அழியாச்சுடர்கள்

கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் புலிகளா?

tamil-journalists-killedஆட்சி அதிகாரத்துக்கு வந்ததும் தங்கள் எதிர்பார்ப்புகளை நல்லாட்சி அரசாங்கம் பூர்த்திசெய்யும் என்று தமிழர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதிலும் குறிப்பாக கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, தாக்குதலுக்குள்ளான தமிழ் ஊடகவியலாளர்களின், ஊடகப் பணியாளர்களின் உறவுகள் வெகுவாக நம்பியிருந்தார்கள். நல்லாட்சிக்கு ஒரு வயதாகிவிட்ட போதிலும் இன்னும் அந்த எதிர்பார்ப்பில் ஒரு துரும்பளவு கூட நிறைவேற்றப்படவில்லை.

கொல்லப்பட்ட, காணாமல்போன, தாக்குதலுக்குள்ளான தமிழ் ஊடகவியலாளர்களுக்கு, நிறுவனங்களுக்கு நீதியைப் பெற்றுத் தருமாறு யாழ். ஊடக மையம் கடந்த வருடம் மே மாதம் 31ஆம் திகதி ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. விசாரணையை வலியுறுத்தி ஊடக அமைப்புகளால் பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.

லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரகீத் எக்னலிகொட ஆகியோரின் வழக்கு விசாரணை ஓரளவாவது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், கொல்லப்பட்ட, காணாமல்போன தமிழ் ஊடகவியலாளர்கள் புலிகள் பட்டியலில் உள்ளடக்கப்படுகின்றனர்.

2004ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டு வரை கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமல்போன ஊடகவியலாளர்களின் விவரங்களை “இலங்கையில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள்” என்ற அமைப்பு தம்வசம் வைத்திருக்கிறது. இந்தக் காலப்பகுதியில் கொல்லப்பட்ட, காணாமல்போன தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பான பதிவொன்று Adobe Spark இன் உதவியுடன் கீழே தரப்பட்டுள்ளது.

செல்வராஜா ராஜசேகர்

*************

தொடர்புபட்ட கட்டுரைகள்,

“சாத்தானிடம் வேதம் ஓத அழைப்பது போல”

“அழுகையை சேமிக்கத் தொடங்கும் அம்மா…!”

“காணாமல்போய் 9 வருடங்கள்: ஊடகவியலாளர் சுப்ரமணியம் ராமசந்திரன் எங்கே?

“பிரகீத் புலியா? அம்பலத்துக்கு வந்த இராணுவக் கொலையாளிகள்”

கொல்லப்படாத நிமலராஜனும் பிபிசியும் – வாக்குமூலம்

“7 வருடங்களுக்கு முன் கொடூரமான அந்தப் பொழுது…”

JDS-மாற்றம்

Advertisements

நவம்பர் 17, 2016 - Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம் | , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: