அழியாச்சுடர்கள்

தமிழர்களின் இறந்துபோன வரலாற்றினை உயிர்பித்த புலிகளின் ஆயுதப்போராட்டம்!

heros day 2015 bவணக்கம் உறவுகளே.

காலத்தின் தேவைகருதி இன்றைய எனது சிறிய ஆய்வொன்றினைத் தருகின்றேன்.

கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சிங்கள ஆட்சியாளர்களால் காவுகொள்ளப்பட்டிருந்த எமது இனத்தின் உண்மையான தேசிய வரலாற்றினை, தனது தற்துணிவினாலும், ஆழுமையினாலும், பலத்தினாலும் எதிரியிடமிருந்து மீட்டெடுத்து, எமது தேசியத் தலைவர் அவர்களால் புதுப்பிக்கப்பட்ட எமது இனத்தின் புதிய தேசிய வரலாற்றினை, இன்றைய எமது அரசியல்வாதிகள் கைவிட்டுவிட்டு, மீண்டும் “இல்லாத பழைய வரலாற்றினை”தோண்ட முற்படுவதனூடாக ஏற்கனவே எமது ஆயுதப்போராட்டம் ஊடாக மீட்கப்பட்ட வரலாற்றினை, தாம் தோண்டமுற்படும் பழைய குழிகளுக்குள் போட்டு புதைப்பதற்கு எத்தனிப்பதாகவே எண்ணத்தோன்றுகின்றது.

மேலும் எமது ஆயுதப்போராட்டம் ஊடாக பலவிதமான இன்னல்களுக்கும், உயிர்தியாகங்களுக்கும் மத்தியில் மீட்கப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட எமது தேசிய இனத்தின் விடுதலை வரலாற்றினை கடந்து, ஏன்? எமது தற்போதைய அரசியல்வாதிகள் பழைய வரலாற்றினைப்பற்றி சிந்திக்க முற்படுகின்றார்கள் அல்லது அதன் வெற்றுக் குழிகளை ஏன் தோண்ட முற்படுகின்றார்கள்???என்ற கேள்விகளுக்கு இதுவரை இவர்களால் ஏதேனும் உருப்படியான பதில்களேனும் வழங்கப்பட்டதா? என்றால் இல்லை’ காரணம் இல்லாத ஒரு வரலாற்று ஆய்வினை (ஏற்கனவே மீட்கப்பட்டுவிட்ட) எமது வரலாற்றினை எப்படி இந்த அரசியல்வாதிகளால் தாம் மீட்கப்போவதாக கூறமுடியும்? ஆகவேதான் எமது அரசியல்வாதிகளால் “தந்திரமாக”தமது அரசியல் கால்தை நீடித்துத் தொடர்வதற்காக காலத்தை வீணடிப்பதற்காக மீண்டும் மீண்டும் பழைய புராணங்களை இழுத்து புதிய வரலாறுகளை மழுங்கடித்து தமது சுயநல நல்வாழ்வை செவ்வனே நடத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

இங்கே கவனிக்கப்படவேண்டிய ஒரு முக்கியமான விடையம் என்னவெனில். கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அதாவது ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திற்கு முன்னைய வரலாற்றினை நாம் எடுத்துக்கொண்டால் அங்கே சிங்கள இனத்தவர்களுடனான தமிழருக்கான முரண்பாடுகள் என்பது சுமார் முப்பது வருடங்கள் வரையே வரலாறாக பதியப்பட்டிருந்தது’ அத்துடன் அந்த முப்பது வருடகாலங்களிலும் சிங்கள இனத்தவர்களால் தமிழர்களுக்கு நிகழ்ந்த இனவேற்றுமைகளுக்கெதிராகவே எமது ஆயுதப்போராட்டம் பிரதானமாக ஆரம்பிக்கப்பட்டது எனலாம்.

மேலும் எமது ஆயுதப்போராட்டத்தின் ஊடாக எமது தேசியத் தலைவர் அவர்கள் எதிர்பார்த்த எமது இனத்திற்கான கெரவத்தினையும், பாதுகாப்பினையும் நாம் சிங்களத்திடமிருந்து பெற்றெடுக்கும் முகமாகவே 2009து வரை தொடர்ந்து போராடியிருந்தோம். அத்துடன் இந்த விடுதலைப் போராட்டத்திற்கான முழுமையான மக்கள் ஆதரவினை நாம் பெற்றிருந்தும், சிங்கள ஆட்சியாளர்களின் நேரடி தயவின்கீழ் அவ் கொடுங்கோலர்களின் அரச நிர்வாகங்களில் பணிபுரிந்த “தொண்ணூறு வீதமான தமிழர்கள்” தமது சொந்த வாழ்வாதாரம் கருதி தமக்கான இனரீதியான பங்களிப்பினை முழுமையாக தம் இனத்திற்கு வழங்காது தமது எதிரிகளாகிய சிங்களத்தின் அனைத்து நிர்வாகக் கட்டமைப்புக்களிலும் போர்முடியும்வரை தொடர்ந்து அடிமைகளாக பணிபுரிந்து வந்தார்கள்.

இந்த அடிமைகளின் வரிசைகளில் இன்றுவரை முதன்மையாக இருப்பவர்கள் வேறுயாருமல்ல, “தற்போதுவரை தமது உயிர்களை தானாக போகும்வரை வாழத்துடிக்கும் எமது அரசியல்வாதிகள்தான்” அன்றுதொட்டு இன்றுவரை இந்த அரசியல்வாதிகள்தான் தமிழர்களின் உண்மையான அனைத்துவகை போராட்டங்களையும் நீத்துப்போவதற்கு இலங்கை அரசுவிற்கு பெரும் தூண்களாக நின்று பங்காற்றிவருகின்றார்கள்’ ஊதியம் ஒருபுறம், தேசத்துரோகம் இன்னொருபுறமுமாக இவர்களை சிங்கள ஆட்சியாளர்கள் தமது அரசியல்வாதிகளைவிட மேன்மையாகக் கருதினார்கள், கருதுகிறார்கள்’ இதனால்தான் அல்பிறட் துரையப்பாமுதல், நீலன் திருச்செல்வம், லக்ஸ்மன் கதிர்காமர்வரை சொந்த இனத்தவர்களின் ஆயுதங்களுக்கு இரையாக நேரிட்டது.

அத்துடன் இலட்சக்கணக்கான தமிழ் கல்விமான்கள் தமது சொந்த வைற்றுப் பிழைப்புக்காக இலங்கை அரசுவின் நிர்வாகங்களில் தம்மை சிங்களவருக்கு சமமாக இணைத்து தமது இனத்திற்கெதிராக ஒருவகையில் ஒதுங்கிவாழ்ந்தார்கள்’ இதன்காரணமாகத்தான் சமவேளையில் தமது இனத்திற்காக தமது சுயநல வாழ்வினையும், தமக்கான கல்விகளையும் தானம்செய்து போராடத்துணிந்த குறைந்தபட்ச இழஞ்ஞர், யுவதிகளாலும் இன்னும் இப் பிள்ளைகளை ஈன்றெடுத்த பெற்றோர்களாலுமேதான் இந்த போராட்ட வலிகளை நேரடியாக சுமக்க நேரிட்டது.

இதன்காரணமாகத்தான் எமது ஆயுதப்போராட்டம் மிகுந்த ஆட்பலவீனத்திற்கு உள்ளாகியிருந்தது’ இதனால்தான் இப்பலவீனத்தை ஈடுசெய்வதற்காக “தற்கொடைப் படைகளையும்” உருவாக்கவேண்டியெ கட்டாயமும் விடுதலைப் புலிகளுக்கு அன்று ஏற்பட்டது’ இதன் விளைவாகத்தான் “பயங்கரவாதிகள்” என்ற சிங்கள அரக்கர்களின் கூற்றினை சர்வதேச சமூகமும் ஏற்று அவர்களுக்கு தமது பூரண ஆதரவினையும் வழங்கிவந்தது, வருகின்றது.

ஆகமொத்தத்தில் எமது அரசியல்வாதிகளினதும், அரசாங்க உத்தியோகம்வகித்த எமது கல்விமான்களினதும் தமது இனத்திற்கான நேரடிப் பங்களிப்புக்கள் ஓரங்கட்டப்பட்டதனால்தான் எமது இனத்தின் விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் பல தசாப்த்தங்களாக நீடித்ததுடன், உலக வல்லரசுகளின் அதி நவீன ஆயுத யுகத்துக்குள் அகப்பட்டு 2009துவரை தாக்குப்பிடித்து அழிந்துபோகும் நிலையில் மௌனிக்கப்பட்டது.

இந்த இக்கட்டான நிலைக்குக் காரணமாகவிருந்த சிங்களத்திற்கான தமிழ்ப் பங்காளிகளின் வரிசையில் போராட்டம் நடந்தவேளை தமது கல்விகளையும், தமது வருமானங்களையும், தமது பிள்ளைகளையும் பாதுகாத்து, பற்பல துறைகளிலும் தாங்களும் பிள்ளைகளுமாக பட்டங்களையும் பெற்று, ஈனத்தமிழர்களாக வாழ்ந்துகொண்டிருந்த முன்னணி வீரர்கள்தான் தற்போதைய எமது இனத்திற்கு தலைமைதாங்கி தமது ராஜ பிழைப்பினை நடாத்துவதற்கு முண்டியடித்து வருகின்றார்கள்.

உண்மையில் நாம் தமிழர்கள் என்ற உணர்வுடன் அனைவரும் இணைந்து சமநேரத்தில் பாகுபாடின்றி போராடிவிட்டு தோற்றிருந்தால்கூட நாம் இயலும்வரை போராடிவிட்டு தோற்றோம் என்ற நிலையினை எட்டமுடியும். ஆனால் அது எமது போராட்ட வரலாற்றில் நடக்கவில்லை’ விகிதாச்சார அடிப்படையில் நூற்றிற்கு எழுபது வீதம்கொண்ட சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக முப்பது வீதத் தமிழர்களும் போராடியிருந்தால் நிலமை தலைகீழாக மாறியிருக்கும். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

மாறாக ஆட்பலவீனம் ஒருபக்கம், தேசத்துரோகங்கள் மறுபக்கம், இந்தியா, உலகநாடுகள் என பல சவால்களை சமநேரத்தில் கடக்கவேண்டியிருந்ததால்தான் சிங்களத்துடன் போராடி எமது இலக்கினை அடையமுடியாமல்போனதற்கு உண்மைக் காரணங்கள் எனலாம்.

இவற்றைவிடுத்து புலிகளின் தோல்விக்கு புலிகள்தான் காரணம் எனும் பழியினை புலிகள்மேல் போட்டுவிட்டு, புலிகளின் நிழல்களில் குளிர்காயந்த தற்போதைய அரசியல் நொண்டிக் குதிரைச் சட்டத்தரணிகளும், தமது அரசியல் வயதினால் சாகாவரம்பெற்ற ஈனத்தமிழர்களும் மீண்டும் எம்மீது சவாரிவிடுவதை விடுத்து தமிழுக்கு இதுவரை செய்த துரோகங்களை களைந்துவிட்டு இனியாவது உண்மையான மனிதர்களாக,தமிழர்களாக தம்மை மாற்ற முயலவேண்டுமேயன்றி தொடர்ந்தும் தமது குழிர்காயும் தந்திரங்களை பயன்படுத்தி இத்துப்போன வரலாறுகளை தாம்தான் கிண்டி எடுக்கப்போவதான பாவனைகளைக்காட்டி பிழைப்பதை தவிருங்கள் எங்கக் அரசியல் பூதங்களே.

அத்துடன் புலிகளின் ஆயுதப்போராட்டம் ஊடாக புதுப்பிக்கப்பட்ட புதிய வரலாற்றினை அடிப்படையாகவைத்து இனிவரும் தடைகளை உடைப்பதைவிடுத்து, மீண்டும் மீண்டும் பழைய நிலைகளுக்குச்சென்று வரலாற்றின் வயதெல்லையை எழுபதாக்கியும், இன்றைய எமது இழம் சந்ததியை முட்டாள்களாக்கி ஒட்டுமொத் வரலாறுகளையும் அழித்துவிடாதீர்கள் எங்கள் பெருமைக்குரிய வெள்ளைவேஷ்டி அரசியல் தந்திரவாதிகளே!

நன்றி
உங்கள்
ஈழமைந்தன்

Advertisements

ஜனவரி 10, 2016 - Posted by | ஈழமறவர், ஈழம் | ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: