அழியாச்சுடர்கள்

புலிகளிடம் ஈழம் இருந்தபோது…..

PAR117363; SRI LANKA_95_0005, Sri Lanka, 1995, SRILANKA-10024NF5. Tamil Tigers on march, Sri Lanka, 1995. "It would be hard to find a contrast which stands out in sharper relief than warriors marching by a farmer quietly plowing his field. The pastoral juxtaposed with the martial reminds us of the dichotomy of the many facets of the human condition. Women give birth, children play, men farm, meals are prepared - all within close proximity of bloodshed, struggle, and hostilities." Retouched_Sonny Fabbri 11/14/2013

Sri Lanka, 1995, SRILANKA-. Tamil Tigers on march, Sri Lanka, 1995.
“It would be hard to find a contrast which stands out in sharper relief than warriors marching by a farmer quietly
plowing his field. The pastoral juxtaposed with the martial reminds us of the dichotomy of the many facets of the human condition.
Women give birth, children play, men farm, meals are prepared – all within close proximity of bloodshed, struggle,
and hostilities.”
Retouched_Sonny Fabbri 11/14/2013

விடுதலைப்புலிகளின் போராட்டத்தையும் அரசியலையும் தனது கேமராவில் துல்லியமாக படம் பிடித்த உலகப்புகழ்பெற்ற புகைப்பட கலைஞர் Steve McCurry ஸ்டீவ் மெக்கர்ரே.

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் அரசியலை இதைவிட ஆழமாக சொல்லிவிட முடியாது என நினைக்கிறேன். இரண்டுமுறை உலக பத்திரிக்கை புகைப்பட விருதினைப் பெற்ற ஸ்டீவின் இந்தப் படம், புலிகளை தட்டையாக விமர்சித்த அரசிய்லை உடைத்துப் போட்டிருக்கிறது என்று சொல்லலாம்.

விடுதலைப்போராட்டத்தில் அடிமைப்பட்டிருந்த பெண்களின் பங்கு, உழைக்கும் சமூகம் வைத்திருந்த நம்பிக்கை, நிலத்தினை மட்டுமே விடுவிக்க நடந்த போராட்டமாக இல்லாதிருத்தலை பதிவு செய்தவிதம் என பல்வேறு செய்திகளை தேக்கி வைத்திருக்கிறது இப்படம்.

விடுதலைப்புலிகளைப் பற்றி கேட்டறிய விரும்புகிறவர்களுக்கு இப்படத்தையே காட்ட விரும்புவேன்.

மக்களை நேசித்தவர்களே எம்மாவீரர்கள். அவர்கள் தங்களைப் பற்றி அதிகம் பேசாதவர்கள். தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தாதவர்கள். அங்கீகாரங்களை துறந்தவர்கள்.

மாவீரர்களின் ஈகங்கள் வீண் போகாது.
ஈழவிடுதலை தவிர்க்கப்பட முடியாதது.

Thirumurugan Gandhi

**

ஆப்கன் பெண் புகழ் புகைப்படக் கலைஞர் ஸ்டீவ் மெக்கர்ரி, ஈழம் குறித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரல் ஆகியுள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆளுகையில் ஈழம் இருந்தபோது எப்படி இருந்தது என்பதை விளக்கும் ஒரு அருமையான புகைப்படத்தை அமெரிக்க புகைப்படக் கலைஞர் ஸ்டீவன் மெக்கர்ரி வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படத்திற்கு சிங்களவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்திட்டு வருகின்றனர். அதற்கு தமிழர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

சிங்களவர்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து இந்தப் புகைப்படத்தை அகற்றாமல் வைத்துள்ளார் மெக்கர்ரி.

இந்தப் புகைப்படத்தில் வயல் வெளி ஒன்றில் ஒரு விவசாயி ஏர் பூட்டி உழுது கொண்டிருக்கிறார். மறுபுறம் விடுதலைப் புலிகள் வீரர்களும், வீராங்கனைகளும் வரிசையாக வரப்பு மீது நடந்து வரும் காட்சி உள்ளது.

விடுதலைப் புலிகள் வசம் இருந்த போது ஈழ மக்கள் எந்த அளவுக்கு நிம்மதியாக இருந்தனர், தங்களது வழக்கமான வேலைகளை எப்படி நிம்மதியாக செய்து வந்தனர்.

அதை விட முக்கியமாக அவர்களது நிலம் அவர்களிடமே இருந்தது என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் புகைப்படம் அமைந்துள்ளது.

மெக்கர்ரி அமெரிக்காவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆவார். இவரை டக்கென புரிந்து கொள்ள வேண்டுமானால்.. இவர்தான் வித்தியாசமான கண்களுடன் கூடிய ஆப்கானிஸ்தான் பெண்ணை புகைப்படம் எடுத்துப் பிரபலமானவர்.

1984ம் ஆண்டு ஆப்கன் கேர்ள் என்ற பெயரில் இந்தப் புகைப்படம் அப்போது நேஷனல் ஜியாகிரபி புத்தகத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றதாகும்.

national-geographic-steve-mccurry

Advertisements

நவம்பர் 27, 2016 - Posted by | ஈழமறவர், ஈழம் | ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: