அழியாச்சுடர்கள்

தாயிலாப்பிள்ளை யானோம் தலைவனை இழந்த பின்னே…..?

praba-godதாயிலாப்பிள்ளை யானோம்

விடுதலை தந்த மூச்சே என்
வியாபகப்பொருளே
உன்னைப் பாடக்கூட முடியவில்லை
உனக்காய் பாமாலை சூட்டியவன்
உனக்கு பூமாலை சூட முடியாமல்
தவிக்கின்றேன்?

இறைவன் என்கிறார்/நீ
மனிதன் என்கிறார் /இல்லை
முற்றும் துறந்த முனிவன் என்கிறார்
அதனால் உனக்கு….
வழிபாடு தேவை இல்லை
என்கிறார்
அய்யன் அய்யனே
பூசைக்கு வராதா திருவே
உருவம் நீ
வீதிக்கு வராத உருவே
வதனம் நீ
ஆசைக்குக் கூட உன்னை
அழகுத் தேரில் அழைத்து,
வரமுடியவில்லை
என் காவல்தெய்வம்
கரிகாலச் சோழனை
ஆரத்தழுவி
அழக்கூட முடியவில்லை

உலகத்தமிழினமே
உணக்கு ஒரு மடலென்று
உரக்கச் சொல்லியதால்
உரலில் கட்டி
வாய்கட்டி அடைக்கப்பட்டேன்
வரலாற்றுத் தவறை ஏன்?
செய்தீர் என்று
வாய்மை கொண்டதற்காகவே
வாங்கியவன் துரோகிப்பட்டம்.

அய்யன்,அய்யனே
நீயே என் உயிரானாய்
நீயே என் உணர்வானாய்
தாங்க முடியவில்லை?

தங்கவண்ண மேனியும்
புன்னகை தாங்கும் இன்ப வதனமும்
கண்களில் வீரப் போர்புலிப்பார்வையும்
புவனம் யாவையும் தன்வயமாக்கிடிம்
எங்களின் கோமகா
தமிழ்க்குலக்காவலா
தமிழீழ நாட்டின் மேதகு தலைவா
மொட்டவிழாப் பயிராயிருக்கும் போதே
சுட்டெரிப்பேன் பகையை என்று
சுடர்முகம் தூக்கி நின்ற
குலவிளக்கே / உன்
கட்டவிழா மேனிதன்னைக்
கரம்தொட்டுத்தடவியாடக்
காத்திருந்தோம்
கண்விழித்தோம்
முடியவில்லை

அய்யனே
நான் அழவில்லை ,
இரத்தம் அழுதது
போவது நிச்சயம் ,
முன்போ பின்போ
ஆயினும் அழுகை
அதன் பேர் பாசம்
வாழ்க்கை மரணம்
நடுவில் தடைச்சுவர்
எனக்கு எல்லாம்
இவனென்று இருந்தேன்,
நாதியற்றேன் அப்பொழுதே..
என்னினத்தைக் காப்பவர்,
யார் ?
என்னை ஈன்றவனை
என்னை உலகுக்குத்தந்தவனை
எனக்கு எல்லாமாய் ஆனவனை
அழகுபார்க்க முடியவில்லை
திக்குத்தெரியாமல்
திகைக்கின்றேன்
என்செய்வேன் ..
சென்றனை என்ற போதும்
செவியினும் நம்…பவில்லை

அம்பலவி ஒரு விசரன்
அண்ணை இருக்கும் போது
அழுது புலம்புகிறான் என்று
அணைவரும் சொல்லுகிறார்
போதாக்குறைக்கு
மனநோயாளி என்று
மகுடம் சூட்டுகின்றார்
அது உண்மையாய் இருக்கட்டும்
நான் என்ன …?
கொள்ளி வைக்கவா கேட்கிறேன் ?

குலம்காத்த கோமகனை
நிலம் பார்த்து அதிரும் வண்ணம்
கெடுதலைக்கு ஆழாகிக்
கீழோரால் கீழ் என்று
இகழப்படும் என்றன்
பெரும்தலைவன்
பாதத்திருவடியை
பாரெல்லாம் போற்றும்
பண்பை உருவாக்க
நினைக்கின்றேன்.

நாட்டுக்காய் உழைத்த
உத்தமனாம் பெருவீரன்
நிலைதனை அறிந்து தேர்ந்து
நீதிக்குத் தொடுக்கும்
யுத்தத் தளபதியாய்
நின்றிருந்தான்
பெரும்சேனை முகப்பதனில்
நாடளிக்கும் குணக்கேடர்களைக்
கூடி எதிர்ப்பதற்க்குக்
கூவுகின்றான் ,

தெருவெல்லாம் பாசறைகள்
முள்ளிவாய்க்கால் பெருவெளியில்
இரத்த வாய்க்கால்
பெருக்கெடுத்து ஓடுவதை
சகிக்காத பெரும் தலைவன்
போருக்கு நாள் குறித்து
விரைவில் போர் தொடங்கும்
பொறுத்திருங்கள் எனப்
பதில் இறுத்தான்
படைகொண்டு செல்வதற்கு
இன்னும் சில நாட்களே
எனக்கண்டு சிந்தை மகிழ்ந்தான்

அதற்குள்..
கொடும் விந்தை ஒன்று
உருவாகும் என
யார் கண்டார் …..?
பாசறைக்குப் பக்கத்தே
படைநடத்தும் விதம் பற்றித்
தனிமையிலே நின்று
தலைவன் யோசனைக்கு
அடிமையானான்
அப்போது …..
அண்டை நாட்டோடு
அகிலத்தின்
ஆதிக்கக் கரங்களெல்லாம்
ஒன்றுகூடி …
உருவத்தால் மனிதராய்த் திரிகின்ற
நாய் நரிகள் கழுகுக்கும் பருந்துக்கும்
இவ்வுடலைக்கொடுப்பதற்கே
சுற்றியுள்ளார் என்பதனை
உணர்ந்து ஆய்ந்து
தான் வளர்த்த வீரர்களை
அழித்துப்போடல்
ஆகாதென அறிந்து
போர்தொடுக்க துணிந்த வேளை
மலைபிளக்க வெடி வைத்தது போல்
மாவீரன்
மண்டையைப் பிளப்பதற்கும்
துணிந்து விட்டார் .

தலை நொறுங்கித்
தரையில் சாய்ந்தான்
தமிழ் தலைவன்
தினவெடுத்த தோள்களோடு
தினம் திரிந்த மணிமார்பில்
உதிர வெள்ளம்.
முடித்து விட்டார் பகையை என்ற
இறுமாப்பில்
ஆரியத்துச் சிங்கம் மண்ணை
முத்தமிட்ட வேளை
உத்தமனும் கடைசி மூச்சை
நாட்டுக்கே அளித்து விட்டு
துயில் நீங்காத்தொட்டிலில்
படுத்துக்கொண்டான்

சித்திரம் சிதைந்தது
எனக்கேள்வியுற்று
இத்தரையில் மாந்தரெல்லாம்
உயிருள்ள பிணமாகி
உருக்குலைந்து போனார்
தலைமகனே
தலைகுனியாத் தமிழனாக,
இறுதிவரை போராடி
இலங்குபுகழ் ஈழமதின்
அணையாச் சுடரானாய்
உனை மறக்க முடியாமால்
உள்ளமெல்லாம் நீ நிறைந்தாய்
சாகாததாகச் செத்தது மேனி
தளராததாகத் தளர்ந்தது பூமி
வேகாத வெந்தன விழிகள்
வீட்டிலும் நாட்டிலும்
அவையே ஒளிகள்
அய்யகோ தமிழே
தாயிலாப்பிள்ளை யானேம்
தலைவனை இழந்த பின்னே…..?

prabakaran god

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?
கருகத் திருவுளமோ?

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?

எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ?

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

மாதரையும் மக்களையும் வன்கண்மையால் பிரிந்து
காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ?

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?

எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி இரு
கண்ணற்ற சேய் போல் கலங்குவதும் காண்கிலையோ?

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி
உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலையென்றும்
செப்பித் திரிவாரடி கிளியே
செப்பித் திரிவாரடி கிளியே செய்வதறியாரடி கிளியே

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி கிளியே

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்றெமதன்னை கை விலங்குகள் போகும்
என்றெமதன்னை கை விலங்குகள் போகும்
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைக்ள் வேறினி யார்க்கோ?
பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைக்ள் வேறினி யார்க்கோ?
தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ?
தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ?
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்

prabhakaran

காலம் ஒரு பதிலெழுதும்

எனக்கும் உனக்கும்
இடைவெளிகள் அதிகம்
என்றாலும் நான்
உன்னை விரும்பினேன்
ஒருவகையில்
உன்னை ரசித்தேன்

நீ
வீரன் என்பதற்காக அல்ல.
கடவுளுக்குச் சமனானவன்
என்ற கற்பனையாலும் அல்ல.

நானே நீயாக
எனது உணர்வுகளே
உனது உணர்வுகளாக
எனது ஆவேசமே
உனது ஆவேசமாக
பாவித்துக் கொண்டே
உன்னில் என்னைக் கண்டேன்.

இன்று,
நீ இல்லை
அது குறித்து
அழக் கூட முடியவில்லை.

எம்மவர் வாழ்வில்
ஒருசில பொழுதுகள்
அன்று இருந்தன.
அந்நியப் படைகள்
எம் மண்ணை
ஆக்கிரமித்திருந்த காலம்
இருண்ட பொழுதுகளே
எமக்காக மிச்சமிருந்த காலம்
உறவுகளைப் பிரிந்தாலும்

அழமுடியாத காலம்

அந்தக் காலங்கள்
மாறவேண்டுமென்றே நினைத்தோம்.

நான் வேண்டுதல் செய்தேன்
நீயோ
உனக்காகவும் எனக்காகவும் போராடினாய்

இன்று,
நீ
எம்மிடையே இல்லை
தெரிந்தும்
பகிரங்கமாக அழ முடியவில்லை
அஞ்சலிக்க முடியவில்லை.

இன்று,
எமை அழுத்தும்
ஷபூட்ஸ்| கால்கள் இல்லை
ஆக்கிரமிப்பாளனின்
ஆதிக்கமும் இல்லை
இருந்தும் கூட
என்னால அழ முடியவில்லை.

என் கையே
குரல்வளையை நசிக்கிறது
வளர்த்த கடாவே
மார்பில் பாய்கிறது

இதனையா நான் யாசித்தேன்?
இதற்காகவா
நீ
உன் வாழ்வை
அர்ப்பணித்தாய்?

வளர்ப்பு நாய்
இறந்ததற்குக் கூட
கண்ணீர் வடிக்கும் உலகில்
மூன்றுநாள்
துக்கம் அனுட்டிக்கும் உலகில்
எசமான் இறந்ததற்காய்
அழமுடியா அவலம்

சரித்திரத்தை உருவாக்கச்
சமராடிய உனது
சரித்திரமே இன்று
மறைக்கப்படும் அவலம்

எதிரியினால் அல்ல

நேற்றுவரை உனது
நண்பனாய்
சகோதரனாய்
நீ
இறுதிவரை
நம்பியருந்தவர்களால்
சுதந்திரத்துக்காகப் போராடிய(?)
அடக்குமுறையாளர்களால்

காலம் ஒரு பதிலெழுதும்
அப்போது
உன் கல்லறையில்
ஒரு பூ வைப்பேன்
அதுவரை……?

சண் தவராஜா ஊடகவியலாளர்

-இன்போ தமிழ் குழுமம் –

மே 15, 2016 - Posted by | தமிழீழம்

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: