அழியாச்சுடர்கள்

முள்ளிவாய்க்காலில் இனம் காணப்பட்ட வீரச்சாவைத் தழுவிய சில போராளிகளின் விபரம் !

கண்ணன் என்று அழைக்கப்படும் ஞானச்செல்லம் உதயராசா  இராணுவம் கூட்டிச் செல்லும் புகைப்படம் உள்ளது!

Chanal4_sl war crimesசரணடைந்த எனது கணவரை, ஆடைகளைக் களைந்து இராணுவத்தினர் அழைத்துச் செல்கின்ற மற்றும் கிடங்கு ஒன்றின் அருகில் உட்கார வைத்துள்ள புகைப்படங்கள் சனல் – 4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது.

இராணுவத்தில் சரணடைந்து காணாமற்போன கண்ணன் என்று அழைக்கப்படும் ஞானச்செல்லம் உதயராசா (காணாமற்போகும் போது வயது 40) என்பவரின் மனைவி அருந்தவச்செல்வி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு இரண்டாவது நாளாக இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.chanal4_01

இதன்போதே ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்த குறித்த பெண் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,warcrims-6

விடுதலைப் புலிகள் அமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினராகவிருந்த எனது கணவர் கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி இராணுவத்தில் சரணடைந்தார்.

நானும் எனது இரண்டு பிள்ளைகளும் அதனை நேரில் கண்டோம். அதன் பின்னர் கணவர் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், சனல் – 4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட யுத்தக்குற்ற ஆவணப் புகைப்படம் எனக்கு கிடைத்தது.

அதில் எனது கணவர் ஆடைகள் களையப்பட்ட நிலையில் இராணுவத்தினர் அழைத்து வருவது மற்றும் கிடங்கு ஒன்றின் அருகில் உட்கார வைத்திருப்பது தொடர்பான புகைப்படங்கள் உள்ளன.

இராணுவத்தினர் எனது கணவரைப் பிடித்து வைத்திருந்து சித்திரவதை செய்ததற்கான ஆதாரங்களாக இவை காணப்படுகின்றன.

இராணுவத்தினரே எனது கணவரை வைத்துள்ளனர். கணவரை மீட்டுத் தாருங்கள் என ஆணைக்குழு முன்னிலையில் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது புகைப்படங்களை பார்த்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் எவ்வித பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.23

ஏப்ரல் 2011 இல் வெளிவந்த புகைப்படத்தொகுப்பில் இருந்து

மாலதி படையணி மகளிர் போராளி அஜந்தி அவர்கள் இனம் காணப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகளின் மாலதி படையணியை சேர்ந்த மகளிர் போராளி அஜந்தி அவர்களை அவரது சகோதரி அடையாளம் காட்டியுள்ளார்.
சில தினங்களிற்கு முன்னர் வெளிவந்த நூற்றி நாப்பது நிழல் படங்களை அடுத்து அதில் உள்ள போராளிகள் படிப்படியாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.அந்தவகையில் இன்று இவரது சகோதரி இவரை அடையாளம் காட்டியுள்ளார்.இவர்களின் உறவுகள் பாதுகாப்பு கருதி அவர்களிற்கு இந்த அடையாளம் காட்டுதலின் பின் எதிரியானவனால் அச்சுறுத்தல் வரும் என்கின்ற நிலையில் இவரது பெயர் விபரங்களை அச்சத்தின் பிரகாரம் வெளியிட தணிக்கை செய்ய பட்டுள்ளது .

தளபதி லெப் அஜெந்தா முன்னர் மாலதி படையணியின் துணைத்தளபதியாக செயற்பட்டு பின் படைத்துறைப்பயிற்சி கல்லுரியில் மகளீர் படையணி பொறுப்பாளராக கடமையாற்றியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ராதா வான்காப்பு படையணி லேப் கேணல் ஜெகன் இனம் கானப்பட்டுள்ளார்

வன்னியில் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த மற்றும் சிறீலங்கா படையினரால் கைதாகிப் படுகொலை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகளின் நிழற்படங்கள் வெளிவந்த பின்புலத்தில்,
போராளிகளையும், பொதுமக்களையும் அவர்களின் உறவினர்கள் அடையாளம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இப்பொது ராதா வான்காப்பு படையணியை சேர்ந்த ஜெகன் இனம் காணப்பட்டுள்ளார்.ஊடறுப்பு தாக்குதல் மேற்கொண்டபோது வீரச்சாவடைந்த தளபதி கஜன் அவர்கள் இனம் காணப்பட்டுள்ளார்

கட்டளை தளபதிகளில் ஒருவரான கேணல் கஜன் அவர்கள் இனம் காணப்பட்டுள்ளார்.வன்னியில் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த மற்றும் சிறீலங்கா படையினரால் கைதாகிப் படுகொலை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கேணல் கஜன் என அழைக்கப்படும் சோதிராஜ் விமலவர்ணன் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் 1989 ஆம் ஆண்டு இயக்கத்தில் இணைந்து முன்னால் யாழ் மாவட்ட தாக்குதல் படை பிரிவு தளபதியாகவும் , கிட்டு பிரங்கி படையணியின் துணை தளபதியாகவும், மட்டகளப்பு துணை கட்டளை தளபதியாகவும் அதன் பின்பு இறுதி நேரத்தில் தாக்குதல் தளபதியாகவும் விசேட தளபதியாகவும் பணியாற்றி முள்ளிவாய்க்கல்,முள்ளியவளை பகுதியில் தாக்குதல் தளபதியாக பணியாற்றி சிங்கள முற்றுகையை உடைத்து வெளியேறும் போது 17 .05 .2009 ம் ஆண்டு வீரகாவியம் ஆகியிருந்தார் என்று அவரது சகோதரர் வண்ணன் தெரிவித்துள்ளார்.

புதியவன் மாஸ்ரர் அடையாளம் காணப்பட்டுள்ளார் – மைத்துனர் தகவல்

வன்னியில் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த மற்றும் சிறீலங்கா படையினரால் கைதாகிப் படுகொலை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

கடந்த 27.04.2011 அன்று நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகளின் நிழற்படங்கள் வெளிவந்திருந்ததன் பின்புலத்தில், போராளிகளையும், பொதுமக்களையும் அவர்களின் உறவினர்கள் அடையாளம் காட்டி வருகின்றனர்.

கட்டளைத் தளபதி கேணல் பானு, கிழக்கு மாகாண சிறப்புத் தளபதி கேணல் ரமேஸ் ஆகியோர் வரிசையில் விடுதலைப் புலிகள் மற்றொரு அங்கத்தவரான புதியவன் மாஸ்ரர் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை குகனேசன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

1989ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்திருந்த இவர், மத்திய குழு அங்கத்தவரும், மூத்த உறுப்பினருமான சந்தோஸ் மாஸ்ரரின் சகோதரனாகும்.

இவரது மனைவியும் கள மருத்துவத்திற்குப் பொறுப்பாக இருந்த ஒரு நீண்டகால மூத்த போராளியாக இருந்தவர். அவரது பாதுகாப்புக்கள் கருதி மேலதிக விபரங்கள் தவிர்க்கப்படுகின்றன.

நேற்று நாம் வெளியிட்ட போர்குற்ற படங்களில் ஒருவர் அடையலாம் காணப்பட்டுள்ளார் .

தமிழீழ விடுதலைப் புலிகளில் பல்லாண்டுகளாக நின்று பணியாற்றியவரும் , விடுதலைப் புலிகள் உறுப்பினருமான ஒருவருடைய மகன் தனது தந்தையினை அடையாளம் காட்டியுள்ளார். அவரது விபரங்களை எமக்கு தந்துள்ளார்.இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற நேரடி சாட்சியத்திற்கு தான் வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக தமது தந்தை கரியான் முள்ளிவாய்க்கால் பகுதியில் நின்று தொலைபேசி வாயிலாக தொடர்புகளை மேற்கொண்டு களமுனையின் செயல் பாடுகளை குறிப்பிட்டிருந்தார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இவரது குடும்ப உறவுகள் இலங்கையில் உள்ளதினாலும் இவர் தொடர்ந்து சாட்சியம் சொல்ல இருப்பதினாலும் இவரின் குடும்பத்தாருக்கு இலங்கை படைய புலனாய்வு துறையினரால் குறித்த போராளியின் பிள்ளைகளை கைது செய்யும் முகமாக இவர்களது வீடு சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்திய போது அன்று அவர்கள்
குறித்த வீட்டில் இல்லாத நிலையில் உயிர் தப்பி தற்போது தலைமறைவாக வாழ்கின்றனர்.

விரைவில் இவர் சனல் 4தொலைக்காட்சியில் தனது நேரடி செவ்வியினை வழங்கவுள்ளார்.அதற்கான நகர்வுகள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன.இவர் எமக்கு வழங்கிய செவ்வி உள்ள போதும் அதனை இவர்களின் உறவுகள் பாதுகாப்பு நிலை காரணமாக வெளியிடமுடியவில்லை .

தளபதிகளில் ஒருவரான குட்டிமணி அடையாலம் காணப்பட்டுள்ளார்

இறுதி யுத்தம் வரை களமாடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான குட்டிமணி அடையலாம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை நேற்று வெளியாகியிருந்த போர் குற்ற புகைப்படங்களில் பல இரண்டாம் நிலைத் தளபதிகள் இனவெறிபிடித்த சிங்கள ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போராளி அன்பு அடையாளம் காணப்பட்டார்

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பு 1991 ஆண்டு இயக்கத்தில் இணைந்து அடிப்படைப்பயிற்சி முடிந்தபின் படைத்துறைப் பள்ளியில் கல்விகற்று 1994ம் ஆண்டு சிறுத்தை படையணியின் இரண்டாவது பயிற்சிப்பாசறையில் பயிற்சி பெற்று [ஓயாத அலைகள்1ல்] தவறுதலாக வீரச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டார்.அன்பு அதன் பின் கிட்டு பிராங்கிப்படையணியில் 12 ம் ஆட்லறி ஒன்றின்பொறுப்பாளராகக் கடமையாற்றி விடுதலைப்புலிகள் இலங்கை இராணுவ நிலைகள் மீது நடத்திய பல தாக்குதல்களில் பங்குபற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்வு

 

 

Advertisements

மே 1, 2016 - Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், முள்ளிவாய்க்கால், வீரவரலாறு | , , , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: