அழியாச்சுடர்கள்

குடாரப்பு தரையிறக்கம்: தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை..!


ஆனையிறவு படைத்தள வெற்றி: ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குடாரப்புவில் தரையிறக்கப்படுவதற்கென வெற்றிலைக்கேணியில் இருந்து கடல்வழியே தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவிலான படை நகர்வொன்றை முன்னெடுத்தனர். கடற்புலிகளின் படகுகளில் 1200 வரையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தாளையடி முகாம் மீதிருந்து வரும் தாக்குதல்களையும் எதிர்நோக்கிச் செல்லும் சூழலிற்குத் தள்ளப்பட்டும் மேலும் குடாரப்புப் பகுதியில் தரையிறங்கும் குறிக்கோளுடன் சென்றனர்.
குடாரப்பு தரையிறக்கச் சமர்

ஈழப்போராட்டவரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய சாதனைகளில் இது முக்கியமானது. மிகப்பெரிய நாடுகளின் படைத்துறைக்கு ஈடான உத்தியுடனும் வளத்துடனும் ஒரு மரபுவழித் தரையிறக்கத்தை தமிழரின் விடுதலைச்சேனை நிகழ்த்தியிருந்தது. அதன்மூலம் வெல்லப்பட முடியாததாக பலராலும் கருதப்பட்ட மிகமுக்கிய இராணுவத் தளமான ஆனையிறவும் அதைச்சுற்றியிருந்த மிகப்பெரும் படைத்தளமும் புலிகளால் மீட்கப்பட்டது.

சவால்களை ஏற்றுச் சமர் செய்யக்கூடாதென்பது கெரிலாப் போராளிகளுக்கான பொதுவிதி.

ஓயாத அலைகள் மூன்று என்ற தொடர் நடவடிக்கையில் முதலிரு கட்டங்களும் வன்னியின் தெற்கு மற்றும் மேற்குமுனைகளில் முன்னேறியிருந்த படையினரை விரட்டி மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டிருந்தது. மூன்றாம் கட்டம் மூலம் வன்னியின் வடக்கு முனையில் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி உள்ளடக்கிய கடற்கரைப் பகுதிகள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து பரந்தன் படைத்தளமும் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட கடற்கரைப் பகுதியிலிருந்து நாலாம் கட்டத்துக்கான பாய்ச்சல் தொடங்க இருந்தது.

26.03.2000 அன்று மாலை வெற்றிலைக்கேணிக் கடற்கரையில் போராளிகள் அணிவகுத்து நிற்கிறார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, ஈழப்போராட்டத்தில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்திய போரியற் சாதனையொன்றை நிகழ்த்த அவர்கள் ஆயத்தமாகி நின்றார்கள். வெற்றிலைக்கேணியிலிருந்து கடல்வழியாக எதிரியின் கட்டுப்பாட்டிலிருக்கும் தாழையடி உட்பட்ட மிகப்பலமான கடற்கரையை மேவிச்சென்று குடாரப்புப் பகுதியில் புலிகளின் அணிகள் தரையிறங்க வேண்டும்; தரையிறங்கிய அணிகள் ஆனையிறவுத் தளத்துக்கான முக்கிய வினியோகப்பாதையான கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொள்ள வேண்டும் என்பதே திட்டம்.

தரையிறக்கம் செய்யப்பட வேண்டிய படையணி மிகப்பெரியது. ஆயிரத்து இருநூறு வரையான போராளிகளை ஒரேயிரவில் தரையிறக்க வேண்டும். தரையிறக்கத்தைத் தடுக்க எதிரி சகலவழிகளிலும் முயல்வான். கடலில் முழுக்கடற்படைப் பலத்தோடும் எதிரி தாக்குவான். கடற்கரையிலிருந்தும் டாங்கிகள் மூலம் நேரடிச்சூடு நடத்தி கடற்புலிகளின் படகுகளை மூழ்கடிப்பான். விடிந்துவிட்டால் எதிரியின் வான்படையின் அகோரத் தாக்குதலையும் எதிர்கொள்ள வேண்டிவரும்.

மிக ஆபத்தான பணிதானென்றாலும் அதைச்செய்தே ஆகவேண்டும். கடற்புலிகள் அந்தப்பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செய்துமுடித்தனர். மாலை புறப்பட்ட படகணி ஆழக்கடல் சென்று இரண்டுமணிநேரப் பயணத்தில் தரையிறங்கவேண்டிய பகுதியை அண்மித்தது. எதிர்பார்த்தது போலவே கடலில் கடும்சண்டை மூண்டது. இரவு 8.30 க்கு கடலில் சண்டை தொடங்கியது. 16 டோறாப் பீரங்கிப் படகுகள் அடங்கிய தொகுதியுடன் சண்டை நடந்தது. தாக்குதலணிகளைத் தரையிறக்கவேண்டிய படகுகளுக்கு எதுவித சேதமும் ஏற்படாவண்ணம் கடற்புலிகளின் தாக்குற்படகுகள் சண்டை செய்தன.

கடுமையான சண்டைக்கிடையில் விடிவதற்குள் வெற்றிகரமாக அணிகள் கடற்கரையில் தரையிறக்கப்பட்டன. முதற்கட்டமாக தரையிறக்க அணிகளைக் காவிச் சென்ற ஏழு வினியோகப் படகுகளும் வெற்றிகரமாகக அணிகளைத் தரையிறக்கின. தரையிறங்கிய அணிகள் தொண்டமானாறு நீரேரியைக் கடந்து அதிகாலைக்குள் கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொண்டனர். அவர்கள் தரையிறங்கிய நேரத்தில் ஏற்கனவே உட்புகுந்திருந்த கரும்புலிகள் அணி பளையிலிருந்த ஆட்லறித்தளத்தைக் கைப்பற்றி பதினொரு ஆட்லறிகளைச் செயலிழக்கச் செய்திருந்தனர்.

தரையிறங்கி நிலைகொண்ட அனைத்து அணிகளையும் கேணல் பால்ராஜ் நேரடியாக களத்தில் நின்று ஒருங்கிணைத்து வழிநடத்தினார். அவருக்குத் துணையாக துணைத்தளபதிகளாக சோதியா படையணித் தளபதி துர்க்கா, மாலதி படையணித் தளபதி விதுஷா, சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தளபதி (பின்னர் பிறிதொரு நேரத்தில் சாவடைந்த) லெப்.கேணல் ராஜசிங்கன், விக்ரர் கவச எதிர்ப்பணிக்குத் தலைமைதாங்கிக் களமிறங்கியிருந்த இளங்கீரன் ஆகியோர் செயலாற்றினர்.balaraj

சிதைக்கப்பட்ட கவசத்தின் மேல் வெற்றி வீரர்களாக……

புலிகள் இயக்கம் இப்படியொரு தரையிறக்கத்தைச் செய்யுமென்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். இவ்வகையான முயற்சிகள் புலிகளின் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதோடு தற்கொலைக்கு ஒப்பானது என்றே எல்லோரும் கருதியிருந்தனர். உண்மையில் தற்கொலைக்கு ஒப்பானதுதான். வன்னித் தளத்தோடு நேரடி வழங்கலற்ற நிலையில் பெருந்தொகைப் போராளிகள் எதிரியின் பகுதிக்குள் சிறிய இடமொன்றில் நிலையெடுத்திருப்பது தற்கொலைக்கு ஒப்பானதுதான். தரையிறங்கிய அணிக்கான உணவு வினியோகத்தைக்கூடச் செய்யமுடியாத நிலை.

கடலில் மிகக்கடுமையான எதிர்ப்பை எதிரி கொடுத்தான். தரையிறக்கம் தொடர்பான செய்தியை அறிந்தபோது முதலில் திகைத்தாலும், அவ்வளவு பேரையும் கொன்றொழிப்பது என்பதில் எதரி தெளிவாக இருந்தான். தன்னால் அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழிக்க முடியுமென்று எதிரி நம்பினான். புலிகளின் போரிடும் வலுவுள்ள முக்கிய அணிகள் அங்கிருந்ததும், முக்கியமான போர்த்தளபதிகள் அங்கிருந்ததும் அவனுக்கு வெறியேற்றியது. அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழித்தால் புலிகளின் கதை அத்தோடு முடிந்துவிடுமென்று கணித்திருந்தான்.

வெற்றிலைக்கேணியிலிருந்து குடாரப்புவரை அரசபடையினரின் மிகவலுவான படைத்தளப் பகுதியாக இருந்தது. தரையிறக்கத்தின் முன்பே, கடல்வழியான தொடர்ச்சியான வினியோகம் சாத்தியப்படாதென்பது தெளிவாக உணரப்பட்டது. ஆகவே தரைவழியாக வினியோகத்தை ஏற்படுத்தவேண்டுமென்பதே நியதி. அதன்படி வெற்றிலைக்கேணியிலிருந்து கடற்கரை வழியாக குடாரப்பு வரை நிலத்தைக் கைப்பற்ற வேண்டும். தரையிறங்கிய அடுத்தநாளே தாளையடி, மருதங்கேணி, செம்பியன்பற்றுப் பகுதிகளைக் கைப்பற்றி குடாரப்பு வரை தொடர்பை ஏற்படுத்தும் சமர் தொடங்கிவிட்டது.

இத்தாவில் பகுதியில் கண்டிவீதியைக் குறுக்கறுத்திருந்த புலியணிகளை முற்றாக அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த எதிரிப்படையோடு கடும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், இத்தாவிலில் நிலைகொண்டிருக்கும் படையணிக்கு வினியோகத்தை ஏற்படுத்த புலியணிகள் கடுமையான சண்டையைச் செய்தன. இரண்டுநாள் எத்தனிப்பின் முடிவில் தாளையடி உட்பட்ட மிகப்பலமான படைத்தளங்களைக் கைப்பற்றி தரையிறக்க அணிக்குரிய தரைவழியான வழங்கலை உறுதிப்படுத்திக்கொண்டனர் புலிகள்.

அதுவரை சரியான வினியோகமில்லாது, இருந்தவற்றை மட்டும் பயன்படுத்தி நிலத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்த தரையிறக்க அணி ஆசுவாசப்படுத்திக்கொண்டது. அணிகள் சீராக்கப்பட்டு தொடர்ந்து சண்டை நடந்தது. கண்டிவீதியைக் குறுக்கறுத்திருக்கும் புலிகளை முற்றாக அழிப்பதற்கு எதிரி தனது முழுவளத்தையும் பயன்படுத்தினார். கவசவாகனங்கள், ஆட்லறிகள், படையணிகள் என்று சகலதும் பயன்படுத்தினான். மிகமிக மூர்க்கமாகத் தாக்கினான். ஆனாலும் புலிவீரரின் அஞ்சாத எதிர்ச்சமரில் தோற்றோடினான்.

கவசப்படைக்குரிய பல வாகனங்கள் அழிக்கப்பட்டன; சேதமாக்கப்பட்டன. புலியணி நிலைகொண்டிருந்த பகுதி சிறியதாகையால் மிகச்செறிவான ஆட்லறிச்சூட்டை நடத்துவது எதிரிக்கு இலகுவாக இருந்தது. புரிந்துணர்வு ஒப்பநம் ஏற்பட்டபின் அவ்வழியால் சென்றவர்கள் அப்பகுதியைப் பார்த்திருப்பர். அழிக்கப்பட்ட கவசவானங்கள் வீதியோரத்தில் நிற்பதையும் இத்தாவில் பகுதியில் ஒருதென்னைகூட உயிரோடின்றி வட்டுக்கள் அறுக்கப்பட்டு மொட்டையாக நிற்பதையும் காணலாம். அவ்வளவுக்கு அகோரமான குண்டுத்தாக்குதல் புலியணிமீது நடத்தப்பட்டது. ஆனாலும் அப்பகுதியைத் தொடர்ந்து தக்கவைப்பதில் உறுதியாக இருந்து வெற்றியும் கண்டனர் புலிகள். ஆனையிறவுத்தளம் முற்றாகக் கைப்பற்றப்படும்வரை முப்பத்துநான்கு நாட்கள் இத்தாவில் பகுதியில் நிலைகொண்டு அதைத் தக்கவைத்துக்கொண்டனர் கேணல் பால்ராஜின் தலைமையிலான புலியணியினர்.

வரலாற்றுப்புகழ் வாய்ந்த மாமுனைத் தரையிறக்கத்தில் நீருக்குள்ளால் 120 mm கனரகப் பீரங்கியை இழுத்துச்செல்லும் பெண்புலிகள்…..

தரையிறங்கிய சிலநாட்களுக்குள் ஆனையிறவைக் கைப்பற்றும் முயற்சியொன்றைப் புலிகள் மேற்கொண்டு அது தோல்வியில் முடிவடைந்தது. பின்னர் சிலநாட்களில் வேறொரு திட்டத்தைப் போட்டு மிகஇலகுவாக, மிகக்குறைந்த இழப்புடன் ஆனையிறவுப்பெருந்தளம் முழுவதையும் கைப்பற்றிக்கொண்டனர் புலிகள். இயக்கச்சியைக் கைப்பற்றியதோடு தானாகவே எதிரிப்படை ஆனையிறவிலிருந்து தப்பியோடத் தொடங்கிவிட்டது. ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பின்வாங்கல் போலன்றி அனைவரும் தங்கள்தங்கள் பாட்டுக்குச் சிதறியோடினர். தாம் பயன்படுத்திய ஆட்லறிகள் முழுவதையும்கூட அழிக்க முடியாத அவசரத்தில் விட்டுவிட்டு ஓடினர். அவர்களுக்கு இருந்த ஒரே பாதையான ஆனையிறவு – கிளாலி கடற்கரைப்பாதை வழியாக ஓடித்தப்பினர்.

முடிவில் ஆனையிறவு தமிழர்களிடம் வீழ்ந்தது. ஆனையிறவு மட்டுமன்றி மிகப்பெரும் நிலப்பகுதி – கண்டிவீதியில் முகமாலை வரை – கிழக்குக் கடற்கரையாகப் பார்த்தால் சுண்டிக்குளம் முதல் நாகர்கோவில்வரை என்று மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டது. அனைத்துக்கும் அடிநாதமாக இருந்தது அந்தத் தரையிறக்கம்தான்.

சிங்களப்படையே அப்படியொரு தரையிறக்கத்தைச் செய்ய முனையாது. 1996 இல் அரசபடையால் அளம்பிலில் அவ்வாறு செய்யப்பட்ட தரையிறக்கமொன்று பெருத்த தோல்வியில் முடிவடைந்து இராணும் மீண்டும் தப்பியோட நேரிட்டது. ஆனால் புலிகள் மிகவெற்றிகரமாக படையணிகளைத் தரையிறக்கி ஒருமாதத்துக்கும் மேலாக மிகக்கடுமையான எதிர்த்தாக்குதலைச் சமாளித்து நிலைகொண்டிருந்ததோடு இறுதியில் எதிரியை முற்றாக வெற்றிகொண்டனர்.

கரும்புலி அணியினரால் தகர்க்கப்பட்ட ஆட்லறிகள்…. பளை ஆட்லறித்தளத் தகர்ப்பு

26.03.2000 அன்று இரவு விடுதலைப்புலிகளின் சிறிய அணியொன்று மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறது. முதல்நாளே கடல்வழியாக எதிரியின் பகுதிக்குள் ஊடுருவிவிட்டிருந்தனர் அவ்வணியிலுள்ளவர்கள். அதுவொரு கரும்புலியணி. ஆண்போராளிகளும் பெண்போராளிகளும் அதிலிருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பளையை அண்டிய பகுதியில் இரகசியமாக நகர்ந்துகொண்டிருக்கின்றனர். அப்போது ஆனையிறவு எதிரியின் வசமிருந்தது. அன்று இரவுதான் வரலாற்றுப்புகழ்மிக்க குடாரப்புத் தரையிறக்கம் நடைபெற இருந்தது. இவர்கள் நகர்ந்துகொண்டிருக்கும் அதேநேரத்தில் கடலில் தரையிறக்க அணிகளைக் காவியபடி கடற்புலிகளின் படகுகள் நகர்ந்துகொண்டிருந்தன.

குறிப்பிட்ட கரும்புலி அணிக்குக் கொடுக்கப்பட்ட பணி, பளையிலுள்ள பாரிய ஆட்லறித்தளத்தை அழிப்பதுதான். பின்னொரு சமரில் வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் வர்மனின் தலைமையில் அவ்வணி பளை ஆட்லறித்தளத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. முழுவதும் எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதி. எந்தநேரமும் எதிரியோடு முட்டுப்பட்டு சண்டை மூளக்கூடும். இயன்றவரை அவ்வணி இடையில் வரும் சண்டைகளைத் தவிர்க்கவேண்டும். இலக்குவரை வெற்றிகரமாக, சலனமின்றி, எதிரி அறியாவண்ணம் நகரவேண்டும். அவ்வணியில் மொத்தம் பதினொருபேர் இருந்தார்கள்.

குறிப்பிட்ட ஆட்லறித்தளம் வரை அணி வெற்றிகரமாக நகர்ந்தது. நீண்டநாட்களாக துல்லியமான வேவு எடுத்திருந்தார்கள். அதுவும் தற்போது அணியை வழிநடத்திவரும் வர்மனும் ஏற்கனவே வேவுக்கு வந்திருந்தான். எனவே அணியை இலகுவாக இலக்குவரை நகர்த்த முடிந்தது. ஆட்லறித்தளத்தின் சுற்றுக்காவலரண் தொடருக்கு மிக அருகில் வந்துவிட்டார்கள். இனி சண்டையைத் தொடக்கி காவலரணைத் தகர்த்து உள்நுழையவேண்டியதுதான். இந்தநிலையில் காவலரணிலிருந்து 25 மீற்றர்தூரத்தில் அணியினர் இருக்கும்போது எதிரியே சண்டையைத் தொடக்கிவிடுகிறான். தடைக்குள்ளேயே அவ்வணியின் முதலாவது வீரச்சாவு நிகழ்கிறது. கரும்புலி மேஜர் சுதாஜினி என்ற வீராங்கனை முதல்வித்தாக விழுந்துவிட்டாள்.

சண்டை தொடங்கியதும் கரும்புலியணி உக்கிரமான தாக்குதலைத் தொடுத்துக்கொண்டு காவரணைக் கைப்பற்றுகிறது. மின்னல்வேக அதிரடித் தாக்குதலில் எதிரி திகைத்து ஓடத்தொடங்குகிறான். தாக்குதல் நடத்துவது பத்துப்பேர் கொண்ட சிறிய அணியென்பதை அவன் அனுமானிக்கவில்லை. ஆட்லறித்தளத்தைப் பாதுகாத்துநின்ற நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் சண்டை தொடங்கிய மறுநிமிடமே ஓட்டடமெடுத்துவிட்டனர். ஆட்லறித்தளம் எஞ்சியிருந்த பத்துப்பேர் கொண்ட அணியிடம் வீழ்ந்த்து.

ஆட்லறிகள் முழுமையாகக் கைப்பற்றப்பட்டன. மொத்தம் பதினொரு ஆட்லறிகள் இருந்தன. ஓடிய எதிரி பலத்தைத்திரட்டிக்கொண்டு மீண்டும் தளத்தைக் கைப்பற்ற வருவான். இருப்பதோ பத்துப்பேர் மட்டுமே. இது தாக்கயழிப்பதற்கான அணி மட்டுமே. மீண்டும் கைப்பற்றவரும் எதிரியோடு சண்டைபிடிக்க முடியாது. ஆனாலும் போதுமான நேரம் இருந்தது. எதிரி உடனடியாக தளத்தைக்கைப்பற்ற முனையவில்லை. குறிப்பிட்டளவு நேரம் தளத்தைக் கட்டுப்பாட்டுள் வைத்திருந்து பின்னர் தலைமைப்பீட அறிவுறுத்தலின்படி ஆட்லறிகளைச் செயலிழக்கச் செய்யத் தொடங்கினார்கள். இந்த நடவடிக்கையில் கரும்புலி மேஜர் தனுசன் வீரச்சாவடைந்தான். பதினொரு ஆட்லறிகளையும் செயலிழக்கச் செய்துவிட்டு எஞ்சிய ஒன்பதுபேரும் பாதுகாப்பாகத் திரும்பினர். ஆட்லறிகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது குடாரப்புவில் தரையிறக்கம் நிகழ்ந்தது. அவ் ஆட்லறித்தளம் அழிக்கப்பட்டது தரையிறங்கிய அணியினருக்கான உடனடி எதிர்ப்பை இல்லாமல் செய்தது.

தளத்தை அழித்த கரும்புலியணி மீண்டும் எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளால் இரகசியமாக நகர்ந்து விடிவதற்குள் பாதுகாப்பாக தளம் திரும்பினர்.

பளை ஆட்லறித்தள அழிப்பு ஆனையிறவு மீட்புப்போரில் மிகப்பெரிய திருப்புமுனை. எதிரிக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டுபண்ணியது. இந்த அழிப்போடு தரையிறக்கமும் ஒன்றாக நிகழ்ந்ததால் எதிரி மிகவும் குழம்பிப்போனதோடு உடனடியான எதிர்வினையை அவனால் செய்யமுடியவில்லை. தன்னை மீள ஒழுங்கமைத்து தாக்குதல் தொடங்க குறிப்பிட்ட அவகாசம் தேவைப்பட்டது.

குடாரப்பில் தரங்கி நீரேரியை கடக்கும் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுடன் போராளிகள்…..   

தாக்குதலின் பின்னணி

குடாரப்புத் தரையிறக்கம் – ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26, 2000 ஆம் ஆண்டு மாலை நேரம் குடாரப்பு பகுதியினை இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அடைகின்றனர் தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள்.

குடாரப்புத் தரையிறக்க மோதல் – குடாரப்பு பகுதியில் மாலை 8:30 மணியளவில் தரையிறங்கும் வேளை ஏற்பட்ட மோதலில் 16 டோறாப் பீரங்கிப் படகுகள் கொண்ட இலங்கை இராணுவத்தினருடன் கடற்புலிகளின் போர்க்கலங்கள் மோதின. தரையிறங்கு கலங்களிலிருந்த தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் சேதம் எதுவும் ஏற்படாது தரையிறக்கப்பட்டனர்.

குடாரப்புத் தரையிறக்கத்தின் போது முதல் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்கள் விதைத்த புனிதமாக்கப்பட்ட இடம்….

கண்டி வீதியில் நிலை கொள்ளல் – குடாரப்பு பகுதியில் தரையிறங்கிய தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் தொண்டமனாறு, கடல் நீரேரி ஊடே இத்தாவில் பகுதியில் உள்ள கண்டி வீதியில் நிலை கொண்டனர். இக்கண்டி வீதியினூடாகவே ஆனையிறவுப் படைத்தளத்திற்கான பிரதான விநியோகங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பளை ஆட்லெறித் தள உள்நுழைவு – கண்டி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் நிலை கொண்டிருக்கும் வேளை பளை ஆட்லெறித் தளத்தில் உட்புகுந்த கரும்புலி, கரும்புலி அணியினர் அங்கமைந்திருந்த 11 ஆட்லெறிகளைச் செயல் இழக்கச் செய்தனர்.

தமிழீழ விடுதலிப் புலிகளின் வழங்கல் தொடர்பு – வெற்றிலைக்கேணி முதல் குடாரப்பு வரையிலான 12 கிலோமீற்றர் தூரம் வரையிலான இலங்கை இராணுவத்தினரின் படை முகாம்கள் அழிக்கப்பட்டு அங்குள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் ஆனையிறவின் பல பாகங்களிலும் உள்ள தமது போராளிகளிடையே வழங்கல் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்தனர்.

இலங்கை இராணுவத்தின் தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல் – தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளை எதிர்நோக்கிய தீவிர தாக்குதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. டாங்கிகள், கவச வாகனங்கள், எறிகணைகள் எனப் பல்வேறு வகையிலும் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களிற்கு எதிர்த் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.

பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தி – இத்தாவில் பகுதியில் நிலைகொண்டிருந்த புலிகளின் அணியினை ஒருங்கிணைத்த தளபதி பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தியினை தம் களமுனைத் தளபதிகளிடமிருந்து கொழும்புப் படைத்தலைமை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் – வத்திராயன், தாளையடி, மருதங்கேணி முகாம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டு உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் மார்ச் 28 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது. இத்தரைவழி விநியோகத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லைப்படை வீரர்களும் பங்காற்றினர்.

காமினி ஹெட்டியாராச்சி பதவியிலிருந்து விலக்கப்படல் – இத்தாவில் நிலைகொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளினைத் தோற்கடிக்க எட்டுற்கு மேற்பட்ட தடைவைகள் மேற்கொண்ட இலங்கை இராணுவத்தினரால் அவர்களை முறியடிக்காத நிலைக்குத் தள்ளப்பட்டதும் ஆனையிறவுப் படைத்தளத்தில் 53ஆம் படையணியின் தளபதியாக விளங்கிய காமினி ஹெட்டியாராச்சி அவர்தம் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.

ஆனையிறவு படைத்தளத்தில் வெற்றியில் தமிழீழ தேசியக்கொடியை தாக்குதல் ஒருங்கிணைப்புத் தளபதி கேணல் பானு அவர்கள் ஏற்றிவைத்தார்.

ஆனையிறவுப் படைத்தளம் மீதான முற்றுகை – இலங்கைப் படைத் தரப்பினரின் விநியோகங்களைத் தடுத்தவாறே ஆனையிறவுப் படைத் தளத்தினை முற்றுகையிட்டனர் தமிழீழ விடுதலைப் புலிகள். குடாரப்புத் தரையிறக்கத் தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து 34 ஆம் நாட்களின் பின்னர் ஊடறுப்புத் தாக்குதல் யுக்திகளால் ஏப்ரல் 22 ஆம் திகதி ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்தது.

மார்ச் 31, 2018 Posted by | ஈழமறவர், ஈழம், களங்கள் | , , | குடாரப்பு தரையிறக்கம்: தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை..! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

முதற் கரும்புலி கப்டன் மில்லர் காணொளி

*

மார்ச் 1, 2018 Posted by | ஈழமறவர், ஈழம், கரும்புலிகள், களங்கள், காணொளிகள் | , , , , | முதற் கரும்புலி கப்டன் மில்லர் காணொளி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ஆனந்தபுரம் வரலாற்றுச் சமர் காணொளி

*

பிப்ரவரி 21, 2018 Posted by | ஈழமறவர், ஈழம், களங்கள், காணொளிகள் | , , , | ஆனந்தபுரம் வரலாற்றுச் சமர் காணொளி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கடற்புலிகள் நெடுந்தீவு சமர் 26.12.2007 காணொளி

பிப்ரவரி 1, 2018 Posted by | ஈழமறவர், ஈழம், களங்கள், காணொளிகள், தமிழீழ படையணி | , , , , | கடற்புலிகள் நெடுந்தீவு சமர் 26.12.2007 காணொளி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

வான்புலிகள் கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதல் பத்து ஆண்டுகள் !

“கப்பல் ஓட்டினான் தமிழன் அன்று, விமானம் ஓட்டி தாக்குதல் நடத்துவான் தமிழன் இன்று” என்று தமிழ் தேசியத்தலைவரின் தலைமையில் தமிழீழ விடுதலைப்புலிகள் உலகுக்கு வெளிப்படுத்திய நாளின் (26.03.2007) பத்தாம் ஆண்டு நிறைவு நாள் இன்றாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மரபுவழிசார் படையணிகள் இருந்த போதும் கடற்படை, தரைப்படை என்ற கட்டமைப்பின்கீழ் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் படைஅணிகள் ஒருநாட்டின் படை அணி கட்டுமானத்திற்கு அமைவாக வான்படையினரை உருவாக்கிய தேசிய தலைவர் அவர்கள், வான்புலிகள் முதல்முதல் சிறீலங்காப் படையினரின் வான்தளம் மீது தாக்குதல் நடத்தி விடுதலைப் புலிகளும் சமபலத்துடனும் சம படைநிலை வலுவுடன் இருக்கின்றார்கள் என்பதனை பன்னாடுகளுக்கு எடுத்துகூறிய தாக்குதல் நாளாக 2007 மூன்றாம் மாதம் 26 ஆம் நாள் கட்டுநாயாக்கா வான்படைதளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அமைகின்றது.

தமிழிழ தேசியத்தலைவர் அவர்களின் தூரநோக்கு சிந்தனைக்கு அமைவாக செயற்பட்ட வான்படைஅணிகள் பின்னாக காலகட்டங்களில் சிறீலங்காப் படையினரின் இலக்குகள் மீது பல தாக்குதல்களை நடத்தி எதிரிக்கு பாரிய இழப்பினை ஏற்படுத்தினார்கள்.

இறுதியில் வான்வழி சென்று சிறீலங்காவின் தலைமையகத்தின் மீது வான் கரும்புலிகள் தாக்குதல் நடத்தியதில் சிறீலங்காப் படையினரிற்கு இழப்பினை ஏற்படுத்தினார்கள்.


  வான்புலிகளின் தாக்குதல் – ஓர் ஆய்வும், ஒப்பீடும்

சிறிலங்கா வான்படைக்கு கட்டுநாயக்கவில் இரண்டாவது தடவையும் இடி விழுந்திருக்கின்றது. அதேவேளை தமிழ் மக்களிடையே பெருமகிழ்ச்சியும், பெருமிதமும் விடுதலைப் போராட்டத்தின் புதிய பாய்ச்சலின் எழுச்சியுமாக உள்ளது.

தங்களை அசைக்க முடியாது என்று இறுமாந்திருந்த நிலையில் தமிழ்மக்களை கொன்றொழித்து வந்த சிறிலங்கா வான்படை தலைமைத்;தளத்தின், கிபிர் மற்றும் மிக் விமானங்களினுடைய தரிப்பிடத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படை விமானங்கள் தாக்குதலை நடத்தி தளம் திரும்பியுள்ளன.

இங்கு இந்த விமானத் தாக்குதலில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது வான்புலிகளினுடைய விமானங்கள் வெற்றிகரமாக தாக்குலை நடத்திவிட்டு பாதுகாப்பாக தளம் திரும்பியமை தான்.

சிறிலங்கா அரசாங்கத்தை பொறுத்த வரையில் அண்மைக்காலமாக குறிப்பாக 2002 ஆம் ஆண்டிற்கு பிறகு வான்புலிகள் தொடர்பான பரப்புரையினை செய்து வருகின்றது.

விடுதலைப் புலிகளிடம் எந்தவகையான விமானங்கள் இருக்கின்றன, எங்கு ஓடுபாதைகள் இருக்கின்றன என்பது தொடர்பான ஆய்வுகளையே சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டு வந்தது.

விடுதலைப் புலிகள் வான்படையினை உருவாக்கியுள்ளார்கள், இது ஒரு போர்நிறுத்த மீறல் என்ற பரப்புரையை சிறிலங்கா அரசாங்கம் போர் நிறுத்த கண்காணிப்பு குழு ஊடாகவும் செய்து வந்தது.

1998 ஆம் ஆண்டு முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்களினுடைய கல்லறைகளிற்கு வான்புலிகளின் விமானம் மலர் தூவிய போதே விடுதலைப் புலிகளினுடைய வான்படை என்பது அறிவிக்கப்பட்ட ஒன்றாயிற்று. அதனால் சமாதான காலத்திலதான்; வான்புலிகள் உருவானார்கள் என சிறிலங்கா அரசாங்கத்தால் சொல்லப்படுகின்றமை புதிய செய்தி அல்ல.

இது ஏற்கனவே இருக்கின்றது, வான்படை இருக்கின்றது என்று விடுதலைப் புலிகள் தெளிவாகவே கூறி வந்துள்ளனர்.

02.

மகிந்த அரசு போர் நிறுத்தத்தை பயன்படுத்தி தமிழ் மக்களிற்கு எதிரான போரை நடத்தி வருகின்றது.

இதற்கான கொடூர பங்களிப்பை செய்து நிற்பது சிறிலங்காவின் வான்படையாகும். சிறிலங்கா வான்படையினுடைய கிபிர் விமானங்களும், மிக் விமானங்களும் தமிழ் மக்கள் மீது குண்டுகளை போட்டு அவர்களை கொன்றொழித்திருக்கின்றன. முதலாவது கொலைவெறி வேட்டை திருகோணமலையின் சம்பூர் மீது நடத்தப்பட்டது.

அடுத்த கொலைவெறி வேட்டை புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தில் செஞ்சோலை வளாகத்தில் பாடசாலை மாணவிகள் மீது நடத்தப்பட்டது.

மற்றொரு கொலைவெறி வேட்டை இலுப்பைக்கடைவையில் நடத்தப்பட்டது. இதை விட ஆங்காங்கு வான்;படையின் கொலைவெறி வேட்டையில் தமிழ் மக்கள், அப்பாவி மக்கள், சிறார்கள், பாடசாலை மாணவர்கள் என அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டார்கள்.

தன்னை கேட்க எவரும் இல்லை என்ற திமிரில் சிறிலங்கா வான்படை இக்கொலைகளையும் தாக்குதல்களையும் நடத்திக்கொண்டு வருகின்றது. அனைத்துலக சமூகம் சமாதானம், மனித உரிமை என்று பேசிக்கொண்டு மறுபக்கம் சிறிலங்கா அரசாங்கத்தின் இந்தப்படுகொலை வேட்டைக்கு ஆதரவை அளித்து கொண்டிருப்பதையும் நாங்கள் காணக்கூடியதாக உள்ளது.

இந்த படுகொலை வேட்டையை சிறிலங்கா அரசு மேற்கொண்டு வந்த போது அனைத்துலக சமூகம் அதனை தடுத்து நிறுத்த எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இதனை நோக்குகின்ற போது அனைத்துலக சமூகத்தினுடைய ஆதரவுடன் தான் சிறிலங்கா அரசாங்கம் இந்தக் கொலைவெறி வேட்டையை நடத்தி கொண்டிருக்கின்றதா என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது.

ஒரு பக்கம் தளத்தில் தரைப்படையை கொண்டு கொலைகளை நடத்தி கொண்டிருக்கின்ற சிறிலங்கா அரசாங்கம், மறுபக்கம் தரைப்படை வான்படையினரை கொண்டு தாக்குதலை நடத்தி வருகின்றது.

அதிலும் குறிப்பாக வான்படை நடத்துகின்ற கொலைவெறி வேட்டை மிகக் கொடூரமானதாக இருக்கின்றது.

இந்த கொலைவெறி வேட்டைக்காக வல்லமை வாய்ந்த புதிய வகை மிக் விமானங்களை உக்ரெய்னிடமிருந்து கொள்வனவு செய்தது.

இவ்வான்படை மிக் விமானங்கள் கொள்வனவு செய்தது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்தினர் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்டிருந்தது.

இது அனைத்துலக மட்டத்தில் சிறிலங்கா ஆயுதக்கொள்வனவில் நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ளதாக, சிறிலங்கா அரச தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய வான்படையை எவராலும் அசைக்க முடியாது தன்னுடைய வான்படை மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்ததை அழித்து விடுவேன் என்றிருந்த சிறிலங்கா படைகளிற்குதான், தமிழீழ வான்புலிகள் இன்று ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டிருக்கின்றனர்.

தமிழ் மக்களின் பரிணாமத்தில் மூன்றாவது பரிணாமமாக இந்த வான்புலிகளின் தாக்குதல் அமைந்திருக்கின்றது.

ஏற்கனவே தரைவழியில் வெற்றிகரமாக தாக்குதல்களை நடத்தி தங்களை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்ற விடுதலைப் புலிகள், மறுபக்கம் கடலில் தங்களின் ஆதிக்கத்தை விரித்த வைத்திருக்கின்ற விடுதலைப் புலிகள், இப்பொழுது வானிலும் தமது படைபலத்தை நிலை நிறுத்தியிருக்கின்றர்.

சிறிலங்கா அரசாங்கம் இந்த சமாதான காலத்தை பயன்படுத்தி கொண்டு தமிழ் மக்களிற்கு எதிரான கொலைவெறி வேட்டையை நடத்தி கொண்டிருக்கின்றது. இவ்வகையாக தமிழ் மக்கள் மீது நடத்துகின்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கையை ஊடகங்கள் மூலம் சிறிலங்கா அரசு மறைத்தும் வருகின்றது.

இத்தகைய சூழலில் சிறிலங்கா அரசினுடைய ஊடக மறைப்புகளிற்குள் கட்டுநாயக்கா வான்படைத் தளத்தில் ஏற்பட்ட அழிவுகள் மறைக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே இவ் வான்படை தளங்களிற்குள் வான்படையினர் கூட செல்லமுடியாத கட்டாய நிலை கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

விமானிகள் மட்டும் தான் செல்லலாம் என்ற நடைமுறை சிறிலங்கா வான்படையால் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

அதற்கான சிறப்பு அடையாள அட்டைகள் அவர்களிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. 2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா வான்படைத்தளத்தில் தாக்குதல் நடத்தி கிபிர், மிக் மற்றும் சிறிலங்காவின் பொருளாதார மையமான சிறிலங்காவின் எயார்லைன்ஸ் விமானங்களை விடுதலபை; புலிகள் அழித்து சிறிலங்காவிற்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரும் இழைப்பை ஏற்படுத்தியதன் விளைவாகவே சிறிலங்கா அரசாங்கம் சமாதானம் என்ற நடவடிக்கைக்கு வந்தது.

03.

சிறிலங்கா அரசின் வான்படை தனது விமான ஓடுபாதைகளை தமிழர் தாயகத்திலும், சிங்கள தேசத்தின் மத்திய பகுதியிலும், கடற்கரை ஒரங்களிலும் நிறுவியுள்ளது.

யாழ்ப்பாணம், திருகோணமலை சீனன்குடா, மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டையின் வீரவில, ஆகிய இடங்களில் சிறிலங்கா வான்படையின் விமான நிலையங்களும், ராடார் நிலையங்களும் இருக்கின்றன.

தெய்வேந்திரமுனையில் மிகப்பெரிய ராடார் நிலையம் இருக்கிறது.

காலித்தறைமுகத்தில் ராடார் நிலையம் இருக்கிறது.

கொழும்பு துறைமுகத்தில் ராடார்; நிலையம் இருக்கிறது.

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் ராடார் நிலையம் இருக்கிறது.

இரத்மலானை விமான நிலையத்தில் ராடார் நிலையம் இருக்கிறது.

புத்தளத்தில் மிகப்பெரிய கடற்படை விமான ராடார் நிலையம் இருக்கிறது. உட்பகுதிகளை பார்த்தால் தமிழர் தாயகத்தின் வட எல்லை மாவட்டமான வவுனியாவில் சிறிலங்கா வான்படைத் தளம் ஒன்றிருக்கிறது.

அங்கும் ராடார் நிலையம் ஒன்றிருக்கிறது.

அதற்கு அடுத்ததாக அனுராதபுரத்திலும் சிறிலங்கா வான்படைத் தளம் இருக்கிறது. அங்கும் ராடார்; நிலையம் இருக்கிறது.

இதைவிட சிறிலங்காவில் ஹிங்கிராகொடை என்ற இடத்தில் வான்;படை தளம் இருக்கிறது. அங்கும் ராடார்; நிலையம் இருக்கிறது.

இவ்வாறு இலங்கை தீவின் கரையோரங்களில் வான்படை கண்காணிப்பு ராடார் வான்படையாலும் கடற்படையாலும் மிகச்செறிவாக வைக்கப்பட்டுள்ளன.

இத்தனை ராடார்; நிலையங்களை மீறி எந்தவொரு விமானமும் தங்களை தாக்கமுடியாது என்றுதான் சிறிலங்கா அரசு இறுமாந்திருந்தது.

இதைவிட அதி தொழில்நுட்பம் வாய்ந்த மிகச்சிறந்த ராடாரான ‘இந்திரா” என்ற பெயரினையுடைய மிகச்சிறந்த ராடார்;களை அண்மைக்காலத்தில் இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ளது.

விடுதலைப் புலிகளின் விமானப்பறப்பை தடுப்பதற்காகவே இவ் ராடார்கள் வழங்கப்படுவதாக இந்தியா தெரிவித்தது.

சிறிலங்கா அரசு சக்தி வாய்ந்த ராடார்கள் மூலம் விடுதலைப் புலிகளினுடைய விமானப்பறப்புக்களை தம்மால் அவதானித்து கட்டுப்படுத்த முடியும். தங்களை விடுதலைப் புலிகளின் விமானங்களால் எதையும் செய்யமுடியாது என்று அறிக்கைகளை வெளியிட்டு கொண்டிருந்தன.

மறுபக்கம் விடுதலைப் புலிகளின் விமானத்தளம், ஓடுபாதை என்று தொடர்ச்சியாக வான்படை கிபிர், மிக் விமானங்கள் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தன.

விடுதலைப் புலிகளின் விமானங்கள் ஒடுதளத்தி;ல் வைத்து அழிக்கப்பட்டிருக்கின்றன என்றெல்லாம் அறிக்கை வெளியிட்டிருக்கின்றன.

இத்தனைக்கும் மீறி சிறிலங்காவினுடைய எல்லா ராடார் திரைகளையும் உச்சிக்கொண்டு சிங்கள தேசத்தில் மிகப்பெரும் பொருளாதார மையமான கட்டுநாயக்கா விமானப்படைத்தளத்தின் மீது வான்புலிகள் வெற்றிகரமாக தாக்குதலை நடத்தி திரும்பியுள்ளனர்.

இது மிக முக்கியமான போரியல் பலமாக, போரியல் உத்தியாக, மனோபலமாக தமிழ் மக்களிற்கு கிடைத்திக்கின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்ம் புதிய பரிணாமத்தில் போகப்போகின்றது என்பதை இது தெளிவாகக் காட்டியிருக்கிறது.

04.

கட்டுநாயக்கா வான்படைத் தளத்தில் வான்படையின் அதிவேக விமானங்களான மிக், கிபிர், எம்.ஐ – 24 உலங்குவானூர்திகள், சில போக்குவரவு விமானங்கள் என்பன தரித்து நிற்கின்றன.

வான்படையின் போக்குவரவின் மையத்தளமாக இரத்மலானை விமான நிலையம் இருக்கிறது.

தமிழர் தாயகத்திலிருக்கின்ற விமான நிலையங்கள், விமானத்தளங்கள் அதனை அண்டியிருக்கின்ற அல்லது சிங்கள தேசத்தில் விரிந்திருக்கின்ற விமான ஒடுபாதைகள் தளங்களில் எத்தகைய விமானங்களும் தரித்து நிற்பதில்லை.

பலாலியினுள் வான்படை தளத்தினுள் விடுதலைப் புலிகள் புகுந்து நடத்திய தாக்குதல், சீனன்குடாவினுள் புலிகள் புகுந்து நடத்திய தாக்குதல் என்பவை காரணமாக கட்டுநாயக்க, இரத்மலானை ஆகியவற்றை தவிர இலங்கைத் தீவில் இருக்கின்ற எந்தவொரு விமான நிலையமும் தரைவழியாக புலிகள் வந்து தாக்கக்கூடிய வகையில் தானிருக்கின்றன.

அவ்விடங்களில் விமானங்களை நிறுத்தவது பாதுகாப்பில்லை எனக்கருதி அரசு தனது முழு வான்படைப் பலத்தையும் மிகைப்படுத்தியிருக்கின்றது. அவசர தேவைக்காக ஒருசில உலங்குவானூர்திகள் மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும், யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

வவுனியா வான்படைத்தளத்தின் தகவல்களின் அடிப்படையில் அங்கு எம்.ஐ -17 உலங்குவானூர்தி ஒன்றும், எம்.ஐ -17 பி – 01 உலங்குவானூர்தி ஒன்றும், வேவு விமானமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அனுராதபுர விமான நிலையம் வான்படையின் பயிற்சி விமான நிலையமாகவிருக்கின்றது. இங்கு பயிற்சி விமானங்கள் இருக்கின்றன அண்மையில் பயிற்சி விமானம் ஒன்று அனுராதபுர வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது விபத்திற்குள்ளாகியது.

பொலநறுவையின் மின்னேரியா கிங்கிராகொட விமானத்தளத்தில் பெல் – 206, பெல் – 212, எம்.ஐ – 24, எம்.ஐ – 35 ஆகிய நான்கு உலங்குவானூர்திகள்; நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

கட்டுநாயக்கா விமானத்தளத்தை பொறுத்தவரையில் 4 ஆவது ஸ்குவாட்ரகனின் பெல்; – 206 ஆகிய படைக்காவி உலங்குவானூர்தி; வான்படையின் 5 ஆவது ஜெற் ஸ்குவாட்ரனின் சீனத்தயாரிப்பு மிகையொலித்தாக்குதல் (சுப்பசொனிக்) கு-7டீளுஇ குவு – 7இ குவு – 5 தாக்குதல் விமானங்கன் ஆiபு – 23ருடீ ? ஆiபு -27 தாக்குதல் பத்தாவது பைற்றர் ஸ்குவாட்ரனின் முகசை (வு)ஊ2இ முகசை ஊ7 விமானங்கள் – 14 ஆவது ஸ்குவாட்ரனின் கே-8 பயிற்சிதாக்குதல் விமானம் ஆகியன நிறுத்தப்பட்டிருக்கின்றன.

இரத்மலாணை விமான நிலையத்தில் 2 ஆவது கனரக துருப்புக்காவி ஸ்குவாட்ரனின் யுn-32இ ஊ-130முஇ ஊந421 ஆகிய விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. ஏனைய விமான நிலையங்களில் தேவைக்கேற்பவே உலங்குவானூர்திகள் அங்கு தரித்து நிற்கின்றன. அங்கு விமானங்கள் நிறுத்தி வைக்கப்படுவதில்லை. யாழ்ப்பாணத்தின் பலாலி, புத்தளத்தின் பாலாவி, மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டையின் வீரவில, காலியின் கொக்கல ஆகியவை தேவைக்கேற்ப பயன்படுத்தும் விமான நிலையங்களாக உள்ளன.

அங்கு விமானங்கள் நிறுத்தி வைக்கப்படுவதில்லை. அடிப்படை காரணம் விடுதலைப் புலிகள் தாக்குவார்கள் என்பது தான்.

எங்கு படையினர் பாதுகாப்பு என்று கருதினார்களோ அங்குதான் வான்புலிகள் 200 மைல்கள் கடந்து பறந்து சென்று, கடற்படை ராடார்கள் வான்படை ராடார்களிற்கு மத்தியி;ல் பறந்து சென்று, வெற்றிகரமாக தாக்குதலை நடத்தி தளம் திரும்பியுள்ளனர்.

சிறிலங்கா அரசு அடுத்த கட்டமாக என்ன செய்யப்போகின்றது என்ற கேள்வி எழும்பியுள்ளது அனைத்துலக மட்டத்திலே இருக்கின்ற ஆய்வாளர்களும் இதனையே கூறுகின்றனர்.

கட்டுநாயக்காவில் 2001 இல் கரும்புலிகளின் தரைவழித் தாக்குதலில் ஏற்படுத்தியுள்ள அழிவுகளின் விபரம்:

13 வானூர்திகள் இதில் அழிக்கப்பட்டன. இதில் 2 கிபீர் விமானங்கள், 2 மிக் விமானங்கள், எம்ஐ – 24 உலங்குவானூர்தி – 1

3 சீனத்தயாரிப்பு கே – 8 விமானங்கள் – என்பன அடங்குகின்றன. சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில் எயார்பஸ் பயணிகள் விமானங்கள் 3 முற்றாக அழிக்கப்பட்டன. 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அழிவு சிறிலங்கன் எயார்லைன்ஸ் சேவைக்கு ஏற்பட்டது.

05.

சிறிய வான்படை பெரிய வான்படைக்கு சவால் விட்டு பெருவெற்றியை ஈட்டிய வரலாற்று முன்னோடிச்சம்பவம் ஒன்றை ஒப்பீடாக இங்கு தருகிறேன்.

இஸ்ரேலை அழிக்க அரபு வல்லரசுகள் மேற்கொள்ளத் திட்டமிட்ட பாரிய நடவடிக்கையை தகர்த்து, தனது தாயகத்தை இஸ்ரேல் காத்த நடவடிக்கை ‘ஆறு நாள் போர்”

யூதர்களுக்கு தனிநாடு இருக்கக்கூடாது என்ற அரபுக்களின் 2000-க்கும் அதிக ஆண்டுகால கோட்பாட்டில் உறுதியாக இருந்து இஸ்லாமிய அடிப்படைவாதச் சிந்தனையில் இஸ்லாமிய வல்லரசுகள் இஸ்ரேலை அழிப்பதற்கான நடவடிக்கைக்கு 1967 இல் தயாராகிக் கொண்டிருந்தன. பெரிய இஸ்லாமிய வல்லரசான எகிப்து சினாய் வளைகுடாவில் இஸ்ரேலுக்கு நெருக்கமாக நகர்ந்திருந்தது. மறுபக்கம் திரான் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்தை எகிப்து துண்டித்தது.

இதனால் இஸ்ரேல் ஒரு போரைத் தொடக்குவது தவிர்க்க முடியாததாகி விட்டது. தற்காப்புப்போர் ஒன்றை எதிர்கொண்டால் தமக்கு அழிவு நிச்சயம் என்ற நிலையில் வலிந்த தாக்குதலை மேற்கொள்ள இஸ்ரேல் திட்டமிட்டது.

போரைத் தொடங்கினால் தனக்கு கிடைக்க இருக்கும் சர்வதேச நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக அமெரிக்காவிடம் தான் போரைத் தொடங்க வேண்டிய நியாயப்பாட்டை விளக்கியது. அமெரிக்கா இஸ்ரேல் போரைத் தொடங்க உடன்படாத நிலையில் மிகுந்த இழுபறியின் பின்னர் இஸ்ரேல் போரைத் தொடங்கினால் கண்டனம் எதையும் வெளியிடுவதில்லை என்ற இணக்கப்பாட்டுக்கு அமெரி;க்கா வந்தது. இதனையடுத்து போhருக்கான திட்டமிடலை தீவிரமாக இஸ்ரேல் மேற்கொண்டது.

தன்னை விட 4 மடங்கு அதிகமான வான்படைப் பலத்தை கொண்ட எகிப்து, சிரியா, ஜோர்தான் ஆகிய நாடுகளின் பலத்தை எதிர்கொள்வது இஸ்ரேலுக்கு நெருக்கடியானது. இங்கு அரபு நாடுகளுக்கு இராக் நாடும் படைப்பலத்தை வழங்கியது. தரைப்படையில் இஸ்ரேலின் 50 ஆயிரம் நிரந்தரப்படைகளை எதிர்த்து 4 லட்சத்து 60 ஆயிரம் இஸ்லாமியப்படைகள் நின்றன. இது இஸ்ரேலின் பலத்தை விட 9 மடங்கு அதிகமாகும். இதனால் தன்னுடைய கட்டாய இராணுவ சேவை சட்டம் மூலம் பயிற்சிபெற்ற 2 லட்சத்து 14 ஆயிரம் மக்கள் படையினரை இஸ்ரேல் இஸ்லாமியப் படைகளுக்கு எதிரான முன்னரண்களில் நிறுத்தியது.

நிரந்தரப் படைகளை தாக்குதல் நடவடிக்கைக்கு தயார் செய்தது. அப்போது இஸ்ரேல் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக இருந்தபோதும் அரபு நாடுகளின் பெற்றோலிய வளத்துக்காக அதற்கு போர்க்கலங்களை ஆயுதங்களை இதர உதவிகளை வழங்க எந்த நாடும் முன்வரவில்லை. அதனால் சட்டபூர்வமற்ற வழிகளில்தான் இஸ்ரேல் தனது படைபலத்தை புலம்பெயர் மக்களின் நிதியுதவியுடன் வலுப்படுத்தியிருந்தது.

இஸ்ரேலின் திட்டத்தில் தரைவழி நகர்வுகளை வெற்றிகரமாக மேற்கொள்ள எதிரியின் வான் படை அழிக்கப்பட வேண்டும் என்பது முக்கிய விடயமாக இருந்தது. சோவியத் தன் புத்தம் புதிய தயாரிப்பான மிக் – 21 தாக்குதல் விமானங்களை இஸ்லாமியப்படைகளுக்கு கொடுத்திருந்தது. எதிரிப் படைகளின் பலத்தை எதிர்கொள்ளத்தக்க வான்படை இஸ்ரேலிடம் இல்லை.

இஸ்ரேலிடம் 197 தாக்குதல் விமானங்களும் எதிரிகளிடம் 812 தாக்குதல் விமானங்களும் இருந்தன. இவற்றின் தாக்குதல் இஸ்ரேல் தரைப்படைகளுக்கு பெரும் அழிவைத்தரும். அதனால் வான்படையை அழிப்பதற்கான நடவடிக்கை புலனாய்வு அமைப்பான மொசாட்டிடம் கையளிக்கப்பட்டது. மொசாட் மொகட் என்ற நடவடிக்கை மூலம் எதிரி வான்படைபலத்தை அழித்தது.

இஸ்ரேலின் ‘ஆறு நாள் போர்” வலிந்த தாக்குதலில் முதல்நாள் தொடக்க நடவடிக்கை ஒபரேசன் மொகட். ஆறு நாள் போரென்று இராணுவ வரலாறுகளில் குறிப்பிடப்படும் இப்போர் ஹீப்ருவில் – மில்ஹெமற் ஷீசெற் ஹயாமின் எனப்படுகின்றது. இதன் ஒரு கட்டம்தான் மொகட். மொகட் என்ற ஹ_ப்ரு சொல்லின் தமிழ்ப்பொருள் குவியம். குவித்துச்செய்தல் என்பதாகும். ஆங்கிலத்தில் ஒபரேசன் போகஸ் என்று இராணுவ ஆய்வுகளில் இது குறிப்பிடப்படுகின்றது.

இஸ்ரேல் புலனாய்வு அமைப்பான மொசாட் எகிப்து, சிரியா, ஜோர்தான் ஆகியவற்றின் வான்படைத்தளங்கள் அவற்றில் நிற்கின்ற விமானங்கள், ராடார்கள், ராடர்களின் கண்ணில் படாமல் விமானங்களை பறக்க வைக்கும் விடயங்களைப் பற்றிய வேவு மற்றும் புலனாய்வுத்தகவல்களை திரட்டுகின்றது.

1967 யூன் 5 ஆம் நாள்….

காலை 7.45 மணி

இஸ்ரேலின் வான்படையின் ஒட்டுமொத்த வான்பலமான 197 விமானங்களில் 183 விமானங்கள் தமது ஓடுபாதைகளிலிருந்து புறப்படுகின்றன. இது இஸ்ரேல் வான்படையின் ஒட்டுமொத்த பலம். இது இஸ்ரேலின் வான் கெரில்லாத் தாக்குதல்.

வேவுத்தகவல் அடிப்படையில் இவை எகிப்தின் 11 வான் படைத்தளங்கள் மற்றும் அவற்றின் ஓடுபாதைகளை தாக்குவதற்காக விரைகின்றன. எதிரிகளின் ஓடுபாதைகளை சேதமாக்கி குறுகிய காலத்தில் திருத்திப்பயன்படுத்த முடியாதபடி அவற்றை சேதமாக்கும் வகையில் புதிதாக வடிவமைக்கப்பட்ட குண்டுகளும் விமானங்களில் பொருத்தப்பட்டுள்ளன. 11 வான்படைத்தளங்கள் மீது இஸ்ரேலின் 101 விமானங்களும் சுமார் அரை மணிநேரம் குண்டுகளை வீசி விமானங்களையும் – ஓடுபாதைகளையும் அழிக்கின்றன.

இந்த முதல் கட்டத்தாக்குதலில் 197 எகிப்திய போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. வான்படையின் 8 ராடார் நிலையங்கள் அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலின்போது எகிப்திய விமான எதிர்ப்பு படையினரின் தாக்குதலில் இஸ்ரேல் 5 விமானங்களை இழந்தது.

இந்த முதற்கட்டத்தாக்குதல் வெற்றியுடன் தளம் திரும்பிய இஸ்ரேல் விமானங்கள் அடுத்த கட்டத் தாக்குதலுக்காக குறுகிய நேரத்தில் தயாராகின்றன. எரிபொருள் நிரப்பப்படுகின்றது. குண்டுகள் பொருத்தப்படுகின்றன. திட்டமிட்டபடி அடுத்தகட்டம் 164 விமானங்கள் காலை 9.30 மணிக்கு தளங்களில் இருந்து புறப்படுகின்றன. இந்த இரண்டாம் கட்ட இலக்கு 16 வான்படைத்தளங்களும் ஓடுபாதைகளும். இந்த தாக்குதலில் எகிப்தின் 107 விமானங்கள் அழிக்கப்பட்டன.

இதன்போது சிரியா வான்படை விமானங்கள் வானில் வைத்து இஸ்ரேல் விமானங்களை தாக்குவதற்காக புறப்படுகின்றன. அப்போது அவற்றின் மீதும் இஸ்ரேல் விமானங்கள் தாக்குகின்றன. அதில் 2 சிரிய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படுகின்றன. இந்த இரண்டாம் கட்ட வெற்றிகளுடன் விமானங்கள் தளம் திரும்புகின்றன.

அடுத்தகட்டம் சிறிய இடைவெளியில் தயாராகின்றது.

பிற்பகல் 12.15 மணி. 3 ஆம் கட்டமாக இஸ்ரேலின் விமானங்கள் தளத்திலிருந்து தாக்குதலுக்கு புறப்படுகின்றன. இந்த தாக்குதலின் போது இலக்கு எகிப்து – சிரியா – ஜோர்தான் ஆகிய நாடுகளாகும். ஜோர்தான் விமானத்தளங்களை தாக்குவது என்பது அப்போதைய திட்டத்தில் இருக்கவில்லை. எகிப்திய வான்தளங்கள் மீது இஸ்ரேல் தாக்கிய போது எகிப்து படைத்தரப்பு ஜோர்தானிடம் ஜெருசலேம் பக்கத்திலிருந்து தாக்குதலை தொடங்கி இஸ்ரேல் படையை திசை திருப்புமாறு கேட்டது. இது கேட்கப்பட்டதை தொலைத்தொடர்பில் ஒட்டுக்கேட்ட இஸ்ரேல் படைத்துறை ஜோர்தானை வான்படைத்தளங்களை தாக்குவது என்ற முடிவை உடனடியாக எடுத்தது. அதனுடன் இந்த நாடுகளுக்கு தனது படைகளை வழங்கியுள்ள ஈராக்கும் இந்த தாக்குதலின் இலக்காக இருந்தது. ஈராக்கின் எச்-3 தளமும் இந்தக்கட்டத்தில் தாக்குவது என்று முடிவாகியது.

இந்த 3 ஆம் கட்டத்தாக்குதலின் போதும் எதிரி வான்படைக்கு பேரிழப்புகள் ஏற்படுத்தப்பட்டன. காலை 7.45 முதல் பிற்பகல் 12.15 வரையான 3 கட்டத்தாக்குதல்கள் தவிர ஈராக்கின் வான்படைத்தளம் மீது இரு தடவைகளும் – எகிப்து மீது பல தடவைகளும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களின் இறுதியில் இஸ்ரேல் தரைவழி நகர்வை தொடக்குகின்றது.

வான்படைத்தளங்கள் மீதான மொகட் நடவடிக்கையில் எகிப்து, சிரியா, ஜோர்தான், ஈராக் வான் படைத்தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் மொத்தம் 452 விமானங்கள் அழிக்கப்பட்டன. எகிப்து விமானப்படையின் 338 விமானங்களும், சிரியாவின் 61 விமானங்களும், ஜோர்தானின் -29 விமானங்களும், ஈராக்கின் – 23 விமானங்களும், லெபனானின் ஒரு விமானமும் அழிக்கப்பட்டன. எதிரிகளின் தாக்குதல்களால் இஸ்ரேல் – 19 விமானங்களை இழந்தது.

அரபுப்படைகளின் மிகப்பெரும் வலுச்சக்தி விமானங்களான

மிக் – 21 விமானங்கள் – 148

மிக் – 19 விமானங்கள் – 29

மிக் – 17 விமானங்கள் – 112

சுக்கோய் தாக்குதல் விமானங்கள் – 14 ஹோக்கர் ஹன்டர் தாக்குதல் விமானங்கள் – 27 என்பனவும் சாதாரண தாக்குதல் விமானங்களான ரியு – 16 விமானங்கள் – 31

ஐ1-28 வகை விமானங்கள் – 31

வான்படை போக்குவரத்து விமானங்களான

ஐ1-14 வகை விமானங்கள் – 32

அன்ரனோவ் – 12 விமானங்கள் – 8

வேறுவகை போக்குவரவு விமானங்கள் – 4

எம்ஐ – 6 உலங்குவானூர்திகள் – 10

எம்ஐ – 4 உலங்குவானூர்திகள் 6 என்பனவற்றையும் இஸ்ரேலின் மொகட் நடவடிக்கை அழித்தது. அத்துடன் 100 வரையான எகிப்திய விமானிகளும் கொல்லப்பட்டனர். இந்த மொகட் நடவடிக்கைதான் எதிரிகளின் பிரதான பின்பலத்தை உடைத்தது. 3 மணிநேரத்தில் வெற்றி சாதிக்கப்பட்டது.

இவற்றை அழித்து விட்டு இஸ்ரேல் தரைப்படை நகர்வை தொடக்கியது. எதிரிப்படைகளின் வான்படைகளின் எஞ்சிய விமானங்கள் தாக்குதலை நடத்தும் போது அவற்றை எதிர்கொள்ள இஸ்ரேல் திட்டங்களை வைத்திருந்தது. குறிப்பாக எதிரிகளின் எஞ்சிய விமானங்களை வானில் வைத்து தாக்கியழித்து விடுவதற்குரிய உத்திகளை இஸ்ரேல் வைத்திருந்தது. அதற்காக எதிரிகளின் பலமான மிக் – 21 விமானத்தை முதலிலேயே கடத்தி வந்து அதன்மீது எப்பகுதியில் தாக்கினால் அதனால் வீழ்த்தலாம் என்ற விடயங்களை இஸ்ரேல் அறிந்து வைத்திருந்தது.

1956 இல் இஸ்ரேல் நடத்திய போரின் போது எகிப்திய படைகள் வான்படைத்தளம் ஒன்றில் கைவிட்டு ஓடிய ரஸ்யத்தாக்குதல் விமானம் ஒன்றையும் இஸ்ரேலியர்கள் கைப்பற்றியிருந்தனர். இதன் மூலமும் எஞ்சியவற்றை வானில் வைத்து தாக்கியழிக்க இஸ்ரேல் வான்படை தயாராக இருந்தது.

6 நாள் போரின் போது இஸ்ரேல் வான்படைக்கு தளபதியாக ஜெனரல் மோர்ச்சொட்டோய் ஹொட் அல்லது மோடி நியமிக்கப்பட்டிருந்தார். 6 நாள் போரின் முதல் நாள் எதிரி வான்படை அழிப்பையடுத்து தரைப்படைகள் தாக்குதலை தொடங்கின. 6 நாள் போரில் பல மடங்கு பலமான எதிரிகளின் பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது. தனது பரப்பை விட 3 மடங்கு அதிக பரப்புகளை அது பிடித்தது.

-தி.இறைவன் (தாயகம்)-

மார்ச் 26, 2017 Posted by | ஈழமறவர், ஈழம், களங்கள், வீரவரலாறு | , , , | வான்புலிகள் கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதல் பத்து ஆண்டுகள் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது