அழியாச்சுடர்கள்

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

tamil new year
ஈழ விடுதலைப் பொங்கல்ltte pongal 3tamil

ltte pongal

சுதந்திரப் பொங்கல்

இரண்டாயிரம் ஆண்டுப் பொங்க்கலடி
தோன்றட்டும் ஆயிரம் மங்கலங்கள்
மண்ணாற்றல் யாவுமே மேல்வரட்டும்
மாற்றலர் கெய்யிடர் போய்விடட்டும்

ஆடிய பச்சைக் கதிர்களெல்லாம்
அறுவடை முடிந்து அரிசியாகி
வாடிய வயிறாய் குளிரவைக்கும்
வளமான தைப்பொங்கல் நாளிதடி

முத்தான நெல்லின் மணிகளோடு
முந்திரிகை வற்றல் சேர்ந்தினிக்கும்
சத்தான பயறும் கலந்தவிந்த
சர்க்கரைப் பொங்கலாய்
வாழ்வினிக்கும்

பச்சை அரிசி பால் பொங்கிடட்டும்
பட்டினி துன்பங்கள் நீங்கிடட்டும்
அச்சங்கள் நீங்கிட ஆண்டு இதில்
ஆதார பொங்கலோ பொங்கிடட்டும்

ஓடிடும் காலங்கள் ஓடிடட்டும்
ஒன்றுமில்லா நிலை மாறிடட்டும்
தேடிய செல்வங்கள் சேர்ந்திடட்டும்
தமிழ் தேசம் மகிழ்வினில் ஆடிடட்டும்

ஆண்டுக்கொருமுறை வாற பொங்கல்
அடுத்த ஆண்டினில் வரும் பொழுது
மீண்டும் எம்மை நாங்கள் ஆளுகின்ற
மேன்மையுறு நாளாய் தோன்றிடட்டும்

வீட்டுக்கு வீடு நாம் பொங்க்கிடலாம்
வெற்றி விழாவாகப் பொங்க்கிடலாம்
நாட்டு விடுதலை கிட்டியதால்
நமக்கது சுதந்திரப் பொங்கலடி

மாமனிதர் ‘கவிஞர்’ நாவண்ணன்.
எரிமலை (தை 2000)

**
தைத்திங்கள் மலரட்டும்

‘தைத்திங்கள் மலரட்டும்’
வதை செய்தோர் காலம் போய்
விதை விதைக்கும் காலத்தை
கதையாகத்தந்தான் காண் கரிகாலன்
கவிதை சொல்லும் தைத்திங்கள் கனிகிறது.

திக்கெட்டும் புகழ் பரப்பி
திசை எங்கும் தமிழ் பரப்பி
கொட்டட்டும் போர்ப்பரணி வரலாறு
திகைக்கட்டும் சிங்களத்தின் அகராதி.

காலம் ஒரு பதில் சொல்லும்
கரிகாலன் சேனை விடையளிக்கும்
புதியதொரு வரலாறு உருவாகும்
புதிய தைப்பொங்கலுடன் உறவாடும்.

ஏருழவர் தொழிலாளர் சிற்பிகளின்
தேரூர்ந்த சிறப்புக்களைச் சிதைத்திருந்த
கொடூரத்தின் கும்பல்களை குதறிவிட்டோம்
கொஞ்சு தமிழ்க் கோலத் தை நீ வாழி.

கிராமியத்துப் படையணிகள் கிளம்பட்டும்
கிறுக்கழிக்க எல்லைப்படை விரையட்டும்
களமாடும் புலிச்சேனை தளைக்கட்டும்
களங்க மற்ற தைத்திங்கள் மலரட்டும்.

போர் ஆண்டு பூரணமாய் பொலியட்டும்
புகுந்து நின்று போர் முடிக்க இணையட்டும்
வீட்டிற்கொரு விடுதலைத் தீ கிளம்பட்டும்
விரைவான சுதந்திரமாய் மலரட்டும்.

கவிஞர் செவ்வந்தி மகாலிங்கம்.
எரிமலை (தை 2001)

thai pongal

 

எமது வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். தொடர்ச்சியான இனஅழிப்பு மற்றும் இயற்கை அனர்த்தத்தின் மத்தியில் வரும் இத்திருநாளை நாம் ஏற்று, இனிவரும் காலத்தை நாம் எமதாக்க ஒன்றுபட்டு உழைப்போம் என மாவீரர்களின் மீது நாம் உறுதியெடுப்போம்.

“வீழமாட்டோம் எனும் நம்பிக்கை மட்டுமல்ல, ஆழமான அடித்தளமும் வேண்டும்.
விடுதலைக்கு இப்போது பெறும் பலத்தில்தான் எதிர்காலமே இருக்கின்றது.

உலகம் ஓடிவரும் உனக்கு ஒத்தாசை செய்யும் என நம்பாதே.

அவர்கள் பலத்தோடு இருந்தால் மதிப்பார்கள்.
நிலத்தோடு கிடந்தால் மிதிப்பார்கள்.
இதுதான் உலகத்தின் புதிய ஒழுங்காற்றுகை.

ஒன்றை மட்டும் நெஞ்கில் எழுதி வைப்போம்.
வென்றால் நாங்கள் அரியணையில் இருப்போம்.
தோற்றால் தொல்பொருள் அகத்தில் கிடப்போம்”

– புதுவை இரத்தினதுரைtamil heritage month

 

Advertisements

ஜனவரி 13, 2016 - Posted by | ஈழமறவர், ஈழம், தமிழர் | , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: