன் மக்களாக நாங்களும் விசுவமடு பிரதேசத்தை நோக்கி நகர்ந்தோம். அங்கு இடம்பெயர்ந்த நிலையில் இரண்டு மாதங்கள் தற்காலிக கொட்டகைகளில் கல்விகற்றோம்.

2009 ஜனவரியில் எங்கள் கல்வியையும் முற்றும் இழந்து தற்காலிக இருப்பிடங்களாக செல்லும் இடமெங்கும் பதுங்கு குழி வாழ்வாக மூங்கிலாறு,தொடர்ந்து சுதந்திரபுரம் என பயணிப்பில் உயிரிழப்புக்களை கண்முன்னே காணத்தொடங்கிய காலமாகியது.

சிறிலங்கா இராணுவத்தின் இடைவிடாத எறிகணைவீச்சும் ,அதிநவீன மிக்,கிபீர் போர் விமானங்களின் குண்டு வீச்சுக்களும் தொடர இடம்பெயர்வுகளும் தொடரலாயின.

புதுக்கடியிருப்பு வீதியினால் எறிகணைவீச்சு துப்பாக்கி சன்னங்கள் வரும் நிலையிலும் அப்பா எங்களை அம்மா தங்கச்சி என்னையும் உந்துருளியில் இரணைப்பாலைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு தற்காலிக பதுங்குகுழியுடன் கொட்டகை அமைத்து நான்கு நாட்கள் இருந்திருதோம் தொடர்ந்தும் அங்கும் இருக்கமுடியாத சூழல்.சிறிலங்கா அரசின் கூட்டுப்படைகளின் தாக்குதல் மேலும் அதிகரிக்க வலைஞர்மடம் நோக்கிச்சென்றோம். மேரி முன்பள்ளி அருகே உள்ள பனங்கூடலில் பதுங்குழி அமைத்து தரப்பாள் கொட்டகைக்குள் வாழ்ந்தோம்.

புதுமாத்தளன் தொடக்கம் பொக்கணை வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் வரை நீண்ட கடல் நீரேரிப்பகுதிக்குள் நான்கு மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்த நாலரை லட்சம் மக்கள் வாழவேண்டிய பேரவலமான வாழ்வாக அந்த வாழ்வு மாறியது என்பதை பருவமறிந்த பின்னாளில் நினைக்கின்றபோது நெஞ்சம் கனக்கிறது.

நாங்கள் வலைஞர்மடத்தில் இருந்த இந்த காலப்பகுதியில் எனது பள்ளித்தோழி நிலா தனது அப்பாவுடன் நாங்கள் இருந்த கொட்டகைக்கு வந்துவிட்டு போனவள் தாங்கள் புதுமாத்தளனில் இருக்கிறம் என சொன்னாள்.

அடுத்தநாள் வந்த செய்தி உயிர் நடுங்கவைப்பதாய் இருந்தது.இன்றுவரை மறக்கமுடியாத என் இனிய தோழி….. அப்பகுதி நோக்கிய சிறிலங்கா படைகளின் எறிகணைத் தாக்குதலினால் அவளது குடும்பத்தில் நிலா,அவளது தங்கச்சி நட்சத்திரா, அவளது அம்மையா, மாமா என அனைவருமே உடல்சிதறி பலியாகிவிட்டனர்.அவளது அம்மா பலத்த காயங்களுடன் உயிர்தப்பினர்.

நிலவின் இழப்பு அந்த வயதிலேயே என் ஆழப்பதிந்துபோன துயரமாய் நிலைத்தது.

நாட்கள் செல்லச்செல்ல யார் உயிருடன் இருப்போம் என்பது நம்பிக்கை இல்லாமல் போய்விட்ட பேரவலம்.ஏப்ரல் மாதம் அங்குலம் அங்குலமாக முள்ளிவாய்க்கால் நோக்கி நகரத்தொடங்கினோம் நாட்கள் செல்லச்செல்ல கண்முன்னே காணும் நிகழ்வுகள் உயிர்வாழ்தலில் இருந்த நம்பிக்கையை குறைக்கத் தொடங்கின.இறந்தவர்களை புதைத்துவிட்டு அருகிலே படுத்துறங்கிய பேரவலம் அங்கு அரங்கேறியது.

வானில் போர்விமானங்கள் கொத்துக்குண்டுகளை வீச, கடலில் இருந்து பீரேங்கிகள் இடைவிடாது முழங்க, தரையிலிருந்து மாறிமாறி பல்குழல் ஆட்லறி எறிகணைகள் இடைவிடாது கொட்ட, துப்பாக்கி சன்னங்கள் மழையெனச் சொரிய;இவற்றுக்குள்ளும் செத்தவர்கள்போக எஞ்சியோர் மீண்டும் மீண்டும் பீனிக்ஸ் பறைவைகளாக எழுந்து கொண்டுதான் இருந்தோம்.

இறுதியில் எல்லாமே முடிந்து போனது..

சர்வதேசம் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை சிதறிப்போனது.நம்பவைத்து ஏமாற்றியதாக உணர்வு..

“அப்பாட்டமான இனப்படுகொலை என்பதை அன்று எட்டு வயதில் கண்ணூடாக பார்த்த காட்சிப்படிமானத்தை இன்று உணர்கின்றேன்”

உலக சமுதாயமே,

ஒரு கொடூர இனவழிப்பின் சாட்சியாக,கொல்லப்பட்ட ஏதுமறியா குழந்தைகளின் ஒட்டுமொத்த குரலாக உங்களிடம் கேட்கிறேன்.

இத்தனை கொடூரங்களுக்கு ஆளாக்கப்பட்ட எமக்கு நீங்கள் எப்போது நீதியை பெற்றுத் தரப்போகிறீர்கள்? ஒரு பெரும் இனவழிப்பை நடாத்தி முடித்துவிட்டு இன்னும் ஆணவத்துடன் இருக்கும் கொலைகாரருக்கு என்ன தண்டனை வழங்கப் போகிறீர்கள்?

                   நிலா இன்னும் நீதிக்காய் காத்திருக்கிறாள்

மே 17, 2020 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர், முள்ளிவாய்க்கால் | , , , , , | கொடிய போரிலும் பட்டினிச் சாவைத் தவிர்த்த தமிழீழ அரசு ! #சுத்துமாத்துக்கள் #துரோகிகள் #இனப்படுகொலை #முள்ளிவாய்க்கால் #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #தமிழர் #Mullivaikkal #ltte #Tamil #Eelam #Traitors #TNAMedia #Genocide #May18 #TamilGenocide #மே18இனப்படுகொலைநாள் #தமிழினப்படுகொலைநாள் #கோமாளி_ஸ்டாலின் #தமிழினதுரோகிதிமுக #திமுக #தமிழர் #DMK #MKStalin #Justice4TamilGenocide #ReferendumForTamilEelam #JusticeForTamilGeonicide #FreeTamilEelam #JusticeForTamilEelam #May18TamilGenocide #TamilEelam #tamilgenocide #May18 #Mullivaaikkaal #TamilGenocide #RememberMay18 #SriLanka அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

எந்த நாட்டு கடற்படை தலைமைத் தளபதிகளையும் விட சூசை மிகச்சிறந்த ‘அட்மிரல்‘தான். ! #சுத்துமாத்துக்கள் #துரோகிகள் #இனப்படுகொலை #முள்ளிவாய்க்கால் #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #கடற்புலிகள் #தமிழர் #ltte #Seatigers#Tamil #Eelam #Traitors #TNAMedia #Genocide

இந்த ஆத்திரமும் ஒரு காரணம். படியுங்கள்…
—————————–
மூத்த பத்திரிகையாளர்
மோகன ரூபன் பதிவு.

புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்க, வங்கக் கடல் வழியாக அடிக்கடி சரக்குக் கப்பல்கள் வருவதுண்டு.

புலிகளுக்குச் சொந்தமாக கடல்புறா, சோழன், இலியானா, யகதா, கோல்டன் பேர்ட், யெலிசியா, ஸ்வீனி, பெதியா, பிரின்சஸ் கிறிஸ்டினா (கிரிசந்தா) போன்ற பல சரக்குக் கப்பல்கள் இருந்தன.

புலிகள், அவர்களுக்காக ஆயுதம் எடுத்துவரும் கப்பல்களை முல்லைத்தீவுக்கு அப்பால் நடுக்கடலில் நிற்கச் சொல்லிவிட்டு, அதிவிரைவு படகுகளில் போய் அவற்றில் கொஞ்சம் கொஞ்சமாக ஆயுதங்களை ஏற்றி வருவது வழக்கம்.

சிங்களக் கடற்படை, விமானப்படைகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ஆயுதங்களை படகில் அள்ளி வருவது அவ்வளவு எளிதான வேலை அல்ல. சிலவேளைகளில் சிங்களக் கடற்படை, விமானப்படையின் கண்களில் பட்டு அவர்களின் தாக்குதல்களை எதிர் கொள்ள வேண்டி வரும்.

கடும் கடற்போருக்கு நடுவில் சில ஆயுதங்களை கடலுக்குப் பறிகொடுக்க வேண்டி வரும். சிந்தாமல் சிதறாமல் ஆயுதங்களைப் படகுகளில் ஏற்றி கரைக்குக் கொண்டுவருவது மிகவும் சிக்கலான பணி.

இந்தநிலையில், ஒருமுறை புலிகளுக்கு மிகமுக்கியமான ஆயுதங்களை ஏற்றி வந்த ஒரு சரக்குக் கப்பலை, இந்தமுறை ரைட் ராயலாக, நேரடியாக முல்லைத்தீவு கரைக்கு வரவழைத்து, ஆயுதம் இறக்கவேண்டும் என்று புலிகளின் தலைமை உத்தரவிட்டுவிட்டது.

ஆயுதக்கப்பலை நேரடியாக கரைக்கு வரவழைப்பதா? எப்படி? புலிகளின் உளவுப்பிரிவுத்தலைவர் பொட்டு அம்மான், கடல்புலிகளின் தளபதி சூசை போன்றோர் இதுபற்றி கலந்து ஆலோசித்தனர்.

அப்போது, திரிகோணமலை துறைமுகத்தில் இருந்து யாழ்ப்பாணத்தின் காரைத்தீவு பகுதிக்கு, ஐரிஷ் மோனா என்ற கப்பல் 128 பயணிகள், 21 ஊழியர்களுடன் வந்து கொண்டிருக்கும் தகவலை உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் தெரிவித்தார்.

அவ்வளவுதான். விறுவிறுவென ஒரு திட்டம் உருவானது.

ஆகஸ்ட் 30ஆம்தேதி செவ்வாய்க் கிழமை. ஐரிஷ் மோனா கப்பல், முல்லைத் தீவு கடலோரத்தில் இருந்து 55 மைல் தொலைவில் வந்துகொண்டிருந்தபோது, எங்கிருந்து வந்தார்கள் என்பதே தெரியாமல் பெண்கடற்புலிகள் சிறுபடகுகளில் வந்து ஐரிஷ் மோனா கப்பலை சூழ்ந்து கொண்டார்கள்.

கப்பலில் ஏறிய அவர்கள் கப்பல் அலுவலர்களை மிரட்டி, கப்பலை அதன் போக்குக்கு கடலில் வழிந்து செல்லும்படி செய்தனர்.

ஆட்டம் ஆரம்பம்.

ஐரிஷ் மோனா கப்பலை புலிகள் கடத்திவிட்ட தகவல் தெரிந்ததும், திரிகோணமலை துறைமுகத்தில் இருந்து இலங்கைக் கடற்படையின் இஸ்ரேல் தயாரிப்பு அதிநவீன டோரா பீரங்கிப் படகு ஒன்று முல்லைத்தீவு நோக்கி சீறிப்பாய்ந்து வந்தது.

இந்த இடத்தில் இஸ்ரேல் நாட்டுத் தயாரிப்பான டோரா (Dvora) பீரங்கிப்படகை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

88 அடி நீள படகு அது. வேகம் 48 நாட், எடை 40 டன். டோரா பீரங்கிப் படகை ஜெட் மற்றும் புரொபெல்லர் என இரு முறைகளில் இயக்கலாம். ஆழம் குறைந்த கடல்பகுதிகளில் கூட டோரா படகு ஊடுருவித் தாக்கக் கூடியது.

டோரா பீரங்கிப் படகின் சிறப்பம்சமே அதில் உள்ள 20 மி.மீ. ஆர்லிகான் (Oerlikon) பீரங்கிதான். கடல், தரை இலக்குகளை மட்டுமின்றி வானத்தில் பறந்து வரும் விமானம், ஹெலிகாப்டர்களையும் இந்த பீரங்கி மூலம் சுட முடியும்.

ஐரிஷ் மோனா கப்பலை கண்காணித்தபடி டோரா படகு கண்மூடித்தனமாகப் பாய்ந்து வந்த போது, கடலில் சற்று மூழ்கிய நிலையில் புலிகள் மிதக்க விட்டிருந்த கடல்கண்ணி வெடிகளை டோரா கவனிக்கத் தவறிவிட்டது. பாவம். டோரா படகு கடல்கண்ணி வெடியில் சிக்கி சிதற, அதிலிருந்து கடற்படையினர் நீரில் விழுந்தனர்.

பிற்பகல் 1.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்தது.

அப்போது, இதற்காகவே காத்திருந்தது போல எங்கிருந்தோ படகுகளில் விரைந்து வந்த கடற்புலிகள், உடைந்து நீரில் மூழ்கிக் கொண்டிருந்த டோரா படகில் இருந்து ஆர்லிகான் (Oerlikon) பீரங்கியை வேகவேகமாகக் கழற்றத் தொடங்கினர்.

பீரங்கிப் படகு மூழ்கும் முன் பீரங்கி கழற்றப்பட்டு அதற்கென தயாரித்து வைத்திருந்த ஒரு தெப்பத்தில் ஏற்றப்பட்டு முல்லைத்தீவு கரையில் பத்திரமாகச் சேர்க்கப்பட்டது.

நேரம் மாலை ஐந்தரை மணி. முதல் டோரா கண்ணிவெடியில் சிக்கிச் சிதறியது தெரிந்து, அதன் நிலைமையை ஆராய இரண்டாவது டோரா படகு ஒன்று இப்போது முல்லைத்தீவு நோக்கி வேகமாக பாய்ந்து வந்தது.

புலிகள் ரொம்ப யோசிக்கவில்லை.

கரைசேர்க்கப்பட்டு கரையில் நிலைநிறுத்தி வைத்திருந்த டோரா படகின் ஆர்லிகான் பீரங்கி மூலம் சுட்டு, அந்த இரண்டாவது டோராவை புலிகள் மூழ்கடித்தனர். அதாவது எதிரியின் விரலை வளைத்து அந்த விரலை வைத்தே அவன் கண்ணில் ஒரு குத்து!

அவ்வளவுதான்! ஒரே நாளில் 2 டோரா பீரங்கிப் படகுகள் காலி. இந்த இரு டோரா படகுகளின் விலை 500 மில்லியன் டாலர்கள்! இலங்கை அரசு வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி வாங்கிய இந்த இரு டோராக்களும் ஒரே நாளிலா பலியாக வேண்டும்?

இதனிடையே புலிகள் வசம் செக் நாட்டில் தயாரிக்கப்பட்ட டி-55 ரக டாங்கி ஒன்று இருந்தது. (ராணுவத்திடம் இருந்து பறித்த டாங்கி). அந்த டி-55 டாங்கியை சாளை பகுதி கடற்கரையில் மண்ணுக்குள் புலிகள் புதைத்து வைத்து, அதன் குழாயை மட்டும் வெளியே நீட்டியிருக்கச் செய்து, அதன்மூலம்தான் இரண்டாவது டோராவை அவர்கள் சுட்டுமூழ்கடித்தார்கள் என்றும் ஒரு தகவல் உண்டு.

புலிகள் ஆர்லிகான் பீரங்கியால் சுட்டார்களா? டாங்கியால் சுட்டார்களா என்பது முக்கியமில்லை.

இலங்கைக் கடற்படையின் இரண்டாவது டோரா பீரங்கிப் படகு புலிகளால் சுட்டு மூழ்கடிக்கப்பட்டது என்பதுதான் முக்கியம். எது எப்படியோ? இலங்கை கடற்படை ஒரே நாளில் இரண்டு டோராக்களையும், 38 கடற்படையினரையும் இழந்தது.

பலியானவர்களில் கடற்படை அலுவலர் நளின் விஜயசிங்கேவும் ஒருவர்.

இரண்டு டோராக்கள் பறிபோய்விட்ட நிலையில், இதற்கு மேலும் ஐரிஷ் மோனா கப்பலை மீட்கப்போகும் துணிவு இலங்கை கடற்படைக்கு வரவில்லை.

இந்நிலையில் ஆழ்கடலில் தயாராக நின்று கொண்டிருந்த ஆயுதக் கப்பலை புலிகள் இப்போது முல்லைத்தீவு கரைக்கு வரவழைத்தனர். ஐரிஷ் மோனா கப்பல் புலிகளின் கையில் பிணையாக இருந்ததால், புலிகளின் ஆயுதக் கப்பலை தடுத்துத் தாக்கும் எண்ணம் கடற்படைக்கு வரவில்லை.

என்ன செய்வது என்றே தெரியாமல், இலங்கை கடற்படையின் ஜலசாகரா என்ற கப்பல் மட்டும் கொஞ்சம் பாதுகாப்பான தொலைவில் இருந்தபடி இந்த நகர்வுகளை சும்மா வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது. மற்றபடி அது எதுவும் செய்யவில்லை. (சமர்த்து!)

இப்போது ஆயுதக்கப்பலில் இருந்த ஆயுதங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் தரையிறக்கிக் கொண்ட புலிகள், அதன்பிறகு ஆயுதக் கப்பலை போகச்செய்தனர். அது வங்கக் கடலில் பாதுகாப்பான தொலைவுக்குச் சென்ற பிறகு ஐரிஷ் மோனா கப்பலை புலிகள் விடுவித்து அனுப்பி வைத்தனர்.

கடல்மீது நடந்த இந்த அதிரடி நடவடிக்கை முழுவதும் கடற்புலிகளின் தலைவர் சூசையின் கண்காணிப்பின்கீழ் அற்புதமாக நடந்து முடிந்தது. புலிகளின் தலைமை அறிவுறுத்தியபடி ஆயுதக் கப்பலை கரைக்கே வரவழைத்து ஆயுதம் இறக்கியாற்று. கடற்படையின் 2 டோராக்களின் கதையை முடித்தாகி விட்டது. ஆபரேசன் கிரேட் சக்சஸ்.

கடற்புலிகளின் தலைவர் சூசையை சில வெளிநாட்டு ஏடுகள் ‘அட்மிரல்’ என்றுகூறி சிலவேளைகளில் கிண்டல் செய்வதுண்டு.

சொன்னாலும் சொல்லாவிட்டாலும் எந்த நாட்டு கடற்படை தலைமைத் தளபதிகளையும் விட சூசை மிகச்சிறந்த ‘அட்மிரல்‘தான். அதற்கு ஐரிஷ் மோனா நிகழ்வு போல பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.

இஸ்ரேலின் டோரா பீரங்கிப்படகுகள், கிபிர் போர்விமானங்கள், அமெரிக்காவின் நவீன போர்ப்பயிற்சி, சீன, ரஷிய ஆயுதங்கள் என்று எந்த பாச்சாவும் புலிகளிடம் பலிக்கவில்லை.

இந்தியாவுடன் சேர்ந்து இத்தனை நாடுகளும் இனஅழிப்புப் போரில் இறங்கி புலிகளையும், பல லட்சம் ஈழமக்களையும் கொத்தாக அழிக்க இந்த ஆத்திரமும் ஒரு காரணம்.

பா. ஏகலைவன்

மே 13, 2020 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள் | , , , , , | எந்த நாட்டு கடற்படை தலைமைத் தளபதிகளையும் விட சூசை மிகச்சிறந்த ‘அட்மிரல்‘தான். ! #சுத்துமாத்துக்கள் #துரோகிகள் #இனப்படுகொலை #முள்ளிவாய்க்கால் #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #கடற்புலிகள் #தமிழர் #ltte #Seatigers#Tamil #Eelam #Traitors #TNAMedia #Genocide அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது