அழியாச்சுடர்கள்

முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி உட்பட்ட மாவீரர்களி​ன் வீரவணக்க நாள்

2nd-Lt-.malathi-with-lttes-2**

 

 

ஒக்ரோபர் 9, 2015 Posted by | ஈழமறவர், ஈழம், ஐப்பசி மாவீரர்கள், காணொளிகள், வீரவணக்கம், வீரவரலாறு | , , , , , | முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி உட்பட்ட மாவீரர்களி​ன் வீரவணக்க நாள் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவு நாள்

kumarappa pulenthiran இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 28ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழக் கடற்பரப்பில் பயணித்தவேளை சிறிலங்கா கடற்படையால் பிடிக்கப்பட்டு பலாலி படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த இவர்களை கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு சிறிலங்கா – இந்தியப் படைகள் மேற்கொண்டிருந்த கூட்டுச் சதியினை முறியடிக்க 05.10.1987 அன்று சயனைட் உட்கொண்டு

யாழ். மாவட்ட தளபதி லெப்.கேணல் குமரப்பா (பாலசுந்தரம் இரத்தினபாலன் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)

திருமலை மாவட்ட தளபதி லெப்.கேணல் புலேந்திரன் (குணநாயகம் தருமராசா – பாலையூற்று, திருகோணமலை.)

மேஜர் அப்துல்லா (கணபதிப்பிள்ளை நகுலகுமார் – சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.)

கப்டன் பழனி (பாலசுப்பிரமணியம் யோகேந்திரராசா – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)

கப்டன் கரன் (வைத்திலிங்கம் மனோகரன் – சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்.)

கப்டன் மிரேஸ் (தவராஜா மோகனராஜா – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)

கப்டன் நளன் (கணபதிப்பிளளை குணேந்திரராஜா – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.)

லெப்டினன்ட் அன்பழகன் (தேசோமயானந்தம் உத்தமசிகாமணி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)

லெப்டினன்ட் தவக்குமார் (சோமசுந்தரம் பாக்கியராஜா – முள்ளியான், யாழ்ப்பாணம்.)

2ம் லெப்டினன்ட் ரெஜினோல்ட் (கபிரியேல் பேனாட் மரியநாயகம் – முள்ளியான், யாழ்ப்பாணம்.)

2ம் லெப்டினன்ட் ஆனந்தகுமார் (ஞானபிரகாசம் பிரான்சிஸ் அலோசியஸ் – மணற்காடு, யாழ்ப்பாணம்.) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இவர்களுடன் சயனைட் உட்கொண்ட நிலையில் மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்டு பண்டுவம் அளிக்கப்பட்ட போது 06.10.1987 அன்று கப்டன் ரகுவப்பா
(இராஜமாணிக்கம் ரகுமான் – வல்வெட்டிதுறை, யாழ்ப்பாணம்.) வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

யாழ். மாவட்ட தளபதி லெப்.கேணல் குமரப்பாLt Col Kumarappa  

தமிழர் தாயகப் பகுதிகளில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினருக்கும், காவல்துறையினருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் பங்கெடுத்து சிறிலங்கா படையிருக்கு பல்வேறு அழிவுகளை ஏற்படுத்தியிருந்தார். தமிழீழத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் சிறிலங்கா படையினருக்கு எதிரான தாக்குதல்களில் லெப்.கேணல் குமரப்பா அவர்கள் பங்கு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குமரப்பா அவர்களின் திறமையை அறிந்திருந்த தேசியத் தலைவர் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட தளபதியாகவும், யாழ். மாவட்டத் தளபதியாகவும் நியமித்தார். தலைவர் அவர்கள் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை தனது செயற்பாட்டின் மூலம் குமரப்பா அவர்கள் நிருப்பித்திருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தளபதியாகவும். யாழ். மாவட்டத்தின் தளபதியாகவும் விளங்கிய காலத்தில் அந்தந்த மாவட்டங்களில் சிறிலங்கா படையினருக்கும், சிறிலங்கா காவல்துறையினருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் லெப்.கேணல் குமரப்பா அவர்கள் ஈடுபட்டதுடன் அந்தந்த மாவட்டங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பினை உறுதியாகக் கட்டியமைக்க அயராது உழைத்தார்.

சிறிலங்கா – இந்திய உடன்படிக்கை காலப்பகுதியில் லெப்.கேணல் குமரப்பா அவர்கள் திருகோணமலை மாவட்டத் தளபதி லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட போராளிகளுடன் தமிழீழக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு காங்கேசன்துறை படை முகாமிலும் பின்னர் பலாலி படைமுகாமிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்களை கொழும்பிற்குக் கொண்டு செல்வதற்கு சிறிலங்கா – இந்தியப் படைகள் மேற்கொண்ட சதியினை முறியடிப்பதற்காக சயனைட் உட்கொண்டு தம் இன்னுயிர்களை இவர்கள் ஈகம் செய்தனர்.lt_col_kumarappa1

இந்திய சிறிலங்கா படைகளின் சதியினை அறிந்து கொண்ட லெப்.கேணல் குமரப்பா அவர்கள் தன்னை அழித்து கொள்வதற்கு முன்னர் தேசியத் தலைவர் அவர்களிற்கு எழுதிய மடல்:

கனம் தலைவர் அவர்களுக்கு,

குமரப்பா ஆகிய நான் 3.10.87 அன்று அதிகாலை 4.30 மணியளவில் சிறிலங்கா கடற்படையால் பருத்தித்துறை கடலுக்கு மேலாக வைத்துக் கைது செய்யப்பட்டேன். பின்பு காங்கேசன்துறை முகாமிற்கு கொண்டு வந்து, அங்கிருந்து பலாலி இராணுவ முகாமுக்கு இந்திய அமைதிப் படையினரின் கண்காணிப்பிலும், இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பிலும் இருக்கிறேன்.lt_col_kumarappa2

மேலும் என்னை கொழும்பிற்குக் கொண்டு செல்ல நேரிடலாம். நான் இலங்கை அரசாங்கத்தின் சட்டங்களை அங்கீகரிக்கவில்லை. என்னைக் கொழும்பு கொண்டு செல்ல நேரும் பட்சத்தில் என்னை முழுமையாக அழித்துக் கொள்ள சித்தமாயுள்ளேன்.

”புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”

இங்ஙனம்
குமரப்பா
(ஒப்பம்)Lt Col Pulenthiran

திருமலை மாவட்ட தளபதி லெப்.கேணல் புலேந்திரன்
அன்பின் புலேந்திரன்,

தமிழ் மக்களின் பாதுகாப்புக்குத் தானே உத்தரவாதம் என்று எமது ஆயுதங்களைப் பெற்ற இந்தியா, நீ திருமலைக்குப் போவதற்குப் பாதுகாப்புக் கேட்டபோது இந்திய இராணுவத்திலுள்ள மேஜர் கருப்பசாமி உனக்குச் சொன்னார், “இன்றும் இல்லை, இனி எப்போதும் இல்லை” என்று. விடுதலைக்காகப் போரிடும் ஓரினம் தன்னைத் தானே நம்பியிருக்கவேண்டும் என்ற உண்மையைக் கருப்பசாமி வாயிலாக அன்று இந்தியா உணர்த்தியது. பின்னர் அதே செய்தி உனது மரணம் மூலம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.

உனது மரணம் தமிழீழத்தையே உலுக்கியது. மாபெரும் வரலாற்றுக் துரோகமல்லவா அது. தமிழீழ வரலாற்றில் உனது பெயர் அழியாஇடத்தைப் பெற்றதல்லவா? முதன் முதன் சிறீலங்கா இராணுவத்தினருக்கு எதிராக் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் (1981 இல் காங்கேசன்துறை வீதிச் சம்பவம் ) பங்கு பற்றியவர்களில் சீலன், ரஞ்சன் ஆகியோர் வீரச்சாவெய்திய பின் நீ தானே எஞ்சியிருந்தாய். கடைசியில் நம்பிக்கை துரோகத்துக்கல்லவா நீ பலியாகியிருக்கிறாய். தமிழீழ விடுதலைப் போரின் பல வரலாற்றுப் பதிவுகள் உனது வீரச்சாவால் ஸ்தம்பிதமாகிவிட்டனவே.

நான் இந்தியப் படைகளின் சிறையில் இருந்த காலத்தில் எனது மனைவி எனது மகளின் நிலையைப் பற்றி ஒரு செய்தி சொன்னாள். வீதியில் தமது தகப்பனுடன் செல்லும் குழந்தைகளை வெறித்தபடி பார்ப்பாளாம். தனது பார்வையிலிருந்து அவர்கள் மறையும் வரை வேறெதையும் பார்க்கமாட்டாளாம், பேசமாட்டாளாம், இச் செய்தியைக் கேட்டதும், தந்தை அருகில்லாதது ஒரு குழந்தைக்கு எப்படியான ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. என்பதை உணர முடிகிறது. கூடவே உனது ஞாபகம் என்னை வாட்டியது. எனது மகள் என்றோ ஒருநாள் தனது தந்தையைக் கண்டவள். இனி மேலும் அந்த வாய்ப்புக் கிடைக்கலாம். ஆனால் உனது மகன் பிறக்கும்போதே ‘இன்னும் இல்லை இனி எப்போதும் இல்லை’ என்ற நிலையல்லவா ஒ…எவ்வளவு விலை கொடுத்திருக்கிறோம் எமது தாயக விடுதலைக்கு. கூடவே எம் இயக்கத்தின் சக்தியையும் கணக்கிட்டுக் கொள்கின்றேன். இதையெல்லாம் தாங்கும் வலிமையை எபப்டிப் பெற்றுக் கொண்டோமென்று .

இயக்க ரீதியாக என்பதை விட தனிப்பட்ட முறையிலும் எமது கிராமத்து மக்களின் இதயத்தைப் பொருத்தவரை நீ அவர்களது தத்துப்பிள்ளை பாடசாலை மாணவர்கள் என்ற போர்வையில் பொட்டுவின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த அந்த நாட்களை நினைத்துக் கொள்கிறேன். மீள வருமா அந்த நாட்கள் “புலேந்திரன், புலேந்திரன்” என்று உருகி வழிந்தர்களே எனது கிராம மக்கள்! எங்கள் எல்லோருக்கும் இடையில் உன்னிடம் மட்டும் அப்படியென்ன சக்தியிருந்தது? விஷேசமான கறிகள் சமைத்தாலோ, கோயில் விஷேசங்களின் பிரசாதங்கள் என்றாலோ உனது பெயரைச் சொல்லி விசாரித்துக் கொண்டுவந்து ஒரு பங்கை தருவார்களே அது ஏன் ?

அந்தக் காலத்தில் எனது கிராமத்தில் நடந்த மரண ஊர்வலங்களில் பிரேதத்தைச் சுமக்கும் தோள்களில் ஒன்று உன்னுடையது. மங்கள காரியங்கள் நடைபெறும் வீடுகளில் அலங்கார வேலைகளுக்கிடையே உனது குரல் தனித்துக் கேட்கும். குடும்பத்தில் முரண்டு பிடிக்கும் இளைஞர்களுக்கெல்லாம் உனது வார்த்தைகள் நாணய கயிறு, மாலை நேரத்தில் சனசமூக நிலையை மைதானத்தில் நீ தான் உதைபந்தாட்டப் பயிற்சியாளன். அயலிலுள்ள மாணவர்களுக்கு இலவசக்கல்வி போதனையாளன். இன்னும் எத்தனை எத்தனை? இந்தச் சம்பவங்களையெல்லாம் எனது கிராம மக்கள் ஞாபகப்படுத்திச் சொல்கையில் அவர்களது கண்கள் கலங்கும். தொண்டை அடைத்துக் கொள்ளும். மீண்டும் பிறந்து வரமாட்டாயா? என்ற ஏக்கம் பிறக்கும்.lt_col_pulenthiran7

‘சுப்பர்சொனிக்’ அது தான் நாங்கள் உனக்கு இட்ட பட்டப் பெயர். எங்கும் எதிலும் வேகம் காட்டும் உனது போக்கு – மிதிவண்டி தொடங்கி எந்த வாகனத்திலும் உன்னுடன் நாம் வரப் பயப்படுவது உனது வேகத்தைப் பார்த்துதான். எங்கே பொய் அடிபட்டாலும் இறுதியில் நொண்டுவதும் நாங்கள் தான். நீ சிரித்தபடியே எழும்பி வருவாய் அப்படியான சர்ந்தப்பங்களில் ஒரு போதுமே நீ உனது தவறை ஒத்துக்கொள்வதில்லை “நானென்ன செய்யிறது திடீரெண்டு வந்திட்டான் – திடீரெண்டு வளைவு வந்திட்டுது” என்றெல்லாம் நீ சொல்லும் பொது நாங்கள் வழியை மறந்து சிரிப்போம். பயிற்சியின் போது ஒழுங்காகச் செய்வதற்காக நாங்கள் தண்டனை பெறும்போது நீ மேலதிகமாகச் செய்ததற்காகத் தண்டனை பெறுவாய். அந்த கடுமையான பயிற்சி முடிந்தும் நாங்கள் தரையில் கிடந்தது தத்தளிக்கும் போது நீயோ சிரித்தபடியே துள்ளித் திரிந்தாய் மீண்டும் வருமா அந்த நாட்கள்?

நாங்கள் செம்மணியிலிருந்து கொடிகாமம் வரை ஓடிப் பயிர்சியெடுப்பது எதுக்கு ஓடுகிறோம் என்று தெரியாமல் எமது கிராமத்து இளைஞர்கள் ” நாங்களும் வாறம் ” எனத் துணைக்கு ஓடி வருவது ” எந்த இடத்து றேசுக்கு ஓடிப்பழகுறீங்கள் ? ” என்று சாவகச்சேரி காவல் நிலையக் காவலர்கள் கேட்பது. இவற்றில் நான் எதை நினைப்பது? எதை மறப்பது அன்று எமது வியர்வையை தாங்கிக் கொண்ட அந்த வீதி அந்த வீதியால் செல்லும் பொது உதிரும் கண்ணீரையும் ஏற்றுக்கொள்கிறது. உனது மகன் வளரட்டும் இந்தப்பாதையெல்லாம் கூட்டிச் சென்று ” இதால தானடா கொப்பரும் நாங்களும் ஓடிப்பழகினது ” என்று காட்டுகிறேன்.

புலேந்திரன் நீ நடத்திய தாக்குதல்கள் ஒவ்வொன்றுமே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. சிறீலங்காவின் சகல படைகளுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தியிருகிறாய். குடியேற்றம் மூலம் எனது பாரம்பரிய பிரதேசங்களைக் கபளீகரம் செய்ய முனைந்த சிங்களப் பேரினவாதிகளுக்கு நீ சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தாய். அதனால் தான் உன்னை பணயமாக வைத்து தமது சிப்பாய்களைக் கேட்க முனைந்தது சிறீலங்கா அரசு. மணமாகி மூன்று மாதங்கள் உனது வரிசைச் சுமக்கும் உனது மனைவி இந்த நிலையிலும் அடிபணிய மறுத்தாய்.”சிறீலங்கா இராணுவத்தினர் யுத்தகாலத்தில் கைது செய்யப்பட்டவர்கள். நாம் சமாதான காலத்தில் கைது செய்யபப்ட்டவர்கள்” என்றாய். முடிவில் சயனைட் உட்கொண்ட நிலையிலும் கைகள், கால்கள் பற்களால் யுத்தம் நிகழ்த்தினாய்.

உனது உடலில் தெரிந்த காயங்கள் சிங்களப்படை உன்மீது எவ்வளவு ஆத்திரம் கொண்டு இருந்தது என்பதைப் புலப்படுத்தின.

“இந்தியா எமக்குச் செய்த பாவத்தைக் கழுவ புனித கங்கை நீர் போதாது” என்று ஒரு வரலாற்றறிஞர் குறிப்பிட்டதை நினைவு கூறுகின்றேன். திலீபனின் மரணம், உனது மரணம் எமது மக்களுக்கெதிரான போர் இவற்றைக் குறித்தே அவர் அவ்வாறு கூறினார்.lt_col_pulenthiran6

லெப் கேணல் புலேந்திரன் பற்றிய சில குறிப்புகள்…

விடுதலைப்புலிகளின் மத்தியகுழு உறுப்பினரான லெப் கேணல் புலேந்திரன் திருகோணமலை மாவட்டத் தளபதியாகவும் பொறுப்பு வகித்தார்.

இவர் பங்கேற்ற முக்கிய தாக்குதல்கள் :

* 15.10.1981 அன்று முதன்முதலாக சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதலான யாழ். காங்கேசன்துறை வீதித் தாக்குதல்.

* 27.10.1983 அன்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதல்.

* 18.02.1983 அன்று பருத்தித்துறையில் பொலிஸ் ‘ஜீப்’ மீதான தாக்குதல்.

* 29.04.1983 அன்று சாவகச்சேரி ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் முத்தையா மீதான தாக்குதல்.

* 18.05.1983 அன்று கந்தர்மடம் தேர்தல் சாவடியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல்.

* 23.07.1983 அன்று திருநெல்வேலித் தாக்குதல்.

* 18.12.1984 அன்று பதவியா – புல்மோட்டை வீதி சிரீபுரச் சந்தியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல்.

* 09.01.1985 அன்று அச்சுவேலி சிறீலங்கா இராணுவ முருகைக்கு எதிராக நிகழ்ந்த தாக்குதல்.

* 14.02.1985 அன்று கொக்கிளாய் சிறீலங்கா இராணுவ முற்றுகைக்கு எதிராக நிகழ்ந்த தாக்குதல்.

* திருமலை – கிண்ணியா வீதியில் இராணுவத்தின் கவசவாகனம் மீதான தாக்குதல்.

* திருமலை – கிண்ணியா வீதியில் விமானப்படையினர் மீதான தாக்குதல்.

* முள்ளிப்பொத்தானை சிறீலங்கா இராணுவ முகாம் மீதான தாக்குதல்.

* பன்மதவாச்சி சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல்.

– தீருவில் தீ ( 05,10.1992 ) எனும் நூலிலிருந்து ….

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

lt_col_pulenthiran22  lt_col_pulenthiran4 lt_col_pulenthiran2 lt_col_pulenthiran1 lt_col_pulenthiran lt_col_kumarappa3

ஒக்ரோபர் 5, 2015 Posted by | ஈழமறவர், ஈழம், ஐப்பசி மாவீரர்கள், வீரவணக்கம், வீரவரலாறு | , , , , | குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவு நாள் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

லெப். கேணல் சேகர் உட்பட ஏனைய போராளிகளின் வீரவணக்க நாள்

லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் உட்பட ஏனைய போராளிகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.

வெற்றிக்கு வித்திட்டு கல்லைறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்…..

Lt Col Sekar and lttes

யாழ். நாகர்கோவில் பகுதியில் 18.10.2000 அன்று “ஓயாத அலைகள் – 04″ நடவடிக்கை சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 23.10.2000 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் அவர்களின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

சாவுக்குள் உழைத்த வீரம் லெப்.கேணல் சேகர்……….

முல்லைக் கடற்பரப்பில் 23.10.2000 அன்று சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலிப் போராளிகளின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

ஒக்ரோபர் 23, 2014 Posted by | ஈழமறவர், ஈழம், ஐப்பசி மாவீரர்கள், வீரவணக்கம், வீரவரலாறு | , , , , | லெப். கேணல் சேகர் உட்பட ஏனைய போராளிகளின் வீரவணக்க நாள் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தாயகம் முழுதும் பாதம் பதித்த சந்தோசம் மாஸ்ரர்

Lt Col Santhosam

ஒருரிரு தினங்களுக்கு முன்னர் லெப்.கேணல் சந்தோசத்தின் 27வது நினைவுநாள் எம்மை கடந்து போயிருக்கிறது. இருந்தாலென்ன..சந்தோசம் போன்றவர்கள் வருடம் முழுநாளும் நினைவில் வைத்திருக்க வேண்டியவர்கள்.

எப்போதும் ஒரு புன்முறுவல் சந்தோசத்தின் இதழ் ஓரத்தில் இருந்துகொண்டே இருக்கும். எந்த கடினமான சூழலிலும் நிதானம் இழக்காமல் அதே நேரம் முழுவேகத்துடன் செயற்படும் திறன் ஒருசிலருக்கே உரித்தான ஒன்று. அவர்களில் ஒருவர் சந்தோசம்.

ஒரு விடுதலை அமைப்பு தனது பிறப்பில் இருந்து அது வளர்ந்து வேகமெடுக்கும் வரைக்கும் அது சந்திக்கும் சோதனைகளும் கடக்க வேண்டிய நெருப்பாறுகளும் ஏராளம் ஏராளம்.

எமது விடுதலை அமைப்பும் அப்படி நிறையவே சந்தித்தது. வெளியல் இருந்து சிங்கள பேரினவாதம் ஏவும் தடைகளும் சோதனைகளும் நசுக்கி எறிய எடுக்கும் முயற்சிகளும் ஒருபுறம் என்றால் ,உள்ளுக்குள்ளேயே எழும் துரோகங்களும் பிளவுகளும் அதனைவிட ஏராளம்தான்.

இப்படி எல்லாவிதமான சோதனைகளையும் கடந்தே பயணப்பட வேண்டிய பாதையே விடுதலைப் பாதை.

அமைப்பு வளர்ந்த பின்னர் இருக்கும் வளங்களையும் பலத்தையும் மனித வலுவையும் வைத்து எதனையும் சந்திக்கலாம். ஆனால் இயக்கம் ஆரம்பித்தவுடன் தோன்றும் இத்தகைய சோதனைகள் ஒன்றில் இயக்கத்தை அழித்து உருத்தெரியாமல் சிதைத்து வரலாற்று குப்பைக்குள் கடாசி எறிந்துவிடும். அல்லது இயக்கத்தை பாதை தவறி பயணப்பட வைத்துவிடும்.

இவை இரண்டையும் தவிர்த்து விடுதலை அமைப்பை கொண்டு நடாத்தும் ஆற்றல் அதன் தலைமைக்கு இருந்தாலொழிய அந்த இயக்கத்தை கடவுளால்கூட காப்பாற்றவே முடியாமல் போய்விடும்.

இதில் எமது தமிழீழ விடுதலைப் புலிகள் சந்தித்த உள் பிளவுகள், வெளி அழுத்தங்கள், சிங்கள பேரினவாதத்தின் சுற்றிவளைப்புகள் என்பன எல்லாவற்றையும் வெற்றிகரமாக கடந்து இயக்கத்தை வளர்த்தெடுத்த ஆற்றல்மிகு தலைவருக்கு துணைநின்றவர்கள் ஒரு சிலரே. சந்தோசம் அவர்களில் ஒருவன்.

சந்தோசத்தை முதலில் பார்த்தது 79 நடுப்பகுதியில் வன்னிப் பகுதியின் ஒரு பண்ணையில்தான்.

சிலரின் பெயர்கள் ஒருவகையில் காரணப் பெயர்களாக அமைந்து விடுவது அரிதிலும் அரிது. அதில் சந்தோசத்தின் பெயர் முழுக்க முழுக்க காரணப்பெயரேதான். அவனை பார்த்த முதல் கணத்திலேயே அவனின் சந்தோசம் மற்றவர்களையும் தொற்றி கொள்ளும் ஒரு தோற்றமும் அதே புன்முறுவலும்.

சந்தோசம் வன்னி பண்ணைக்கு வந்தபொழுதுகள் இயக்கம் இன்னொரு கட்டத்துக்கு பயணப்படும் பெரு முயற்சியில் இருந்தநேரம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் முதல்முறையாக உத்தியோகபூர்வமாக பத்திரிகைகளுக்கு கடிதம் அனுப்பி எமது செயற்பாடுகளை உரிமைகோரி இருந்த பொழுது.

தமிழர்கள் மத்தியில் தமக்கான ஒரு விடுதலை அமைப்பு முகிழ்ந்துவிட்டது என்ற பேருணர்வு ஏற்றப்பட்டிருந்த காலம் அது. இன்னொரு புறத்தில் சிங்கள பேரினவாதம் எமது உரிமை கோரல் கடிதம், எழுச்சி என்பனவற்றை பார்த்து பதறி அடித்து விடுதலைப் புலிகள் தடை அது, இது என்று அரற்றி கொண்டிருந்த நேரமும் அதுதான்.

சிங்களத்தின் நம்பிக்கை நட்சத்திரமான பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்கா விடுதலைப் புலிகளை அழிப்பேன் என்ற சபதத்துடன் யாழ் கச்சேரியடியில் இருக்கும் பழைய பூங்காவில் முகாமிட்டு முற்றுகைகள், சுற்றிவளைத்தல் என வெறியாட்டமாடிக் கொண்டிருந்த பொழுது அது.

தமிழீழ விடுதலைப் புலிகளும் இதற்கு தமது எதிர்வினையை தகுந்தமுறையில் கொடுக்க ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்த நேரத்தில் சொல்லி வைத்தால்போல இயக்கத்துள் குழுப்பம் ஏற்படுத்தப்பட்டது.

பிரிவுகளை ஏற்படுத்தி குழப்பமுனைந்தோர் இயக்கத்தைவிட்டு வெளியேறிய காலம் அது.

இயக்கத்துள் ஏற்பட்டிருக்கும் பிளவு சிங்களபேரினவாதத்தின் காதுகள்வரைக்கும் எட்டியும் இருந்தது.

இதுவே தருணம் தொடு அம்மை என சிங்கள உளவு அமைப்பு சரத்முனசிங்க தலைமையில் அலைந்து கொண்டிருந்த பொழுதில் இயக்கத்தில் எஞ்சி இருந்த ஒவ்வொருவரின் தோள்கள்மீதும் வரலாற்றின் பெரும்சுமை ஒன்று ஏறி உட்கார்ந்தது.

எப்படியும் இந்த சுழலுக்குள் இருந்து விடுதலைப் படகை மீட்டு எடுக்க வேண்டிய வரலாற்று தேவை வந்துவிட்டிருந்தது. அந்த நேரம் தலைவருடன் நின்றிருந்த அனைவரும் மெச்சத்தக்க பணிகளை செய்தார்கள் என்றாலும் சந்தோசம் மூன்று முனைகளில் இருபத்து நாலு மணி நேரமும் சுழன்றான்.

யாழ்.பல்கலைக்கழகத்துள் தமிழீழ விடுதலைக்கான ஒரு பாரிய வேலைத்திட்டத்தையும் அதே நேரம் ஆயுத ரீதியான தாக்குதல்களில் முதன்நிலை போராளியாக செயற்பட்டது மட்டும் இல்லாமல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு புதிய போராளிகளை உள்வாங்கும் வேலைத்திட்டத்திலும் அதிலும் குறிப்பாக தென் தமிழீழத்தில் எமது போராட்டத்தை விரிவாக்கும் வேலையிலும் உழைத்த முக்கியாமான போராளி சந்தோசம்.

சந்தோசம் புதிதாக உள்வாங்கிய போராளிகள் ஒவ்வொருவரிலும் சந்தோசம் மாஸ்ரரின் ஆளுமை தெரிந்து கொண்டே இருந்தது.

திருமலையில் இருந்து லெப்.சீலன் (சாள்ஸ் அன்ரனி),லெப்.கேணல் புலேந்திரன் லெப்.கேணல் அருணா போன்றோர் சந்தோசம் மாஸ்ரரின் தெரிவுகளே..

அதுமட்டுமல்லாமல் விடுதலைப் போராட்ட கருத்துகளை தென்னமரவாடி தொடக்கம் கந்தளாய் வரைக்கும் ஒரு சைக்கிளில் அலைந்து விதைத்த வீரியமிக்க போராளி சந்தோசம்.

எங்கோ தொலைவில் மூதூரின் கிளிவெட்டி கிராமத்தில் ஒருவரை சந்திக்க வேண்டும் என்று சந்தோசத்துடன் சைக்கிளில் பயணித்த அந்த நாட்களில் அவனுக்கு அந்த பாதைமுழுதும் எல்லோரையும் பெயர் சொல்லி அழைத்து உரையாடும் அளவுக்கு பரிச்சயம் இருந்தது தெரிந்து வியப்பே எழுந்தது.

இதற்கான அவனின் உழைப்பும் நித்திரை அற்ற நாட்களும் பசியுடன் இருந்த பொழுகளும் நிறையவே. மிக தூர இடத்து இயக்கவேலைக்கு என்று சென்று மாதக்கணக்கில் தங்குபவர்கள் பற்றி தலைவர் எப்போதும் கரிசனையுடனும் அதே நேரம் அவர்கள் அங்கு என்ன செய்கிறார்கள் என்ற தகவல் இன்றி தவிப்புடனுமே இருப்பார்.

தகவல் தொடர்ப்புகள் ஏதுமற்ற காலம் அது. ஆனால் சந்தோசம் பற்றி தலைவருக்கு தெரியும்.எந்த சூழலிலும் சந்தோசம் மாறமாட்டான், எந்த நிலைமைக்குள்ளாகவும் சந்தோசம் நுழைந்து வந்துவிடுவான் என்பதில் தலைவருக்கு ஏராளம் நம்பிக்கை.

இந்த வேலைகளுடன் சந்தோசம் இன்னுமொரு வேலைத்திட்டத்தையும் செயற்படுத்துவதில் உழைத்த ஒருவன். தமிழீழ விடுதலைப் புலிகள் முதன்முறையாக வெளியிட்ட உணர்வு என்ற பத்திரிகையிலும் சந்தோசத்தின் உழைப்பும் அவனின் கருத்துகளும் நிறையவே இருந்தன.

சிங்கள பேரினவாதம் போடும் எலும்பு துண்டுகளை ஏதோ விடுதலைக்கான மாற்றீடு என்று மற்றவர்கள் மேடைகளில் முழங்கியபோது உணர்வு மிகவும் திடமாக கூறியது இது சிங்களம் எறியும் சலுகை.

இதற்கு பின்பாக இத்தனை சூழ்ச்சி இருக்கிறது என உணர்வு பத்திரிகை எழுதி எமது மக்களை தெளிவாக்கியதில் சந்தோசத்தின் பங்கு அதிகம்தான்.

அதுமட்டுமல்லாமல் உணர்வு பத்திரிகை குழு என்ற பெயருடன் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் போராளிகள் இணைந்து கிராமம் கிராமமாக மக்களை சந்தித்து திடீர் கூட்டங்களை நடாத்தியதிலும் சந்தோசம் மாஸ்ரரின் வேலையே அதிகம்.

இன்று யோசித்தால்கூட திகைப்பாக இருக்கிறது. விடுதலை மீது இத்தனை நம்பிக்கை கொண்ட மனிதனாக இவன் இருந்திருக்கிறானே என்று. அத்தனை தெளிவும், உறுதியும் இருந்ததால்தான் தென் தமிழீழம் முழுதும் அவனால் கிராமம் கிராமமாக நடந்தும் சைக்கிளிலும் திரிந்து வேலை செய்ய முடிந்தது.

இன்னொரு பாசையில் சொல்வதானால் தமிழீழ விடுதலைப் புலிகளை திருமலைக்கும் மட்டக்களப்புக்கும் காட்டியவன் அவனே.

இது மட்டுமல்லாமல் சந்தோசத்தின் இன்னுமொரு திறமையும் சொல்லியாக வேண்டும். குறி தவறாமல் குண்டெறியும் ஆற்றல். இதற்காகவே அந்த நேரத்து தாக்குதல்களில் சந்தோசமும் ஒருவராக கட்டாயம் இருப்பார்.

திருநெல்வேலியில் சிங்களப் படைமீதான தாக்குதலில் 13 இராணுவத்தினன் கொல்லப்பட்டும் அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் எடுக்கப்பட்ட பொழுதில் கமர் கிரனைட் என்ற புதிய எறிகுண்டுகளும் எடுக்கப்பட்டது.

ஜேர்மனிய இராணுவத்தால் இரண்டாம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட வகை அது. எப்படி பாவிப்பது என்பதை ஆங்கில கையேடுகள் மூலம் படித்து சொன்னதும் சந்தோசம்தான்.

அதுமட்டுமல்லாமல் முதலில் அதனை எறிவது யார் என்ற கேள்வி எழுந்தபோது தலைவர் சந்தோசத்தையே தெரிந்தார். இப்படி ஒரு விடுதலைக்கான அனைத்து வேலைகளிலும் முழு ஈடுபாட்டுடன் போராடிய தோழன் சந்தோசம்.

தான் இயக்கத்துக்கு சேர்த்த சீலன் மீசாலையில் மரணித்தபோது சந்தோசம் கலங்கியதை பார்க்கவும் நேர்ந்தது. அதுவும் கொஞ்ச நேரத்துக்குதான். அதில் இருந்து இன்னும் உறுதி எடுத்து போராடும் வலுவுடன் அவன் “சீலன் விட்டுப் போன வேலைகள் இன்னும் கிடக்கு.அது எல்லாத்தையும் செய்யிறதுதான் அவனுக்கு காணிக்கை” என்று சொல்லியபடி மீண்டும் தனது வேலைக்குள் ஆழ்ந்து போனது சந்தோசத்தின் இன்னொரு பக்கம்.

நாம் எல்லோரும் இன்றும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பெரும்பாடமும் சந்தோசத்தின் குணங்களில் ஒன்று. லெப்.சீலனை இயக்கத்துக்கு அழைத்துவந்தது சந்தோசம் மாஸ்ரர்தான்.

ஆனாலும் 81, 82 தொடக்கம் 83 யூலை 15ம்திகதி வரைக்கும் சாள்ஸ் அன்ரனியே (லெப்.சீலன்) இயக்கத்தின் தாக்குதற்பிரிவு தளபதியாக தலைவரால் நியமிக்கப்பட்டபோது சந்தோசம் மிகவும் விருப்புடனேயே முழு அர்ப்பணிப்புடனேயே சீலனின் வழிகாட்டலில் செயற்பட்ட ஒரு அற்புத மனிதன் சந்தோசம்.

தன்னால் இயக்கத்துக்கு உள்வாங்கப்பட்ட ஒரு போராளி தனக்கு தளபதியாக இருக்கிறானே என்ற வித்தியாசம் ஒரு சிறிதளவுகூட சந்தோசத்தில் தென்படாது.

அதிலும் பொன்னாலை பாலத்தில் கடற்பட ரோந்து அணி மீதான தாக்குதலிலும், சாவகச்சேரி காவல்நிலை தாக்குதலிலும் ஒவ்வொரு விடயத்தையும் சீலனிடம் கேட்டே செய்யும்போது சந்தோசம் எமக்கான பாடத்தை சொல்லாமல் சொல்லி நின்றான்.

அப்படியான ஒரு போராளி, தளபதி சந்தோசம் இந்தியப் படைகளின் பெரும் அணி ஒன்றை யாழ்.நகருக்குள் நுழையவிடாமல் தொடர்ந்து காக்கும் ஒரு போரில் வீர மரணத்தை சந்தித்தான்.

ஒரு சுருட்டு ஒன்றை பற்ற வைத்து ஊதி முடிப்பதற்குள் உங்களை அழித்து விடுவோம் என்று ஆணவத்துடன் சொல்லிய வல்லாதிக்கத்துக்கு வெல்ல இது ஒன்றும் பங்களாதேசோ, காஸ்மீர் பனிமலையோ அல்ல.

இது தமிழீழம். மலைகள் இங்கில்லாது விட்டாலும்கூட எமது மக்களே மலைகள். அவர்கள் ஆதரவே எம் பெரும் பலம். எமது வீரம் என்பது அச்சமறியாத ஆளுமையிலிருந்தே உருவாகிறது என்ற பெரும் செய்தியை சொல்லிய போராளிகளுள் சந்தோசமும் ஒருவன்.

நாளை எம் தேசம் நிச்சயமாக விடுதலை ஆகும். அப்போது அங்கு சிரிக்கும் சிறுகுழந்தை புன்னகையில், நிம்மதியான வாழ்வுக்குள் எமது மக்கள் விடும் ஆறுதல் பெருமிதத்தில் சந்தோசத்தின் புன்னகை என்றும் வாழும்.

நீ திரிந்த தம்பலகாமம் நெல்வயல்களில், மூதூர் கிராமத்தின் காடுகளில், வெருகல் வனப்பில் எல்லாவற்றிலும் தோழனே நீ அதே புன்னகையுடன் என்றும் இருப்பாய். நீ தேடிய விடுதலையை நாடிய படி.

ச ச முத்து

ஒக்ரோபர் 23, 2014 Posted by | ஈழமறவர், ஈழம், ஐப்பசி மாவீரர்கள், வீரவணக்கம், வீரவரலாறு | , , , , | தாயகம் முழுதும் பாதம் பதித்த சந்தோசம் மாஸ்ரர் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

எல்லாளன் நடவடிக்கையி​ல் காவியமான கரும்புலிக​ளின் வீரவணக்க நாள்

விடுதலைப் போராட்ட வரலாற்றின் திருப்பு முனை எல்லாளன் நடவடிக்கை நினைவுகள்ellaalan-attack-bt-ltte 21 praba

தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டி 7 ஆண்டு நினைவுநாள் 22- ஒக்டோபர் -2014 இன்றாகும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்திய நாளாக 2007 ஆம் ஆண்டு காணப்படுகின்றது.

தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில கெரில்லா போராட்டமாக காணப்பட்டு அதன் வளர்ச்சிப்படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக வளர்ச்சிகண்டு பின் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் போராட்டமாக பல கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக போராடிய காலகட்டத்தில் 2007 ஆம் ஆண்டு பத்தாம் மாதம் 22 ஆம் நாள் விடுதலைப்புலிகளின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படிக்கல்லான தாக்குதலாக சிங்களபடையின் குகை என்றும் வான்படை தரைப்படையினை கொண்ட அனுராதபுரம் வான்படைத்தளத்தில் தரைவழியாக நகர்ந்து சென்று தாக்குதல் தொடுத்து ஸ்ரீலங்கா வன்படையினரின் இருபதிற்கு மேற்பட்ட வான்கலன்களை அழித்து தளத்திற்கு பாரியசேத்தை ஏற்படுத்தி ஸ்ரீலங்காப்படைக்கு பின்னடைவினை ஏற்படுத்தி வீரவரலாறான 21 சிறப்பு கரும்புலி மாவீரர்களின் 7ம் ஆண்டு 22- ஒக்டோபர்-2014 ல் நினைவுகூரப்படுகிறது.

தமிழீழ தேசியத்தலைவர் நேரடி வழிகாட்டலில் உருவான கரும்புலிகள் அணி இறுதியாக தலைவர் அவர்களுடன் உணவருந்தி படம்எடுத்துவிட்டு விடைபெற்று தரைவழியாக தமிழீழத்தின் எல்லைப்பகுதிகள் ஊடாக கரடு முரடான பதையினையும் பள்ளத்தாக்கினையும் கடந்துசென்று அனுராதபுரம் என்ற சிங்களவனின் குகைக்குள் சென்று அங்கு தரித்து நின்ற வான்கலங்கள் அனைத்திற்கும் தீ முட்டிய அந்த தீராத வீரர்களை நினைவிற் கொள்கின்றோம் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் பெயர்சூட்டி வைக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த எல்லாளன் நடவடிக்கை.

ellaalan-attack-bt-lttes

அவர்களின் விபரம் வருமாறு:

லெப்.கேணல் வீமன் (கோபாலபிள்ளை பிரதீபன் – திருகோணமலை)
லெப். கேணல் இளங்கோ (இராசதுரை பகீரதன் – யாழ்ப்பாணம்)
லெப். கேணல் மதிவதனன் (பாலசுப்பிரமணியம் தயாசீலன் – யாழ்ப்பாணம்)
மேஜர் சுபன் (கதிரவன் ஜீவகாந்தன் – யாழ்ப்பாணம்)
மேஜர் கனிக்கீதன் (இராசன் கந்தசாமி – மட்டக்களப்பு)
மேஜர் இளம்புலி (துரைரட்ணம் கலைராஜ் – யாழ்ப்பாணம்)
மேஜர் காவலன் (சண்முகம் சத்தியன் – கிளிநொச்சி)
மேஜர் எழிலின்பன் (விமலநாதன் பிரபாகரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் தர்மினி (கணேஸ் நிர்மலா – கிளிநொச்சி)
கப்டன் புரட்சி (செல்வராசா தனுசன் – யாழ்ப்பாணம்)
கப்டன் கருவேந்தன் (மயில்வாகனம் சதீஸ்குமார் – கிளிநொச்சி)
கப்டன் புகழ்மணி (தர்மலிங்கம் புவனேஸ்வரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் புலிமன்னன (கணபதி நந்தகுமார் – யாழ்ப்பாணம்)
கப்டன் அன்புக்கதிர் (வில்சன் திலீப்குமார் – முல்லைத்தீவு)
கப்டன் சுபேசன் (நாகராசா மகாராஜ் – மன்னார்)
கப்டன் செந்தூரன் (கணேசநாதன் தினேஸ் – யாழ்ப்பாணம்)
கப்டன் பஞ்சீலன் (சிவானந்தம் கஜேந்திரன – மட்டக்களப்பு)
கப்டன் ஈழப்பிரியா (கந்தையா கீதாஞ்சலி – யாழ்ப்பாணம்)
கப்டன் அருள்மலர் (சேவியர் உதயா – யாழ்ப்பாணம்)
கப்டன் ஈழத்தேவன் (தங்கராசா மோசிகரன் – யாழ்ப்பாணம்)
லெப். அருண் (பத்மநாதன் திவாகரன் – யாழ்ப்பாணம்)

********

**************

ஒக்ரோபர் 21, 2014 Posted by | ஈழமறவர், ஈழம், ஐப்பசி மாவீரர்கள், கரும்புலிகள், வீரவணக்கம், வீரவரலாறு | , , , , , | எல்லாளன் நடவடிக்கையி​ல் காவியமான கரும்புலிக​ளின் வீரவணக்க நாள் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது