அழியாச்சுடர்கள்

நாட்டுக்காக இரு பிள்ளைகளைப் பறிகொடுத்து பட்டினியால் கதறியழும் தாய்-காணொளி

ex ltte women 2 யுத்தத்தின் கொடூரத்தில் இரு கண் பார்வையினை இழந்து தவிக்கும் மகள். நாட்டுக்காக தனது இரு மகனை பறிகொடுத்து விட்டு பட்டினியின் கொடூரத்தில் வாழ வழியின்றிக் கதறி அழும் தாயின் அவலம். உதவிடும் நல்ல மனம் கொண்டோரே உயிரைக்காப்பாற்ற நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உதவிட முன்வாருங்கள்.

தொலைபேசி இலக்கம்; 0094776553238
வங்கி கணக்கு இலக்கம்; எஸ்.நாகேஸ்வரி
016020540202, ஹற்றன் நஷனல் வங்கி (HNB)
உதவிகேட்டு_நிற்கின்றோம்!

நகுலேஸ்வரனாகிய நான் இரு கண்களும் பார்வை அற்றவன். எல்லோரும் என்னை கைவிட்டு நிலையில் அநாதரவாக நின்ற போது என்னை முன்னாள் பெண் போராளி ஒருவர் திருமணம் முடித்து வாழ்வளித்திருக்கிறார்.

எனது மனைவி 17 வருடங்களாக போராட்டத்தில் இணைத்திருந்து இறுதியில் ஒரு கையை இழந்த நிலையிலும் வவுனியா தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு சில வருடங்கள் பூஸா சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையான பின் முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியாக வாழ்ந்து வந்தார்.

தனியாக ஒரு பெண் இங்கு பல தொந்தரவுகளையும் துன்பங்களையும் எதிர்கொண்டு இச் சமூகத்தில் வாழ்வதென்பது எவ்வளவு பெரும் அவலம். எல்லாவற்றையும் தாண்டி தனக்கு துணை ஒன்று தேடாமல் எனக்கு துணையாக வாழ்க்கைப்பட்டு எனக்கு பார்வை அளித்துள்ளார்.

நாம் உயிர்வாழ்வதற்கு தேவையான அடிப்படைத் தேவைகளைக்கூட எம்மால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. எந்த பொருளாதார வளமுமின்றி நாம் அன்றாடம் செத்து செத்து பிளைத்துக்கொன்டிருக்கிறோம்.
நாம் உயிர்வாழ தகுதியற்றவர்களா என்று எண்ணி மனமுடைந்திருந்த நிலையில் இன்று இறுதியாக வெளிநாடுகளில் வாழும் எமது உறவுகளாகிய உங்களிடம் உதவிகேட்டு நிற்கின்றோம்.

தயவு செய்து உங்களால் முடிந்த உதவிகளை எமக்கு செய்து எமது உயிர்வாழும் உரிமையை பெற்று க்கொடுங்கள்.
இப்படிக்கு
தங்களின் உதவியை நாடிநிற்கும்
திரு நகுலேஸ்வரன்
முள்ளிவாய்க்கால்
தொலைபேசி : 0094 77 595 72 45
Mrs. Naguleswaran Arulmeera
National Savings Bank
Account No.: 101300104124
Mullaitivu
Sri Lanka

**ex ltte family 2

உதவிகேட்டு நிற்கின்றோம்!

நகுலேஸ்வரனாகிய நான் இரு கண்களும் பார்வை அற்றவன். எல்லோரும் என்னை கைவிட்டு நிலையில் அநாதரவாக நின்ற போது என்னை முன்னாள் பெண் போராளி ஒருவர் திருமணம் முடித்து வாழ்வளித்திருக்கிறார்.

எனது மனைவி 17 வருடங்களாக போராட்டத்தில் இணைத்திருந்து இறுதியில் ஒரு கையை இழந்த நிலையிலும் வவுனியா தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு சில வருடங்கள் பூஸா சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையான பின் முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியாக வாழ்ந்து வந்தார்.

தனியாக ஒரு பெண் இங்கு பல தொந்தரவுகளையும் துன்பங்களையும் எதிர்கொண்டு இச் சமூகத்தில் வாழ்வதென்பது எவ்வளவு பெரும் அவலம். எல்லாவற்றையும் தாண்டி தனக்கு துணை ஒன்று தேடாமல் எனக்கு துணையாக வாழ்க்கைப்பட்டு எனக்கு பார்வை அளித்துள்ளார்.

நாம் உயிர்வாழ்வதற்கு தேவையான அடிப்படைத் தேவைகளைக்கூட எம்மால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. எந்த பொருளாதார வளமுமின்றி நாம் அன்றாடம் செத்து செத்து பிளைத்துக்கொன்டிருக்கிறோம்.
நாம் உயிர்வாழ தகுதியற்றவர்களா என்று எண்ணி மனமுடைந்திருந்த நிலையில் இன்று இறுதியாக வெளிநாடுகளில் வாழும் எமது உறவுகளாகிய உங்களிடம் உதவிகேட்டு நிற்கின்றோம்.

தயவு செய்து உங்களால் முடிந்த உதவிகளை எமக்கு செய்து எமது உயிர்வாழும் உரிமையை பெற்று க்கொடுங்கள்.
இப்படிக்கு
தங்களின் உதவியை நாடிநிற்கும்
திரு நகுலேஸ்வரன்
முள்ளிவாய்க்கால்
தொலைபேசி : 0094 77 595 72 45
Mrs. Naguleswaran Arulmeera
National Savings Bank
Account No.: 101300104124
Mullaitivu
Sri Lanka
ex ltte women

முன்னால் பெண் போராளி

தொடர்புகளுக்கு 0094773256776
தமிழீழ விடுதலை புலிகளின் முன்னால் பெண் போராளி ஒருவர் போராட்டத்தில் தன் காலை இழந்த நிலையில் மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழ்ந்து வருகிறார். தயவுசெய்து இவரின் இன் நிலையை மாற்ற புலம் பெயர்ந்து வெளிநாட்டில் உள்ளவர்கள் இவரோடு தொடர்பு கொண்டு உதவி செய்யும் படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
தொடர்புகளுக்கு 0094773256776

ex ltte family

பட்டினியால் தவிக்கும் ஐந்து உயிர்கள்

யுத்தத்தினால் குடும்பத்துடன் கண்பார்வை பாதிக்கப்பட்டு பட்டினியால் தவிக்கும் ஐந்து உயிர்கள்! (மனதை உழுக்கும் அதிர்ச்சிக் காணொளி)

யுத்தத்தின் கொடூரத்தால் கண்பார்வையினை இழந்து பிள்ளைகள் மனைவி உட்பட அனைவரும் மிகுந்த பார்வைக் குறைபாட்டுடன் ஒரு வேளை உணவிற்கே போராடும் நிலை.

பிள்ளைகளின் இந்த நிலையினை தாங்கிக் கொள்ள முடியாது இறந்து விட நினைக்கும் கொடூரம். யுத்தத்தில் குடும்பத்துடன் இறந்திருந்தால் இத்தகைய நிலை வந்திருக்காது என இதயத்தை உழுக்கும் அழுகுரல்.

இத்தனை கொடூரத்தில் தனது அப்பாவிற்கு உதவிடுங்கள் என கூறும் மழலையின் பரிதாப நிலை.

உதவிடும் நல்ல மனம் கொண்டோரே இந்தக் குடும்பத்தின் உயிரைக்காப்பாற்ற நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உதவிட முன்வாருங்கள்.

தொலைபேசி இலக்கம்; 0094777687396
வங்கி கணக்கு இலக்கம்; செல்வம் றமேஸ்
9903856, இலங்கை வங்கி.

**
கடைகள் தோறும் பிச்சை எடுக்கும் இருகால்களையும் இழந்த முன்நாள் போராளி
ex ltte man 1
வவுனியாவில் கடைகள் தோறும் பிச்சை எடுக்கும் இரு கால்களையும் இழந்த முன்நாள் போராளி முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டிசுட்டான் பகுதியை சேர்ந்த இரத்தினம் புஸ்பரஜீவன் வவுனியாவில் கடைகள் தோறும் கடை ஒன்று கட்டவேண்டும் என காரணம்காட்டி பிச்சை எடுத்து வருகிறார். இச்செயற்பாடு குறித்து அவரிடம் கேட்டபோது இறுதி யுத்தத்தின்போது எனது இரண்டு கால்களையும் இழந்துவிட்டேன் எனக்கு இரண்டு குழந்தைகள் தடுப்பில் இருந்து புனர்வாழ்வு பெற்று விடுதலையாகி வந்தபோது எனது மனைவியும் என்னை பிரிந்து வேறு திருமணம் செய்து சென்றுவிட்டார்.

எனக்கு இருக்கும் ஒரு துண்டு காணியில் ஒரு கடை கட்டி எனது வாழ்க்கையை நடத்த நினைக்கிறேன் ஒரு சில நிறுவனங்களில் இருந்து உதவிகள் கிடைத்தபோதும் அவை எனது வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை நிரந்தரமான ஒரு தொழில் அல்லது வாழ்வாதாரம் இருக்கும் பட்சத்தில் என்னால் வாழ்க்கையை கொண்டு நடத்த முடியும். எல்லாவற்றையும் இழந்து இழப்பதற்கு எதுவுமே இல்லாமல் இருக்கும் என்னை போன்றவர்கள் இலைமறை காயாக இன்னும் இருக்கிறார்கள். வடமாகாணசபையால் முன்நாள் போராளிகளுக்கு உதவி வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கிறார்கள் ஆனால் அவ்வாறான உதவிகள் எதுவும் எனக்கு வழங்கப்படவில்லை என்பதோடு எங்களை போன்றோரை இச்சமூகம் ஒதுக்கி வைப்பதாகவும் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் போராட்டத்தின் பயனாக பெற்றுக்கொள்ளப்பட்ட வடமாகாணசபையால் இன்று முன்னாள் போராளிகள் ஒதுக்கப்படுவது வேதனைக்குரியது. அத்துடன் தேர்தல் காலங்களில் பிரபாகரன் படத்தையும் புலிகளின் போராட்டத்தையும் விலைபேசி ஓட்டுக்களை வாங்கும் அரசியல்வாதிகள் பின்பு அவர்களை மறந்து போவதும் புலம்பெயர் தமிழர்களிடம் அவர்களை காட்டி உதவிசெய்ய வேண்டும் என கூறி பணத்தை பெற்று போராளிகளுக்கு கிள்ளித் தெளிப்பதும் என தங்கள் வாழ்க்கையை; வழப்படுத்துகின்றனர்.Fotor0205161110

வடமாகாணசபை அமைச்சர்கள் கோடிஸ்வரர்களாகவும், உறுப்பினர்கள் இலட்சாதிபதியாகவும் மாறியிருக்கிறார்கள் ஆனால் வறுமையில் வாடும் மக்கள் தொடர்ந்து ஏழைகளாகவே…..
போராளியின் தோலைபேசி இலக்கம் -0094778964527

மனமுள்ளோர் தயவு செய்து உதவி செய்யுங்கள்…

என் மக்கள் என் நாடு என் இனம் என்று போராடியவன் இன்று வாழ வழி இன்றி படும் வேதனை யாருக்கு தெரியும் ?

**
உதவிக்கி யார் வருவார்?

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணியை சேர்ந்த மகேஸ்வரனின் மனம் தளிர்க்குமா?

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணியை சேர்ந்த இரத்தினம் மகேஸ்வரன் (46) என்பவர் போரினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 25 வருடங்களாக மீளத்துயரில் தவித்துக் கொண்டிருக்கின்றார். 1987ம் ஆண்டு வவுனியா மாவட்ட நெடுங்கேணி தண்டுவான் பகுதியில் இந்திய அமைதிப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சிறிய மோதல் ஏற்பட்டிருந்தது. அதை அறியாத மகேஸ்வரன் வியாபாரத்துக்காக மரக்கறிகள் கொள்வனவு செய்து கொண்டு நெடுங்கேணியில் இருந்து முள்ளியவளை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது தண்டுவானில் வைத்து இந்திய சீக்கியப் படையினரால் மகேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். கைதாகிய அப்பாவி பொதுமகனை இந்திய இராணுவத்தினர் துப்பாக்கியின் பின்பகுதியால் இடுப்பிலும் தலையிலும் தாக்கப்பட்டார். அதன்பினனர் மயக்கமைடைந்த மகேஸ்வரனை கிடங்கில் வைத்து இலைகுலைகலால் மூடிவிட்டு இந்திய இராணுவத்தினர் சென்றுள்ளனர். இடுப்பிலும் தலையிலும் ஏற்பட்ட தாக்கத்தின் காரணத்தால் நாளடைவில் படிப்படியாக பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருந்தது.

இடுப்பில் ஏற்பட்ட தாக்கத்தால் 36வயதில் இடுப்பிற்குகீழ் இயங்க முடியாத நிலையிக்கு தள்ளப்பட்டார். தலையில் ஏற்பட்ட தாக்கத்தால் மூளை நரம்பு பாதித்து படிப்படியாக உடல்உறுப்புக்களை செயல்இழக்கச் செய்துள்ளது. குறித்த நரம்புத்தாக்கம் குணப்படுத்த முடியாது என்று மருத்துவ அறிக்கையில் குறிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பெரும் துயரில் தவித்துக் கொண்டிருக்கும் மகேஸ்வரன் உணவை ரசித்து உண்ணும் நிலையில் உள்ளார். ஆனால் அவரை பராமரிப்பதற்கு மனிதவளமும் பொருளாதார வளமும் இல்லாதநிலை காணப்படுகின்றது.

அவருடைய தந்தை இரத்தினம் (80) தேநீர்கடையில் வேலை செய்கின்றார். பெற்றுக்கொள்ளும் சம்பளத்தில் மகனை ஓரளவு பார்த்துக் கொள்கின்றார். அவருக்கும் வயதாகிவிட்டதால் மனஉளைச்சலும் வேதனையுடனும் காணப்படுகின்றார். தந்தையை மகன் பார்க்கும் நிலைமாறி வயதான தந்தை மகனை பார்த்துக் கொண்டிருக்கும் நிலை காணப்படுகின்றது. அடிப்படை வருத்தத்தின் காரணத்தால் மகேஸ்வரன் இறப்பதற்கு முன் பட்டினியால் இறந்துவிடுவதற்குரிய அறிகுறிகள் காணப்படுகின்றது.

தொடர்புகளுக்கு0094779353881
K.RATHINAM
A/C NO 71651600
BANK OF CEYLON
NIC:363410030v

தமிழீழ நீதியரசி சித்திராவின் வறுமைக்கு தீர்வு கிடைக்குமா?

வறுமையில் வாடும் முன்னாள் போராளியான வளர்மதி இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு, புற்றுநோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். முன்னாள் போராளியும் தமிழீழ நீதி நிர்வாகத்துறை பிரிவு நீதியரசியுமான கிருஸ்ணாகரன் வளர்மதி (சித்திரா) 1990ம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளின் மகளிர் அணியின் ஆரம்பகால உறுப்பினராக இணைந்துள்ளார்.

பலாலியில் இராணுவத்ததினருடன் ஏற்பட்ட நேரடி சமரில் காயமடைந்து, பின்னர் தமிழீழ நீதி நிர்வாகத்துறை பிரிவில் 14 ஆண்டுகள் பயிற்சிபெற்று, முல்லைத்தீவு மல்லாவி நீதிமன்றில் 2009 ம்ஆண்டுவரை நீதிபதியாக கடமையாற்றியுள்ளார். தமிழீழ காவல்துறை ஆய்வாளராக கடைமையாற்றிய கிருஸ்ணாகரனை வளர்மதி மணம் முடித்து, இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றேடுத்த நிலையில் கணவனை இறுதியுத்தத்தில் இழந்துள்ளார்.

ex ltte family 3உடலில் ஏற்பட்ட காயத்தினால் ஒரு கை இயங்காத நிலையிலும் மன காயத்தினால் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்றார். மேலும் இரத்த புற்றுநோயால் பாதிப்படைந்த நிலையில் எப்போழுது மரணம் ஏற்படுமோ என்றும், பிள்ளைகளின் எதிர்காலம் என்னாகுமோ என்றும், ஏங்கி தவித்து சொல்லொணா துன்பத்தில் மிக வறுமைக் கோட்டின்கிழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். மனச்சுமையை இறக்கி வைக்கத் துடிக்கும் வளர்மதி கடந்த காலத்தில் இருந்த நிலையும் தற்போதைய நிலையினாலும் மனநிலை மோசமாக பாதிப்படையும் நிலையில் உள்ளார் என அவருடய தாயார் குறிப்பிடுகின்றார்.

உரியமுறையில் வைத்தியரை நாடி வைத்தியம் செய்யக்கூட வசதியற்ற நிலை இருப்பதாக மேலும் குறிப்பிட்டுள்ளார். வளர்மதியின் தொலைபேசி இலக்கத்துடன் அவருடைய தாயாரின் தொலைபேசி இலக்கமும் இங்கு இணைக்கப்பட்டள்ளது. தொடர்புகொள்ளும் அன்பு உள்ளங்கள் வளர்மதியுடன் பேசமுடியாத சூழல் ஏற்பட்டால் அவருடைய தாயருடன் தொடர்பினை ஏற்படுத்துமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

தொலைபேசி இலக்கம்
0094774732493 , 0094776450722

கணக்கு இலக்கம்-

9838490 bank of eylon
VALARMATHI KIRUSHNAKARAN
“உங்களால் முடிந்த வரை இதைப் பகிரவும்”

Advertisements

மார்ச் 17, 2016 - Posted by | அவலம், இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம் | , , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: