அழியாச்சுடர்கள்

காணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை!

சகோதரனை தேடி போராடிய சகோதரி பலியான பரிதாபம்!

காணாமல் போன தமது உறவுகள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் வவுனியாவில் மரணமடைந்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 24 வயதான இராசநாயகம் நிலா என்ற யுவதியே உடல்நலப் பாதிப்பினால் மரணமடைந்துள்ளார்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் தகவல்களை வெளிப்படுத்தக் கோரி 500 நாட்களையும் தாண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தப் போராட்டத்தில் தனது சகோதரனைக் காணவில்லை எனத் தெரிவித்து குறித்த பெண் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளதுடன், தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தமையால் மன அழுத்தத்தினால் பாதிப்படைந்திருந்ததாக அவரது உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜூலை 22, 2018 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம் | , , | காணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.

கிளிநொச்சியில் ஒரு ஏழை பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட பசுமாட்டை இரவோடு இரவாக திருடிச் சென்று இறைச்சிக்காக வெட்டியுள்ளனர்.

கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள அவரது தற்காலிக வீட்டு வளவில் கட்டியிருந்த பசுவினை திருடிச் சென்றவர்கள், ஜெயந்திநகர் மீனாட்சி அம்மன் கோவிலருகில் வைத்து வெட்டி இறைச்சியினை எடுத்து விட்டு எச்சங்களை விட்டுச் சென்றுள்ளனர்

இரண்டு பிள்ளைகளின் தாயாரான பெண்ணுக்கு வழங்கப்பட்ட பசுவையே இவ்வாறு வெட்டியுள்ளனர். மிகவும் வறுமை கோட்டிற்குள் வாழ்ந்து வரும் இவருக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று பசுவை வாழ்வாதார உதவியாக வழங்கியிருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.

கணவன் விசேட கொமாண்டோ பிரிவில் இருந்து இறுதியில் கைது செய்யப்பட்டு காணாமல் போன நிலையில் எவ்வித வருமானமும் இல்லாமல் மகனுடன் கூலி வேலைக்குச் சென்றும் மற்றும் சகோதரர்கள் மூவர் போராளிகளாக இருந்து வீரச்சாவடைந்தும் இன்னுமோர் சகோதரர் எல்லைப்படையில் இருந்து வீரச்சாவடைந்தும் உள்ள பெண்ணுக்கு

இலண்டன் வாழ் புலம் பெயர் ஈழத் தமிழரான திருமதி சரஸ்வதி சண்முகநாதன் 16-03-2018 அன்று யாழ் எய்ட் ஊடாக வாழ்வாதார உதவியாக வழங்கிய 10 லீற்றர் பால் தரக்கூடிய அடுத்த மாதம் கன்றீனப் போகும் பசுவை களவாடி வெட்டி இறைச்சியாக்கி கன்றை வெளியில் எடுத்து வீசி மிருகத்தனமான செயலினை நிகழ்த்தி உள்ளது ஒரு கும்பல்!

Balan tholar

ஜூலை 22, 2018 Posted by | ஈழமறவர், ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர் | , , , | ஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம். அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது