அழியாச்சுடர்கள்

முன்னாள் போராளிகளின் அவலங்கள் !

ex ltte man 3இரு கண்களையும், கைகளையும் இழந்த முன்னாள் போராளியின் அவலம்

யுத்தத்தின் கொடூரத்தால் இரு கண்களையும் முற்றாக இழந்து இரு கர்களையும் இழந்து பட்டினியால் தவிக்கும் கொடூரம். வாழ்வதற்கு வழிகாட்டுங்கள் என வேதனைகளை சொல்லிட முடியாமல் தவிக்கும் அவல நிலை. உதவிடும் நல்ல மனம் கொண்டோரே உயிரைக்காப்பாற்ற நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உதவிட முன்வாருங்கள்.

தொலைபேசி இலக்கம்; 0094776710746
வங்கி கணக்கு இலக்கம்; கிட்லர் மரியநாயகம் ருக்மணி

75736024, இலங்கை வங்கி, கிளிநொச்சிex ltte man 2

முன்னாள் போராளி கலைக்குமரனின் எதிர்காலம் ஒளிருமா?

முல்லைத்தீவு முள்ளியவளையை சேர்ந்த முன்னாள் போராளி சித்திரவேல் வசந்தரூபன் (கலைக்குமரன்) என்பவர் இடுப்பிற்கு கீழே இயங்க முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்…

விடுதலைப்புலிகளின் ராதா வான்காப்பு சிறப்புப் படையணியில் இருந்து, முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் 2009ம் ஆண்டு 4ம்மாதம் முள்ளந்தண்டில் ஏற்பட்ட துப்பாக்கிசூட்டு காயத்தினால் இடுப்பிற்கு கீழே இயங்க முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இவருடைய தாயார் சித்திரவேல் பூமணி (71) மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் தனது மகனை பராமரித்து வருகின்றார்.

ஏழு வருடங்களாக அடிப்படை வசதிகள் அற்ற நிலையின் காரணமாக படுத்த படுக்கையில் இருத்த கலைக்குமரனுக்கு வலது காலில் படுக்கைபுண் ஏற்பட்டது. இதனால் கிருமிகள் வலதுகால் எலும்பைத் தாக்கியுள்ளது. இதன் காரணத்தால் உயிர் ஆபத்து ஏற்படும் நிலையில் தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

இவருடைய உயிர் ஆபத்தை தடுக்க வேண்டுமானால் வலதுகாலை முற்றும் முழுதாக அகற்ற வேண்டும் எனவும் மருத்துவ நடவடிக்கைகள் எடுப்பதற்கு உடலில் இரத்தம் போதுமானதாக இல்லையென்றும் அவருடைய மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சத்துள்ள உணவுகளை கொடுப்பதற்கு வசதிகள் இல்லையெனவும் மற்றும் கால் அகற்றும் மருத்துவ நடவடிக்கைக்கு பணவசதியற்ற நிலையில் இருப்பதாகவும், தாயார் பூமணி கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மீள்குடியேற்றத்தின் பின்னர் இன்றுவரை தமக்கு அரசாங்கம் எந்தவகையிலும் உதவி செய்யவில்லை. மருத்துவ நடவடிக்கைகள் பணமின்றி செய்யமுடியாத சூழல் இருப்பதபதாகவும், மாதாந்தம் தனியார் மருந்துக்கடைகளில் மருந்து வாங்குவதற்கு 1800ரூபாய் செலவு ஏற்படுவதாகவும் தாயார் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்புகளுக்கு:- 0094 77 99 13 302
S.VASANTHARUBAN
MULLIYAWALAI MULLAITIVU
BANK OF CELON
A/C NO.73935465
873014199v
பட்டினியால் வாடும் மூன்று உயிர்கள்(கோரக் காட்சி)

யுத்தம் தந்த காயங்கள் இன்றும் ஆறாது இயங்க முடியாமல் கண்பார்வையினையும் தொலைத்து வாழ்வாதரத்திற்கு போராடும் கொடூரம்.உணவுக்கு வழியின்றி மரணத்தை வேண்டும் அவலம். பிள்ளையின் பசியினைப் போக்க உதவி கோரும் பெற்றோர்.உதவிடும் நல்ல மனம் கொண்டோரே இந்தக் குடும்பத்தின் உயிரைக்காப்பாற்ற நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உதவிட முன்வாருங்கள்.
தொலைபேசி இலக்கம்: 0094774292590
வங்கி கணக்கு இலக்கம்: தசிபா கோகுலேஸ்வரன் , 70196904 , இலங்கை வங்கி

ex ltte man 4

சமுதாயத்தின் கண்களுக்கு எம்மைத் தெரிவதில்லையா? முன்னாள் போராளி

தமிழன் என்று சொல்வதில் பெருமைப்படுவதாகவும், ஆனாலும் இன்று எவருடைய கண்களுக்கும் தெரியாத மனிதர்களாக வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஜேசுதாசன் கேசரிவர்மன் தெரிவித்தார். தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட அம்பாறை திருக்கோயிலை சேர்ந்த ஜேசுதாசன் கேசரிவர்மன் இவ்வாறு குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த இவர், 2011 ஆம் ஆண்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர் அவரது குடும்பத்தினருடன் இணைந்துகொண்டார். 54 வயதான ஜேசுதாசன் கேசரிவர்மனின் வலது காலும், வலது கையும் உணர்விழந்துள்ளதனால் வேலைகள் எதுவும் செய்ய முடியாத நிலையில் மிகவும் துன்பத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றார். தன்னைப் போன்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பலர், இவ்வாறான துன்பகரமான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பதற்குக்கூட வீடு இல்லாமல் தற்காலிக குடிசையொன்றை அமைத்து வாழ்ந்து வருவதாகவும் தனது குடிசைக்கு மின்சாரம் எடுக்க முடியாத நிலையில் அயல் வீட்டில் இருந்து மின்சாரத்தைப் பெறுவதாகவும் அவர் கவலை தெரிவித்தார். தனது இரண்டு பிள்ளைகளும் உயர்தரத்தில் கல்விகற்பதாகக் குறிப்பிட்ட ஜேசுதாசன் கேசரிவர்மன், அவர்களை படிப்பிப்பதற்காக மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். எனினும் கையும் காலும் உணர்விழந்த நிலையிலும் கூட, தனக்குத் தெரிந்த தையல் வேலையைச்செய்து, தனது மனைவி குழந்தைகளை கவனித்து வருவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

குடும்பத்தினை கவனிக்கும் அளவிற்கு தனது வருமானம் போதாது உள்ளதாகவும் கிடைப்பதைக் கொண்டு வாழ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தனது துன்பதுயரங்களை சொல்வதற்கு யாருமே இல்லை எனவும் தேர்தல் காலம் என்றால் மாத்திரமே அரசியல் கட்சிகள் தங்களது வீடுகளுக்கு கூட்டம், கூட்டமாக படையெடுப்பதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தல் முடிந்தால் எவருமே தம்மை திரும்பிப் பார்ப்பதுமில்லை. அதிலும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூட தங்களைப் பற்றி சிந்திப்பதில்லை என கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் தங்களுக்கு இதுவரைக்கும் எந்தவிதமான உதவிகளைக்கூட செய்து தரமுடியவில்லை என்பது மிகவும் மன வேதனை தரும் விடயம் எனக் குறிப்பிட்டார். தான் கஷ்டப்பட்டு வாழ்ந்தது போன்று தங்களது குழந்தைகளும் வாழக்கூடாது என்பது தனது விருப்பம் எனக் குறிப்பிட்ட அவர், தங்களது குறைகளை யாரிடம் சென்று கூறுவதென்று தெரியாத அளவிற்கு புனர்வாழ்வு பெற்று வந்த பலர், இவ்வாறான இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான தமிழர்களை கொண்ட பொத்துவில் – திருக்கோயில் – விநாயகபுரம் கிராமம் பெயர்பெற்று விளங்குகின்றது. தமிழர்களது போராட்ட வரலாற்றில் அம்பாறை மாவட்டம் முக்கிய இடத்தினை பெற்றதற்கு அங்கு வாழ்ந்த மக்கள் சான்றாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisements

மார்ச் 17, 2016 - Posted by | அவலம், இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம் | , , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: