அழியாச்சுடர்கள்

வருவார்…. வருவார் என்று கூறிக் கூறியே: தலைவனை மறந்த தமிழினம்…..!

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.”leader prabakaran tribute 5

திரும்பிய திசையெங்கும் சிங்களப்பேய்கள் தான் பல்லிளித்துக் கொண்டு நிற்கின்றன.

இனிமேல் தமிழருக்கு படைமுகாம்களைச் சுற்றி வரையறுக்கப்பட்ட வாழ்வு தான் என்றாகி விட்டது. சமூகக் கொடுமைகளும், குற்றங்களும் பெருகிப் போய் விட்டன. பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் என்றுமில்லாத வகையில் கோலோச்சத் தொடங்கியுள்ளன. இதற்கெல்லாம் காரணம் முன்னர் இருந்த பாதுகாப்புக் கவசம் உடைபட்டுப் போனது தான்.முன்னர் புலிகளின் ஆட்சியில் இருந்து வந்த கடுமையான தண்டனைகள் பலரையும் விமர்சனத்துக்குள்ளாக்கியிருந்த்து. ஆனால் அதுவே ஒழுக்கத்தையும், பண்பாட்டையும், கலாசார விழுமியங்களையும் காத்து நின்றதோடு மக்களுக்கு சமூகப் பாதுகாப்பையும் கொடுத்து வந்தது. இன்று அந்தப் பாதுகாப்பு இல்லாது போய்விட்ட நிலையில்- யாரும், எப்போதும், எப்படியும் குற்றங்கள் செய்யலாம் என்று துணிந்து விட்டனர். இலகுவாகத் தப்பிக்கலாம் என்பதால் எந்தக் கூச்சமும் இல்லாமல் குற்றங்களில் இறங்குகின்றனர்.

இந்த மூன்று ஆண்டுகளில் மக்கள் புலிகளின் அருமையை நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்பார்கள். அதேபோல புலிகள் இல்லாத சூழலில் தான் அவர்களின் அருமை புரியத் தொடங்கியுள்ளது. ஆனால் தமிழரின் துரதிஸ்டம் என்னவென்றால், இனிமேல் இதேபோன்றதோர் பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ள முடியாது என்பது தான். உலக ஒழுங்குமுறை அதற்கு இடமளிக்காது. தமிழரின் தலைவிதியும் அதற்கு இடம்கொடுக்காது.

முள்ளிவாய்க்காலிலேயே தமிழரின் செழிப்பான வாழ்வும், எதிர்காலமும் சீர்குலைக்கப்பட்டு விட்டது. அதற்கு சிங்களப்படைகள் மட்டுமன்றி சர்வதேச சமூகமும் தான் பொறுப்புக் கூற வேண்டும். போரை நிறுத்த ஐ.நாவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுகிறது ஐ.நாவின் நிபுணர்குழு அறிக்கை. உலகத்தின் கண்முன்னே தான் தமிழருக்கு இந்தக் கொடுமைகள் எல்லாம் இழைக்கப்பட்டன. முள்ளிவாய்க்காலில் பீரங்கிகள் மூலம் தமிழரைக் கொன்றொழித்துக் கொண்டிருந்த போது- அமெரிக்காவில் இருந்தபடியே அதை செய்மதிப் படங்களின் ஊடாகப் பார்த்திருக்கிறார்கள். உள்ளிருந்தே தகவல்களைப் பெற்றிருக்கிறது இந்தியா. ஆனாலும் யாருக்கும் அங்கே தமிழர் மீது இரக்கமே வரவில்லை. அங்கிருந்த மூன்றரை இலட்சம் மக்களின் அவலத்தை விட அவர்களுக்கெல்லாம் பெரிதாக இருந்தது- புலிகளின் அழிவு தான். அதை எல்லோருமாகச் சேர்ந்தே செய்து முடித்திருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கெல்லாம் நிம்மதி வந்துவிட்டது.

ஆனால் தமிழரின் நிம்மதி பறிபோய் விட்டது. தமிழர்கள் போரின் போது இழந்தவற்றையும் சரி, அதன் பின்னர் அவர்கள் இழந்து போயுள்ள நிம்மதியையும் சரி, எந்த உலக சக்தியாலும் கொடுத்து விட முடியாது. இவர்களிடத்தே இருந்து வந்த ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் இனிமேல் ஏற்படுத்தி விட முடியாது. எல்லாம் சீர்குலைந்து வேரறுக்கப்பட்டு விட்டது. இது தான் தமிழருக்கு முள்ளிவாய்க்கால் கொடுத்த பரிசு.ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.முள்ளிவாய்க்காலில் தமிழரைச் சீரழித்து, சின்னா பின்னமாக்கியவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்காமல் விடப் போவதில்லை. இப்போதே பலரும் அதற்கான தண்டனையையும்- வலியையும் சுமக்கத் தொடங்கி விட்டனர். இது இன்னமும் நீளப் போகிறது. தமிழருக்கு எதிராக தொடரப்பட்ட போரும், அதனால் ஏற்படுத்தப்பட்ட அழிவுகளுக்கும் காரணமாக இருந்தவர்களை நீதி ஒரு போதும் தண்டிக்காமல் விடாது. அந்த நம்பிக்கை ஒன்று தான் தமிழரை அடுத்த இலக்கை நோக்கிப் பயணிக்க வைக்கிறது. ஆனாலும் அது வெளிச்சத்தை நோக்கிய பயணமாக அமையுமா அல்லது இருளைத் தேடிய பயணமாக அமையுமா என்பதை தமிழர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

வருவார்…. வருவார் என்று கூறிக் கூறியே: தலைவனை மறந்த தமிழினம்…..!

போரின் கதாநாயகனாக இருந்தவர் பிரபாகரன்.

ஆயிரமாயிரம் போராளிகளினதும், நாட்டுப்பற்றாளர்களினதும் மரணங்களுக்கு ஒரு அர்த்தத்தையும், மதிப்பையும் ஏற்படுத்தியவர் பிரபாகரன் தான்.

ஆனால் அவருக்காக ஒரு நினைவு நாளை நடத்த முடியாதளவுக்கு ஈழத்தமிழினம் பிளவுபட்டு நின்றது.

இதைவிட சோகமும், சோதனையும் வேறெந்தத் தலைவனுக்கும் வந்ததில்லை.

அவர் வருவார்…. வருவார் என்று கூறிக் கூறியே அவரது நினைவை மறக்கச் செய்து விட்டவர்கள் நாம்.

வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடிக்க வேண்டிய ஒருவரின் நினைவுகளை அழிக்கின்ற காரியத்தைத் தமிழினம் செய்து கொண்டிருக்கிறது.

இந்தச் சகதிக்குள் இருந்து மீண்டெழும் வரை தமிழருக்கு விடிவை நோக்கிய பயணம் ஒரு போதும் தொடங்கப் போவதில்லை.

இந்த ஒரு விடயத்தில் கூட சரியான முடிவை எடுக்க முடியாத தமிழினத்தால், எப்படி எதிர்கால வாழ்வு பற்றிய தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியும்?

இதனால் தான் இத்தனை அவலம் தமிழருக்கு மீணடும், மீண்டும் வந்து கொண்டிருக்கிறது.

நன்றி மறப்பது நன்றன்று.

ஆனால் நன்றி மறந்த இனமாக மாறிப் போன தமிழர்கள் எப்படி தமக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியும்?

தமிழருக்கே முகவரி கொடுத்த தலைவனின் முகவரியையே இல்லாமல் செய்யும் அளவுக்கு தமிழினம் சிங்களதேசத்தின் புலனாய்வுச் சதிகளுக்குள் சிக்கிப் போயுள்ளது.

இந்தநிலையில் எப்படி தமிழருக்கென நீதியான வாழ்வை நாம் எதிர்பார்க்க முடியும்?

தனது வாழ்க்கையின் ஏறத்தாழ 4 தசாப்தங்களை போராட்ட வாழ்க்கைக்காக அர்ப்பணித்தவருக்கு, தனது மனைவி 3 பிள்ளைகள் உட்பட தனது முழுக் குடும்பத்தையே தமிழீழ விடுதலை இலட்சியத்துக்காக ஈகம் செய்தவருக்கு, ஈழத் தமிழர் தேசத்தை 3 தசாப்தகாலங்கள் தலைமை தாங்கி வழிநடத்தி நின்றவருக்கு பகிரங்கமாக ஒரு விளக்குத்தானும் ஏற்றி வணங்குவதற்கு உலகத் தமிழினம் தயங்கி நிற்பதன் காரணம்தான் என்ன?

கேட்கின்றார் அறிஞர் பெருந்தகை சட்டவாளர் நடேசன் சத்தியேந்திரா அவர்கள்

  • காலம் ஒரு பதிலெழுதும் – சண் தவராஜா
  • தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு உரிய மரியாதையினைச் செலுத்துவதற்கு அனைவரும் முன்வரவேண்டும் பொங்குதமிழ் இணையம்
  • தமிழர் தேசத்தை 3 தசாப்தகாலங்கள் தலைமை தாங்கி வழிநடத்தி நின்றவருக்கு பகிரங்கமாக ஒரு விளக்குத்தானும் ஏற்றி வணங்குவதற்கு உலகத் தமிழினம் தயங்கி நிற்பதன் காரணம்தான் என்ன?  – கேட்கின்றார் அறிஞர் பெருந்தகை சட்டவாளர் நடேசன் சத்தியேந்திரா அவர்கள்
  • தனது இனத்தின் விடிவுக்காய் இறுதிவரை போராடிய பிரபாகரனை அனாதைப் பிணமாய் நடுத்தெருவில் வீசியெறிந்துவிட்டனர்?  –  வருந்துக்கிறார் ஆய்வாளர் சபா நாவலன்
  • ஆயிரம் ஆண்டுகளானாலும் அயியாது எங்கள் தலைவனின் தாரக மந்திரம்! –  நல்லாசான் ஏ.சி தாசீசியஸ்
  •  தத்தளிக்கும் தமிழினத்தை கரையேற்ற வாருங்கள்!  வேண்டுகிறார் கிருஸ்ணா அம்பலவாணர்
  • தாயில்லாப் பிள்ளையானோம் அழுகின்றார் அகதித்தமிழன்


முள்ளிவாய்க்கால் அழிவுகளின் முடிவு அல்ல அவலங்களின் திறவுகோல்?

இந்தத் தலைப்பைப் பார்த்ததும் பலருக்கு அதிர்ச்சியாக அமையலாம்.

சிலருக்கு ஆத்திரம் கூட வரலாம்.

ஆனால் உண்மை இது தான்.

நாம் ஒன்றும் கற்பனையில் இதை எழுதவில்லை.

முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பின்னர் கடந்த ஒரு வருடத்துக்குள் நடந்தேறிய சம்பவங்களை வைத்துக் கொண்டும்- சிங்களப் பேரினவாதிகள் காலம்காலமாக எமக்குத் தந்த படிப்பினைகளை வைத்துக் கொண்டும் தான் இது எழுதப்படுகிறது.

உண்மையை உணர்ந்து இனியாவது ஒன்றுபடமாட்டோமா? என்ற ஆதங்கத்தில் எழுதப்படுகிறது.

கானல்நீரைக் காண்பித்து கற்பனைக் கோட்டைகளை மனதில் கட்டிக் கொள்ளச் செய்யும்; எண்ணம் எம்மிடம் கிடையாது.

தொடர்ந்து படியுங்கள்- கருத்துக்களை எழுதுங்கள். (infotamil.ch@gmail.com)

முள்ளிவாய்க்கால்:

இது ஒரு மீள்பதிவு-இன்போ தமிழ் குழுமம்

மே 15, 2016 Posted by | தமிழீழம் | வருவார்…. வருவார் என்று கூறிக் கூறியே: தலைவனை மறந்த தமிழினம்…..! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

வரலாற்றுத் தவறு செய்த தமிழினமே உனக்கு ஒருமடல்!

leader prabakaran tribute 6தத்தளிக்கும் தமிழினத்தை கரையேற்ற வாருங்கள்!

துடுப்பும் இல்லாமல் – போகும் திசையும் தெரியாமல் – நடுக்கடலில் தத்தளிக்கின்ற படகு போன்றது, ஈழத் தமிழினத்தின் இன்றைய நிலை.

வன்னியில் மேற்கொள்ளப்பட்ட மிகக் கொடூரமான இன அழிப்புப் போரில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப் பட்டிருக்கிறது.

இதுவரை காலமும் ஈழத் தமிழரின் ஏக பிரதிநிதிகளாக – அவர்களின் உரிமைக் குரலாக உலகெங்கும் ஒலித்த புலிகள் இயக்கம், இப்போது இராணுவ ரீதியாகச் செயற்பட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

மூன்று தசாப்தமாக தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கி வழிநடத்திய மாபெரும் விடுதலை அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் மறைவினால் ஏற்பட்டிருக்கின்ற வெற்றிடத்தை எவராலும் நிரப்பவே முடியாது.

அதேவேளை, இந்த இழப்புகளினால் ஏற்பட்டிருக்கின்ற ஒரு அரசியல் வெறுமையைப் பயன்படுத்தி, ஈழத் தமிழரின் அரசியல் உரிமைகளை நசுக்குகின்ற முயற்சிகளில் இலங்கை அரசு முனைப்புடன் ஈடுபட்டிருப்பதையும் மறந்து விட முடியாது.

இராணுவ வல்லமையை மட்டுமே நம்பி நடத்திய எமது போராட்டத்தின் சாதக, பாதகங்களைப் புரிந்து கொண்டு – அடுத்த கட்டமாக, ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்தை எப்படி முன்னெடுக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டிய நேரம் இது.

ஆனால், நாம் இந்த விடயத்தில் எங்கே நிற்கிறோம்? மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்டத்தில் தோல்வி கண்டுள்ள நாம், அடுத்து என்ன செய்யப் போகிறோம்?

இவற்றையெல்லாம் தீர்க்கமாகத் தீர்மானிக்க வேண்டிய நேரத்தில் -அதைச் செய்யாமல் இருப்பது வேதனைக்குரிய விடயம்.

வன்னியில் மே மாத நடுப்பகுதியில் ஈழத் தமிழினத்துக்கு ஏற்பட்ட வரலாறு காணாத பேரழிவுக்குப் பின்னர் – அரசியல் ரீதியாகவோ, இராஜதந்திர ரீதியாகவோ எதையும் முன்னெடுக்க முடியாத நிர்க்கதி நிலை உருவாகியிருக்கிறது.

தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் மரணத்துக்குப் பிற்பட்ட இந்த வெறுமை நிலை ஈழத் தமிழினத்தையை அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்வதாகவே உணர முடிகிறது.

அவரது மரணம் தொடர்பாக இருக்கின்ற முரண்பாடான கருத்துகள், அடுத்த கட்டம் பற்றிய எமது சிந்தனைகளையும் மாற்று நடவடிக்கைகளையும் முடக்கிப் போட்டிருக்கிறது.

அந்த மரணம் ஈழத் தமிழனத்தால் மட்டுமன்றி உலகத் தமிழினத்தாலேயே ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக – ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருப்பினும் யதார்த்த நிலையில் இருந்து தான் அதை நாம் நோக்க வேண்டும்.

ஆனால், இந்த விடயத்தில் ஈழத் தமிழினம் பிளவுபட்டு நிற்பது வேதனைக்கு உரியது. வெட்கத்துக்கு உரியது.

தனது வாழ்வின் 37 வருடங்களை முழுமையாகவே ஈழத் தமிழருக்காகவே அர்ப்பணித்த ஒரு ஒப்பற்ற தலைவனுக்கு இறுதி மரியாதை கூடச் செய்ய முடியாதளவுக்கு நாம் முட்டாள்களாக நிற்கிறோம்.

பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் வீரச் சாவடைந்தபோது அவருக்காக உலகத் தமிழினமே அழுதது. ஆனால், இன்று தேசியத் தலைவர் பிரபாகரன் வீரமரணத்தை தழுவியுள்ள நிலையில் அவருக்காக ஒரு வணக்க நிகழ்வு கூட நடக்கவில்லை.

துக்க தினத்தைப் பிரகடனம் செய்து அழுது புரண்டு எம்மைத் தேற்றிக் கொள்ள முடியாத நிலை உருவாக்கப் பட்டிருக்கிறது.

இதற்கெல்லாம் காரணம் எமக்குள்ளே இருக்கும் பிளவு நிலைதான்.

தேசியத் தலைவர் மரணமானதை அடுத்து அவரது வித்துடலை அடுத்த நாளே இரகசியமாக – அவசரமாக அரசாங்கம் எரித்தது. இதற்குக் காரணம் மக்கள் எழுச்சி உருவாகி விடக் கூடாதென்பதே.

ஆனால், அத்தகைய மக்கள் எழுச்சிக்கான தடயம் எதுவுமே ஈழத் தமிழினத்திடம் இருந்து உருவாகவில்லை. இதையிட்டு சிங்கள தேசத்துக்கே ஆச்சரியம் ஏற்பட்டிருக்கிறது.

தேசியத் தலைவர் அவர்களின் மரணத்துக்குப் பின்னரும் புலிகள் இயக்கம் தொல்லை தரும் ஒன்றாக இருக்கும் என்றே அரசாங்கம் கருதியிருந்தது.

ஆனால், இப்போது அந்தக் கவலையே அரசாங்கத்திடம் கிடையாது. காரணம் அப்படி அச்சம் கொள்ளவே தேவையில்லை என்ற நம்பிக்கையை நாமே ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.

தேசியத் தலைவர் அவர்களின் மரணத்தை தமிழ் மக்களால் ஜீரணிக்க முடியாதிருப்பது – ஏற்றுக் கொள்ள முடியாதிருப்பது உண்மை தான்.

ஆனால், உண்மையாகவே நிகழ்ந்து விட்ட அந்த மரணத்தை – ஏற்றுக் கொள்ள மறுப்பதைப் போன்ற மடமை வேறேதும் இருக்க முடியாது.

அவரது உடலைக் கைப்பற்றி அதைத் தெளிவாகவே வீடியோ படங்களில் அரசாங்கம் காண்பித்த போதே அது உண்மையானதென்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

மரணம் எப்படி நேரிட்டது என்ற குழப்பம் இருக்கலாம். ஆனால், மரணம் நிகழவில்லை என்று குழம்பவே தேவையில்லை.

இந்தக் கட்டத்தில் தலைவர் பிரபாகரன் அவர்களின் மரணத்தை நம்ப மறுப்பதோ – அவர் உயிரோடு இருக்கிறார் என்ற மாயைக்குள் இருந்து விடுபடாமல், எம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதோ எமது இனத்தின் எதிர்காலத்துக்கே ஆபத்தானது.

எமது இனத்தின் எதிர்காலத்துக்காக – சுதந்திரத்துக்காக – உரிமைகளுக்காப் போராடிய தலைவனையே இன்று நினைவுகூர முடியாதளவுக்கு மடைமையும் முட்டாள் தனமும் எம்மை ஆக்கிரமித்து நிற்கிறது.

இது ஒன்றே போதும் இலங்கை அரசு குதூகலிக்கவும் – கொண்டாடவும்.

புலிகள் அழிந்து போனாலும் அவர்கள் அரசியல் ரீதியாக அழிந்து போகமாட்டார்கள் – ஏனெனில் அவர்களின் கொள்கை வலுவானது என்று பொதுவான நம்பிக்கை இன்று தகர்ந்து வருகிறது.

தேசியத் தலைவர் மரணமாகவில்லை என்று முட்டாள்தனமான நம்பிக்கையில் இருக்கின்ற தமிழினத்தையிட்டு நாளை உலகமே எம்மைக் கேவலமாகப் பார்க்கப் போகிறது.

தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. அவர் உயிரோடும் நலமோடும் நீண்ட காலத்துக்கு வாழ வேண்டும் என்ற மன ஆதங்கமும் விருப்பமும் எமக்கு இருக்கிறது.

ஆனால், இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு அவரது மரணம் என்ற யதார்த்தத்தை எம்மால் புறக்கணித்து விடமுடியாது.

ஆனால், நாம் குழம்பி நிற்கின்ற இந்த நிலையைக் கண்டு – முன்பெல்லாம் எம்மை அச்சத்துடன் பார்த்த – சிங்கள தேசம் இப்போது வெறும் புழுவாகவே பார்க்கிறது.

போருக்குப் பிந்திய அடுத்த கட்டம், அரசியல் தீர்வு பற்றியெல்லாம் குழம்பிப் போயிருந்த சிங்கள தேசத்துக்கு இப்போது எந்தக் கவலையும் கிடையாது. ஏனெனில், தமிழருக்காக குரல் கொடுக்கக் கூடிய தலைமைத்துவம் இப்போது இல்லை. புலிகள் இயக்கத்தின் எஞ்சியிருக்கின்ற தலைமைகள் எல்லாம் இப்போது சிதறிப் போய் – ஆளுக்கொரு நியாயம் கூறும் அளவுக்கு வந்திருப்பதைப் போன்ற மிகவும் கேவலமான நிலை முன்னெப்போதும் ஏற்பட்டதில்லை.

இங்கே தான் தேசியத் தலைவர் அவர்களின் தலைமைத்துவத்தின் அவசியம் உணரப் படுவதுடன் அவரது இறுக்கமான கொள்கைகளின் மீதும் இன்னும் இன்னும் மதிப்பு அதிகரிக்கிறது.

அவர் உயிரோடு இருந்திருந்தால் இப்படியொரு நிலை உருவாகியிருக்குமா?

அவர் இல்லை என்றதும் அவரது மரணத்தையே அறிவிக்க முடியாதளவுக்கு – துக்கம் அனுஷ்டிக்க முடியாதளவுக்கு முரண்பாடுகளின் உச்சத்தில் நாம் ஏறி நிற்கிறோம்.

பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப் போன்று இனிமேல் எமது இனத்துக்குத் தலைமையேற்கக் கூடிய ஒருவர் கிடைக்கவே முடியாது.

ஆனால், இல்லாத ஒருவரை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு எவ்வளவு காலத்துக்கு நாம் கண்களை மூடிக் கொண்டிருக்க முடியும்?

புலிகள் இயக்கத்தின் அழிவு எப்போது நிகழ்ந்ததோ – அப்போதிருந்தே தமிழினத்தை அரசியல் வழியில் அடக்கி ஒடுக்கும் முயற்சிகளில் இலங்கை அரசும் சிங்களப் பேரினவாதிகளும் இறங்கி விட்டனர்.

வடக்கில் கலப்புக் கிராமங்களை உருவாக்குவது பற்றிப் பேசுகிறார்கள், சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குவது பற்றிப் பேசுகிறார்கள், 5 வருடங்களுக்கு இராணுவ ஆட்சியில் வடக்கை வைத்திருப்பது பற்றிப் பேசப்படுகிறது.

ஆனால், அரசியல் தீர்வு பற்றி யாரும் வாய் திறக்கவில்லை. இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியமர்வு பற்றிப் பேசவில்லை. போரில் அழிந்து போன மக்களின் வாழ்வாதார மீள்கட்டுமானம் பற்றி எவருமே சிந்திக்கவில்லை.

இறந்து போன சொந்தங்கள் பற்றி, தொலைந்து போன உறவுகள் பற்றி, கடத்தப்பட்டு காணாமற் போனவர்கள் பற்றி யாருமே பேசவில்லை.

இன்னொரு புறத்தில் வடக்கில் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இப்படியே, இதுவரையில் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக இருந்து வந்த மாபெரும் தேசிய விடுதலை இயக்கத்தை ஓரம்கட்டி விட்டு இன்னொரு அரசியல் தலைமையை உருவாக்கவும் – வட-கிழக்கை இராணுவ மயப்படுத்தி சிங்களக் குடியேற்றங்களை நிறுவி தமிழரின் தாயகக் கோட்பாடு, சுயநிர்ணய உரிமைக் கோரி;க்கைகளை வலுவற்றதாக்கவும் தீவிரமான முயற்சியில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது.

சிங்கள அரசு முன்னெடுத்துவரும் இந்த வேகமான நகர்வுகளுக்கு மத்தியில் – தமிழ் மக்களாகிய நாம் இன்னும் இன்னும் எவ்வளவு பின்னோக்கிப் போகலாம் என்றே முயற்சி செய்கிறோம்.

போர் எம்மை வெகுதூரத்துக்குப் பின்தள்ளி விட்டது.

எமது இனத்துக்கு ஏற்பட்ட உயிரழிவுகள் காலத்தால் ஈடுசெய்ய முடியாதவை. பொருள் அழிவுகள், சொத்து அழிவுகள் கணக்கில் அடங்காதவை.

இவற்றையெல்லாம் மீளக் கட்டியெழுப்ப எமக்கென்றொரு தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும்.

இந்த இடத்தில் நாம் செய்யக் கூடிய தவறு எம்மை வரலாற்று ரீதியாக இன்னும் பின்நோக்கித் தள்ளி விடப் போகிறது.

தமிழீழத்தின் தேசியத் தலைமையை – போராட்டத்தின் பலத்தை – மக்களின் வாழ்வைச் சிதைத்து விட்டு மகிந்தவின் அரசாங்கம் வெறுமனே வெற்றிக் கோசமிடவில்லை.

அடுத்த தலைமுறைத் தமிழனை இலங்கையில் இருந்து எப்படி அழிக்கலாம் என்றும் திட்டம் போடத் தொடங்கி விட்டது.

இன்று இலங்கைத் தீவில் வாழும் தமிழரின் பாதுகாப்பு, உரிமைகள் பற்றிப் பேசவே முடியாத கட்டம் உருவாகியுள்ளது.

புலிகளே தமிழினத்தின் பாதுகாப்பாக இருந்த நிலை மாறிவிட்டது. புலிகளின் அழிவையடுத்து தமிழ் மக்கள் எதையுமே தட்டிக் கேட்கத் திராணியற்றவர்கள் என்ற கருத்து சிங்கள தேசத்தில் உருவாகி விட்டிருக்கிறது.

தமிழ் மக்களின் தலைமையை – வாழ்வை – வளத்தைச் சீரழித்த சிங்கள அரசாங்கத்தை சர்வதேசத்தின் முன்னிலையில் நிறுத்தி நீதி கேட்க முடியாத நிலை உருவாகியிருக்கிறது.

இதற்குக் காரணம், அடுத்த கட்டத்துக்குப் போராட்டத்தை எப்படி நகர்த்துவது என்பது பற்றிய தெளிவான கருத்தோ – தலைமையோ எம்மிடம் இல்லாமைதான்.

தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தை முழுமையாக நம்பிய தமிழ் மக்கள், இன்று அவர் இல்லாதபோது அவரது மரணத்தைப் பற்றியே தெளிவான முடிவை எடுக்க முடியாதளவுக்குத் தள்ளப் பட்டிருக்கின்றனர்.

இந்தக் கட்டத்தில் அடுத்த கட்டத்துக்குப் போராட்டத்தை எப்படி நகர்த்துவது? யார் தலைமையில் போராட்டத்தை நகர்த்துவது? போன்ற முடிவுகள் மிக விரைவாக எடுக்கப்பட வேண்டும்.

தேசியத் தலைவர் பிரபாகரனால் வெளிவிவகாரச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் பத்மநாதன். ஆனால், அவரது அறிக்கையைப் பொய் என்றும் அவரைத் துரோகி என்றும் கூறிக் கொண்டு ஒரு தரப்பு மக்களைக் குழப்புகிறது.

அதேவேளை, பத்மநாதனோ புலிகள் இயக்கத்தின் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எப்படி நகர்த்துவது? யார் தலைமையேற்பது என்பது பற்றிய எந்த முடிவையும் அறிவிக்காதிருப்பது மற்றொரு சிக்கலை உருவாக்கியிருக்கிறது.

மொத்தத்தில் அழிவின் பின்னரும் தமக்குச் சவாலாக இருக்கலாம் என்று கருதி, புலிகள் இயக்கத்தைப் பற்றி அஞ்சிக் கொண்டிருந்த இலங்கை அரசுக்கு இதைவிடக் குளிர்ச்சியான செய்தி வேறேதும் இருக்க முடியாது.

உரிய காலத்தில் எடுக்கப்படாத எந்தத் தீர்மானமும் பிரயோசனமற்றது.

இராணுவ வல்லமையை நம்பி – அந்நிய வாக்குறுதிகளை நம்பி நாம் மோசம் போனது உண்மை. அதேவேளை, கற்பனை நிலைப்பாட்டுக்குள் இருந்து கொண்டு இன்னும் எவ்வளவு காலத்துக்கு எமது உரிமைப் போராட்டத்தை அடக்கி வைத்திருக்கப் போகிறோம்?

சர்வதேச சமூகம்; முன்னர் புலிகள் இயக்கத்தை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றே பேச்சுக்களை நடத்தியது. 30 வருடப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் செய்த பங்களிப்புகளை சர்வதேசம் மறக்கவில்லை.

அதேவேளை, சர்வதேசம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஜனநாயக வழிகளில் தொடர்ந்து செயற்படத் தொடங்கினால் அதற்கான அங்கீகாரத்தைக் கொடுக்காது என்று சொல்வதற்கும் இல்லை.

• இந்தக் கட்டத்தில் நாம் புலிகளின் தலைமை என்று யாரை ஏற்கப் போகிறோம்?

• எவர் ஊடாக எமது நிலைப்பாட்டை – கோரிக்கைகளை முன்வைக்கப் போகிறோம்?

இப்போதிருப்பது போன்ற வெறுமை நிலை இன்னும் சில வாரங்களுக்கோ – மாதங்களுக்கோ நீடித்தால், புலிகள் இயக்கம் என ஒரு அமைப்பு இருந்ததா என்ற கேள்வியே வந்து விடும். உலகம் எம்மையும் புலிகள் இயக்கத்தையும் மறந்து விடும். ஏனெனில் அதன் அசைவும் வேகமும் மிக அதிகம். அதன் வேகத்துக்கு ஈடுகொடுத்து நாமும் ஓடினால் தான் எமக்கான உரிமைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கலாம். எமது நியாயங்களை முன்வைத்து நீதி கேட்கலாம்.

இவ்வளவு அநீதிகளையும் அக்கிரமங்களையும் செய்து விட்டு – வெற்றி மிதப்பில் இருக்கும் மகிந்தவைப் போர்க் குற்றவாளி என்று சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் வாய்ப்பைக் கூட நாம் தொலைத்து விடும் நிலை வரலாம்.

போர்க் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணைகள் தேவை என்ற கருத்து தற்போது பரவலாக இருக்கின்ற நிலையில் இதுபற்றி தமிழர் தரப்பில் இருந்து எவராலும் அழுத்தம் கொடுக்கப்பட முடியாத நிலை காணப்படுகிறது.

தற்போது புலிகள் இயக்கத்தின் தலைமை அழிக்கப்பட்டு விட்ட நிலையில் – தமிழர் தரப்பில் இருந்து குரல் கொடுக்கும் சக்தி என எவருமே இனங்காணப் படவில்லை.

ஒன்றில் அரசாங்கத்துக்கு கால் பிடிக்கின்ற கூட்டம் இருக்கிறது. அல்லது பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று எமக்குள்ளே மாறி மாறி சண்டை போடும் இன்னொரு தரப்பு இருக்கிறது.

பிரபாகரன் உயிரோடு இருந்தால் அதைவிடத் தமிழினத்துக்கு மிகப் பெரிய பூரிப்பு வேறெதுவும் இருக்க முடியாது.

ஆனால், அவர் வெளிப்பட்டு வந்து போராட்டத்தை முன்னெடுக்கும் வரை உலகம் பொறுத்திராது.

இதைவிட, சிங்களதேசம் இன்னும் வேகமாக மாற்றுத் தலைமையை உருவாக்கி விடும் ஆபத்தும் உள்ளது.

சரியான தருணத்தில் எடுக்கப்படாத எந்த முடிவுமே பயன் உள்ளதாக அமையாது.

எமது போராட்டத்தை அரசியல் வழியில் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான தலைமையை உருவாக்க வேண்டிய நேரம் இதுவே.

தமிழருக்கு புதியதொரு அரசியல் தலைமை என்ற பெயரில் தமக்குத் தாளம் போடக் கூடிய ஒரு தலைமைத்துவத்தை உருவாக்குவதற்கு சிங்கள தேசம் முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னதாக – புலிகளை முற்றாக அழித்து விட்டு தமிழ் மக்களுக்கு புதியதொரு தலைமையை உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் திஸ்ஸ விதாரண கூறியிருந்தமை நினைவிருக்கலாம்.

புலிகள் என்ற நாமமே அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தெரியக் கூடாதென்ற நோக்கில் தான் இலங்கை அரசு புதிய தலைமையை உருவாக்கப் போவதாகச் சொல்கிறது.

நாம் இந்தக் கணம் சரியான முடிவுகளை எடுக்கத் தவறினாலோ தாமதித்தாலோ – சிங்கள அரசு உருவாக்கப் போகும் தலைமைக்குத் தலைவணங்கும் நிலை ஈழத் தமிழினத்துக்கு வந்து விடும்.

தமிழீழத் தேசியத்துக்கான விடுதலைப் போராட்டத்தைச் சிதைத்து – பிரதேசவாதத்தை விதைத்து தமிழ் மக்களின் வாழ்வையே கேள்விக் குறியாக்கி நாசப்படுத்திய கருணாவை – தமிழ் மக்களின் தலைவனாக முடிசூட்ட இலங்கை அரசு முயற்சிக்கிறது. இந்த இழிசெயலுக்கு நாமும் துணை போகலாமா?

புதியதொரு தலைமையின் கீழ் போராட்டத்தை முன்னெடுக்க முடியாமல் நாம் தள்ளாடி நிற்கின்ற ஒவ்வொரு கணமும், சிங்கள அரசின் புதிய தலைமை உருவாக்கத்துக்குத் துணை போகும் யுகங்களாகும்.

இது நமக்கு நாமே வெட்டுகின்ற குழி. எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை நசுக்க, நாசப்படுத்த நாமே வழிகாட்டுவதற்கு ஒப்பானது.

இவற்றையெல்லாம் விட, கடைசி மூச்சு வரைக்கும் போராடி மரணித்த தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மற்றும் தளபதிகள் போராளிகளின் இறுதி விருப்பத்தை – அவர்களின் இரத்தம் காய்வதற்கு முன்னரே குழிதோண்டிப் புதைக்கின்ற செயலாகவே இது அமையும்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக தொடர்ந்து போராடுவதென்ற நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தாமதிப்பதும், அடுத்த கட்டமாக நாம் எப்படிச் செயற்படப் போகிறோம் என்று தீர்மானிப்பதை தவிர்ப்பதும் இதுவரை வீரமரணத்தைத் தழுவிய 27,000 இற்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்களை இழிவுபடுத்துவதாகவே அமையும். ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் மரணங்களைக் கேவலப்படுத்துகின்ற செயலாகவே அமையும்.

சாத்தியமான வழிகளில் புதியதொரு தலைமைத்துவத்தின் கீழ் எமது போராட்டதைக் கட்டியெnழுப்ப வேண்டிய தருணத்தை தவற விடுவது – தமிழினத்துக்கு வரலாற்று ரீதியாகச் செய்யும் துரோகமாகும்.

இந்தத் தருணத்தை தவற விட்டால் இதற்குப் பின்னர் எமக்காகக் குரல் கொடுக்க எவரும் வரமாட்டார்கள்.

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குத்தான் கொண்டாட்டம். இனிமேலும் நாம் இரண்டுபட்டு நிற்காமல் ஒன்று பட்டுப் போராடுவதற்கான வழிகளைத் தேடுவதே புத்திசாலித்தனமானது.

செய்வோமா? செயல்படுத்துவோமா? சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!!

இதுவே தலைவனுக்கும், மரணித்த மாவீரருக்கும், மக்களுக்கும் நாம் செய்யும் நன்றிக் கடனாகும்.

சுவிசிலிருந்து கிருஸ்ணா அம்பலவாணர்

இது ஒரு மீள்பதிவு-இன்போ தமிழ் குழுமம் –


மே 15, 2016 Posted by | தமிழீழம் | வரலாற்றுத் தவறு செய்த தமிழினமே உனக்கு ஒருமடல்! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

இனத்தின் விடிவுக்காய் இறுதிவரை போராடிய பிரபாகரனை அனாதைப் பிணமாய் நடுத்தெருவில் வீசியெறிந்துவிட்டனர்?

leader prabakaran tribute 2ஒரு ஆண்டு பல நீண்ட ஆண்டுகள் போல சோகத்தையும், சதிகளையும், சோதனைகளையும் சுமந்து இரத்தம் படிந்த ஆண்டாகக் கடந்து போய்விட்டத்து. ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை ராஜபக்ச குடும்ப அரசு சில நாட்களுக்குள் கொன்று போட்டுவிட்டு உலகமக்களை நோக்கி நாம் தான் கொன்று போட்டோம் என நெஞ்சை நிமிர்த்தி திமிரோடு சொன்ன நாட்களின் பின்னர் ஒரு ஆண்டு ஒவ்வொரு நாளும் கணங்களாகக் கடந்து போய்விட்டது. ஒபாமா தேசத்தின் சற்றலைட்கள் பார்த்துக்கொண்டிருக்க, கருணாநிதியின் கொல்லைப் புறத்தில் தமிழர்கள் குடியிருப்புக்கள் மீது அதிபாரக் குண்டுகளும் இரசாயனக் குண்டுகளும் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டு ஒரு வருடம் கடந்து போய்விட்டது. முதியவர்களின் ஈனக் குரல்கள், குழந்தைகளின் அவலக் குரல்கள், அப்பாவிகளின் கூக்குரல்கள் எல்லாம் மரணத்துள் முற்றாக அமிழ்த்தப்பட்ட நாள் மே 18ம் திகதி.மனிதப் பிணங்களின் மேல் நடந்துவந்த எஞ்சிய அப்பாவித் தமிழர்களை சிறைப் பிடித்து வைத்திருந்தது ராஜபக்ச குடும்ப அரசு. குண்டு வீசி, இரசாயனத் திராவகங்களால் எரித்துக் கொன்று போட்டவர்கள் போக முகாம்களிலிருந்து சந்தேகத்தின் பேரில் அரச துணைக் குழுக்களின் துணையோடு கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டவர்கள் பல ஆயிரங்கள். 40 ஆயிரம் பேர் ஊனமுற்றவர்கள் என ஐ.நா அறிக்கை கூறுகிறது.

ஒரு ஊனமுற்ற சமுதாயத்தை உருவாக்கி உலாவவிட்டிருக்கிறார்கள். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையை நடத்தி முடித்திருப்பது ஒரு மாபெரும் வல்லரசல்ல. அமரிக்காவில் கூலிக்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த கோதாபாய ராஜபக்சவின் தலைமையில் இலங்கை என்ற குட்டித்தீவு தான் இதையெல்லாம் நடத்தி முடித்திருக்கிறது.மனிதர்கள் சாரி சாரியாக கொல்லப்பட்ட போது உலகம் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. கடந்த ஆண்டு, மே பதின்நான்கில்,இந்தியா,ஜப்பான்,சீனா,துருக்கி,வியட்னாம்,லிபியா,ஈரான் போன்ற நாடுகள் மனிதப் படுகொலைகள் குறித்து ஐ.நாவில் பேசுவதற்குக் கூட எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. பாதுகாப்புச் சபை எதிர்ப்புகளோடு நிறைவுறுகிறது. மக்கள் கேடயமாகப் பயன்படுத்துவதை பாதுகாப்புச் சபை கண்டித்துவிட்டு மௌனமாகிறது. பதினைந்தாம் திகதி கற்பனை செய்து பார்க்கமுடியாத மனிதப் பேரவலம் நடக்கவிருப்பதாகச் செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கிறது.

தமிழர்களைக் காப்பாறுவேன் என கருணாநிதி,ஜெயலலிதா , நெடுமாறன், வை.கோபாலசாமி, திருமாவளவன் போன்றோர் வேறுபட்ட தளங்களில், வேறுபட்ட வடிவங்களில் தமது நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். மே 16 இல் வன்னிப் பாதுகாப்பு வலையம் முற்றாகச் சுற்றி வளைக்கப்படுகிறது. அதே நாளில் தமிழகத்தில் கருணாநிதியும், இந்தியாவில் காங்கிரசும் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது.

வன்னியிலிருந்து இருபத்தையாயிரம் மக்களைக் காப்பாற்ற சர்வதேசத்திடம் கோரியும் யாரும் திரும்பிப் பார்க்கவில்லை என சோகமாய் கூறும் விடுதலைப் புலிகளின் கடற்படைத் தளபதி சூசையின் குரலின் ஒலிவடிவம் தமிழ் இணையங்கள் எங்கும் ஒலிக்கிறது. குமரன் பத்மநாதன் ஊடாகவே இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகக் கூறுகிறார்.மே 17 இல் துப்பாக்கிப் பயன்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக புலிகள் அறிவிக்கின்றனர். ரஷ்யா மேலதிக இராணுவத்தளபாடங்களை இலங்கைக்கு வழங்குகிறது. பௌத்த கொடியுடனும்,இலங்கை தேசியக் கொடியுடனும் ஜோர்தானிலிருந்து இலங்கை விமான நிலையத்தில் ராஜபக்ச வந்திறங்குகிறார்.மே 18 அதிகாலை மக்களையும் தம்மையும் பாதுகாக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர். முள்ளிவாய்க்காலில் மரண ஓலம் கேட்பதாக செய்திகள் வெளியாகின்றன.

மே 18ம் திகதி மாலை இறுதிக் கட்டப் போரில் பிரபாகரன் உயிரிழந்துவிட்டதாக இலங்கை அரசின் இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார ஊடகங்களுக்குத் தெரிவிக்கிறார். தமிழ் நாட்டிலோ புலம் பெயர் நாடுகளிலோ வாழ்ந்த தமிழர்கள் இந்தச் செய்தி பொய்யாக இருக்கக் கூடாதோ எனப் “பிரார்த்திக்கின்றனர்”. கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் பிரபாகரன் உயிருடன் தான் இருக்கின்றார் என பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்குகிறார்.

பிரபாகரன் கொல்லப்பட்டது தொடர்பான குழப்பமான கருத்துகளை இலங்கை அரசு அவ்வப்போது வெளியிடுகிறது. பிரபாகரன் நலமோடிருக்கிறார் என்கிறார் பழ.நெடுமாறன். புலி ஆதரவுத் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் அனைவரும் பிரபாகரன் வாழ்வதாக ஒரே குரலில் ஒலிக்கின்றனர்.

பிரபாகரன் இருக்கின்றாரா இல்லலையா என்பதற்கு அப்பால் முப்பதாண்டுகள் இழப்பும், தியாகங்களும், அர்ப்பணங்களும்,இரத்தமும்,வியர்வையும், எரிந்து கொண்டிருந்த உணர்வுகளும் கூட புலிகளிடமிருந்து சிறீலங்கா பேரினவாத அரசின் கரங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டதான உணர்வுதான் தமிழ்ப் பேசும் மக்களைத் தைத்தது. சிறை முகாம்களில் வதைக்கப்படுவதற்காக வரவழைக்கப்பட்ட மூன்று இலட்சம் மக்களில் கூக்குரல்கள் மனிதாபிமானிகளின் உணர்வுகளை எரித்துக்கொண்டிருந்தது.

புலிகள் நம்பியிருந்த அனைத்து சந்தர்ப்பவாதிகளும் பிரபாகரன் இருக்கிறார் என அடம்பிடித்துக்கொண்டிருந்தனர். பிரபாகரன் இறந்தால் இரத்த தமிழ் நாட்டில் ஆறு ஓடும் என்றவர் வை.கோபாலசாமி. அவருக்கு இரத்த ஆற்றை ஓட்டிக்காட்ட வேண்டிய தேவை அற்றுப் போயிருந்தது; ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை பிரபாகரன் உயிரோடு வாழ்வதாகவே பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். முத்துக்குமார் இறப்பு எழுச்சியாக மாறிவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொண்ட வை.கோ பிரபாகரன் இறந்துபோகாமல் இருப்பதிலும் அவதானமாக இருந்தார்.

ஆக,”பிரபாகரன் வாழ்கிறார்” என்பது பலருக்கு அதிலும் ஈழப் போராட்டம் மறுபடி ஒரு எழுச்சியாக உருவாகக் கூடாது என்று எண்ணியவர்களுக்கு மிகவும் சாதகமான ஒன்றாக அமைந்திருந்தது.

தமிழ்ப் பேசும் மக்களின் பேரினவாத அரசிற்கு எதிரான போராட்டத்தை முற்றாக நிர்மூலமாக்க “பிரபாகரன் வாழ்கிறார்” என்ற சுலோகம் இலங்கை இந்திய அரசுகளுக்கு பல வகையில் பயன்பட்டது.

1. தமிழ் நாட்டில் உருவாகக் கூடிய எழுச்சியை பிரபாகரன் வாழ்தல் தொடர்பான நம்பிகையை வழங்கி நிர்மூலமாக்கல்.2. புலிகளில் எஞ்சியிருக்கக் கூடிய போராளிகளை பிரபாகரனின் வருகைக்காக் காத்திருக்கச் செய்தலூடாக பலவீனமாக்குதல்.3. புலம் பெயர் நாடுகளில் எழக் கூடிய எதிர்ப்புப் போராட்டங்களைப் பிரபாகரன் இருப்பைக் முன்வைத்துப் பலவீனமாக்குதல்.

4. இலங்கை இந்திய அரசுகள் திட்டமிட்டு நிகழ்த்திய இனப்படுகொலையைப் பிரபாகரன் வாழ்தல் குறித்த விவாதங்களூடாகத் திசை திருப்புதல்.

இந்த எல்லா நோக்கங்களுமே இலங்கை இந்திய ஆளும்வர்க்கங்களுக்கும் அவற்றின் தொங்கு தசைகளுக்கும் தற்காலிக வெற்றியைப் பெற்றுக்கொடுத்தன.

உலகம் முழுவதும் பரந்திருக்கும் தமிழ்ப் பேசும்மக்கள் மத்தியில் ஒரு புரட்சிக்காரனாக என்பதற்கு அப்பால் சூரியத் தேவனாகவும் கடவுளாகவும் கூடக் கருதப்பட்ட பிரபாகரனின் உயிர் பறிக்கப்பட்டால் தமிழர்கள் வாழ் நிலங்களில் நெருப்பெரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வை.கோபாலசாமி, திருமாவளவன் போன்ற அரசியல் வியாபாரிகள் பிரபாகரன் வாழந்போது பல தடவைகள் இது குறித்துக் கூறியிருந்தார்கள்.

மே 18ம் திகத்திக்கு முன்னர் பிரபாகரனது படங்களைத் தாங்கியபடி ஐரோப்பியத் தெருக்களில் தமிழ் இளைஞர்கள் கொட்டும் மழையில் நடத்திய எதிர்ப்பு உர்வலங்கள், உண்ணாநிலைப் போராட்டங்கள் பிரபாகரன் மே 18 இன் பின்னர் நின்று போய்விட்டன.பிரபாகரன் பதாகைகளோடு இரண்டு இலட்டசம் தமிழர்கள் ஐரோப்பியத் தெருக்களில் நடத்திய போராட்டங்கள் நிறுத்தப்பட்டு பிரபாகரன் கொலைசெய்யப்பட்ட பின்னர் இருபது பேர் கூட அஞ்சலி செலுத்தக் காணப்படவில்லை.

முத்துக்குமார் தனது உயிரை மாய்த்துக்கொண்ட போது பத்தாயிரம் தமிழர்கள் உணர்ச்சிகரமாய் நடத்திய போராட்டங்கள் எல்லாம் வலுவிழந்து பிரபாகரன் அழிந்து போனபோது மயான அமைதியாகக் காணப்பட்டன. போராடங்களை ஐரோப்பாவில் ஒழுங்கு செய்தவர்கள் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கின்றார் என்றனர். வை.கோ, திருமாவளவன்,நெடுமாறன் என்று அனைத்து அரசியல் வியாபாரிகளும் ஒரே பல்லவியத் தான் பாடினார்கள். இலங்கை இந்திய அரசுகள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டன. எதிர்பார்க்கப் பட்ட வன்முறைகளும் போராட்டங்களும் பிரபாகரன் வருவார் என்று கூறி மிகவும் தந்திரமாக நிறுத்தப்பட இலங்கை அரசு எதிர்ப்புகளின்றி மூன்றுலட்சம் தமிழர்களைச் சிறைப்பிடித்து, தனது இனவழிப்பைத் தொடர்ந்தது.

இன்னொரு புறத்தில் புலிகளின் பிஸ்டல் குழுவும், தற்கொலைப் படைப்பிரிவின் ஒரு பகுதியும் வன்னியிலிருந்து வெளியேறியிருந்ததாக இனவழிப்பு நடந்து கொண்டிருந்த வேளைகளில் கோதாபாயவும் உதய நாணயக்காரவும் பல தடவைகள் கூறியிருந்தனர்.கிழக்கின் காடுகளில் கூட ஒரு குறித்த தொகைப் புலிகள் நிலை கொண்டிருந்தனர். இவர்கள் பிரபாகரனை எதிர்பார்த்துக் காத்திருந்தானர். இந்த இடைவெளியில் இலங்கை அரசு இவர்களின் வலைப்பின்ன்லை சித்தைத்து, பலரை உள்வாங்கியும் அழித்தும் எதிர்ப்பை நிர்மூலமாக்கிவிட்டது.

அழிவிற்கான காரணங்கள், புதிய உலக நிலை, போராட்டத்தின் தவறுகள் என்று பல வாதப் பிரதிவாதங்களூடான புதிய சக்திகளை உருவாக்கத்தை பிரபாகரன் விவாதங்களூடாகத் தடைசெய்து ஈழ மக்கள் மத்தியில் போராட்டங்கள் மீதான நம்பிக்கையீனத்தைத் தோற்றுவித்தது. இனப்படுகொலையின் இரத்த வாடை வீசிக்கொண்டிருந்த அதேவேளை பிரபாகனையே பயன்படுத்தி அதனை நிகழ்த்தியவர்கள் தம்மைப் பாதுகாத்துக்கொண்டனர்.

தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட முனைந்த ஆயிரமாயிரம் அப்பாவிப் பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் பிரபாகரனின் இருப்பு விருப்புடையதாய் அமைய அதே விடயத்தை ஆளும்வர்க்கங்கள் தமது நலனுக்காகத் திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொண்டன.

புலம் பெயர் நாடுகளிலும் இந்தியாவிலும் புலிகளின் பரந்துபட்ட வியாபார மூலதனத்தின் பினாமிகளாகச் செயற்பட்ட பலருக்கும் இந்த இருப்புக்குறித்த பிரச்சாரம் வாய்ப்பானதாக அமைய இன்றுவரைக்கும் பிரபாகரனை அனாதைப் பிணமாய் நடுத்தெருவில் வீசியெறிந்துவிட்டனர். நாடுகடந்த தமிழீழம், வட்டுக்கோட்டத் தீர்மானம் என மக்களின் உணர்வுகளை வியாபாரமாக்கக் கற்றுக்கொண்ட புதியவர்கள் பிரபாகரனை அனாதையாகவே நந்திக்கடலோரத்தில் விட்டுவிடுவார்கள்.

தமது வாழ்நாளில் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தவோ, விமர்சிக்கவோ இவர்கள் முன்வரமாட்டார்கள். பிரபாகரன் இறந்து போன பின்னர்கூட உலகம் இனப்படுகொலை நிகழ்த்தியவர்களுக்கு எதிராகக் கொந்தளிக்காமல் தடுதவர்கள் இவர்கள்.

உலகம் முழுவது பரந்திருக்கும் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் ஒன்று மட்டும் நிதானமாய் வாழ்கிறது. நாங்கள் இப்போது சிறுபான்மையல்ல பெரும்பான்மை என்ற உணர்வு. உலகின் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களின் ஒரு பகுதி நாங்கள். சிறுபான்மை ஒடுக்கும் அதிகாரவர்க்கத்திற்கு எதிரான பலம் மிக்க பெரும்பான்மை. நாற்பத்தி இரண்டு வீதமான உலக மக்கள் வறுமைக்கோட்டுற்குக் கீழ் வாழ்கிறார்கள். தமது இந்த நிலைக்குக் காரணமானவர்களை அவர்கள் அடையாளம் கண்டுகொண்டிருக்கிறார்கள். இந்தப் பெரும்பான்மையோடு இணைந்து கொள்ளவும் அவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் புதிய போராட்டத்தை உலகிற்கு உதாரணமாக நிகழ்த்தவும் எமக்கு முப்பது வருட போராட்ட அனுபவம் உண்டு. கொலைகள்,சித்திவதைகள்,காட்டிக்கொடுப்புக்கள், துரோகங்கள் என்று அனைத்தையும் கடந்துவந்தவர்கள் நாங்கள். இப்போது அமரிக்கா யார்பக்கம், ஐரோப்பா எங்கே, ஐ.னா வின் துரோகம்,இந்தியாவின் கொலைகார முகம் என்று அனைத்தையும் அனுபங்களூடாகவே அறிந்துகொண்டவர்கள். இவை அனைத்துக்கும் எதிரான பெரும்பாமையோடு எம்மை இணைத்துக்கொள்வதிலிருந்தே போராட்டத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நகரமுடியும்

மே 19 பிரளயம் நிகழ்ந்து ஒரு வருடமாகப் போகிறது.

தேசியத் தலைவரின் மரணத்தையே மறைத்து இலாபம் சம்பாதிக்கத் துணிந்தவர்களிடத்தில் இருந்து மானத்தையும், இராஜதந்திரத்தையும் தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். அறிவுபூர்வமாகச் சிந்திக்கவோ, செயற்படவோ திராணியற்றவர்கள் தான் அவர்கள் கூறுவதை இன்னும் நம்பிக் கொண்டிருக்க முடியும்.

சபா நாவலன்

இது ஒரு மீள்பதிவு-இன்போ தமிழ் குழுமம் –


மே 15, 2016 Posted by | தமிழீழம் | இனத்தின் விடிவுக்காய் இறுதிவரை போராடிய பிரபாகரனை அனாதைப் பிணமாய் நடுத்தெருவில் வீசியெறிந்துவிட்டனர்? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தாயிலாப்பிள்ளை யானோம் தலைவனை இழந்த பின்னே…..?

praba-godதாயிலாப்பிள்ளை யானோம்

விடுதலை தந்த மூச்சே என்
வியாபகப்பொருளே
உன்னைப் பாடக்கூட முடியவில்லை
உனக்காய் பாமாலை சூட்டியவன்
உனக்கு பூமாலை சூட முடியாமல்
தவிக்கின்றேன்?

இறைவன் என்கிறார்/நீ
மனிதன் என்கிறார் /இல்லை
முற்றும் துறந்த முனிவன் என்கிறார்
அதனால் உனக்கு….
வழிபாடு தேவை இல்லை
என்கிறார்
அய்யன் அய்யனே
பூசைக்கு வராதா திருவே
உருவம் நீ
வீதிக்கு வராத உருவே
வதனம் நீ
ஆசைக்குக் கூட உன்னை
அழகுத் தேரில் அழைத்து,
வரமுடியவில்லை
என் காவல்தெய்வம்
கரிகாலச் சோழனை
ஆரத்தழுவி
அழக்கூட முடியவில்லை

உலகத்தமிழினமே
உணக்கு ஒரு மடலென்று
உரக்கச் சொல்லியதால்
உரலில் கட்டி
வாய்கட்டி அடைக்கப்பட்டேன்
வரலாற்றுத் தவறை ஏன்?
செய்தீர் என்று
வாய்மை கொண்டதற்காகவே
வாங்கியவன் துரோகிப்பட்டம்.

அய்யன்,அய்யனே
நீயே என் உயிரானாய்
நீயே என் உணர்வானாய்
தாங்க முடியவில்லை?

தங்கவண்ண மேனியும்
புன்னகை தாங்கும் இன்ப வதனமும்
கண்களில் வீரப் போர்புலிப்பார்வையும்
புவனம் யாவையும் தன்வயமாக்கிடிம்
எங்களின் கோமகா
தமிழ்க்குலக்காவலா
தமிழீழ நாட்டின் மேதகு தலைவா
மொட்டவிழாப் பயிராயிருக்கும் போதே
சுட்டெரிப்பேன் பகையை என்று
சுடர்முகம் தூக்கி நின்ற
குலவிளக்கே / உன்
கட்டவிழா மேனிதன்னைக்
கரம்தொட்டுத்தடவியாடக்
காத்திருந்தோம்
கண்விழித்தோம்
முடியவில்லை

அய்யனே
நான் அழவில்லை ,
இரத்தம் அழுதது
போவது நிச்சயம் ,
முன்போ பின்போ
ஆயினும் அழுகை
அதன் பேர் பாசம்
வாழ்க்கை மரணம்
நடுவில் தடைச்சுவர்
எனக்கு எல்லாம்
இவனென்று இருந்தேன்,
நாதியற்றேன் அப்பொழுதே..
என்னினத்தைக் காப்பவர்,
யார் ?
என்னை ஈன்றவனை
என்னை உலகுக்குத்தந்தவனை
எனக்கு எல்லாமாய் ஆனவனை
அழகுபார்க்க முடியவில்லை
திக்குத்தெரியாமல்
திகைக்கின்றேன்
என்செய்வேன் ..
சென்றனை என்ற போதும்
செவியினும் நம்…பவில்லை

அம்பலவி ஒரு விசரன்
அண்ணை இருக்கும் போது
அழுது புலம்புகிறான் என்று
அணைவரும் சொல்லுகிறார்
போதாக்குறைக்கு
மனநோயாளி என்று
மகுடம் சூட்டுகின்றார்
அது உண்மையாய் இருக்கட்டும்
நான் என்ன …?
கொள்ளி வைக்கவா கேட்கிறேன் ?

குலம்காத்த கோமகனை
நிலம் பார்த்து அதிரும் வண்ணம்
கெடுதலைக்கு ஆழாகிக்
கீழோரால் கீழ் என்று
இகழப்படும் என்றன்
பெரும்தலைவன்
பாதத்திருவடியை
பாரெல்லாம் போற்றும்
பண்பை உருவாக்க
நினைக்கின்றேன்.

நாட்டுக்காய் உழைத்த
உத்தமனாம் பெருவீரன்
நிலைதனை அறிந்து தேர்ந்து
நீதிக்குத் தொடுக்கும்
யுத்தத் தளபதியாய்
நின்றிருந்தான்
பெரும்சேனை முகப்பதனில்
நாடளிக்கும் குணக்கேடர்களைக்
கூடி எதிர்ப்பதற்க்குக்
கூவுகின்றான் ,

தெருவெல்லாம் பாசறைகள்
முள்ளிவாய்க்கால் பெருவெளியில்
இரத்த வாய்க்கால்
பெருக்கெடுத்து ஓடுவதை
சகிக்காத பெரும் தலைவன்
போருக்கு நாள் குறித்து
விரைவில் போர் தொடங்கும்
பொறுத்திருங்கள் எனப்
பதில் இறுத்தான்
படைகொண்டு செல்வதற்கு
இன்னும் சில நாட்களே
எனக்கண்டு சிந்தை மகிழ்ந்தான்

அதற்குள்..
கொடும் விந்தை ஒன்று
உருவாகும் என
யார் கண்டார் …..?
பாசறைக்குப் பக்கத்தே
படைநடத்தும் விதம் பற்றித்
தனிமையிலே நின்று
தலைவன் யோசனைக்கு
அடிமையானான்
அப்போது …..
அண்டை நாட்டோடு
அகிலத்தின்
ஆதிக்கக் கரங்களெல்லாம்
ஒன்றுகூடி …
உருவத்தால் மனிதராய்த் திரிகின்ற
நாய் நரிகள் கழுகுக்கும் பருந்துக்கும்
இவ்வுடலைக்கொடுப்பதற்கே
சுற்றியுள்ளார் என்பதனை
உணர்ந்து ஆய்ந்து
தான் வளர்த்த வீரர்களை
அழித்துப்போடல்
ஆகாதென அறிந்து
போர்தொடுக்க துணிந்த வேளை
மலைபிளக்க வெடி வைத்தது போல்
மாவீரன்
மண்டையைப் பிளப்பதற்கும்
துணிந்து விட்டார் .

தலை நொறுங்கித்
தரையில் சாய்ந்தான்
தமிழ் தலைவன்
தினவெடுத்த தோள்களோடு
தினம் திரிந்த மணிமார்பில்
உதிர வெள்ளம்.
முடித்து விட்டார் பகையை என்ற
இறுமாப்பில்
ஆரியத்துச் சிங்கம் மண்ணை
முத்தமிட்ட வேளை
உத்தமனும் கடைசி மூச்சை
நாட்டுக்கே அளித்து விட்டு
துயில் நீங்காத்தொட்டிலில்
படுத்துக்கொண்டான்

சித்திரம் சிதைந்தது
எனக்கேள்வியுற்று
இத்தரையில் மாந்தரெல்லாம்
உயிருள்ள பிணமாகி
உருக்குலைந்து போனார்
தலைமகனே
தலைகுனியாத் தமிழனாக,
இறுதிவரை போராடி
இலங்குபுகழ் ஈழமதின்
அணையாச் சுடரானாய்
உனை மறக்க முடியாமால்
உள்ளமெல்லாம் நீ நிறைந்தாய்
சாகாததாகச் செத்தது மேனி
தளராததாகத் தளர்ந்தது பூமி
வேகாத வெந்தன விழிகள்
வீட்டிலும் நாட்டிலும்
அவையே ஒளிகள்
அய்யகோ தமிழே
தாயிலாப்பிள்ளை யானேம்
தலைவனை இழந்த பின்னே…..?

prabakaran god

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?
கருகத் திருவுளமோ?

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?

எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ?

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

மாதரையும் மக்களையும் வன்கண்மையால் பிரிந்து
காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ?

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?

எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி இரு
கண்ணற்ற சேய் போல் கலங்குவதும் காண்கிலையோ?

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி
உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலையென்றும்
செப்பித் திரிவாரடி கிளியே
செப்பித் திரிவாரடி கிளியே செய்வதறியாரடி கிளியே

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி கிளியே

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்றெமதன்னை கை விலங்குகள் போகும்
என்றெமதன்னை கை விலங்குகள் போகும்
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைக்ள் வேறினி யார்க்கோ?
பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைக்ள் வேறினி யார்க்கோ?
தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ?
தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ?
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்

prabhakaran

காலம் ஒரு பதிலெழுதும்

எனக்கும் உனக்கும்
இடைவெளிகள் அதிகம்
என்றாலும் நான்
உன்னை விரும்பினேன்
ஒருவகையில்
உன்னை ரசித்தேன்

நீ
வீரன் என்பதற்காக அல்ல.
கடவுளுக்குச் சமனானவன்
என்ற கற்பனையாலும் அல்ல.

நானே நீயாக
எனது உணர்வுகளே
உனது உணர்வுகளாக
எனது ஆவேசமே
உனது ஆவேசமாக
பாவித்துக் கொண்டே
உன்னில் என்னைக் கண்டேன்.

இன்று,
நீ இல்லை
அது குறித்து
அழக் கூட முடியவில்லை.

எம்மவர் வாழ்வில்
ஒருசில பொழுதுகள்
அன்று இருந்தன.
அந்நியப் படைகள்
எம் மண்ணை
ஆக்கிரமித்திருந்த காலம்
இருண்ட பொழுதுகளே
எமக்காக மிச்சமிருந்த காலம்
உறவுகளைப் பிரிந்தாலும்

அழமுடியாத காலம்

அந்தக் காலங்கள்
மாறவேண்டுமென்றே நினைத்தோம்.

நான் வேண்டுதல் செய்தேன்
நீயோ
உனக்காகவும் எனக்காகவும் போராடினாய்

இன்று,
நீ
எம்மிடையே இல்லை
தெரிந்தும்
பகிரங்கமாக அழ முடியவில்லை
அஞ்சலிக்க முடியவில்லை.

இன்று,
எமை அழுத்தும்
ஷபூட்ஸ்| கால்கள் இல்லை
ஆக்கிரமிப்பாளனின்
ஆதிக்கமும் இல்லை
இருந்தும் கூட
என்னால அழ முடியவில்லை.

என் கையே
குரல்வளையை நசிக்கிறது
வளர்த்த கடாவே
மார்பில் பாய்கிறது

இதனையா நான் யாசித்தேன்?
இதற்காகவா
நீ
உன் வாழ்வை
அர்ப்பணித்தாய்?

வளர்ப்பு நாய்
இறந்ததற்குக் கூட
கண்ணீர் வடிக்கும் உலகில்
மூன்றுநாள்
துக்கம் அனுட்டிக்கும் உலகில்
எசமான் இறந்ததற்காய்
அழமுடியா அவலம்

சரித்திரத்தை உருவாக்கச்
சமராடிய உனது
சரித்திரமே இன்று
மறைக்கப்படும் அவலம்

எதிரியினால் அல்ல

நேற்றுவரை உனது
நண்பனாய்
சகோதரனாய்
நீ
இறுதிவரை
நம்பியருந்தவர்களால்
சுதந்திரத்துக்காகப் போராடிய(?)
அடக்குமுறையாளர்களால்

காலம் ஒரு பதிலெழுதும்
அப்போது
உன் கல்லறையில்
ஒரு பூ வைப்பேன்
அதுவரை……?

சண் தவராஜா ஊடகவியலாளர்

-இன்போ தமிழ் குழுமம் –

மே 15, 2016 Posted by | தமிழீழம் | தாயிலாப்பிள்ளை யானோம் தலைவனை இழந்த பின்னே…..? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம் !

leader prabakaran tribute 4

வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார்.

மானிடத்தின் விடுதலையை நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.”leader prabakaran tribute

praba god 


எம்மைப் பொறுத்தவரையில் இறுதி யுத்தில் முள்ளிவாய்க்கால் வரை போராடியவர்கள் மட்டுமல்ல புலிகளோடு வாழ்ந்த அனைத்து மக்களும் , சரணடைந்து கொல்லப்பட்டவர்களும் ,விடுவிக்கப்பட்டவர்களும் ,எஞ்சி வாழ்பவர்களும் அதில் பங்காளிகள் தான் அனைவரும் போற்றுதற்குரியவர்கள் தான் !

Mullivaikal Remembrance 2

மே 15, 2016 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், பிரபாகரன், முள்ளிவாய்க்கால், வீரவணக்கம், வீரவரலாறு | , , , , , , | முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது