அழியாச்சுடர்கள்

படை அதிகாரிகள் பலரை முகமாலை சமரில் இழந்தோம் -சரத்

ltte fighters 42006ஆம் ஆண்டு முகமாலை யில் இடம்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் 150ற்கும் மேற்பட்ட படை அதிகாரிகளை இராணுவம் இழந்ததாக தெரிவித்த பீல்ட் மார்ஷலும் அமைச்சருமான சரத் பொன்சேகா, யுத்தத்தின் முடிவில் 50 கவசப் போர் ஊர்தி கள் அழிக்கப்பட்டதாகவும் குறிப் பிட்டுள்ளார்.

கொழும்பில் நடத்திய செய்தி யாளர் சந்திப்பில் இதுதொடர்பாக தகவல் வெளியிட்ட அவர்மேலும் கூறுகையில், 2009 மே 17ஆம் நாள் அதி காலை இறுதிச்சமர் நடந்த போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் பொட்டு அம்மானும் இருந்தார்.

அவர்கள் நந்திக்கடலின் வடக் குப் பகுதி நோக்கிச் சென்றனர். ஆனால், பிரபாகரன் தனது புல னாய்வுப் பிரிவுத் தலைவரை விட்டுச் சென்றார். பெரும்பாலும் அவர் சுடப்பட்டிருக்கலாம். அதிகாலை 2.30 மணியள வில் விடுதலைப் புலிகள் கடைசித் தாக்குதலை நடத்திய போது, நான் பீஜிங்கில் இருந்து விமானத்தில் கொழும்பு வந்து கொண்டிருந்தேன்.

2009 மே 17ஆம் நாள் காலை 9 மணியளவில் தான் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங் கினேன். மோதல்கள் மே 19ஆம் நாள் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. இறுதிக்கட்டப் போரில் பொட்டு அம்மான் இறந்து விட்டார் என்றே உறுதிப்படுத்துகிறேன்.

போரில் ஏற்பட்ட வெற்றிகளுக்கு மட்டுமன்றி பின்னடைவுகளுக்கும் நான் பொறுப்பேற்கத் தயாராக இருக் கிறேன். 2006 ஒக்ரோபர் மாதம், முகமாலையில் உள்ள புலிகளின் நிலைகளை அழிப்பதற்காக மேற் கொண்ட நடவடிக்கையில், 150 இற்கும் மேற்பட்ட அதிகாரிகளையும் படையினரையும் இழந்த பின்னடைவுக்கு நான் பொறுப்பேற்கிறேன்.

முகமாலைச் சமரில் இராணு வம் பல கவச போர் ஊர்திகளை இழந்தது. 80 கவசப் போர் ஊர்திகளுடன் தொடங்கப்பட்ட போர், மூன்று ஆண்டுகளின் பின்னர், 2009 மே மாதம் முடிவுக்கு வந்த போது, 30 கவச ஊர்திகள் மட்டுமே எஞ்சி யிருந்தன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

*
சரத் பொன்சேகா ஆரம்பித்த இன்றொரு தகவல் நிகழ்ச்சி-வலம்புரி

முன்னாள் இராணுவத் தளபதி இப்போது பல் வேறு விடயங்களை கூறி வருகிறார். நாளுக்கு நாள் அவர் கூறுகின்ற விடயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

புலிகளுடனான போர் வெற்றியை அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ அறிவித்தபோது விடு தலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்தார் என்று சரத் பொன்சேகா கூறிய கருத்து மகிந்த தரப்பில் கடுமையாக உணரப்பட்டது.

தொடர்ந்து போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளின் அனுசரணையை பெற்றுக் கொள்ள வேண்டும் என சரத் பொன்சேகா கூறியமை தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படை யில் கூறப்பட்டதாக கருதப்பட்டது.

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச தரப்பில் எவரும் பங்கேற்கக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா திடீரென, சர்வதேச நீதிபதிகளை போர்க் குற்ற விசாரணையில் பங்கேற்க வைக்கலாம் என்று கூறியமை ஒரு வித்தியாசமான கருத்து என்பது ஏற்பு டையதே.

தமிழ் மக்களுக்கு எதிராகப் போராடிய ஒருவர்; விடுதலைப்புலிகளுடனான போரில் இராணுவத் தள பதியாக இருந்த ஒருவர் இப்படியாக மாற்றமுற்றது ஏன்? என்ற கேள்விக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­வின் ஆட்சியில் அவர் பழிவாங்கப்பட்டமையே காரணம் என்றால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏனெனில் மகிந்த ராஜபக்­வின் ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்ட சரத் பொன்சேகா சிறையில் இருந்த விடுதலை பெற்ற பின்னரும் தமிழ் மக்களுக்கு ஆதரவான கருத்தை வெளிப்படுத்தியிருக்கவில்லை.
போர்க்களத்தில் இருந்த இராணுவத்தை காப்பாற் றுவதிலேயே சரத் பொன்சேகாவின் முழுக் கவனமும் இருந்தது. ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச­வை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகாவை தமிழ் மக்கள் ஆதரித்திருந்தனர். இருந்தும் அந்த நன்றிக்கடனும் சரத் பொன்சேகாவிடம் தெரிந்ததில்லை.

ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சியில் இழந்த பதவிகளை மீளவும் வழங்கி பீல்ட் மார்­ல் என்ற விசேட தகைமையையும் கொடுத்த பின்னரும் தமிழ் மக்கள் தொடர்பில் சரத் பொன்சேகாவின் நிலைப்பாடு இறுக் கமாகவே இருந்தது. இப்போது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுள்ள சரத் பொன்சேகாவிடம் ஒரு புதிய மாற்றம் தெரிகிறது.

இந்த மாற்றத்தில்தான் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்தார், போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ளும்போது சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்ற கருத்துக்களாகும்.
இவை ஒருபுறம் இருக்க சரத் பொன்சேகாவின் கருத்துக்கள் நாளுக்கு நாள் அதிர்ச்சித் தகவல்களாக இருப்பது இங்கு நோக்குதற்குரியது.

படைச் சிப்பாய் ஒருவரை காட்டில் வைத்து கோத்தபாய ராஜபக்ச­ உதைந்து கொன்றார் என சரத் பொன் சேகா அதிரடித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இராணுவச் சிப்பாயைக் காலால் உதைந்து கோத்தபாய ராஜபக்ச­ கொன்றார் என்ற சரத் பொன்சேகாவின் தகவல் சாதாரணமானதல்ல.

ஏனெனில் இத் தகவல் விசாரணைக்கு உட்படும் போது அவ்வாறு கொலையுண்ட சிப்பாய் யார்? அந்தச் சம்பவம் எந்தக் காட்டில் நடந்தது? சாட்சியங்கள் யாவர்? என்ற கேள்விகள் ஏற்படும்போது கொலையுண் டவர் அடையாளம் காணப்படுவார்.

இஃது தென்பகுதி முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன் இராணுவத் தரப்பிலும் சலசலப்பு உருவாகும். இதற்கு அப்பால் இக்கொலை தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிடுதல் என்ற பணியை அரசாங்கம் செய்யும்போது கோத்தபாய ராஜபக்ச­ கைதாகும் நிலைமை ஏற்படும்.

ஆக, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆரம்பித்துள்ள இன்றொரு தகவல் என்ற நிகழ்ச்சி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ தரப்பை கடுமையாகப் பாதிக்கும் என்பதும் இந்த நிகழ்ச்சி மகிந்த ராஜபக்ச­வின் அரச எதிர்ப்பை மடக்கிப் போடும் என்பதும் சர்வ நிச்சயம்.

**
சரத் பொன்சேகாவைப் புகழ்ந்த விக்னேஸ்வரன்

சரத் பொன்சேகா தனது சுயநலனுக்காகவே அனைத்துலக விசாரணைக்கு ஆதரவளித்துள்ளார். இவர் முன்னைய அரசாங்கத்தில் இராணுவ நீதிமன்றால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்குப் பழிதீர்க்கும் முகமாகவே அனைத்துலக விசாரணைக்கான ஆதரவை வழங்கியுள்ளார்.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் Manekshaw எழுதியுள்ள பத்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் ஆற்றிய கன்னி உரையின் போது, அனைத்துலக தலையீட்டுடனேயே போர்க் குற்றங்கள் மீதான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்ததை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பாராட்டியுள்ளார்.

இதுமட்டுமல்லாது, சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் நிறைவில் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் அடங்கிய பல நூறு போராளிகள் கொல்லப்பட்ட ‘வெள்ளைக் கொடி’ விவகாரம் தொடர்பாக விசாரணை நடாத்தப்பட வேண்டும் எனவும் பீல்ட் மார்சல் அழைப்பு விடுத்துள்ளார்.

2010 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தற்போது பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் என்ற பதவியுடன் சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

ஜெனரல் டக்ளஸ் மக் ஆர்தர் மற்றும் பிரித்தானியாவின் பீல்ட் மார்சல் மொன்ரகொமெறி ஆகியோர் பங்கெடுத்த இரண்டாம் உலக யுத்தமானது வெற்றிகரமாக முடிவிற்குக் கொண்டு வரப்பட்ட பின்னர், ‘ஐக்’ என நன்கு அறியப்பட்ட அமெரிக்க ஜெனரல் ட்வைட் ஐசனோவர் என்பவர் 1953ல் அமெரிக்காவில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமெரிக்காவின் 34வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் 1961 வரை அமெரிக்க அதிபராகப் பதவி வகித்தார். ட்வைட் ஐசனோவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவையாகும். அதாவது இரண்டாம் உலக யுத்தம் மற்றும் அடல்ப் ஹிட்லர் ஆகிய இரண்டையும் வெற்றி கொள்வதற்காக ஐசனோவர் தனது தலைமைத்துவத்தை வழங்கினார் என்பதற்கு நன்றி பாராட்டியே அமெரிக்கர்களால் இவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2010ல் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது, இவர் ‘ஐக்’ என ஊடகங்களால் விபரிக்கப்பட்டார். அதாவது மூன்று பத்தாண்டுகளாக இலங்கைத் தீவில் நிலைத்திருந்த யுத்தத்தை வெற்றிகரமாக வெற்றி கொண்டதன் பின்னர் சரத் பொன்சேகா அதிபர் தேர்தலில் போட்டியிட்டமையால் ஊடக வட்டங்களில் இவர் ‘ஐக்’ எனப் போற்றப்பட்டார்.

வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும் எனப் பொதுவாகத் தனது பேச்சுக்களில் கடின தொனியில் வலியுறுத்தும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கடந்த வாரம் வலிகாமம் வடக்கைச் சொந்த இடமாகக் கொண்டுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான நிலச் சான்றுகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது நாடாளுமன்றில் சரத் பொன்சேகா ஆற்றிய உரை தொடர்பாகத் தான் பெருமை கொள்வதாக அறிவித்தார்.

2010ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் மகிந்த ராஜபக்ச பெற்றுக் கொண்ட வாக்குகளை விட சரத் பொன்சேகா பெற்றுக் கொண்ட வாக்குகள் மிகவும் அதிகமாகக் காணப்பட்டதாக விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்படுவதை எதிர்க்காது இதனை சரத் பொன்சேகா ஆதரித்ததன் மூலம் உண்மையில் தான் ஒரு இராணுவ வீரன் என்பதை நிரூபித்துள்ளதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார். பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தனது தொழிற்பண்பை உறுதிப்படுத்தியிருந்தார். இதனாலேயே மக்கள் 2010 இடம்பெற்ற அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்து வாக்களித்திருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கும் மேலாக, புலிகளின் தலையீட்டால் 2005ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலைப் பகிஸ்கரித்த வடக்கு மாகாண மக்கள் இதே தவறை 2010 தேர்தலிலும் இழைக்க விரும்பவில்லை. இதனால் இவர்கள் 2010ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்து வாக்களித்தனர்.

இதன் பின்னர் 2015ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்த இந்த வாக்காளர்கள் மைத்திரிபால சிறிசேனவை நாட்டின் அதிபராக நியமித்தனர். சிறிலங்காவின் உச்சநீதிமன்றில் நீதிபதியாகப் பதவி வகித்த விக்னேஸ்வரன், தனது பாடசாலைப் பருவத்தில் கொழும்பு றோயல் கல்லூரியின் இளவல் (கேடற்) படைப்பிரிவின் உறுப்பினராகச் செயற்பட்டிருந்தார். முதலமைச்சர் தனது பாடசாலைக் காலத்தை நிறைவு செய்த பின்னர் இளவற் படையணியின் உறுப்பினர் என்ற தகைமையுடன் சிறிலங்கா இராணுவத்தில் இணைந்திருந்தால் தற்போது அவர் ஒரு மூத்த அதிகாரியாக இருந்திருப்பார்.

பீல்ட் மார்சல் என்பது இராணுவத்தின் உயர்நிலையாகும். அனைத்துலக ரீதியில் மதிப்பளிக்கப்பட்ட பிரித்தானியாவின் பீல்ட் மார்சல் மொன்ரகொமறி மற்றும் இந்தியாவின் பீல்ட் மார்சல் சாம் மானெக்சா ஆகியோர் தமது தலைமைத்துவப் பண்புகளை வெளிப்படுத்தியதன் காரணமாகவே இராணுவ உயர் நிலைகளைப் பெற்றனர். பீல்ட் மார்சல் மொன்ரகொமறி இரண்டாம் உலக யுத்தத்தின் சிறந்த கதாநாயகர்களில் ஒருவராவார். இந்தியாவின் பீல்ட் மார்சல் மானெக்சா, 1970ல் இடம்பெற்ற இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தில் பாகிஸ்தானைத் தோற்கடிப்பதில் மிகப்பாரிய பங்காற்றியிருந்தார்.

ஆகவே பீல்ட் மார்சல்கள் தமது நாடுகளின் எதிரிகளுக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டு வெற்றியீட்டியதால் உலகப் புகழ்பெற்றனர். இதேபோன்று தனது நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை வெற்றிகரமாக முடிவிற்குக் கொண்டு வந்தவர் என்ற வகையில் பீல்ட் மார்சல் பட்டத்தைப் பெற்ற முதலாவது இராணுவத் தலைவராக சரத் பொன்சேகா விளங்குகிறார்.

போரின் போது இடம்பெற்றதாக நம்பப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்படுவதைத் தான் எதிர்க்கவில்லை என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தனது நாடாளுமன்றக் கன்னி உரையில் குறிப்பிட்டிருந்தார். தனது இராணுவத் தலைமைத்துவத்தின் கீழ் இடம்பெற்ற அனைத்து யுத்த நடவடிக்கைகளும் போர்ச்சட்டத்தின் பிரகாரமே மேற்கொள்ளப்பட்டதாகவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் சரத் பொன்சேகா தனது சுயநலனுக்காகவே அனைத்துலக விசாரணைக்கு ஆதரவளித்துள்ளார். அதாவது இவர் முன்னைய அரசாங்கத்தில் நிலவிய நீதி முறைமையின் கீழ் தண்டிக்கப்பட்டதுடன், இராணுவ நீதிமன்றாலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதற்குப் பழிதீர்க்கும் முகமாகவே சரத் பொன்சேகா தற்போது அனைத்துலக விசாரணைக்கான தனது ஆதரவை வழங்கியுள்ளார். அனைத்துலக விசாரணைக்குத் தனது ஆதரவை வழங்கியதோடு மட்டுமல்லாது குற்றவாளிகளை இனங்கண்டு அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக விசாரணைகள் தொடர்பான பீல்ட் மார்சல் பொன்சேகாவின் நிலைப்பாட்டை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புகழ்ந்துரைத்ததன் மூலம், தென்னிலங்கையில் உள்ள சரியாகச் சிந்திக்கின்ற மக்களின் கருத்துக்களை வரவேற்பதுடன், சமாதானம் மற்றும் மீளிணக்கப்பாடு ஆகியவற்றை நாட்டில் நிலைநிறுத்துவதற்கான தனது விருப்பத்தையும் இவர் வெளியிட்டுள்ளார்.

– நித்தியபாரதி.

Advertisements

மார்ச் 21, 2016 - Posted by | ஈழமறவர், ஈழம் | ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: