அழியாச்சுடர்கள்

எம் மொழிக்காக உழைத்த வீர புலி வேந்தனும் மூத்தவரும் இவரே !

Brigadier Thamilenthiஎங்கள் இனத்தை மண்ணில்
புதைத்தீர்..

எங்கள் தாய் மொழியை எங்கு
புதைப்பீர் சிங்களமே…??

பாரதிக்கு பின் தமிழுக்கு தமிழீழத்தில் முன்னுரிமை கொடுத்து தமிழே எங்கள் சொத்தென இடம்,பொருள்,பெயர் என எல்லாவற்றிற்கும் சின்னம் சூட்டிய பெருமை எங்கள் இந்த வீரத்தமிழனான இப் பெரியவரையே சாரும்..

தாயகத்தில் தமிழ் மொழி சார்ந்தே எல்லாம் இருக்க வேண்டும் என தலைவனின் சிந்தனைக்கேற்ப செயல் வடிவம் கொடுத்த தமிழீழத்தின் சிந்தனையாளரான(தமிழேந்தி அப்பா) அவர்களை இந்நாளில் மறந்திட முடியாது !

14.1.2006 அன்று தமிழீழத்தில் தமிழ்மொழி காப்புத்திட்ட குழு ஒன்றை உருவாக்கி முதல் கட்டமாக 13 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இந்த குழுவின் முதல் கட்ட செயல்பாடாக பத்தாயிரம் பேருக்கு பெயர் சூட்டும் நிகழ்வும் எமது வருடப்பிறப்பு தை முதல் நாள் என்பதையும் பிரகடணப்படுத்தியும்,தமிழ் மொழி கல்லூரி (கிளிநொச்சி அறிவியல் நகர்) எனும் இடத்தில் உருவாக்கி தமிழ் மொழி ஆசிரியர்களையும் உருவாக்கினார்.

ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பெயர்களை உடைய கையேடு ஒன்றினையும் வெளியிட்டு அவ் வெளியீட்டு பேளையை வைத்தியசாலைகளுக்கு இலவசமாகவும் வழங்கி தமிழ் மொழியில் பெயர் சூட்டிய குழந்தைகளுக்கு தமிழீழ வைப்பக கணக்கொன்றினை ஆரம்பித்து ஒவ்வொரு குழந்தைக்கும் தலா 1000 ரூபா வீதம் வைப்பு செய்து மழலைகள் வைப்பு கணக்கு புத்தகமும் வழங்கியதும் பெருமைப்பட வேண்டிய விடயமாகும்.

எம் இனம் விடுதலை பெற முன் எம்முடைய மொழி விடுபட்டு போய் விடக்கூடாது என்பதற்காக பாரிய அளவில் வேலைப்பழு இருந்தாலும் எம் மொழிக்காக உழைத்த வீர புலி வேந்தனும் மூத்தவரும் இவரே !Brigadier Thamilenthi

ஒவ்வொரு போராளியின் வளர்ச்சியிலும் சரி தமிழீழத்தின் கட்டுமானத்தை(நிதிக்கு)அத்திவாரம் இட்டு கால தேவைக்கேற்ப நிர்ணயிக்கும் பெரும்”காசாளன்” என தாயகத்தில் தேரோட்டிய இப் புலி வீரனுக்கு தாய் மொழி தின வாழ்த்துக்கள் !!

தமிழ் மக்கட் பெயர்க் கையேடு

tamil baby names
Advertisements

பிப்ரவரி 25, 2016 - Posted by | ஈழமறவர், ஈழம் | ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: