அழியாச்சுடர்கள்

புனர்வாழ்வளித்து விடுதலைசெய்யப்பட்ட மற்றொரு முன்னாள் போராளி மரணம்!

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட மற்றொரு முன்னாள் போராளி மரணமடைந்துள்ளார்.

சுகவீனம் காரணமாக திருகோணமலை குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு வற்றாப்பளையில் வசித்துவந்த திக்சன் எனப்படும் 26 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த இவர் வெலிக்கந்தை, திருகோணமடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டரை வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் திக்சன், சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisements

திசெம்பர் 13, 2016 - Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம் | , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: