அழியாச்சுடர்கள்

சிங்களப் பெண்ணின் கற்புக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் ..!

வீரம்,அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துறையிலும் இல்லாத மனித நேயங்களை நாம் விடுதலை புலிகள் இயக்கத்தில் மட்டும் பார்க்க முடியும். திருமணமான சில மாதங்களில் போருக்கு வந்த ஒரு சிங்கள் வீரன், விடுதலைப் புலிகளிடம் சிறைபட்டுவிட்டான்.praba released army

கைது செய்யப்பட்ட அந்த வீரன் புலிகளின் சிறையில் சில வருடங்கள் இருந்தபோது அவன் தன்னுடைய இளம் மனைவியை சந்திக்க வேண்டும் என்று இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கு கடிதம் எழுதினான், அந்த கடிதம் தலைவரிடம் சென்றது.

தலைவரிடம் அதற்கு அனுமதியும் கிடைத்தது. குறிப்பிட்ட ஒருநாளில், சிங்கள வீரனின் மனைவி அனுராதபுரத்திலிருந்து கிளிநொச்சிக்கு வந்தார். தந்து கணவனை சந்தித்து பேசினாள், மாலை வரை இருவரும் குடும்ப விஷயங்களை பேசினார்கள். மாலையில் அனுராதபுரத்துக்கு செல்லும் ரயில் நிலையத்துக்கு அந்தப் பெண்ணை புலிகள் அழைத்துச் சென்றனர்.

ஆனால், ஏதோ காரணத்தால் அன்று அந்த ரயில் வரவில்லை. என்ன செய்வது?, ஒரு பெண்ணை அதுவும் சிங்கள இனத்தை சேர்ந்த ஒரு ராணுவ வீரரின் மனைவியை எங்கு தங்க வைப்பது? என்று பொறுப்பாளர்கள் தடுமாறினார்கள்.தகவல் தலைமைக்கு சென்றது, அந்த பெண் தனக்கு எந்த இடம் பாதுகாப்பானது என்று கருதுகிறாளோ அந்த இடத்தில் தங்க வையுங்கள் என்று தலைவர் சொல்லிவிட்டார்.

அந்த பெண் தன் கணவனுடன் தங்க விரும்பினாள். அவளின் விருப்பப்படியே கணவனும் மனைவியும் தங்கினார்கள். இரவு முழுவதும் கணவனுடன் தங்கிய அந்த பெண், மறுநாள் மகிழ்ச்சியுடன் தன்னுடைய உறவினர்கள் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டாள். ஆனால், மூன்று மாதத்திற்கு பிறகு புலிகளின் தலைமைக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், தான் கணவனை சந்திக்க வந்தபோது மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டமைக்கு நன்றி தெரிவித்து எழுதியிருந்தாள் அந்த பெண். கூடவே தான் கருவுற்று இருப்பதாகவும், ஆனால் இந்த கரு எப்படி உருவானது என்று உறவினர்கள் கேட்டால் நான் என்ன செய்யட்டும், நானும் எனது கணவனும் சேர்ந்து இருந்ததால் தான் இந்த கரு உருவானது என்று சொன்னால் இந்த உலகம் நம்புமா?. இதனால் என் நடத்தையின் மீது கெட்டபெயர் உருவாகுமோ? என்று தான் பயப்படுவதாக சொல்லி கடிதம் வந்தது.

அந்தப் பெண்ணின் கடிதம் தலைவரின் பார்வைக்கு போனது, ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சிக்கல் சாதாரணமானதல்ல. இதை தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்த தலைவர் மீண்டும், அந்த பெண்ணுக்கு கடிதம் எழுதினார்.

நீ, உனது மாமியார் மற்றும் உங்கள் ஊரின் பெளத்த மத குரு மூவரும் குறிப்பிட்ட இந்த நாளில் கிளிநொச்சிக்கு வாருங்கள் என்று அந்த கடித்தத்தில் எழுதப்பட்டிருந்தது.

அதன்படி கிளிநொச்சிக்கு வந்த அந்த மூவரையும் அழைத்து சென்று அந்த சிங்கள வீரனிடம் விட்டார்கள், தாங்கள் இருவரும் ஒருநாள் இரவு சேர்ந்திருந்தது உண்மை என்றும் தன்னுடைய மனைவியின் வயிற்றில் வளரும் கரு என்னுடையதுதான் என்றும் தான் தாயிடமும், மத குருவிடமும் சொன்னான் அந்த சிங்கள ராணுவ வீரன். என் கணவன், மாமியார், மத குரு மூவரும் உட்கார்ந்து பேசி விட்டாதால் எனக்கு குடும்பத்தில் ஏற்ப்பட்ட களங்கம் தீர்ந்துவிடும். ஆனால், ஊரில் உள்ளவர்கள் எப்படியும் என்னுடைய நடத்தையை தவறான கண்ணோட்டத்தில் தான் பார்ப்பார்கள், பேசுவார்கள் நான் என செய்யட்டும் என்று அந்த சிங்கள பெண் கண்ணீரோடு நின்றாள்.

அந்த சிங்கள பெண்ணின் கற்புக்கு களங்கம் வந்து விட்டது என்பதை உணர்ந்தார் தலைவர். உலகின் எந்த நாட்டு ராணுவத்திலும் செய்யாத ஒரு காரியத்தை செய்தார். ஆமாம், அந்த ராணுவ வீரனை நிபந்தனை இல்லாமல் விடுதலை செய்தார்.

Advertisements

நவம்பர் 21, 2015 - Posted by | ஈழமறவர், ஈழம், பிரபாகரன் | , ,

Sorry, the comment form is closed at this time.

%d bloggers like this: