அழியாச்சுடர்கள்

ஏய் பனை மரமே என் அக்காள் எங்கே ?

வாடியம்மா அழகி! இப்படி பல நாள் அழைத்து அருகில் வைத்து என் சொக்கினை கிள்ளும் போது அன்பு தெரியும் எனக்கு. மட்டக்களப்பு இருந்து வடக்கு போவது என்றால் குதூகலம் அந்த நாளில் எனக்கு காரணம் அண்ணாவை சந்திக்க போகும் ஆசை. அண்ணா கிளிநொச்சியில் பயிற்சி பெறும் போது அப்பா அம்மாவுடன் செல்வது வழமை. அப்படி போகும் போது அங்கே நான் சந்தித்து மகிழ்ந்த தருணங்கள் என்றால் அது துர்க்கா அக்கா, தமிழினி அக்கா இருவரும் தான். அறியாப்பருவம் என்றாலும் அவர்கள் என் கண்களில் வாழ்கிறார்கள்.Brigadier Thurkka

துர்க்கா அக்கா அன்பிற்கும், கட்டளைக்கும் யாரும் பணியாமல் போக மாட்டார்கள். அப்படி அவரின் செயற்பாடுகள் இருக்கும். யாரையும் வஞ்சித்து பேச மாட்டார். அவரின் கைகளை பிடித்து நடந்த பல நினைவுகள் மனதில் நிழலாடுகிறது.

தலைவரின் ஒவ்வொரு சொல்லையும் உள்வாங்கி அதன் படி நடந்து கடைசி வரை அவர் கொண்ட உறுதியில் மாறாது ஆனந்தபுரத்தில் ஈகமானது மறக்க முடியாத வடுவே. வெறும் ஐநூறு மீட்டர் எல்லைக்குள் நின்று தம்மால் வெளியேற முடியாத நிலையிலும் உக்கிர சண்டையிட்டு இலக்கில் குறியாக நின்றவர் எங்கள் துர்க்கா அக்கா.

“அண்ணா இங்கு நீங்கள் இருக்க வேண்டாம் நிலமை மோசமாக உள்ளது உடனே வெளியேறுங்கள்” என தனது இடர் பாராது தலைவருக்கு கடிதம் எழுதி அனுப்பியதை எப்படி மறப்பது.

ஒரு நாள் அல்ல பல நாள் வரி உடையில் கண்ட கம்பீர தோற்றத்தை சில நிமிடங்கள் சாதாரண உடையில் காணும் போது நான் கொள்ளும் மகிழ்ச்சி துர்க்கா அக்காவை கண்டு பல மடங்காகும். என் தாய் போல அரவணைப்பை பல தடவை பெற்றிருக்கிறேன் அக்காவிடம். வார்த்தை ஒவ்வொன்றும் கசக்காது அப்படி அறிவுரை கூறுவார். குடும்பத்தில் மூவர் போராளிகள் நீயும் இப்படி ஆக கூடாது நல்லா படிக்கனும், அப்பதான் நம்மட ஈழத்திற்கு நல்ல காரியங்கள் பண்ண முடியும் என கூறுவார்.

பனைமரமே
பதில் கூறு
என் அக்காள் எங்கே
அடிவயிறு
வலிக்கவில்லை

நானும்
உன் மண்ணுக்காக
சிந்திய இரத்தமென்பதால்
வலிக்கிறது
பூப்போன்ற
அன்பானவர்களை
மலரும்
முன் பறித்து விட்டாயே

பனைமரமே
உன் நிழலில்
பல நாள்
கதை பேசி
மகிழ்ந்தோமே
இன்று நான்
தனிமை காண
அக்காளை
அழைத்து விட்டாயே

பகை முடி
என வீரம்
பேச
முடிப்போம் என
நான் வளரும் முன்
கண்ணாக
இருந்த பாதை ஆனவளை
தீயில் இட்டதேன்
இலச்சிய வேக்கை
அவளை தடுக்க
இறுதி நொடியிலும்
எங்களை நினைத்தாளோ
நான் அறியேன்

விடை கொடு எனக்கு
ஆனந்த புரம்
அழுகையின்
இல்லமானதேன்
நீ என் செய்வாய்
மரமே
பட்ட மரமாக
உனையும்
இரசாயன கலவை
ஆக்கி விட்டனரே.

Advertisements

ஏப்ரல் 2, 2016 - Posted by | ஈழமறவர், ஈழம், வீரவரலாறு | , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: