அழியாச்சுடர்கள்

#தமிழீழகாவல்துறை யும் #தமிழககாவல்துறை யும் ! #கொலைகாரத்துறை #தமிழினதுரோகிதிமுக #திருட்டுதிமுக #திருட்டுதிராவிடம் #தமிழர் #சுத்துமாத்துக்கள் #துரோகிகள் #இனப்படுகொலை #Tamils#tamileelam #eelam #police #JusticeforJayarajAndFeniz #tnpolice

(மக்களுக்கான காவலர்கள் – ஊழல்வாதிகளுக்கான காவலர்கள்)

தமிழகத்தில் தற்காலத்தில் காவல்துறைகளின் அத்து மீறல்கள் எல்லையை தாண்டி செல்கின்றது என்றே கூறவேண்டும் இவர்கள் மக்களுக்கானவர்கள் என்றால் இவ்வாறான அத்துமீறல்கள் நடக்க வாய்ப்பே இல்லை என்றுதான் கூறவேண்டும். பண்பையும் நாகரிகத்தையும் உலகிற்கு சொல்லிக்கொடுத்த குடியில் இவர்கள் பிறந்ததற்கு தமிழன்னையே வெட்கப்படுகின்றாள்.

மக்களுக்கான காவல்துறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்து காட்டாக தமிழீழ காவல்துறையினர் வாழ்ந்து காட்டினார்கள் அவர்கள் மக்களை மட்டுமல்ல நாட்டையும் பாதுகாக்க தம் இன்னுயிர்களை தியாகம் செய்தார்கள். இவ்வாறு பல வரலாறுகள் இருக்கின்றன அவற்றில் இரண்டு வரலாற்று சம்பவங்களை இங்கு பார்ப்போம் காலத்தின் தேவை கருதி.

2004ஆம் ஆண்டு இரனைப்பாலை பிரதான வீதியில் உள்ள விக்னேஸ்வரா வித்தியாலையத்தில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் சிறுமி ஒருவர் பாடசாலை முடிவடைந்த பின்னர் 12.30 மணியாகியும் பிள்ளை வீடு வராததால் தாய் அண்மையில் இருந்த அரசியல்துறை பணிமனையில் அறிவித்திருந்தார். உடனே இந்த தகவல் புதுக்குடியிருப்பு கோட்ட பொறுப்பாளர் இளம்பரிதி அவர்களுக்கு தகவல் செல்ல உடனே அப்போதைய காவல்துறை பொறுப்பாளராக இருந்த பிரிகேடியர் பா. நடேசன் அவர்கள் தலமையில் இளங்கோ அவர்களை பொறுப்பாக நியமித்து நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டது. ஒரு மணி நேரத்தில் குறிந்த சிறுமி மீட்கப்படுகின்றார். பள்ளி முடிந்தவுடன் அந்த சிறுமி தனது சிறுய தாய்வீடு சென்று 2 ரூபாய் பெறுமதியான ஐய் கலந்த ஜீஸ் அருந்திக்கொண்டு இருந்தார். அந்த சிறுமி சிறியதாய் வீடு சென்றதற்கு அந்த பிள்ளை சொன்ன காரணம்.

அம்மாக்கு ஏலாது அவாட்ட எனக்கு யூஸ் வாங்கி தர காசு இருக்காதுதானே அதுதான் சித்திட்ட வந்தனான் அவா மேசன் வேலைக்கு போறவா அவா வாங்கி தருவா எண்டு தெரியும் அதுதான் வந்தனான் சித்தி எனக்கு யூஸ் வாங்கி தந்தவாவே என்று புண்ணகையுடன் கூறினார். உடனே இளங்கோ அவர்கள் பிள்ளையை அழைத்துக்கொண்டு பிள்ளையின் தாயிடம் ஒப்படைத்து விட்டு கொஞ்சம் பொறுங்க அக்கா என்று கூறிவிட்டு இளங்கோ அவர்கள் ஒரு மூட்டை அரிசியும் தேவையான மரக்கறிகளையும் வாங்கி குடுத்துவிட்டு. அந்த பிள்ளையிடம் 50 ரூபாய் காசையும் குடுத்து விட்டு உங்களுக்கு யூஸ் வேணும் எண்டா பக்கத்தில எங்கட மாமக்களின்ர பேஸ் இருக்கு அங்கபோய் சொன்னா வாங்கி தருவினம் என்று கூறிவிட்டு. பக்கத்திலுள்ள நடுவப்பணியகத்தில் குறித்த விடையத்தை கூறிவிட்டு தனது சொந்த கணக்கில் போடும்படி கூறினாராம்.

இதில் நாம் பார்க்க வேண்டிய விடையம் என்னவென்றால். எந்த சந்தர்ப்பத்திலையும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் குற்றங்கள் நடக்க வாய்ப்புக்கள் இல்லை என்றும் குறித்த விடையத்தை கவனத்தில்கொண்டு குளந்தையை மீட்டது.

இரண்டாவது பிள்ளையை மீட்டு விட்டோம் என்று விட்டு விட்டு போகாமல் பிள்ளையின் தேவையை அறிந்து பூர்த்தி செய்தது. இதில் முக்கியமான விடையம் பிள்ளைக்கு யூஸ் வாங்கி குடுக்கும் காசை தன்னுடைய கணக்கில் போடச்சொன்னது. காரணம் விடுதலைப்புலிகளின் பொருளாதார ஆய்வு அறிக்கையில் கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக தனது சொந்த பணத்தை வழங்கி வந்தார்.

இதில் முக்கியமான விடையம் என்னவென்றால் குறித்த சிறுமி இறுதி யுத்தம் நடந்து முடிந்த பிற்பாடு முள்வேலி இருந்துகொண்டே 2010ஆம் சாதரண தர உயர்தரத்தில் 10 பாடங்களிலும் சிறப்பு தேர்ச்சி பெற்ற ஜனனி என அறியப்படும் சிறுமி.

இரண்டாவது சம்பவம் இளங்கோ அவர்கள் தமிழீழ காவல்துறை பொறுப்பாளராக பதவி ஏற்ற பின்னர் 2008ஆம் ஆண்டு ஆரம்ப பகுதி அது அப்போது வன்னியில் சண்டை ஆரம்பிப்பதற்கு ஒரிரு மாதங்களுங்களுக்கு முன்னர்.

கரகராயன் குளம் பகுதியில் இருந்து வேட்டைக்காக இருவர் தோட்டா துவக்குடன் சென்றிருந்தனர் பாதை மாறி சிங்கள இராணுவத்தினரின் கட்டுப்பாடான ஓமந்தை இராணுவ கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டனர் இராணவத்தினர் இருவரையும் பார்த்துவிட ஒருவர் தப்பி புலிகளின் பிரதேசத்திற்குள் வந்து விட்டார் ஒருவர் இராணுவத்திடம் பிடிபட்டுவிட்டார்.

தப்பி வந்தவர் காவல்துறையில் முறைப்பாடு செய்ய குறித்த விடையம் அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் நடேசன் அவர்கள் மூலம் தலைவருக்கு செய்தி போகின்றது. தலைவர் குறித்த நபரை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிக்கின்றார்.

உடனே அரசியல்துறையினர் ஓமந்தையில் உள்ள சிங்கள இராணுவ காவல்துறையுடன் பேசுகின்றனர். குறித்த நபர் வவுனியா காவல்துறையில் ஒப்படைக்க பட்டுள்ளார் என தகவல் அரசியல்துறை ஊடாக இளங்கோ அவர்களுக்கு கிடைக்க உடனே சர்வதேச செஞ்சிலுவை குழுவின் அனுமதியோடு அரசியல்துறையும் தமிழீழ காவல்துறையும் களத்தில் இறங்கு கின்றனர். குறித்த நபரின் வழக்கு இலங்கை அரசின் வவுனியா நீதிமன்றுக்கு வருகின்றது குறித்த நபருக்கு ஆதரவாக தமிழீழ காவல்துறை ஒருவர் நியமிக்கப்பட்டு இராணுவ கட்டுப்பாட்டிற்குள் அனுப்ப பட்டு அவருக்காக வாதாடி 50ஆயிரம் பிணையில் அவர் விடுவிக்க படுகின்றார் குறித்த பணத்தை தமிழீழ அரசியல்துறை கட்டி உரிய நபரை புலிகளின் கட்டு பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இதில் பார்க்க வேண்டிய விடையம் எதிரியிடம் பிடிபட்டு விட்டார் என்பதையும் தாண்டி மக்களுக்கானவர்கள் நாங்கள் எந்த பெரிய பிரச்சனை வந்தாலும் களம் இறங்குவோம் என சின்ன விடையமாக இருந்தாலும் சரி உயிரே போகுன்ற விடையமாக இருந்தாலும் சரி மக்களுக்காகவே வாழ்ந்து மக்களுக்காகவே உயிரை திறந்தவர்கள் தமிழீழ காவல்துறை.

இதுவே தேசியத் தலைவருனதும். தமிழீழ காவல்துறையினரினதும் சிறப்பு.

தமிழீழ காவல்துறையின் வரலாற்றை தன்மானமுள்ள தமிழக காவல்துறை ஒருமுறை படித்து பாருங்கள். தியாகம் அர்ப்பணிப்பு, மக்கள் சேவை என்பதை புரிந்து கொள்ள முடியும்.

நன்றி
ஈழம் புகழ் மாறன்

ஜூன் 27, 2020 - Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள் | , , , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: