அழியாச்சுடர்கள்

தலைவனைத் தேடும் தமிழினம் !

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டம் – தடை தற்காலிக நீக்கம் முழுமையான வெற்றியா ?

இத்தோடு காளைகள் இனவழிப்பில் இருந்து பாதுகாக்கப்பட்டு விடுமா ? விவசாயம் பாதுகாக்கப்பட்டு விடுமா ?

இந்தப் போராட்டம் விவசாயத்தை தூக்கி நிறுத்தும் என்றவர்களுக்கு ஒரு ஏமாற்றம் தான் ?

தலைமை இல்லாத போராட்டம் நன்மையும், தீமையும் கலந்த போராட்டமாக  மாறிப்போனதும் , திசை திருப்பப்பட்டும் விட்டிருக்கின்றது !

60 ஆண்டுகளுக்கு பின்னரான தமிழ்நாட்டின்  மிகப் பெரிய எழுச்சி வெறும் ஜல்லிக்கட்டோடு மட்டுப்படுத்தப்பட்டுப் போனது ஏமாற்றமே !

இது ஒரு ஆரம்பப்புள்ளி தான் என்று வைத்துக் கொண்டால் இந்த எழுச்சி ஒரு தலைமையின் கீழ் மாற்ற வேண்டியது அவசியம் ! அது இனிவரும் போராட்டங்களுக்கு உந்து சக்தியாக இருந்திருக்கும் !

ஜல்லிக்கட்டிற்காக ஆரம்பத்திலிருந்து போராடிய கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும் தான் !

பொதுவாக நாம் தமிழர்கள் என்ற உண்மையான தலைவர்களை விடுத்து தறுதலைகளை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதும் , திமுக ,அதிமுக ,காங்கிரஸ் என்ற தமிழ்விரோதிகளுக்கு ஓட்டுப் போட்டு விட்டு அடிமைகளாக கையேந்தி நிற்பதும் வழக்கம் தானே !

ஊடகங்கள் சீமான் அண்ணா சொல்லும் உண்மைகளை கேள்வி மட்டும் தான் கேட்கிறது. இன்று இந்த போராட்டம் சீமான் அண்ணா போட்ட விதையின் விருட்சம் என்பதை எத்தனை பேர் அறிவார்கள்?

யாரும் இருக்கும் வரைக்கும் அருமை தெரிவதில்லை !

உலகத்தமிழர்களின் தலைவனைத் தொலைத்து விட்டுத் தமிழினம் தேடிக்கொண்டிருக்கின்றது !

இன்னொரு புறம் தமிழ்நாட்டில் தலைவனைத் தேடத் தொடங்கியிருக்கின்றார்கள் தமிழர்கள் !

அடுத்த தேர்தலில் தெரிந்து விடும் இது வெறும் ஓட்டு போடும் இனமா என்று ?Advertisements

ஜனவரி 23, 2017 - Posted by | ஈழம், தமிழர் | ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: