அழியாச்சுடர்கள்

கார்த்திகைப் பூக்களை.. ஆயிரம் ஆயிரமாய்..கொட்ட காத்திருக்கிறேன்.. கண்விழித்துப் பார்..என்னுயிரே!

karthikai pooகார்த்திகைப் பூக்களை..
ஆயிரம் ஆயிரமாய்..கொட்ட
காத்திருக்கிறேன்..
கண்விழித்துப் பார்..என்னுயிரே!

அழுத விழிகள்..
தேடுகின்றன..
ஆர் என்னை
அழ வைத்தது என்று….
அது.. நீதான்..என்று
எப்படிச் சொல்வேன்?

காட்டாறு ஓடும் மண்ணில்
கானகத்து இலைகள் எத்தனை
அதில்..கலந்து..
காணாமல் போயின.. என்று
சொல்ல முடியுமா?
அறுபதினாயிரத்துக்கு மேல்..

அதுபோல் நீயல்ல என்னுயிரே..
நீயோர் அக்கினிக் குஞ்சு..
மீண்டும் உயிர்த் தெழுவாய் என்பது
எனக்கு மட்டும்தான் தெரியும்!

உனக்காக நான்
அழாத நாட்கள்
ஒன்றுகூட இல்லை..
ஆனால்..
எனக்காக ஓர் வினாடி கூட
அழுதிருப்பாய் என்று..
உன்னால் சொல்ல முடியுமா?

புலிகள் ஆவோம் என்பதுதான்..
எமக்குள் உள்ள
எழுதாத ஒப்பந்தம்..
ஆனால்..ஏன்
கரும்புலியாய்.அதற்குள்..மாறினாய் ?

கரும்புலியாய் ஆனாய் என்பது..
என் கோபம் அல்ல..
வெறும் புலியாய்..
என்னை மட்டும் இம்மண்ணில்
விட்டு விட்டு..ஏன்
முதலில் போனாய்?

நீ நடந்த காலடிகளை..
தேடித் தேடியே..
கானகத்தில் களைத்து விட்டேன்..
காட்டாற்றில் விழுந்த
இலையைப் போல்..உன்னை
காணாமல் இன்று தவிக்கிறேனே….

என்னவளே..!
ஒரு முறை..ஒரேயொரு முறை.
எனக்காக..
கல்லறையில் இருந்து
கண்விழித்து
பார்க்கமாட்டாயா?

கார்த்திகைப் பூக்களை..
ஆயிரம் ஆயிரமாய்..கொட்ட
காத்திருக்கிறேன்..
கண்விழித்துப் பார்..என்னுயிரே!

மு.வே.யோ.

நவம்பர் 15, 2015 - Posted by | ஈழமறவர், ஈழம், உலைக்களம் | , ,

Sorry, the comment form is closed at this time.